Monday, June 12, 2023

5K LAKES CREATED BY RAJARAJAN CHOLA KING ஐந்தாயிரம் ஏரிகளை வெட்டிய ராஜராஜசோழன்

ஏரிகளை வெட்டிய 
ராஜராஜசோழன்

 

மதுரை என்றதும்  மீனாட்சி  திருக்கோயில்நினைவுக்கு வரும். ஊத்துக்குளி என்றதும்  வெண்ணெய்  வரும்.  மணப்பாறை என்றால் முறுக்கு  வரும்.  அதுபோல சோழ  அரசர்கள்  என்றால்  நினைவுக்கு வரும் பெயர்  ராஜராஜசோழன்;. 

ராஜராஜசோழன்   நிலம்  அளக்க முதன் முதலாய்  16 சாண் அளவுள்ள உலகளந்தக்கோல்ஐ அறிமுகம்  செய்தவன்.  தஞ்சை  பெரிய கோவிலை   கட்டிமுடித்தவன் .இந்திய வரலாற்றில்  முதன்முதலாய்  கடல் பேரரசை   நிhமாணித்தவன்.   33  பட்டப்  பெயர்களால்  பாராட்டப்  பட்டவன். முதன்முதலாக  கிராம  நிர்வாகத்தை  சீர்  செய்தவன்.  நீர்  மேலாண்மைக்கு வாரியம் அமைத்தவன்.

கல்லணைகட்டிய  கரிகால்சோழனின்  வழிவந்த  ராஜராஜன்தான் எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல என்பதை  தனது  ஆட்சிக்காலத்தில்   நிரூபித்தான். 

இயற்கை வழங்கும் அரிய கொடை நீர் என்பதை   உணர்ந்திருந்தான். மழைநீரை சேமிக்க  ஐந்தாயிரம்  ஏரிகளை   வெட்டினான்.  நீர் நிலைகளை உ;ருவாக்க  நீரைப்பங்கிட தனியான நிர்வாக அமைப்பை  உருவாக்கினான். ஏரிகள், குளங்கள், ஆறுகள்  ஆகியவற்றை நிர்வகிக்க  நீர்  வாரியங்கள்  அமைத்தான்.

வறட்சியான  வடதமிழகப்  பகுதியில்  இந்த ஏரிகளை வெட்டினான். வெட்டிய ஏரிகளில் கால்வாய் மூலம் காவிரி நீரைக்கொண்டுசென்று  ஏரிகளை நிரப்பினான்நிரப்பிய நீர் மூலம்  அங்கு  வறண்ட நிலங்களை  வயல்களாக  மாற்றி அமைத்தான். 

என் உயிரினும் மேலான படை வீரர்களே ! இப்போது நமக்கு போரில்லை. வாருங்கள் ஒரு ஏரியை உருவாக்கலாம். உழவர்களுக்கு நாம் உதவுவோம். அது நம் பசிப்பிணி போக்கும்”   என்று தன் படை வீரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தான். அதன் விளைவுதான் நமது  வீராணம்   ஏரி. 

மழை அறுவடை செய்யவேண்டும்.  அதை முறையாக  சேமிக்கவும்   வேண்டும்.   விவசாயிகளுக்கு  உதவ  வேண்டும்உற்பத்தி பெறுக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவன் மனதில்  அணையாத  தீயாக  எரிந்துக் கொண்டிருந்தது.  அதனால்தான்  போருக்கு  செல்லும்போது கூட ஊருக்கு  நல்லது செய்யலாம்   என்று  யோசித்தான் ராஜாதித்தன்;.  

நம் இந்திய திருநாட்டில்கூட  பெரும்படை நம் கைவசம்  உள்ளது.  அதில் பலலட்சம் போர் வீரர்கள்  அடக்கம்.  எல்லையில் இருக்கும் வீரர்கள்  வருஷம்  365 நாட்களும்   துப்பாக்கியும் கையுமாக இருக்க வேண்டும். 

தனது இன்னுயிரைப்பற்றிய கவலை  இம்மியளவும் இல்லாமல் இருக்கிறார்கள்.   துப்பாக்கியை ஏந்தியபடி  தூங்கா  விழியுடன்  பனிமலையில் மரணத்தை சுவாசித்தபடி  இருப்பதால்தான் நம் வசிப்பிடத்தில்  பயமில்லாமல் சுவாசிக்க முடிகிறது. 

ராணுவம் என்பது  நாட்டிலுள்ள  பாதுகாப்பு  கவசம்.   அதனை நீர்வள பாதுகாப்பிற்கு பயன்படுத்த முடியுமா  முடியும் அதுவும் ஒரு நாட்டின் பாதுகாப்பு  தொடர்பான பணிதான் என்கிறார்  திருவள்ளுவர்.   ஒரு நாட்டிற்கு  எது  பாதுகாப்பு என்று  அரண் என்ற அதிகாரத்தில்   இதனை விளக்குகிறார்.

         மணிநீரும்    மண்ணும்    மலையும்      அணிநிழற்;

         காடு   முடைய  தரண்.

மண், மலை, நீர்,    காடுகள்இவை நான்கையும்  பாதுகாப்பதுதான்   ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு.  இதுதான்  அந்த குறளின் பொருள்.  

போர் நடக்காத சமயங்களில்ராணுவ வீரர்களை  மழைநீர் அறுவடைக்கான  நீர் ஆதாரங்களை   உருவாக்குவதில்  பராமரிப்பில் பயன்படுத்த முடியும். 

சோழர்களுடைய அரசாட்சி  காலத்தில்  மிகவும் பிரபலமானத்  திருவிழா    இந்திர  விழா. .இந்திரன்  மழைக்கடவுள்.  இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகத்தான்அந்த காலக் கட்டத்தில் முக்கியத்துவம்   அளிக்கப்பட்டது.

கரிகால்சோழன்   கல்லணைகட்டி  நீர் வளம் பெருக்கினான்.   அவன்வழி வந்த சோழ மன்னர்கள்   நீர் நிலைகளை ஏற்படுத்;தியதுஅவர்களின் சிறப்பு என்கிறார்கள் தமிழ்நாட்டு   வரலாற்று ஆசிரியர்கள்.  

காவிரியில் கிளையாறுகள் பல  வெட்டினர். பிற்கால சோழமன்னர்கள்.  ழைய ஆறுகளை பழுது பார்த்தனர். வீர சோழன் ஆறு, விக்கிரமன்ஆறு,     உய்ய கொண்;டான்  ஆறுமுடிகொண்டான் ஆறுஅனைத்தும் அந்த பட்டியலில் வரும்  ஆறுகள்தான்.                   

வீரநாராயணன்  ஏரிமதுராந்தகம்  பேரேரிகண்டராதித்த  பேரேரிகுந்தவைப்பேரேரி ,சோழ கங்கம் (பொன்னேரி)  அத்தனையும்  நீர் மேலாண்மைக்கு  சோழ மன்னர்கள் அளித்த கொடை  எனலாம்.

நமக்கு இன்று இப்படி கொடை தரவில்லை யெனினும் கொடைதந்த ஏரிகளை பராமரிக்கவாவது செய்யலாம் அல்லவா ? முடியுமா ? முடியாதா ?

PLEASE WRITE YOUR COMMENTS IN THE COLUMN (NO COMMENTS) GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

8888888888888888888888888888888

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...