Thursday, May 18, 2023

UTERINE FIBROID CURING ASOKA TREES கருப்பை கட்டிகளை காணாமல் போகச்செய்யும் அசோகமரம்

பெண்கள் மருத்துவ மரம் அசோகம்


அசோகமரம் - (ASOKA TREE)

அசோக மரம் என்றால் சோகம் அல்லது கவலை போக்கும் மரம் என்று பொருள்.  சமஸ்கிருதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 16 பெயர்கள் உள்ளன இந்த மரத்;திற்கு. 

பெண்களுக்குரிய மரம் (TREE MEANT FOR WOMEN)

பெண்களுக்குரிய நோய்களை தீர்க்கும் மரம் ஒன்றை சொல்லுங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அசோகமரம் குறிப்பாக பெண்களின் இனப்பெருக்க மண்டலம்> கர்ப்பப்பை மாதவிடாய் தொடர்பான அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே மூலிகை மரம் அசோகமரம் மட்டுமே. 

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள, நரம்பு தளர்ச்சி போன்றவற்றை சரி செய்து  வலுப்படுத்துதல் போன்றவற்றிற்கும் சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது.

பெயர்கள்: (DIFFERENT NAMES)

பொதுப்பெயர்: அசோகா ட்ரீ (ASOKA TREE)

தாவரவியல் பெயர்: சராகா அசோகா (SARACA ASOCA)

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)

தாயகம்: இந்தியா (INDIA)

பல மொழிப் பெயர்கள்.

தமிழ்: அசோக மரம்> பின்டி (ASHOKA MARAM, PINTI)

சமஸ்கிருதம்: அசோகா, சீத்தா, அசோகா, அங்கனப்பிரியா, அஷோபலவா, அசுபலா, அபஷகா, ஹேமபுஷ்பா, கன்கெலி, மதுபுஷ்பா, பிண்டபுஷ்பா, பிண்டிபுஷ்பா, வஞ்சுலா, விஷோகா, விச்சித்திரா (ASHOKA, SITA ASHOKA, ANGANAPRIYA, ASHOPALAVA, ASUPALA, APASHAKA, HEMAPUSHPA, KANKELI, MADHUPUSHPA, PINDAPUSHPA, VANCHULA, VISHOKA, VICHITHRA).

பர்மிஸ்: தாவ்காபோ, தாவ்கா (THAWGABO, THAWKA)

இந்தி: சீத்தாஅசோகா, வண்டிசித்ரா (SITAASOKA, VANDICHITRA)

அசாமிஸ்: அசோக் (ASHOK)

பெங்காலி: ஒஷோக் (OSHOK)

மலையாளம்: அசோகம் (ASHOKAM)

தெலுங்கு: அசோகாமு, வஞ்சுலாமு (ASOKAMU, VANJULAMU)

குஐராத்தி: ஆசோபலாவ் (AASOPALAU)

தாய்: சோக்கானம் (SOKANAM)

சிங்களம்: டயரட்மால், டயரட்டெம்பலா (DIYRATMAL, DIYERATEMBELA)

கன்னடா: ஆச்செங்கி, அஷாங்கி, கெங்கலிமாரா (ACHENGE, ASHANKE, KENKALIMARA)

மலாய்: கப்பிஸ்> டெங்கலான் (GAPIS, TENGALAN)

ஆயுர்வேத மருந்துகள்

அகோகரிஷ்டம், அசோகாகிரிபிடா, சந்தநாடிதைலம், நயோகுரோதாதி கஷாயம் - இவை அனைத்தும் பிரபலமான ஆயுர்வேத மருந்துகள்: அசோக மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை.

மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள், மிகுதியான ரத்தப் போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்து  அசோகரிஸ்டம். 

உடல் பருமனாதல் (OBESITY & OVER WEIGHT)

மாதவிடாயின் போது ஏற்படும் வலி> கூடுதலான குருதிப் போக்கு> ரத்தச் சோகை ஆகியவற்றை சரி செய்யும் மருந்து அசோக கிரிட்டா.

மாதவிடாயின் போது ஏற்படும் மிகையான ரத்தப்போக்கு> உடல் பருமனாதல் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது> அசோகா நயோகுரோதாதி கஷாயம். 

கருப்பையில் உருவாகும் நார்க்கட்டிகள் (UTERINE FIBROIDS)

மூக்கில் ரத்தம் கசிதல், மயக்கம், மஞ்சள் காமாலை, நகச்சுத்தி ஆகியவற்றை சுகப்படுத்தும், அசோகா சந்தநாடி தைலம். பொதுவாக பெண்களின் பிரச்சினைகளாக இருக்கும்,  கருப்பையில் உருவாகும் நார்க்கட்டிகள், மிகக் குறைவாக ஏற்படும் மாதவிடாய், மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வலி, பெண்உறுப்பில் ஏற்படும் வெள்ளைப் படுதல், பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில் பலவித மருந்துகள் செய்ய கச்சாப்பொருளாக விளங்குகிறது, அசோகமரம். 

மாதவிடாய்ப் பிரச்சினைகள் (MENORRHAGIA)

மெனோரேஜியா என்றால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகமான உதிரப்போக்கு என்று அர்த்தம். இந்த உதிரப்போக்கு தொடர்ந்து ஒரு வாரம் வரைகூட நீடிக்கும். இதைத்தான் மருத்துவப்பெயராக மெனோரேஜியா  என்கிறார்கள்.  உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டினால் கூட இந்த கூடுதலான ரத்தப்போக்கு இருக்கும். ஒரு சிலருக்கு . மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பும் ஏற்படும். அதைக்கூட  இதனால் சரிசெய்ய முடியும். 

வெள்ளைப்படுதல்என்னும் லீகொரியா (LEUCORRHOEA)

மாதவிடாய் இல்லாத காலத்திலும் ஏற்படும் உதிரப்போக்கை மெட்டாரேஜியா என்று சொல்லுகிறார்கள். இந்த இரு விதமான உதிரப்போக்குகளையும் சரி செய்யும் தன்மையுடையது அசோகமரம். வெள்ளைப்படுதல்  என்னும் லீகொரியா வந்தால் வெள்ளை அல்லது மஞ்சள் திரவம் பெண்குறியிலிருந்து வடியும்.; சாதாரணமாக 15 முதல் 44 வயது வரை உள்ள பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைதான் இது. ஒரு விதமான ஈஸ்ட் என்னும் பூசனை தாக்குதலால் ஏற்படக் கூடிய நோய் இது. இதனால் பெண்குறியில் ஒரு விதமான அரிப்பும் எரிச்சலும்கூட உண்டாகும்.

நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் (DIABETES)

பெரும்பாலும் அசோக மரத்தின் பட்டைகள் பூக்கள் மற்றும் விதைகளை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். உதாரணம் அசோகாரிஷ்டம் (ASHOKARISHTAM) மற்றும் அசோக் ரீட்டா (ASHOKA GHRITA) இதன் பூக்களைக் காயவைத்துப் பொடிசெய்து சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் மற்றும்  நீரழிவு நோயைக் குணப்படுத்தலாம்.

இதன் பூக்களை காயவைத்து பொடிசெய்து சாட்பிட்டு வருவதால்  மலச்சிக்கலைப் போக்குவதுடன் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம். இதன் பூச்சாற்றினை பயன்படுத்தி வயிற்றுக் கடுப்பினையும் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கினையும் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர்ப்பை கற்கள் (KIDNEY STONES)

இதன் விதைப் பொடியை மருந்தாக பயன்படுத்தி சிறுநீர்ப் பைகளில் உருவாகும் கற்களை கரைக்க முடியும். அதுமட்டுமல்ல  இதனை தொடர்ந்து பயன்படுத்தி நமது நினைவு ஆற்றலை அதிகப்படுத்தலாம்.

மருத்துவரிடம் கேளுங்கள் (SIDDHA & AYURVEDIC DOCTORS)

இதன் பட்டைகள் இலைகள் மற்றும் விதைகளை சாம்பல் ஆக்கி அதனை மூட்டு வாதம் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தலாம். ஆனால் இந்த சிகிச்சை முறைகளை எல்லாம் கடைபிடிக்க ஒரு தகுதியான சித்த மருத்துவர் மற்றும் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும் என்பது முக்கியமானது.

2005-06 ம் ஆண்டில் மட்டும் சுமார் 2550 டன் அசோகமரம் பட்டைகளை, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதற்காக மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

கேரளவனத்துறை விவசாயிகளுக்கு உதவி

கேரளவனத்துறை அசோகமரம் பயிரிடுவதற்காக உள்ளுர் விவசாயிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சி. மற்ற மானிலங்களும் இதனை கடை பிடிக்கலாம். மரம் நடுவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு, இதனை விவசாயிகளிடம் ஒப்படைத்தால்  நமக்கு மரங்களும் கிடைக்கும், விவசாயிகளுக்கு உதவின மாதிரியும் இருக்கும். கம்புக்கு களைவெட்டின மாதிரியும் தம்பிக்கு பெண்பார்த்த மாதிரியும் இருக்கும். 

1500 ஏக்கர் நிலம் இருந்தால் சிறுவிவசாயி

பிரேசில் நாட்டில்  நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் 25 சதம் நிலப்பரப்பில் கண்டிப்பாய் மரம் வளர்க்க வேண்டும். ஆனால் அங்கு சிறுவிவசாயிக்கு 1500 ஏக்கருக்கு குறைவான அளவே நிலம் இருக்க வேண்டும்.

இலைகளும்> பூக்களும் அழகாய் அமைந்த சிறுமரம். ஐந்து மீட்டர் உயரம் வரை வளரும். எப்போதும் இலை தழையுடன் இருக்கும்> பசுமை மாறா மரம்.  பிப்ரவரி முதல் எப்ரல் மாதம் வரை மூன்று மாதங்கள் மரம் முழுக்க பூக்களாய் தென்படும்.  பளிச் சென்ற மஞ்சள் நிறத்தில் பூக்கும் இதன் பூக்கள்> ரத்தச் சிவப்பாக நிறம் மாறி, பின்னர் உதிரும்.

அசோக மரமும் நெட்டிலிங்கம் மரமும் ஒன்றல்ல

இமையமலையின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியின் மலையடி வாரம், வடஇந்தியாவின் சமவெளிப் பகுதிகள்> மும்பைக்கு அருகில் மேற்குக் கடலோரப் பகுதிகள், ஆகிய இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசோக மரங்கள் பரவியுள்ளன.  தென் இந்தியாவில் அசோக மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. 

நிறையபேர் பைன் மரம் மாதிரி தோன்றும்> நெட்டிலிங்கம் மரங்களைத்தான் அசோகமரம் என்று சொல்லுகிறார்கள்.  அந்த மரத்தின் தாவரவியல் பெயர், பாலியால்தியா லாங்கிபோலியா (POLYALTHIA LONGIFOLIA) என்பது.

கண்டேன் சீதையை 

சராகா அசோகா (SARACA ASHOKA) என்பதுதான் உண்மையான அசோகமரம்;.  இந்த மரத்தடியில்தான் சீதா பிராட்டியார் சிறை வைக்கப்பட்டிருந்தார்.  கண்டேன் சீதையை என்று முதன்முதலாக அனுமன் சீதா பிராட்டியாரை பார்த்தது இந்த மரத்தடியில்தான். 

அசோகமரம் புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.  இந்தியா> இலங்கை மற்றும் நேப்பாளம் ஆகியவற்றில் எல்லாமே அசோக மரம் தெய்வீகமான மரமாக வணங்கப்பெறுகின்றது.  அசோக மரம் சாமானியர்களின் மரம் அல்ல. கோவில் வளாகங்கள் மற்றும் அரண்மனைத் தோட்டங்களில் வளர்க்கப்பட்டது. 

மன்மதனின் கணை (THE BOW OF LOVE GOD)

இந்து கடவுள்களில் அன்பு மற்றும் காதல் ஆகியவற்றுக்கானவர் காமதேவன் என்னும் மன்மதன்.  மன்மதன் மலர்க்கணை உடையவன்.  அவனுடைய மலர்க்கணை என்பது ஐந்துவகையான மலர்களைக் குறிக்கும்.  அந்த ஐந்து மலர்க்கணைகளில் ஒன்று இந்த அசோக மரத்தின் மலர்கள்.

மன்மதனின் ஐந்து கணைகளில் இருக்கும் ஐந்து பூக்களில் ஒன்று ஒன்று அசோக மலர்.  மீதமுள்ள நான்கு தெரியுமா ? காமதேவனின் வில் கரும்பால் ஆனது.  வில்லின் நாண் தேனீக்களால் ஆனது.  அம்புகள்  ஐந்தும் ஐந்து பூக்கள்.  அவை வெண்தாமரை அசோகம் மாம்பூ, மல்லிகை, மற்றும் நீலத் தாமரை.

கிளைகளை வெட்டி நடலாம் (STEM CUTTINGS)

அசோக மரங்களை உருவாக்க சிறந்தது> அதன் கிளைகளை வெட்டி நடுவதுதான்.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அசோக மரங்களில் விதைகள் சரிவர  பிடிப்பதில்லை.  கேரள மாதிலத்தின் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள், மே, ஜூன் மாதங்களில் கிளைகளை நட சிபாரிசு செய்கிறார்கள்.

நண்பர்களே, கேரள மாநிலம் மரம்நட விவசாயிகளுக்கு உதவுவது போல, மரம் நடும் பணிக்காக செலவிடும் தொகை முழுக்க விவசாயிகளிடம் ஒப்படைக்கலாம், என்கிறேன் நான் நீங்கள் என்ன சொல்லுகிறீகள் ?  

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...