மோடிஜி பாணி லாவோஜி ! |
(சென்ற தேர்தல் முடிவு வந்த
அன்று எழுதிய கட்டுரை)
பிரதமராக
இரண்டாம் முறையாக வர இருக்கும் மோடி அவர்களுக்கும், வரலாறு
காணாத அளவில் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும்
தொடர்ந்து முதல்வராக பணியாற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் ஆதரவாக இந்த நாட்டு
மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பூமி
தமிழ் விவசாயத்தின் விவசாயிகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
இப்படிக்கு – பூமி தமிழ் விவசாயம்
சரித்திரம்
நீங்கள்
மூவரும் நினைத்தால் ஆறுகளை இணைக்கும் அற்புதமான திட்டத்தை நிறைவேற்ற முடியும். எனவே உங்கள் மூவருக்கும் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
இந்த
நாட்டினை இந்த நாட்டு மக்களை வறட்சியின் பிடியிலிருந்து காப்பாற்ற
இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெற அற்புதமான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது,
இந்திய
ஆறுகளை இணைக்க உதவுங்கள். அது இந்திய மக்களின் இதயங்களை இணைத்ததற்கு
ஈடாகும்.
புதிதல்ல
கூடுதலான நீர்வரத்துள்ள ஆறுகளை வறண்ட
ஆறுகளுடன் இணைத்து வறட்சியான நிலப் பரப்பையும் அப்பகுதி மக்களையும் மேம்படுத்துவது
இந்தியாவிற்கு புதிதல்ல.
தமிழ்நாட்டில் பெரியார் பரம்பிக்குளம்
ஆளியார்,
கர்நூல் கடப்பா கால்வாய், தெலுங்கு கங்கை திட்டம், வட இந்தியப் பகுதியில் ராவி பீயஸ்
சட்லெஜ்,
இந்திராகாந்தி நகர் திட்டம் ஆகியவை இந்த வகை இணைப்பு திட்டங்கள்தான்.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ, ஸ்ரீலங்கா, சைனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இது
புதிதல்ல.
முல்லைப்பெரியாறு - வைகை
முல்லைப்பெரியாறு நதியை வைகை நதியுடன் இணைத்தது 19 ம் நூற்றாண்டின் செயல் திட்டம்.
மேற்கே ஓடும் இந்த ஆற்றை கிழக்குப்
பக்கம் திருப்பி 1740 மீட்டர் நீள டன்னல் மூலம், ராட்சச
குழாய்கள் மூலம்
மலைப் பகுதியைக் கடந்து வைகை பாசனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
1895 ல் தொடங்கியது இந்தத்திட்டம். திட்ட
முடிவில் இதன் பாசனப்பரப்பு 57923
எக்டராக அதிகரித்தது.
140 மெகவாட் திறன் கொண்ட ஒரு மின்
உற்பத்திக் கேந்திரம் ஒன்றையும் பரிசாகத் தந்தது.
இதற்கெல்லாம்
காரணமாக இருந்த வெள்ளைக்காரர் பென்னி குயிக் இன்றும் நமது மக்களின் மனத்திலும் இந்திய
சரித்திரத்திலும் குடியிருக்கிறார் என்று பார்த்தோம்.
பரம்பிக்குளம் - ஆளியாறு
சேலக்குடி ஆற்றுப்படுகை, பாரதப்புழா, மற்றும் காவேரி ஆற்றுப்படுகைகளை ஒன்றாக இணைத்தத் திட்டம் இது.
தமிழ் நாட்டின் கோவை மாவட்டம் மற்றும்
கேரள மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் இதனால் 168000 எக்டர் பாசனம் பெறுகின்றன.
இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நான்கு
மின் உற்பத்தி நிலையங்கள் அளிக்கும் மின்சாரம் 185 மெகாவாட்.
இந்த திட்டம் இரண்டாவது மூன்றாவது
ஐந்தாண்டுத் திட்டங்களின் உபயம்.
கர்நூல் கடப்பா கால்வாய்
ஒரு தனியார் நிறுவனத்தின் 1863 ம் ஆண்டு முயற்சி இது.
கிருஷ்ணா நதியின் மிகையான நீரை பெண்ணையாற்றிற்கு கொண்டுவந்தத் திட்டம் இது.
8.33 மீட்டர் உயரத்திற்கு ஒரு நீர்தேக்க
அணையும் 304 கிலோமீட்டர் கால்வாயும் அமைத்ததன்
மூலம் 52746 எக்டர் நிலப் பரப்பிற்கு தற்போது
பாசனம் அளிக்கிறது. 1882 ம் ஆண்டு அரசு இத்திட்டத்தை
கையகப்படுத்தியது.
தங்க
நாற்கரம்
– வங்கிகள் தேசியமயம்
தங்கநாற்கரசாலை இன்னும்கூட முன்னாள்
பிரதமர் வாஜ்பாய் பெயரை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
இந்தியாவின் இரும்புமனுஷி இந்திராகாந்தியின் பெயரை இன்னும்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.
நதிகள், தங்கள் இணைப்பை யாராவது ஒரு புண்ணியவான்
செய்யமாட்டாரா என காத்திருக்கின்றன.
நூற்று
முப்பத்து நான்கு கோடி
மக்கள் இதனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படியாச்சும்
மகாநதி கோதாவரி தண்ணிய கொண்டாந்து தமிழ்நாட்டை ஈரப்படுத்துங்க மோடிஜி !
இந்திராஜி
ஒரு இரும்பு மனுஷி என்றால் மோடி ஒரு இரும்பு மனுஷன். இதுபோன்ற
திட்டங்களை செயல்படுத்த பணமும் அதிகாரமும் பதவியும் இரண்டாம்பட்சம்தான். இதற்கு மனஉறுதிதான் அவசியம். அது உங்களிடம் மிகையாகவே உள்ளது.
நாங்கள்
எல்லோரும் உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறோம்.
மோடிஜி
பாணி
லாவோஜி !
288888888888888888888888888888888888828
No comments:
Post a Comment