Saturday, May 20, 2023

SENIOR CITIZEN SPECIAL WILD GULMOGAR TREE 6. முதியோர் ஸ்பெஷல் வாதநாராயணன் மரம்

யாருக்கும் வரலாம் மூட்டுவலி
 

வாதநாராயணன், என்றால் எந்த வயதினரையும் வாத  நோய்களிலிருந்து காத்து ரட்சிக்கும் கடவுள் மாதிரியான மரம்.

வாதநாராயணன் - VADANARAYANAN

மூட்டுக்களில் வீக்கம், வலி. கைமுட்டி கால்முட்டி நீட்டமுடியாமை மடக்க முடியாமை மற்றும் நடக்க முடியாமை. இப்படி முடியாமைகள் எல்லாமே முதியோர்களுக்குரிய ஆமைகள். 

சில பேருக்கு இவற்றை எல்லாம்    ஆர்த்ரைட்டிஸ், ருமேட்டிக் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ பொராசிஸ் என்று தமிழில் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.  இவை எல்லாவற்றையும் முடக்குவாதம் என்று பொதுவாகச் சொல்லுகிறார்கள். இவை எல்லாவற்றையும் குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது இந்த மர மூலிகை. அதனால்தான் இதன் பெயர் வாதமடக்கி அல்லது வாதநாராயணன்.

உணவு +  மருந்து + மரத்தேவை (FOOD MEDICINE & TIMBER)

மயில்கொன்றையும் வாதநாராயணனும் ஒரே ஜாதி மரங்கள். அது டிலானிக்ஸ் ரீஜியா. இது டிலானிக்ஸ் எலேட்டா. 5 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும். உணவு, மருந்து, மரத்தேவை என முக்கிய மூன்று பயன்களுக்கும் உதவும்.

சொந்த இடம், டிஜிபவுட்டி, எகிப்து, எத்தியோப்பியா, கென்யா, சவூதி அரேபியா, சொமேலியா, சூடான், தான்சானியா, யுனைட்டட் ரிபப்ளிக் ஆப் உகாண்டா மற்றும் ஏமன்.

இந்த மரங்கள் அதிகம் காணப்படும் இடங்கள், கிழக்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதிகள், எகிப்து, சூடான், எத்தியோப்பியா, சொமாலியா, உகாண்டா, கென்யா, மற்றும் தான்சானியா.

பெயர்கள்: (DIFFERENT NAMES)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : ஒயிட் குல்மோகர் - (WHITE GULMOHAR)

தாவரவியல் பெயர்  :   (DELONIX   ELATA)

தாவரக்குடும்பம் பெயர் :  சிசால்பினியேசி (CAESALPINEACEAE)

பல மொழிப் பெயர்கள்

தமிழ்:  வாதநாராயணன், வாதமுடக்கி, வறட்டி (VADANARAYANAN, VATHAMADAKKI, VARATTY)

இந்தி: வேய்கரன், சம்ஸ்ரோ, சனிஸ்ரோ, சன்டேஷ்ரா (WAYKARAN, SAMSRO, SANESRO, SANDESHRA)

கன்னடா: கெம்புகெஞ்சிகா, நிரங்கி, வாதநராயணா (KEMPUKENJIGA, NIRANGI, VATANARAYANA)

மராத்தி: சன்செய்லா, சங்கசுரா (SANCHAILA, SANKASURA)

சமஸ்கிருதம்: சித்தேஸ்வரா (SIDDHESVARA)

தெலுங்கு: சின்னசெரிபிசெரி, சித்திகேஷ்வராமு (CHINNA SERIBISERI, CHITTI KESHVARAMU)

எலும்புகள் உடையாது, மூட்டுக்கள் பிசகாது (PROTECT BONES)

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாதநாராயணன் இலைகளில் குழம்பு மற்றும் துவையல் வைக்கும் பழக்கம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை இதனை சமையலில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் உடையாது. மூட்டுக்கள் பிசகாது.  கால்பாதத்தின் மேல்பகுதி மூட்டைமாதிரி வீங்காது. விண்விண்ணென்று வலிக்காது. அது சம்மந்தமான நோய்கள் தலைகாட்டாது என்கிறார்கள்.

வெரிகோஸ் வெயின் (VARICOSE VEIN)

இதன் வேர்களை அவித்து அதிலிருந்து எடுத்த சாற்றை விஷமுறிவுக்கு பயன்படுத்தலாம். வேர்களை விழுதுபோல அரைத்து கட்டிகளில் பூச அவை பழுத்து உடைந்து விரைவாக குணமாகும். மரத்தின் சிம்புகளை, குச்சிகளை நன்கு மென்று விழுங்க வாய்ப்புண் குணமாகும்.

வாதநாராயணன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கிப் பொறுக்கும் சூட்டில் நரம்பு முடிச்சு உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வெரிக்கோஸ் வெயின் பிரச்சினை நாளடைவில் குணமாகும்.

மரப்புட்டிகளும் பெட்டிகளும் (WOODEN BOXES & BARRELS)

பஞ்ச காலங்களில் மக்கள், இதன் விதைகளை வறுத்தும் அவித்தும் சாப்பிட்டு பசியாறியதாகச் சொல்லுகிறார்கள்.

மரம், மஞ்சள்நிற சாயை உள்ளது. பலவிதமான பொருட்கள் செய்ய இழைத்தும், கடைந்தும் செய்ய ஒத்தாசை தரும் மரம். கத்தி சுத்தி, அரிவாள் அதற்கான பிடிகள், பீர் போன்ற மதுவகை சேமிக்கும் மரத்தொட்டிகள், மரப்பிப்பாய்கள், பால் புட்டிகள், தேனிப்பெட்டிகள், மேஜைக் கரண்டிகள், அகப்பைகள், கோப்பைகள் இன்னும் இதர வகைப் பெட்டிகள் எல்லாம் செய்யலாம்.

விதைகளை ஊறவைத்து விதைக்கலாம். (SEEDS CAN BE SOWN)

மரங்கள், தான்சானியா நாட்டில் நிழலுக்காகவும், வேலிகளில் வளர்க்கிறார்கள். ஓடை மற்றும் ஆற்றங்கரைகளில் நட்டு கரைகளை பலப்படுத்த அற்புதமான மரம். மண் அரிமானத்தைத் தடுக்க ஏற்றது. இதன் இலைதழைகளை பரவலாக இந்தியாவில் தழை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

விதைகள் நன்கு முளைக்க விதைகளை 12 முதல் 24 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து விதைக்கலாம்.

நீர் தேங்காத நிலங்கள் ஏற்றவை (SOIL WITH GOOD DRAINAGE)

மரங்கள், நீர் தேங்காத நிலங்களில் வளரும். பாறைகள், சிறு கற்கள், மற்றும் கூழாங்கற்கள்; நிறைந்த கல்லாங்கரடுகளில் கூட வளரும். இதன் வேர்களில் உள்ள வேர்முடிச்சுக்கள் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும்.

முதியவர்கள் மூட்டுவலி பூட்டுவலி கால்வலி தொல்லை இல்லாமல் இருக்க இன்றே வாதனாராயணன் மரக்கன்றினை நட்டு வையுங்கள்,  நடுவீர்களா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...