தமிழ்நாட்டின்
முப்பெருங்கனி என்று வர்ணிக்கப்படுவதில் முக்கியமான கனி பலா. உலகில் பழவகைகளில் பெரிய பழம் என்னும்
பெருமைக்கு உரியது> மரம் தேக்கைப் போல
கடினமானது அல்ல. சுமாரான கடினத் தன்மை உடையது> இசைக் கருவிகள் செய்வதில் தேக்கைவிட உயர்தரமானது, பிரேசில் மற்றும் இந்தியாவில்
ரப்பருக்குப் பதிலாக பலாப்பாலை பயன்படுத்துகிறார்கள்> இந்த பாலில் வார்னீஷ்; தயாரிக்கலாம்> இதன் பழங்களும்> கொட்டைகளும் பாலுணர்வுத்
தூண்டியாக (APHRODISIAC) செயல்படும்> கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பலாப்பழ நகரம்
எனும் பெருமை பெறுகிறது.
பொதுப் பெயர்கள்: ஜேக் ட்ரீ> ஜேக் ப்ரூட்> ஃபென்னி (JACK TREE, JACK FRUIT, FENNE)
தாவரவியல் பெயர்: அர்டோகார்பஸ்
ஹெட்டிரோபில்லஸ் (ARTOCARPUS
HETEROPHYLLUS)
தாவரக்குடும்பம்
பெயர்: மோரேசி (MORACEAE)
தாயகம்: இந்தியா
பலா பழமரத்தின் பல
மொழிப் பெயர்கள்
தமிழ்: பலா
பெங்காலி: காந்தல் (KANTHAL)
பர்மிஸ்: கனார்> பிக்னாய் (KHNOR, PEINAI)
ஆங்குலம்: ஜேக்> ஜேக் புரூட் (JACK, JACK FRUIT)
பிலிப்பினோ: நான்காஸ்> லங்கா (NANCAS, LANGHA)
பிரைன்ச்: ஜாக்கீர் (JACQUIER)
ஜேர்மன்: ஜேக் பிரக்ட் பாம் (JACK FRUCHAT BAUM)
இந்தி: ஹலாசு> காதர்> அவாசா> காந்தல்> சாக்கி> கத்தல்> பனோஸ் (HALASU, KATHAR, ALASA, KANTHAL, CHAKI, KATHAL, PAMOS)
இந்தோனேசியா: நான்கா> நான்கோ (NANGKA, NONGKO)
காவானீஸ்: நான்கா> நான்கோ (NANSKA, NONGHO)
லாவோ: மிஸ் நாங்> மிஸ் (M112 HNANG, M112)
மலாய்: டஜாக்கா> நாங்கா (TAJAKA, NANGKA)
சமஸ்கிருதம்: பனாசம் (PANASAM)
சிங்களா: காஸ் (KOS)
ஸ்பேனிவு;: பேன் டி புரூட்டா> ஜேக்குரோ> >பூவன்பேன்> ரிமா> ஜேக்கா (P PAN DE FRUTA, JACUEIRO, BUEN PAN RIMA, JACA)
சுவாகிலி: பெனிசி> எம்ஃபூ (FENESI, MFUU)
தாய்: மக்மி> கானுன்> நங்கா> பானுன் (MAKMI, KHANUN, NANGKA, BANUN)
வியட்நாமிஸ்: மிட் (MID)
மணிப்புரி: திபாங் (THEI BONG)
மராத்தி: பனாஸ் (PHANOS)
மலையானம்: சாகா (SHAKA)
தெலுங்கு: பனாஸ் (P PHANOS)
கன்னடா: ஹலசினா ஹன்னு: (HALASINA
HANNU)
ஒரியா: பனாஸ் (PHANOS)
பலா பூக்கள்
பலா மரங்கள் இரண்டு ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். சிலசமயங்களில் எட்டு ஆண்டுகள் கூட பிடிக்கும்.
இளம் மரங்களில் ஆண் பூக்கள் அதிகம் இருக்கும்.பெண் பூக்கள் குறைவாக இருக்கும். நான்கு மடங்கு ஆண் பூக்கள் என்றால் ஒரு மடங்கு தான் பெண் பூக்கள் இருக்கும்.
வளர்ந்த பலா மரங்களில் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் இருக்கும்.
வளர்ந்த ஒரு பலா மரம் மரத்திற்கு 250 காய்கள் வரை காய்க்கும். வயது ஆகஆக இதனுடைய உற்பத்தி திறன் குறைந்து கொண்டே போகும்.
பலா மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும். வளர்ந்த மரங்களில் காய்கள் பெரும்பாலும் கிளைகளில் காய்க்கும். முதிர்ந்த மரங்களில் அல்லது வயதான மரங்களில் அடிமரத்தில் கூட காய்க்கும்.
முப்பெருங்கனிகளில்
ஒன்று
தமிழ்நாட்டின்
முப்பெருங்கனி என்று வர்ணிக்கப்படுவதில் முக்கியமான கனி பலா. உலகில் மரங்களில் கிடைக்கக் கூடிய பழவகைகளில் பெரிய பழம் என்னும்
பெருமைக்கு உரியது பலாப்பழம்தான். இதுவரை உலகின்
மிகவும் பெரிய பழம்
என்று பதிவு செய்யப்பட்ட பழத்தின் எடை 36 கிலோ.
பலா ஒரு வெப்பமண்டல
பழமரம்> மித வெப்ப சூழலிலும் வளரும்> பனிப்பொழிவைக் கூட (FROST) ஒரளவு தாங்கும். வறட்சியையும் வடிகால் வசதியின்மையையும் தாங்காது. பரவலான மழைப் பொழிவும்> வெதுவெதுப்பான
சூழலும் (WARM
HUMID CLIMATE) தேவைப்படும்.
ஆழமான மண்கண்டம்> வண்டல் மண்> இருமண் பாடான மண்> மணல் சாரி> களிமண் பாங்கான இருமண்பாடு> அத்துடன் சுமாரான ஊட்டச்சத்து இருப்பு> நல்ல. வடிகால் வசதி> ஐந்து முதல் 7.5 வரையான களர அமில நிலை (PH)> சூளை மண்> மண் ஆழம் குறைந்த சுண்ணத் தன்மை கொண்டது (SHALLOW LIMESTONE)> கல்லாங் கரடுகள் (STONY SOILS)> போன்றவற்றிலும் பலா பிரச்சினை இல்லாமல் வளரும். உப்பு மண்ணை ஒரளவு தாங்கி வளரும்.
பலா உலகம் முழுவதும்
பரவியுள்ளது. தேக்கைவிட
தரமானது
மரம் தேக்கைப் போல
கடினமானது அல்ல. சுமாரான கடினத் தன்மை உடையது> மேஜை நாற்காலிகள்> கட்டுமானப் பொருட்கள்> கம்பங்கள்> துடுப்புகள்> கருவிகள்> இசைக் கருவிகள் செய்வதில் தேக்கைவிட உயர்தரமானது பலாமரம் என்று அறியும்போது ஆச்சரியமாக
உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு
ஏற்றுமதி
மரத்தின் மீதும்
மரியாதை கூடுகிறது. மரங்கள்> ஸ்ரீலங்கா> மற்றும் இந்தியாவில்
அதிகம் பயனாகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும்
பலா மரங்கள் ஏற்றுமதி ஆகிறது. பலா
மரத்தின் வேர்கள் கடைசல் வேலைகளுக்குப் பயனாகிறது. அடிமரக் கட்டைகளை விட வேர்க்கட்டைகளின் விலை
அதிகம்.
ரப்பருக்கு மாற்று
பலா ஒரு பால் மரம். பலாவின் பால் கைகளில் பட்டால்> சட்டென ஒட்டிக்
கொன்ளும்: அவ்வளவு சுலபமாக விடாது. பீங்கான்> மட்பாண்டம்> ஆகியவை உடைந்தால் அவற்றுக்கு
ஒட்டுப் போடலாம்.
படகுகள்> வாளிகள்> ஆகியவற்றில் ஒட்டை
விழுந்தால் அவற்றை அடைக்கலாம். பறவைகளைப் பிடிக்கக் கூட
இதன் பாலை பயன்படுத்துகிறார்கள். பிரேசில்
மற்றும் இந்தியாவில் ரப்பருக்குப் பதிலாக பலாப்பாலை பயன்படுத்துகிறார்கள்.
வார்னீஷ்
தயாரிக்கலாம்
பலாவின் பாலின் ஒருவகை பிசின் உள்ளது. அதனை வார்னீஷ்; தயாரிக்க
பயன்படுத்தலாம். இதன் பட்டைகளில் இருக்கும் ‘டேனின்’ உதவி கொண்டு மஞ்சள்
சாயம் தயாரிக்கலாம்.
கொஞ்ச
நாட்களுக்கு முன் ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனிகாரரை சந்தித்தேன். அவருடைய கம்பெனியில் அவர்களுக்கு தேவையான வார்னீஷை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி
செய்கிறார்கள்.
ஏதோ ஒரு
மரத்தின் பாலிலிருந்து அந்த வெளி நாட்டில் வார்னீஷை தயாரிக்கிறார்கள். அது போல மரங்கள் இங்கு இருக்கிறதா, என்று தெரிந்துகொள்ள
விருப்பப்பட்டார்.
வார்னீஷ்
மரங்கள்
அதற்கு
வாய்ப்புள்ள மரங்கள் பற்றி எல்லாம் நான் ஆய்வு செய்து பட்டியலிட்டேன், ஆனால் அதுபற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என புரிந்துகொண்டே.ன். ஆனால் அவர் என்னிடம் கேட்டது நிறைய புதிய தகவல்களை தெரிந்து கொள்ள
எனக்கு உதவியாக இருந்தது.
வார்னீஷ்
தயாரிக்க உதவும் பிசின் அல்லது பால்
அம்பர், கவுரிகம், டம்மார், கோப்பால்,
மற்றும் ரோசின் என்னும் இயற்கையான பால் அல்லது பிசின் வகைகள் வார்னீஷ்
தயரிக்க பயன்படுத்துகிறார்கள்.
வார்னீஷ்
ஏற்றுமதி செய்யும் நாடுகள்
பிற நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2021 ம் ஆண்டின் கணக்குப்படி,
முதல் இடத்தில் இருப்பது சீனா, அடுத்து இருக்கும்
நாடுகள் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்,
மற்றும் தென் கொரியா.
பாலுணர்வுத்
தூண்டி
காயங்கள்> கட்டிகள்> வயிற்றுவலி> வயிற்றுப்போக்கு ஆகிய வற்றிற்கு மருந்தாக இதன் இலைச் சாம்பலை
பயன்படுத்துகிறார்கள்> பிலிப்பைனீஸ் மற்றும்
மலேசிய நாட்டினர்.
இதன் பழங்களையும்> கொட்டைகளையும் சாப்பிட உடலில் உள்ள சூட்டைத் தணிக்கும். பாலுணர்வுத் தூண்டியாக (APHRODISIAC) செயல்படும்.
மயக்க
மருந்து
இதன் மரத்தில் ஒரளவு
மயக்க மருந்தின் பண்புகள் உன்னை. வயிரப்
பகுதி மரத்தை கருச்சிதைவுக்கு பயன்படுத்த முடியும்.
பலாவின் வேர்க்கஷாயத்தைத் தந்து உடல் ஜுPரம்> வயிற்றுப்போக்கு> தோல் நோய்கள்> ஆஸ்துமா போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
பாம்புக்கடி
மருந்து
பலா மரத்தின் பாலுடன்
வினிகர் சேர்த்து> கட்டிகள்> பாம்புக்கடி> மற்றும் நாளங்களில் எற்படும்
வீக்கம் (GLANDULAR
SWELLINGS) ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.
சர்வதேச அளவில்
பழங்கள் காய்கறி உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சைனா. நாம் இரண்டாவது இடத்தில் இருக்திறோம்.
நமக்குப் பின்னால் இருக்கும் இதர நாடுகள் அமெரிக்கா> பிரேசில்> ஸ்பெயின்> மெக்சிகோ> இத்தாலி> இந்தோனேசியா> பிலிப்பைன்ஸ் மற்றும்
துருக்கி.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் விரைந்து முன்னேறும். இந்த ஒரு அளவுகோலை வைத்துப் பார்த்தால் தமிழ்நாடு இந்தியாவில் நான்காவது வது இடத்தில் உள்ளது.
குஜராத்திற்கு
அடுத்து
அந்த வரிசை எப்படி
இருக்கிறது என்று பார்க்கலாம். மகாராஷ்;ட்ரா> ஆந்திரப்பிரதேசம்> குஐராத்> தமிழ்நாடு> உத்தரப்பிரதேசம்> கர்நாடகா> மற்றும்
மத்தியப்பிரதேசம். ஆக தமிழ் நாடு குஜராத்திற்கு அடுத்து
உள்ளது.
இந்த
அடிப்படையில்தான் ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு
தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்துவதற்கன நடவடிக்கைகளை முடுக்கி
விட்டிருந்தார்.
இந்தியாவில் பழங்கள்
உற்பத்தி
இந்தியாவில் பழங்கள்
உற்பத்தி மற்றும் விற்பனைக்கான நகரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவை ஆந்திராவில் சித்தூர்
மற்றும் அனந்தப்பூர்> மகாராஷ்;ட்ராவில் ஜல்கான்> சாங்லி> பூனா> அவுரங்கபாத்> தெலிங்கானாவில் நால்கொண்டா> வெஸ்ட் பெங்காலில் டார்ஜிலிங்> மத்தியப்பிரதேசத்தில் சாஹர்> மற்றும்
தமிழ்நாட்டில்
பலாப்பழத்தை சொல்லலாம்.
ஆனால் பாலாப்பழ உற்பத்தியைப்
பொருத்தவரையில் உலக அளவில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு பங்ளாதேஷ்>;. தாய்லாந்து> இந்தோனேசியா> மற்றும் நேப்பாளம்> ஆகிய நாடுகள் அடுத்தடுத்து பலா உற்பத்தியை அதிகம் செய்யும் நாடுகள்.
இந்தியாவின் மொத்த ஆண்டு உற்பத்தி 1.4 மில்லியன் டன்.
சிவப்பு
சுளை பலா
தற்போது கேரளா
மற்றும் கர்நாடகாவில்> ஒரு வகையான சிவப்புப்பலா அறிமுகம் ஆகி உள்ளது. ‘செம்பரட்டி சாக்கா (CHEMBARATTI
CHAKKA)
என்று கேரளாவில் பெயர் வைத்துள்ளார்கள்.
கர்நாடகாவில் இதன் பெயர் சந்த்ர ஹலாசு (CHANDRA
HALASU).
பண்ருட்டி என்றால்
பலாப்பழம்.
பண்ருட்டி என்றால்
பலாப்பழம். பலாப்பழம் என்றால்
பண்ருட்டி. ஊத்துக்குளி என்றால் நெய்:
மணப்பாறை என்றால் முறுக்கு.
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் பால்கோவா: பலாப்பழம் என்றால் பண்ருட்டி. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம்
பண்ருட்டி.
70 கிலோ மெகா பழங்கள்
சமீபத்தில் 34 கிலோ பலாப்பழத்திற்கு கின்னஸ் ‘அவார்ட்’ வழங்கப் பட்டது. அந்த பலாப்பழம் ஹவாய் நாட்டிற்குச் சொந்தமானது. ஆனால் பண்ருட்டி மார்கெட்டில் 60 கிலோ முதல் 70 கிலோ பழங்கள் விற்பனை ஆவது அடிக்கடி நிகழும் சாதா சம்பவம்.
இந்தியாவின்
பலாப்பழ நகரம்.
கடலூர் கடற்கரையில்
ஆண்டுதோறும் நடக்கும் கோடை விழாவில்> ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 கிலோ வரை உள்ள
பண்ருட்டிப் பலாப்பழங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்படும் என்று பெருமைப்படுகிறார், இப்பகுதியில் பணிபுரியும்
தோட்டக்கலை அதிகாரி ஒருத்தர்.
பண்ருட்டி பகுதியில்
சாகுபடி ஆவது> கிட்டத்தட்ட 1044 எக்டர். ஏறத்தாழ 18 கோடி ரூபாய் பெறுமானமுள்ன பலாப்பழங்கள்
இங்கு சந்தைபடுத்தப்படுகின்றது. பண்ருட்டி
இந்தியாவின் பலாப்பழ நகரம்.
WWW.TIMES
OF INDIA. INDIATIMES.COM INDIA 2ND
LARGEST FRUIT PRODUCER IN THE WORLD
WWW.WORLDATLAS.COM-
‘WOLD LEADERS IN JACK FRUIT PRODUCTION
WWW.PFAF.ORG
/ ARTOCARPUS HETEROPHYLLUS JACK FRUIT
WWW.RESEARCHGATE.NET/
MEDICINAL USES OF ARTOCARPUS HETEROPHYLLUS JACK FRUIT
WWW.TROPICALTHE
FERNS.INFO/ ARTOCARPUS HETEROPHYLLUS – USEFUL TROPICAL PLANTS
POST A COMMENT PLEASE, RGARDS - GNANASURIA BAHAVAN D (AUTHOR)
99999999999999999999999
No comments:
Post a Comment