குடமுருட்டி ஆறு |
இந்த ஆற்றுக்கும் பெயர் காரணம் ஏதாவது இருக்கும் என்று நினைக்கிறேன். கை வைத்து குடிக்கும் அளவுக்கு தான் தண்ணீர் ஓடும் என்று வைகை பற்றி என் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையாகச் சொன்னார். அதுபோல குடமுருட்டி ஆற்றிற்கும் இப்படி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும் என்று நம்புகிறேன்.
காவிரியின் கிளை ஆறு (TRIBUTORY OF CAUVERY)
இது இது தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு உரிய ஆறு. அதைவிட முக்கியமான செய்தி இது காவிரி ஆற்றின் கிளை ஆறு. காவிரியின் துணை ஆறாக குடமுருட்டி ஆறு போல இங்கு திருமலை ராஜன் ஆறும் முடிகொண்டான் ஆறும் இதன் கிளை ஆறுகளாக உள்ளன.
பிறப்பு திருக்காட்டுப்பள்ளி (ORIGIN THIRUKKAATTUPALLI)
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காவிரியில் இருந்து இந்த குடமுருட்டியாறு ஆறு பிரிந்து ஓடுகிறது. அதையடுத்து பண்டாரவாடை என்ற இடத்திலிருந்து திருமலை ராஜன் என்ற ஆறு பிரிந்து ஓடுகிறது.
தேவாரப்பாடல் பெற்ற ஆறு (RIVER PORTRAYED IN THEVARAM)
அதுபோலவே நல்லூர் என்ற இடத்திற்கு அருகில் வாழப்பழக்கடை என்ற இடத்தில் ஒரு கிளையாறு இதிலிருந்து பிரிந்து செல்கிறது அதன் பெயர் முடிகொண்டான் ஆறு. திருவையாற்றில் உள்ள முக்கியமான ஐந்து புனிதமான ஆறுகளில் இதுவும் ஒன்று. இந்த ஆறு பற்றி தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது.
திருவாலம்பொழில் கோவில் (THIRUVALAMPOZHIL TEMPLE)
இந்த ஆற்றின் பழைய பெயர் கடுவாய். இங்கு திருவாலம்பொழில் என்ற கோவில் உள்ளது. அந்த கோவிலில் இந்த ஆற்றின் நீரை தீர்த்தமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
திருச்சிக்கு அருகில் ஒரு பாசன கால்வாய் இருக்கிறது அதன் பெயரும் குடமுருட்டி என்பது தான். இது கால்வாய் அது ஆறு.
திருச்சி மாவட்ட
காட்டாறுகள் (CREEKS OF TRICHIRAPALLI DISTRICT)
உய்யகொண்டான் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல காட்டாறுகளில் இருந்து வரும் வெள்ளத்தை வெளியேற்றுவது குடமுருட்டி ஆறுதான். அதனால் இந்த குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் வருவது வாடிக்கைதான் என்று சொல்லுகிறார்கள்.
ஆற்றங்கரைக் கோவில்கள் (RVIER-SIDE TEMPLES)
விஷாஹரேஈஸ்வரர் கோவில், கல்யாணவரதராஜ பெருமாள்கோவில், அய்யாளம்மன்கோவில், ஆகியவை பிரபலமான இந்த ஆற்றங்கரைக் கோவில்கள்.
கரூரில் பைபாஸ் ரோட்டு பாலம் (KARUR BYPASS ROAD BRIDGE)
சோழ சாம்ராஜ்யத்தின் திருவாரூர் தலங்களில் பத்தாவது தலமாக கருதப்படுகிறது இந்த திருவாலம்பொழில் கோவில். இந்த தலத்தை ஆலம்பொழில் பரம்பைக் குடி என்று அழைக்கிறார்கள்.
கரூரில் பைபாஸ் ரோடு அருகில் இந்த குடமுருட்டி ஆறு காவிரியுடன் கலக்கிறது. இங்கு குடமுருட்டி ஆற்றின் குறுக்கே இருக்கும் ஒரு பாலத்தில், அங்கு கொட்டப்படும் திடக்கழிவுகள் தாழம்பூ கழிவுகளால் அடிக்கடி பாலத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்று சொல்லுகிறார்கள்.
சாதுக்கlளின் பாத யாத்திரையை (SAINTS EFFORTS IN PALAR RIVER RESTORATION)
சென்ற ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் சாதுக்கள் பாலாற்றினை சீரமைப்பதற்கான ஒரு பாத யாத்திரையை நட்த்தினார்கள், அது போல ஆற்றங்கரைக் கோயில்களின் பக்தர்கள் குழாம் அந்தந்த கோயில்களுக்கு அருகாமையில் உள்ள ஆற்றங்கரைகளை சுத்தப் படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டும் என்று அந்த பாத யாத்திரை மாநாட்டில் நான் வேண்டுகோளை வைத்தேன்.
எனது
வேண்டுகோள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று சொல்லுங்கள்.
BHUMII
GNANASOORIAN, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment