பூவரசு THESPESIA THESPESIA POPULNEA |
888888888888888888888888888888888888888888
இலைகளில் நாதஸ்வரம் செய்து ‘பீப்பி’ ஊதுவோம். மழை நாளில் ஓடும் நீருக்கு
குறுக்கே தடுப்பணை கட்டுவோம். கட்டிய தடுப்பணையில் பூவரசு இலை குழாய் வைத்து
தேங்கிய நீரை வடிப்போம். தடுப்பணையிலிருந்து வெளியேறும் நீரை சேதாரம் இன்றி வயலுக்கு
பாய்ச்சுவோம். மழை ஒருபக்கம் பெய்து கொண்டிருக்கும். அதை சட்டை
செய்யாமல் சட்டைகூட போடாமல் தெருவில் மண்சாலையில் மழையில் நனைந்தபடி விளையாடுவொம்.
அந்த பூவரசு மரங்களூம் தெருப்புழுதி விளையாட்டும்கூட இன்னும் மனசின்
ஒரு மூலயில் ஈரமாய்..
19. பூவரசு மரம்
(INDIAN
TULIP TREE)
பூவரசு காய்களில் பம்பரம் விளையாடுவோம். எனது
பேரக் குழந்தைகளுக்கு இப்படி விளையாட வாய்க்கவில்லையே என வருத்தமாய் இருக்கிறது.
அந்த நாளில் ஒரு தெருவுக்கு ஒரு பூவரசு மரமாவது நாங்கள் விளையாட காத்திருக்கும். திரும்பி
வராத சந்தோஷங்கள்.
கதவு, ஜன்னல், வாசக்கால் செய்ய வேண்டும் என்றால் ‘காசு பணத்தப் பத்தி கவலப்படாத பூவரச மரத்திலயே போட்டுடு ஆசாரி’ என்பார்கள். மரவேலை செய்யும்
கார்பெண்ட்டருக்கு அந்த காலத்துப் பெயர் ஆசாரி. மரத்தில் என்னவேலை செய்தாலும் பூவரசு எங்கே என்றுதான்
தேடுவார்கள்.
அதேபோல பம்பரம் விளையாட்டும்
பையன்களிடையே பிரபலம். அன்று பம்பரம் செய்ய சுலபமாய் கிடைக்கும் மரம் பூவரசுதான்.
வேப்பமரம், வேலமரம், நுணாமரம்
என்று பலவகை மரங்களிலும் பம்பரம் செய்வோம். இதில் வேல மரபம்பரம் ரொம்ப ஸ்ட்ராங்.
குழுவாகச் சேர்ந்து விளையாடும் பம்பர விளையாட்டில் வேலமரப் பம்பரங்கள் மற்றவற்றை
சுலமாய் உடைத்துவிடும். ஆனால்கூட பம்பரங்களில் ‘மாஸ்’- ஜனரஞ்சகமானது பூவரசு பம்பரங்கள்தான்.
1. தாவரவியல் பெயர் :
தெஸ்பீசியா பாப்புல்நேயா (THESPESIA POPULNEA)
2. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : இண்டியன்
டியூலிப் ட்ரீ (INDIAN TULIP TREE)
3. பலமொழிப் பெயர்கள்:
3.1. தமிழ்: பூவரசு (POOVARASU)
3.2. பொதுப் பெயர்: இண்டியன் டியூலிப் ட்ரீ (INDIAN TULIP
TREE)
3.3. மலையாளம்: பூவரசு (POOVARASU)
3.4. பெங்காலி: பலஸ்பிபால் (PALASPIPAL
4. தாவரக்குடும்பம் :
மால்வேசி (MALVACEAE)
5. மரத்தின் வகை : வாணிப மரம்
6. மரத்தின் பயன்கள் :
6.1. தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும் இலைகளைத் தரும் மரம்.
6.2. கால்நடைகளுக்கு தீவனமாகும் மரம்.
6.3. பச்சை இலைகள் செரிந்து, கந்தக
மஞ்சள் நிறத்தில், பளிச்சென்று பூக்களை பூத்துக் குலுங்கும். சில வெளிர் ரோஜா நிறத்திலும்
இருக்கும்.
6.4. கண்ணைப் பறிக்கும் பூக்களுடன், வீட்டு
முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார
மரம்.
6.5. கோப்பை போன்ற பூக்களில் தேன் கொடுக்கும் மரம்.
6.6. மரத்தில், எண்ணெய் செக்கு, உரல், உலக்கை, மாட்டு
வண்டிகள், செய்யவும், கரும்பு மர ஆலைகள், வேளாணமைக்
கருவிகள்; , கம்பங்கள், கட்டிட சாமான்கள் முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள்,
மற்றும் தூண்கள்
செய்யலாம்.
6.7. காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும்.
நோய்களை குணப்படுத்தும்
6.8. தோல் நோய்கள்,
சீதபேதி, மூட்டு வீக்கம்,
ரத்த அழுதத நோய்
ஆகியவற்றை குணப்படுத்தும் மருத்துவப் பண்புகள் கொண்ட மரம்.
7. ஏற்ற மண்: பரவலான மண்வகைகளில் வளரும். ஆயினும் மணல்சாரி மண்ணில்
பிரியமாய் வளரும்.
8. நடவுப் பொருள் : போத்துகளை வெட்டி நடலாம். சுலபமாய் வளரும்.
9. மரத்தின் உயரம் : 6 - 10 மீட்டர்.
PLEASE POST A COMMENT ON ITS CONTENT,
REGARDS – GNANASURIA BAHAVAN (AUTHOR)
8888888888888888888888888888888888888888
No comments:
Post a Comment