சிட்டல்பா சேம்பியன் எனும்
ஐந்து மீட்டர் உயரத்தில் ஒர் அழகு மரம். அமெரிக்காவில்
டெக்சாஸ் தாவரவியல் பூங்காவில் பார்த்த மரம், ஆழகாக பூக்க
வேண்டும், வறட்சியைத் தாங்க வேண்டும். பரவலான
மண்கண்டத்தில் வளர வேண்டும். இதற்காக
பிரக்யேகமாகப் பார்த்துப் பார்த்து செய்த மரம், ‘நார்த்தன் கட்டல்பா’
என்ற பூமரத்தையும், ‘வில்லோ டெசர்ட்’
என்ற பாலை மரத்தையும் ஒட்டு சேர்த்து
உருவாக்கப்பட்ட மரம், 1977 ம் ஆண்டு வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறிய தோட்டங்களுக்கு சிறப்பான மரம் இது. தனிப்பட்ட வீடுகளில் மற்றும் அலுவலகக் கட்டிங்களை அழகுபடுத்த இந்த
சிட்டல்பா மரங்களை நட விரும்புகிறார்கள்.
தமிழ்ப்பெயர்: சிட்டல்பா மரம் (CHITALPA MARAM)
பொதுப் பெயர்: சிட்டல்பா (CHITALPA)
தாவரவியல் பெயர்: சிட்டல்பா டாஷ்கென்டென்சிஸ் (CHITALPA
TASHKENTENSIS)
தாவரக்குடும்பம் பெயர்: பிக்னோனியேசி (BIGNONIACEAE)
தாயகம்: உஸ்பெக்கிஸ்தான்
அதிக கவனிப்பு வேண்டாம்
ஐந்து மீட்டர் உயரத்தில் ஒர் அழகு மரம், கோடைப் பருவம் முழுவதும்
பூக்கும். வித்தியாசமான வெளிர் ஊதா நிறப்பூக்கள் பூக்கும்.
பூக்கள் இல்லாத காலத்தில் இலைகளை ரசிக்கலாம்.
அரளி மாதிரி நீண்ட இலைகளைக்
கொண்டது. சராசரி மண்கண்டமும்> நேரடி சூரிய
வெளிச்சமும் போதும். கூடுதலான கவாத்தும்
மிகையான நீரும், அதிகப்படியான கவனிப்பும் தேவைப்படாத அலங்கார மரம்.
உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் உருவான மரம்
ஆழகாக பூக்கவும் வேண்டும். வறட்சியையும்
தாங்க வேண்டும். பரவலான மண்கண்டத்தில் வளர வேண்டும். இதற்காக
பிரக்யேகமாகப் பார்த்துப் பார்த்து செய்த மரம்.
ஆமாம்> தேவையான பண்புகள் இருக்குமாறு 1964 ம் ஆண்டு உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் உருவாக்கிய மரம். ‘நார்த்தன் கட்டல்பா’
என்ற பூமரத்தையும், ‘வில்லோ டெசர்ட்’
என்ற பாலை மரத்தையும் ஒட்டு சேர்த்து
உருவாக்கப்பட்ட அழகு மரம்.
ஆர்கிட் பூபோல அசந்தலான
பூ
பூக்கள் பார்க்க ஆர்கிட் பூபோல அசந்தலாய் இருக்கும்.
அடிக்காத வெளிர் ஊதா நிறப்பூக்கள், ஆனால் பளிச் சென்று இருக்கும். பூவின் உட்புறம். தொண்டைப் பகுதி மஞ்சள் நிறமாய், பூவின் இதழ் விளிம்பகள் மடிப்புகள்
உடையதாய் (WITH
FRILLS) இருக்கும். நாசியை மிரட்டாத மெல்லிய வாசம் வீசும்.
வெப்பமான கோடையில் பூக்கள் பூக்கத் தொடங்கும். கோடை நீண்டால் பூக்கும் காலமும் நீளும். முதல் பூப்புக் காலத்தில் 2 முதல் 3 வாரங்கள் தொடர்ந்து பூக்கும். இரண்டாம் பருவப் பூக்கள் மீண்டும் ஆகஸ்டு
மாதத்தில் தொடங்கி மறுபடியும் இருவாரம் தொடர்ந்து பூக்கும். வெப்பமும் வெய்யிலும்
போதுமான அளவு கிடைத்தால் இந்த மரம் பூப்பதை நிறுத்தாது. போதும் போதும் என சொல்லுமளவுக்குப் பூக்கும்.
சாலையில் நடும் நிழல்மரங்கள்
நீளமான இளம்பச்சை நிற
இலைகள். பார்க்க அரளி இலைபோல 10 முதல் 20 செ.மீ நீளமாய் வளர்ந்து மரத்திற்கு
அழகு கூட்டும்.
அழகுத் தோட்டம்,
பூங்காக்கள், சாலையில் நடும் நிழல்மரங்களாக நட என
அனைத்திற்கும் பொருத்தமான மரம். அதிகமான
கவாத்து தேவைப்படாது. ஆனால் தேவையான அளவில், தேவைப்படும் வடிவத்தில் இருக்குமாறு
தயார் செய்து கொள்ளலாம். கடுமையாகக்
கத்தரித்து கவாத்து செய்தால் அந்த ஆண்டு பூக்காது. ஆனால் அடுத்த ஆண்டு அதையும் சேர்த்துப்
பூக்கும்> அம்சமான பூமரம்.
சிறுதோட்ட மரம்
1964 ம் ஆண்டு உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் உருவாக்கப்பட்டது இந்த அழகு மரம். 1977 ம் ஆண்டு வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறிய தோட்டங்களுக்கு சிறப்பான மரம் இது.
சிட்டல்பாவின் பூக்கள் பெருங் கொத்துக்களாகத் தோன்றும். ஒரு பூங்கொத்து 15 முதல் 40 அங்குல நீளத்திற்குப் பூக்கும். இந்தப் பூக்கள்> பட்டாம்பூச்சிகள்> தேனீக்கள்
மற்றும் பாடும் பறவைகளைக் (HUMMING
BIRDS) கவரும்.
குளிரைத் தாங்கும்
சிட்டல்பா மரங்கள் வேகமாய் வளரும் மரம். தரைப் பகுதியிலிருந்து பல அடிமரங்களாய் (MULTI-STEMMED) வளரும் மரம். இந்த மரம்
தோற்றத்தில் டெசர்ட் வில்லோ (DESERT
WILLOW – CHILOPSIS LINERRIS) மரத்தைப் போல உள்ளது.
அந்த மரத்தைப் போலவே கோடையில் ஏற்படும் புயலைத் (SUMMER WIND STORMS) தாங்கும். அதுபோல ஜீரோ டிகிரி குளிரைக் கூட தாங்கும்.
காரணம்> இந்த மரத்தின் பெற்றோர்களில் ‘டெசர்ட் வில்லோ’
வும் ஒன்று.
சென்ட் வில்லோ என்ற மரத்ததையும்> சதர்ன் கட்டப்பா என்ற இரண்டு மரவகைகளையும்
ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த சிட்டல்பா சேம்பியன் மரம்.
வட அமெரிக்காவின்>
மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் இந்த மரங்களை அழகு மரமாக அங்கீகாரம்
செய்துள்ளன, தனிப்பட்ட வீடுகளில் மற்றும் அலுவலகக் கட்டிங்களை அழகுபடுத்த இந்த
சிட்டல்பா மரங்களை நட விரும்புகிறார்கள்.
புகைப்படங்கள்: டல்லஸ் தாவரவியல் பூங்காவில் எடுத்தவை ( DALLAS ARBORETUM)
FOR
FURTHER READING
WWW.GARDENIA.NET / CHITALPA TASHKENTENSIS
WWW.EN.M.WIKIPEDIA.ORG
/ CHITALPA TASHKENTENSIS
WWW.LANDSCAPEPLANTS.OREGAN STATE
WWW.INLANDVALLEYGARDENPLANNER.ORG/ PINK CHITALPA
WWW.DEPTS.TTU.EDU/
CHITALPA / PLANT RESOURCES HOME/ TTU
WWW.BOETHINGTREELAND.COM/ CHITALPA TASHKENTENSIS
A
REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment