Friday, May 5, 2023

VELLORE DISTRICT RIVER UTHRAKAVERI வேலூர் மாவட்ட ஆறு உத்தர காவேரி

 


கிழக்குத் தொடர்ச்சி மலை ஆறு (RIVER OF EASTERN GHATS)

கிழக்கு தொடர்ச்சி மலையின்  தோன்றும் ஆறுகளில் ஒன்று இது.  ஜவ்வாதுமலையில் ஜமுனாமரத்தூர் பகுதி ஆறும்கூட, சரியாகச் சொல்வதென்றால் ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கிரமத்தில் உத்தரகாவேரி  உற்பத்தி ஆகிறது. உத்தரகாவேரிக்கு அகரம் ஆறு என்ற பெயரும் உண்டு. 

விவசாயத்திற்கு பாசன வசதி (IRIGATION SUPPORT)

இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி, ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசனவசதி அளிக்கிறது. அது மட்டுமல்ல இப்பகுதிகளில் 50000 விவசாயக் கிணறுகளுக்கு ஊற்றுநீர் உபயம் செய்கிறது. அந்த கிணறுகளின் நீர்மட்டம் உயர உதவுகிறது. உத்தர காவிரியில் நீர் வரத்து இருந்தால் அணைக்கட்டு வட்டார மக்களுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது. 

குட்டிஏரிக்கு   நீர் உபயம் (SUPPY OF WATER TO LAKES)

பள்ளிகொண்டாவை அடுத்து ஸ்ரீ கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ளது குட்டிஏரி என்பது. உத்திரகாவேரி ஆற்றில் இருந்து இதற்கு நீர் வருகிறது.ஆனால் நீர் வரத்து கால்வாய்களில் புதர்கள் மண்டி கிடப்பதால் நீர் வரத்து குறைவாக உள்ளது. 

வரத்துக்கால்வாய் மராமத்து (SUPPLY CHANNEL RESTORATION)

இந்த நீர் வரத்து கால்வாய்களை ஒவ்வொரு ஆண்டும் தூர் எடுத்து ஆழப்படுத்தி அகலப்படுத்தி கரைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அதனைச் சரி செய்யாமல் விட்டுவிட்டால் மழை பெய்தால்கூட ஏரி குளங்களுக்கு நீர் வரத்து இருக்காது. ஏரிகுளங்களுக்கு நீர் வரத்து இல்லையென்றால் குடி நீர் கிடைப்பதுகூட பிரச்சினை ஆகிவிடும். 

உங்கள் ஊரில் இதுபோன்ற மராமத்துப் பணிகளை குடிமராமத்து முறையில் நடக்கிறதா ? 

BHUMII GNANASOORIAN

gsbahavan@gmail.com

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...