Saturday, May 6, 2023

TIRUNELVELI DISTRICT RIVER MANIMUTHARU திருநெல்வேலி மாவட்ட ஆறு மணிமுத்தாறு

 

திருநெல்வெலி மணிமுத்தாறு


மணிமுத்தாறு இது மேற்கு தொடர்ச்சி மலையில் பிறந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றுடன் கலக்கிறது
. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஆறு. இந்த ஆற்றின் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக்கடலில் சங்கமம் ஆகிறது. 

களக்காடு மலைப்பகுதி (ORIGIN KALAKKADU HILLS)

மணிமுத்தாறு நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் செங்காந்தேரி அருகில் பச்சை ஆற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் கொட்டுகிறது. 

காமராஜர் கொண்டுவந்த அணைக்கட்டு (KAMARAJAR BROUGHT THE DAM)

மணிமுத்தாறு மழைக்காலத்தில் மட்டும் வெள்ளை நீரை வெளியேற்றும் ஆறும் என்றே அறியப்படுகிறது

மணிமுத்தாறு ஆற்றின் மூலம் கிடைக்கும் வெள்ள நீர் தாமிரபரணியுடன் சேர்ந்து கடலில் கலப்பதை தடுக்க காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மணிமுத்தாறு அணைக்கட்டு திட்டம்

வறட்சியான பகுதிக்கு வந்த வரம் (A BOON TO DROUGHT AREAS)

திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான வீரவநல்லூர் கரிசல்பட்டி திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி விவசாயத்திற்கும் குடிநீராகவும் பயன்படுகிறது மணிமுத்தாறு.

மாஞ்சோலை மற்றும் கோதை ஆற்றுக்கு மணிமுத்தாறு தான் நுழைவு வாயில். இந்த இரண்டும் சேர்ந்துதான் மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி.

சிங்கம்பட்டி அருகில் மணிமுத்தாறு அணை அமைக்கப்பட்டது இந்த அணையில் 118 அடி வரை நீரை தேக்க முடியும்

மாஞ்சோலை மலைப்பகுதியில் மிகவும் அழகான நீர்வீழ்ச்சி மணிமுத்தாறு. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது. 

நான் இதுவரை மாஞ்சோலை போனதில்லை, நீங்கள் போயிருக்கிறீர்களா ?

GNANASURIABAHAVAN D 

gsbahavan@gmail.com


 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...