வெட்டாறு கிளை ஆறு |
வெட்டார் ஒரு கிளை ஆறு (VETTARU A BRANCH OF
VENNAARU)
இது வெண்ணார் ஆற்றின் ஒரு கிளை ஆறு, நமக்குத் தெரியும் வெண்ணாறு காவிரியின் (KAVERI) கிளை ஆறு என்று. இதுவும் வெண்ணாறு போலவே மூன்று மாவட்டங்களீல் பாய்ந்து நாகூர் அருகில் வங்காளவிரிகுடா கடலில் சேருகிறது.
தென்பெரம்பூர் அணைக்கட்டு (THENPERAMBUR DAM)
தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னங்குடிக்கு அருகில் உள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டில், பிறக்கிறது: தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகப்பட்டினம் (THANJAVUR, THIRUVARUR, NAGAPATTINAM) மாவட்டங்கள் வெட்டாறு பாயும் இடங்கள்.
இன்னொரு கிளை ஆறு பற்றி சொல்ல வேண்டும். அதன் பெயர் ஒடம்போக்கிஆறு. இது ஏங்கன் என்ற கிராமத்தில் வெட்டாற்றிலிருந்து பிரிகிறது. ஒடம்போக்கி ஆறு திருவாரூர் வழியாக ஓடுகிறது. அம்மையப்பன் கிராமத்தில் வளவாய்க்கால் எனும் சிற்றாறு ஒடம்போகி ஆற்றிலிருந்து பிரிகிறது.
மெலட்டூர், வலங்கைமான், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், (MELATTUR, VALANGAIMAN, KORADACHERI,
THIRUVARUR, NAGAPATTINAM) ஆகிய ஊர்களின்
வழியாக பயணம் செய்யும் வெட்டார்,
காரைக்கால் துறைமுகத்தின் அருகில்
நாகூரில் வங்க கடலில் சங்கமம் ஆகிறது.
தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் நண்பர்கள் வெட்டார் மற்றும் ஒடம்போக்கி ஆறுகளின் புகைப்படங்கள் இருந்தால் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பி வையுங்கள். (போன் எண்; 8526195370)
No comments:
Post a Comment