தமிழ்நாட்டில் டிராகன் பழப்பண்ணை |
மெக்ஸிகோ, கெளத்திமாலா, கோஸ்டாரிகா, ஆகிய நாடுகளைச் சொந்த மண்ணாகக் கொண்ட டிராகன் பழப்பயிர் இந்தியாவிற்குள் 1990 ஆம் ஆண்டு அறிமுகமானது, அது எந்த அள்விற்கு இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளது, எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.,
பரவி இருக்கும் மாநிலங்கள் (DISTRIBUTION OF DRAGON FRUITS)
தற்போது இந்தியாவில், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, வெஸ்ட் பெங்கால், ஆந்திரப் பிரதேஷ், அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆகிய இடங்களில் டிராகன் பழப்பயிர் அதிக அளவில் பரவி வருகிறது.
டிராகன்பழ சாகுபடியில் பிற நாடுகள்
(OTHER COUNTRIES)
டிராகன் பழ சாகுபடி உலகில் உள்ள பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதில் முன்னணியில் இருக்கும் நாடு வியட்நாம். வியட்நாமுக்கு சமமாக முன்னேறி வருவது சீனா. இந்த நிலை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
இந்தியாவின் திட்டம் (INDIA’S PLAN)
2022 ஆம் ஆண்டு செய்தி படி இந்திய அரசு 50000 எக்டர் பரப்பில் டிராகன் பழம் சாகுபடி மேம்படுத்துவதற்கான திட்டத்தை திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
1. இந்திய மாநிலங்களிலேயே வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மிசோரம் தான் டிராகன் பழ சாகுபடியில் முன்னணியில் இருக்கிறது என்று சொல்லிகிறார்கள்..
2.டிராகன் பழப்பயிர் சாகுபடி செய்வதற்கு வறட்சியான சூழல் வேண்டும். அதாவது கூடுதலான வெப்ப வேண்டும். நேரடியான சூரிய ஒளி வேண்டும். பனிப்பொழிவு இல்லாத பகுதியாக இருக்க வேண்டும்.
3. இந்தியாவின் தெற்கு பகுதி, அதன் மேற்கு பகுதி, மற்றும் வடகிழக்கு பகுதிகள், இவைதான் டிராகன் பழப்பயிர் சாகுபடிக்கு உகந்த தட்பவெட்ப நிலை உள்ள பகுதிகள் என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.
4.உள்ளூர் மார்க்கெட்டுகளிலும், வெளிநாடுகளிலும், டிராகன் பழங்களுக்கு, விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்பு நிறைய உள்ளது.
5. வீடுகளிலும்,சிறிய தோட்டங்களிலும், வியாபார ரீதியிலும் சாகுபடி மேற்கொள்பவர்களும் இதனை வெற்றிகரமாக செய்ய முடியும்.
6.டிராகன் பழப்பயிரில் பல வகையான ரகங்கள் இருந்தாலும் அதிகமாக விரும்பப்படுவது சிவப்பு தோலையும் வெள்ளை தசையையும் உடைய ரகம்தான்.
முதல் அறுவடையும்
வருமானமும்(FIRST HARVEST AND INCOME)
1.டிராகன் பழப்பயிர் சாகுபடியில் முதல் அறுவடையிலேயே லாபகரமான வருமானத்தை பார்க்கலாம்.
2.டிராகன் பழப்பயிரை நடவு செய்த
மூன்று முதல் ஐந்து ஆண்டுகளிலேயே முழுமையான மகசூல் அளவை எட்ட முடியும்.
3.பல்லாண்டு பழபயிர்கள் சாகுபடியில் இப்படி முதல் ஆண்டிலேயே லாபகரமான வருமானத்தை எந்த பயிரிலும் எடுக்க முடியாது.
ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகள் நிறைந்த சிவப்பு தசை ரகம் (REDFLESHED DRAGON).
1. இந்திய தட்பவெப்ப நிலை சூழலில் இந்த சிவப்பு தசை உள்ள டிராகன் பழப்பயிரை சிபாரிசு செய்கிறார்கள்.
2. இந்த ரகத்தின் தாவரவியல் பெயர் ஹைலோசெரிசியஸ் கோஸ்டாரிசென்சிஸ் (HYLOSERECEUS COSTARICENCIS).
3. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் (NUTRITIOUS)
4.குறைவான கலோரிச் சத்து (LOW CALORIE. FOOD) உடையது.
3. வைட்டமின்கள் (RICH IN VITAMINS) நிறைந்தது.
4. தாது உப்புகள்(MINERALS) நிறைந்தது.
5. டயட்ரி பைபர் (DIETRY FIBRE)என்னும் நார்ச்சத்து உடையது.
6.ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் (ANTIOCCIDENTS) மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ்(PHYTOCHEMICALS) என்னும் தாவர ரசாயனங்கள் நிறைந்தது.
டிராகன் பழப்பயிர் குறித்த ஆராய்ச்சிகள் (RESEARCHES ON DRAGON FRUITS).
டிராகன் பழப்பயிர் குறித்த ஆராய்ச்சிகள் 2014 ஆம் ஆண்டு முதல் ஐ.ஐ.எச்.ஆர் என்று சொல்லப்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹார்ட்டிகல்ச்சர் ரிசர்ச் (INDIAN INSTITUTE OF HORTICULTURAL RESEARCH)என்ற ஆராய்ச்சி நிலையத்தில் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.
கர்னாடகா, கேரளா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் டிராகன் பழ சாகுபடி வேகமாக நடக்கிறது என்கிறார்கள், அதுபற்றி உங்களுக்கு தெரியுமா ?
இந்தப் பதிவுபற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் “கமென்ட்ஸ்” பகுதியில் பதிவிடுங்கள்.
GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment