Monday, May 22, 2023

TWENTY ONE HEALTH BENEFITS OF RUDRAKSHAM அறிவியல் ரீதியான மருத்துவப் பயன்கள் கொண்ட ருத்ராட்சம்

ருத்திராட்சம் மருத்துவப் பயன்கள்


(
ருத்ராட்சம் – RUDRAKSHAM – BEAD TREE - ELAEOCARPUS GANITRUS)

பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள், அதிலும் உண்மையான சிவ பக்தர்கள், பக்தி சிரத்தையோடு அணிவது ருட்ராக்ஷம் என்பதுதான் எனக்கும் தெரியும், நிறையபேருக்கு அதுதான் தெரியும், ஆனால் அது 21 விதமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பது தெரியுமா ? அவற்றைத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவினைப் படியுங்கள்.

இருபத்தியோரு விதமான  வகையான மருத்துப் பண்புகளைக் கொண்டது ருத்ராட்சம். உயர் ரத்த அழுத்த நோய், சக்கரை நோய், உடல் காய்ச்சலால் ஏற்பட்ட தளர்ச்சி, சின்னம்மை, எலும்புருக்கி நோய், நாள்பட்ட இருமல், ஆஸ்துமா, இருதய நோய்கள், நினைவுகளை இழத்தல், புற்றுநோய், ஆகியவற்றை குணமாக்குவதற்குரிய மருந்துகளை இதில் தயாரிக்க முடியும்.

ருத்திராட்சை என்பது ஒரு மரம் மற்றும் விதை.  அந்த விதைகளை மாலையாக்கி கழுத்தில் அணிவர். ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கையும் ஞானமும் இருப்பவர்கள் ருத்திராட்சை அணிவார்கள்.  சிலர் போலியான ஆன்மிகக் தோற்றம் தரவும் இதனை அணிவார்கள்.  ஆனால் இதுபற்றி சரியாகக் தெரியாமல் அணிந்தால் கெடுதல் நடக்கும் என்றும் மிரட்டுகிறார்கள்.

பெயர்கள்;: (DIFFERENT NAMES)

தாவரவியல் பெயர்: எலியோகார்ப்பஸ் கனிட்ரஸ் (ELAEOCARPUS GANITRUS)

தாவரக் குடும்பம் பெயர்: எலியோகார்ப்பேசி (ELAEOCARPACEAE)

தாயகம்: இந்தியா, நேபாளம்;, மலேசியா (INDIA, NEPAL)

பலமொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: ருத்ராட்சம் (RUDRAKSHAM)

சமஸ்;கிருதம்:; காட்டுசம்பங்கி (KATTU SAMPANGI)

இந்தி: ருத்ராக்ஷா(RUDRAKSHA)

ஆங்கிலம்: உட்ராசம் பீட் ட்ரி (UTRASUM BEAD TREE)

குஜராத்தி: ருத்ராக்ஷ் (RUDRAKSH)

பெங்காலி: ருத்ராக்கியா (RUDRAKIA)

கன்னடா: ருத்ராக்ஷி மரா (RUDRAKSHI MARA)

மலையாளம்: ருத்ராக்ஷா (RUDRAKSHA)

மராத்தி: ருத்ராக்ஷா (RUDRAKSHA)

பஞ்சாபி: ருத்ராக்ஷா (RUDRAKSHA)

தெலுங்கு: ருத்ராக்ஷா (RUDRAKSHA)

அசாம்: ருத்ராய் (RUDRAI)

ருத்ராட்சைக்கு 21 முகங்கள் (TWENTY ONE FACES)

பொதுவாக ருத்திராட்சைக்கு மருத்துவப் பண்புகள் மற்றும் ஆன்மிகப் பண்புகள் என இரண்டும் உண்டு.

ருத்திராட்சைக்கு முகங்கள் உண்டு.  ஒருமுகம் இருமுகம் என 21 முகங்கள் வரை உண்டு.  இ;ந்த முகங்களின் தன்மைக்கு ஏற்ப பலன்கள், நன்மைகள் வேறுபடும்.  ருத்திராட்சையை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.  இல்லை என்றால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். 

இதற்கு மூன்று பரிசோதனைகள் உண்டு.  அதனை செய்துப்பார்த்து நல்லது எது போலி எது என கண்டுபிடிக்கலாம்.  நல்லவை, தண்ணீரில் போட்டால் முழுகும். கல்லில் உரசினால் தங்க நிறக் கோடுகள் தெரியும். செம்பு நாணயங்களுக்கு நடுவே வைத்தால் ருத்ராட்சை சுழலுமாம்.  இதில் ஏதாவது ஒரு சோதனையைச் செய்தால் போதும்.

பரவியுள்ள இடங்கள் (DISTRIBUTION)

இமயமலை அடிவாரத்தின் கங்கை சமவெளிப்பகுதிகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை, நேப்பாளம், இந்தோனேசியா, நியூகினியா முதல் ஆஸ்திரேலியா வரை, ருத்திராட்ச மரங்கள் பரவியுள்ளன.

ருத்திராட்ச மரங்கள், ஆண்டு முழுவதும் பசுமை மாறாதது: வேகமாக வளரும் பெரியமரம். மூன்று அல்லது நான்கு வயது மரங்கள் காய்க்கத் தொடங்கும். ருத்திராட்ச பழங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

சமஸ்கிருத மொழியி;ல் ருத்ரா (சுருனுசுயு) என்றால் சிவபெருமான் என்று அர்த்தம்.  ஆக்ஷா (யுமுளுர்யு) என்றால் கண்ணீர்;த்துளி (வுநுயுசு னுசுழுPளு) என்று அர்த்தம். ஆக ருத்ராட்சம் என்றால் சிவபெருமானின் கண்ணீர்;த்துளி.

இருபத்தியோரு விதமான மருத்துப் பண்புகள் (MEDICINAL VALUES)

ருத்ராட்ச மரம் பாரம்பரிய மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மரம்.  உயர் ரத்த அழுத்த நோய், சக்கரை நோய், உடல் காய்ச்சலால் ஏற்பட்ட தளர்ச்சி, சின்னம்மை, எலும்புருக்கி நோய், நாள்பட்ட இருமல், ஆஸ்துமா, இருதய நோய்கள், நினைவுகளை இழத்தல், புற்றுநோய், ஆகியவற்றை குணமாக்குவதற்குரிய மருந்துகளை இதில் தயாரிக்க முடியும்.

அமிலநீக்கி, அழற்சி நீக்கி, கீல்வாத நீக்கி, காய்ச்சலடக்கி, உயர் ரத்த அழுத்தம்போக்கி, ஒவ்வாமைநீக்கி (DEMULCENT), சளிபோக்கி (EXPECTRANT), இரைப்பைக் குடல் வலி நீக்கி (CARMINATIVE), செரிமானத் தூண்டி, புற்றுநோய் போக்கி,

மரபணு எதிர்ப்பி (ANTI MUTAGENIC), ரத்தச் சக்கரை குறைப்பி (HYPOGLYCEMIC), பிலிரூபின் குறைப்பி (BILIRUBIN LOWERING), சிறுநீர்ப்பைக்கல் அகற்றி (ANTI GOUT), வலி நிவாரணி (ANALGESIC), தசை இறுக்கம்போக்கி (MUSLCE RELAXANT), ஆக்சிஐன் ஏற்றம் குறைப்பி (ANTI OXIDANT), அழுத்தம் நீக்கி (ADAPTOGENIC), மன இருக்கம் போக்கி(ANTI STRESS), மனத்தளர்ச்சி நீக்கி (ANTI DEPRESSIONS)>, அரிப்புப் போக்கி (ANTIPRURITIC) போன்ற, 21 வகையான மருத்துப் பண்புகளைக் கொண்டது ருத்ராட்சம்.

சிறுநீர்ப்பை கல் அகற்றி

சமீப காலமாக சிறுநீர்ப்பைகளில் கல் ஏற்படுவது வயது வித்தியாசமின்றி ஏற்படுகிறது. சிறுநீரில் இருக்கும் உப்புகள் அடர்த்;தியாகின்றன. அது சமயம் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சிறுசிறு கற்களாக மாறுகின்றன. முக்கியமாக சுண்ணாம்பு என்று சொல்லப்படும் கால்சியம், ஆக்சலேட், மற்றும் யூரிக்அமிலம் போன்றவை திடப்பொருளாக மாறுவதன் மூலம் இந்த கற்கள் உருவாகின்றன.

இதனால் விலாப்புறங்களிலும், அடிவயிற்றுப் பகுதியிலும், சிறுநீர் கழிக்கும் சமயங்களிலும் கடுமையான வலி ஏற்படும். இதனால் பாதிப்பு ஏற்படும்போது சிறுநீர் கழிக்கும்படியான அடிக்கடி உணர்வுகள் தோன்றும்.

இப்படி சிறுநீர்ப்பைகளில் ஏற்படும் கற்களை அகற்றும் மருத்துவப் பண்புகளைக் கொண்டது ருத்ராட்சம்.

ஓன்பதுவித ஈரல் நோய்கள் (LIVER DISEASES)

உலகம் முழுக்க பாரம்பாரிய மருத்துவத்தில் பல  நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரமாக மதிக்கப்படுகின்றது. முக்கியமாக மனஅழுத்தம், பதட்டம், படபடப்பு, நரம்புவலி, வலிப்புநோய், ஒற்றைத்தலைவலி நோய், கவனக்குறைவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், மற்றும் 9 விதமான ஈரல் சம்மந்தமான நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளையுடையவை ருத்ராட்சை மரங்கள்.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் (RECENT RESEARCH FACTS)

கடந்த பத்திருபது ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில்தான் ருத்ராட்சத்தின் மருத்துவப் பண்பகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ருத்ராட்ச மரத்தின் இலைகள், மற்றும் விதைகள் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய மருத்துவம் இதுவரை கண்டறிந்துள்ள ஆய்வு முடிவுகள் மற்றும் அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளும் எதிர்காலத்தில் ருதராட்ச மரத்தை முக்கிய மூலிகை மரமாக அங்கீகரிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.

மேலே சொல்லப்பட்ட செய்திகள் எல்லாம் வேலூர் வி.ஐ.டி யுனிவர்சிட்டி மற்றும் ஜெய்ப்பூர் நேஷனல் யுனிவர்சிட்டியும் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டவை.

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

இந்துமதத்தினர், ருத்திராட்சையை சிவபெருமானின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.  ருத்ராட்ச மாலை அணிவது மிகப் பெரிய சக்தியையும் மனத்தில் மகிழ்ச்சியையயும் மற்றும் ஆரோக்கியத்தையும் உருவாக்கக் கூடியது என்று ஆழமாக நம்புகிறார்கள். 

அது மட்டு மில்லாமல், ருத்ராட்சை மாலை அணிவபவர்களுக்கு சிவனின் அருட்கொடை கிடைப்பதுடன், பிறவி இல்லாத மோட்சநிலை கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.  இதனால் பக்தர்கள், சாதுக்கள், முனிவர்கள் போன்றோர், ருத்திராட்ச மாலை அணிகின்றனர்.  சிலர் ஒற்றை விதை கொண்ட ருத்திராட்ச லாக்கட் அணிவது வழக்கம்.

எனது தாத்தா சிவபக்தர்.  அவர் அடிக்கடி சொல்லும் பழ மொழி என் நினைவுக்கு வருகிறது.  அஞ்சு எழுத்து ஒதுகிறவனுக்கு கஞ்சி வரும் தலைமேல் என்று சொல்லுவார்.  ஆவர் எப்போதும் கழுத்தில் அந்த ஒற்றை ருத்திராட்ச கொட்டை கொண்ட லாக்கட்டை இறுதிக்காலம்  வரை அணித்திருந்தார்.  ருத்திராட்சகொட்டை அணிந்தவர்களில் பிரபலமானவர்களில் எனது நினைவிலிருக்கும் ஒருவர், திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

பத்து லட்சம்கூட விலைபோகும் (RUDRAKSHA IS COSTLY)

சத்யயுகம், திரேகாயுகம், துவாபாயுகம், கலியுகம் என காலங்கள் தோறும் கடவுளர்களும், ரிஷிகள், மற்றும் முனிவர்களும் ருத்திராட்சை அணித்திருந்;தார்கள், என புராணங்களில் குறித்துள்ளனர்.  விஷ்ணு பத்தர்களுக்கு துளசி மாலை அணிவது போல சிவ பத்தர்களுக்கு ருத்திராட்ச மாலை என்று சொல்லுகிறார்கள்.

ருத்ராட்ச விதை ஒன்று பத்துலட்ச ரூபாய்க்குக் கூட விற்பனை ஆகும்.  அது அதில் இருக்கும் கோடுகளைப் பொருத்தது.  ஒரு விதையில் 21 கோடுகள் இருந்தால் அதுதான் அரியவகை ருத்ராட்சை. அதுதான் 10 லட்சம் வரை விலைபோகும். சராசரியாக எல்லா ருத்ராட்ச கொட்டைகளிலும் 5 கோடுகள் இருக்கும்.  கோடுகளுக்கு ஏற்றபடிதான் விலை.

ஏமாற்றுவார்கள், ஜாக்கிரதை (CHEATING IS VERY COMMON)

ருத்திராட்ச விதைகளின் விலை எக்குத்தப்பாக இருப்பதால் இதில் நிறையபேர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களே செயற்கையாக கோடுகள் போட்டு, ஏமாற்றுகிறார்கள்.  சிலர் அதை அப்படியே அச்சாக பிளாஸ்டிக்கில் தயாரிக்கிறார்கள்.  இதில் நிறையபேர் வல்லுநர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் உண்மையான ருத்திராட்சம் வாங்க உங்களுக்கு உதவி செய்வார்கள்.  ஆனால் அவர்கள் வழங்கும் ஆலோசனைக்கு நாம் ஒரு பெருந்தொகையை வழங்க வேண்டும்.

ஆனால் இதனை பயிர் செய்து எந்த விவசாயியாவது பணம் சம்பாதிக்கிறார்களா என்று தெரியவில்லை. 

திருமூலரின் திருமந்திரம் (THIRUMOOLAR A TAMIL SAINT)

ருத்திராட்சை விதைகளில் இருக்கும் கோடுகளை முர்கி’(MURGI) என்று குறிப்பிடுகிறார்கள்.  தமிழில் முகம்.  நாம் வேண்டுமானால் ஒரு முக ருத்ராட்சை, இருமுக ருத்ராட்சை என்று சொல்லாம்.  21க்கும் மேல் கூடுதலான முகங்கள் இல்லை.  21 தான் அதிகபட்சம். அதிக முகங்கள் கொண்ட ருத்ராட்சைகள் அதிக பயனும், சத்தியும் அளிக்கும் என்பது நம்பிக்கை.

தமிழின் முதுபெரும் சித்தர் திருமூலர் தனது திருமந்திரம் நூலில் ருத்ராட்சை, நெறி பிறழாதவர்களின் அடையாளம் என பாடலாக எழுதி உள்ளார்.

இணை ஆர் திருவடி ஏத்தும் சீர்வங்கத்து

இணை ஆர் இணைக்குழை, ஈரணை முத்திரை,

குணம் ஆர் இணைக் கண்ட மாலையும் குன்றாது

ஆணைவாம் சரியை கிரியை யினார்க்கே,

-திருமந்திரம் - 142

சரியை கிரியை (WORSHIPPING PHYSICALLY & MENTALLY)

சரியை, கிரியை என்னும் இரண்டு நெறிகளில் பிறழாமல் இருப்பவர்களின் உடலில் இரண்டு அடையாளங்கள் இருக்கும். ஒன்று காதணிகள், இன்னொரு ருத்ராட்சையினால் உருவாக்கப்பட்ட செபமாலை மற்றும் கண்டமாலை என்னும் கழுத்தணி மாலை என்கிறது இந்தப் பாடல். 

மாலைகள் அணிவது, உடலால் வழிபடுவது - இது சரியை. கிரியை- உடலாலும் உள்ளத்தாலும் வழிபடுவது.

வாசகர்களில் உத்திராட்சம் அணிபவர்கள் இருந்தால் உங்கள் அனுபவம் என்ன என்று சொல்லுங்கள்.

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...