Friday, May 19, 2023

THANJAVUR AND THIRUVARUR RIVER VENNAARU தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆறு வெண்ணாறு

 

வெண்ணாறு


இது காவிரி நதியின் ஒரு கிளையாறு (DISTRBUTARY OF KAVERI)இது. தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் சங்கமமாகிறது. சோழபேரரசு காலத்தில் நீர்வழிப் போக்குவரத்தாக பயன்பட்டது.

ஸ்ரீரங்கம் கிராண்ட் அணைகட்டு (SRIRANGAM ISLAND GRAND ANAICUT)

ஸ்ரீரங்கம் தீவில் உள்ள கிராண்ட் அணைகட்டிலிருந்து கிழக்குப் பக்கம் காவிரியிலிருந்து பிறக்கிறது வெண்ணாறு. 

வெட்டாறு, கோரையாறு, பாமணியாறு (VETTAR, KORAIYAR, PAMANIYAR)

வெட்டாறு, கோரையாறு, பாமணியாறு ஆகியவை வெண்ணாற்றின் கிளை ஆறுகள். தென்பெரம்பூரிலிருந்து வெட்டாறு வெண்ணாற்றிலிருந்து பிரிகின்றது.  நீடாமங்கலம் அணக்கட்டிலிருந்து கோரையாறும், பாமணியாறும் பிரிந்து ஓடுகின்றன. 

தென்பெரம்பூர் அணைக்கட்டு (THENPERAMBUR DAM)

இது தென்னங்குடி (THENNANKUDI)என்ற இடத்தில் தென்பெரம்பூர் அணைக்கட்டில் இரண்டாக வடக்கு மற்றும் தெற்கு கிளைகளாக பிரிகிறது. வடக்கு பக்கமாக போவது வெட்டாறு தெற்கு பக்கமாக பிரிந்து ஓடுவது வெண்ணார் ஆறு. 

நீடாமங்கலம் அணைக்கட்டு (NEEDAMANGALAM DAM)

இந்த ஆறு தஞ்சாவூர் மற்றும் அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் அருகில் ஓடுகிறது நீடாமங்கலத்தில் ஒரு அணைக்கட்டு உள்ளது அந்த இடத்தில் இந்த ஆறு மறுபடியும் மூன்றாகப் பிரிகிறது. தெற்குப் பக்கமாக பிரியும் கிளைகள் தான் பாமணியார் மற்றும் கோரையார் ஆறுகள். 

வங்காள விரிகுடா கடல் (BAY OF BENGAL)

வெண்ணார் வடபுறமாக தொடர்ந்து ஓடுகிறது. கொரடாச்சேரி (KORADACHERI)என்ற இடத்தில் இந்த ஆறு மீண்டும் ஒருமுறை இரண்டாக பிரிந்து ஓடுகிறது. அதன் பின்னர் அந்த இரண்டு ஆறுகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் ஒன்றாக சேர்கின்றது. இப்படி ஒன்றாக சேர்ந்து ஓடும் ஆறு வங்காள விரிகுடா கடலில்(BAY OF BENGAL)  வேளாங்கண்ணி (VELANKANNI) என்ற இடத்தில் சங்கமம் ஆகிறது. 

நீர்வழிப் போக்குவரத்து (WATER WAYS TRANSPORT)

வெண்மையான நீரை உடைய ஆறு என்ற அர்த்தத்தில் தான் இதற்கு  வெண்ணார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சோழர்கள் அரசாண்ட காலத்தில் இந்த வெண்ணாறு மிக முக்கியமான நீர் வழிப் போக்குவரத்தாக இருந்தது என்று  சொல்லுகிறார்கள்.

சோழர்கள் அரசாட்சி காலத்தில் ராந்தக சோழன் (CHOLA KING PARANTHAKA)என்ற மன்னன் இந்த வெண்ணார் ஆற்றில் கிளை ஆறு ஒன்றினை வெட்டியதாக ஒரு  செய்தி உள்ளது. 

ஸ்ரீரங்கம் போயிருக்கிறீர்களா ? அங்கு கிராண்ட் அணைக்கட்டின் கிழக்குப்பக்கம் பிரியும் வெண்ணாற்றை பார்த்திருக்கிறீர்களா ?

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...