ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி |
கருவேலமரம் - BLACK BABOOL
ஆலும்
வேலும் பல்லுக்குறுதி (BEST TOOTH STICK)
சுயமாக நான் பல் விளக்க
ஆரம்பித்த பால பருவத்திலேயே எனக்கு அறிமுகமான மரம் கருவேல மரம். அறிமுகமான பழமொழி ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’. பல்குச்சி, பிசின், மற்றும் பம்பரம் எனக்குத்; தந்து சிறு வயது தோழனாக
இருந்தது வேல மரம்.
பெயர்கள்
: (DIFFERENT
NAMES)
பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :
கம் அராபிக், பிளாக் பாபுல் (GUM ARABIC, BLACK BABOOL)
தாவரவியல் பெயர் : அகேசியா நிலோட்டிகா (ACACIA NILOTICA)
தாவரக்குடும்பம் பெயர் : மைமோசி (MIMOSEAE)
தாயகம்: இந்தியா, ஆப்ரிக்கா, எகிப்து
பல
மொழிப் பெயர்கள்: (VERNACULAR NAMES)
தமிழ்: கருவேல் மரம், கருவை (KARUVEL, KARUVAI)
தெலுங்கு: நல்லதும்மா (NALLA DHUMMA)
கன்னடா: பப்ளி (BABLI)
மலையாளம்: கரிவேலம் (KARIVELAM)
ஹிந்தி: பாபுல், ஹிக்கார் (BABOOL, HIKKAR)
மராத்தி: பாபுல் (BABOOL)
குஜராத்தி: பார்பரியா (BARBARIA)
கருவேலங்காடு (BLACK BABUL GROVE)
எனது இளமைக் காலத்தை முழுசாக கிராமங்களில் கழித்தவன் நான். எனக்கு முதலில் அறிமுகமான இரண்டு மரங்களில் ஒன்று பூவரசு மரம், இன்னொன்று வேல மரம். எங்கள் வீட்டிற்கு ரொம்பப் பக்கத்திலேயே ஒரு வேலங்காடு இருந்தது.
அந்த நாட்களில் பல்விளக்க தினமும் பயன்படுத்தியது வேலங் குச்சிதான். வேலங்குச்சியை உடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. கவனமாக உடைக்கவில்லை என்றால் கைகளில் முள் ஏறிவிடும். வேலங்காட்டுக்குள் பார்த்து நடக்கவில்லை என்றால் முள் காலில் ஏறிவிடும். அண்ணாந்துப் பார்த்து நடக்கவில்லை என்றால்; முள் கண்களில் ஏறிவிடும்.
ஆரம்ப நாட்களில் என் அப்பாதான் பல்குச்சி உடைத்துக் கொடுப்பார். கொஞ்சம் வளர்ந்தவுடன் அவருக்கு நான் உடைத்துக் கொடுப்;பேன். விடுமுறை நாட்களில் அங்கு போய் மரங்களிலிருந்து வேலம் பிசின் சேகரிப்பேன்.
ஆதிவாசி
மக்களின் சஞ்சீவி மூலிகை (SANJEEVI HERB OF
ADIVASIS)
தேங்காய் கொட்டாங்கச்சிகளில்தான்; பிசினை சேகரிப்பேன். என்னோடு படிக்கும் நிறைய பையன்களுக்கு ஓசியில் பிசின் தருவேன்;. கிழிந்த நோட்டுப் புத்தகங்களை ஒட்ட அதைத்தான் உபயோகப் படுத்துவோம். ரொம்பவும் நன்றாக ஒட்டும். இன்று கடையில் விற்கும் நாகரீகமான கோந்துகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். சனி ஞாயிறு வந்தால் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது, மூலை மடங்கியவற்றை சரி செய்வது, கிழிந்த நோட்டுப் புத்தகங்களை ஒட்டுவது எல்லாம்தான் எனது முக்கியமான வேலைகள்.
இன்னும் கொஞ்சம் பெரியவனாய் வளர்ந்த பின்னால் வேலங்கட்டையில் நானே பம்பரம் செய்திருக்கிறேன்;. பம்பரத்தின் தலைப்பகுதியில் சப்பாத்தி பழத்தின் சிவப்பு சாயத்தை தடவி வர்ணம் பூசினால் பார்க்க அழகாய் இருக்கும். பம்பர விளையாட்டில் வேலமர பம்பரம், சுலபமாய் மற்ற மர பம்பரங்களை உடைத்துவிடும்.
ஆப்ரிக்காவில் கருவை மரங்கள் பெருமளவில் இயற்கையாக பரவி உள்ளன. அதனால் அவர்கள் இதை ஒரு களை மரமாகக் கருதுகிறார்கள். எதுவும் ஓசியில் கிடைத்தால் அதற்கு மரியாதை இல்லை. தட்டுப்பாடும் கட்டுப்பாடும் இருந்தால் தகரம் கூட தங்கத்திற்கு சமமாய் விலைபோகும்;.
ஆனால் அங்கு வசிக்கும் பல ஆதிவாசி மக்களுக்கு பல விதமான நோய்களுக்கும் இன்றும் கைகண்ட மருந்து கருவை மரம்தான். அவர்களைப் பொருத்த வரை கருவை மரம் ஒரு சஞ்சீவி மூலிகை.
இயற்கை பல்குச்சிகள் (NATURAL TOOTH BRUSH)
நடுத்தரமாக 5 முதல் 10 மீட்டர் வளரும். எல்லோரின் கவனமும் இயற்கை மருந்தின் பக்கம் திரும்பி உள்ளது. தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட ‘இது இயற்கை இது இயற்கை’ என கூவிக்கூவி விளம்பரம் செய்கிறார்கள். உலகம்; முழுவதும் பாரம்பரிய பொருட்களின்பால் மோகம் திரும்பியுள்ளது. இயற்கையாக தயாரித்த ஆர்கானிக் பொருட்கள் 70 முதல் 100 சதம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். வேம்பு மற்றும் வேலங்குச்சிகள் கூட பல்துலக்க ‘ஆர்கானிக் சீவ் ஸ்டிக்ஸ்’ என்ற பெயரில் அமேசானும் அலிபாபாவும் விற்பனைசெய்யத் தொடங்கிவிட்டன.
அதனால் கருவேல மரம் எதிர் வரும்
காலத்தில் மீண்டும் ஒரு முக்கிய மூலிகை மரமாக முக்கியத்துவம் பெறும் என நம்பலாம்.
இனி; அதனை சீவ் ஸ்டிக் ட்ரீ என்று சொன்னால்தான் வருங்கால
சந்ததிக்கு தெரியும்.
இதன் மரங்கள், காகிதம் தயாரிக்க, வேளாண்மைக் கருவிகள், கட்டிடச் சாமான்கள், மேஜை, நாற்காலிகள், படகுகள், கம்பங்கள், கேபினட்டு பெட்டிகள்;, உழவு ஏர், மற்றும் சக்கரங்கள், செய்யவும் உதவும்.
இலை, பட்டை, கோந்து, நெற்று, வேர், மரம் அத்தனையும் மருந்துகள் செய்ய உதவுகின்றன. சக்கரை நோய், ரத்தச் சோகை, தோல், உணவுக் குழாய், சிறுநீர் மற்றும் பால் உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள், மூச்சுக் குழாய், டான்சில், வயிற்றுப் போக்கு, பல் சுத்தம் பேணுதல், போன்றவற்றிற்கு பயன்படுகிறது.
சிறந்த ஆண்மைப் பெருக்கி (BEST APHRODISIAC)
இதன் பட்டை தென் ஆப்ரிக்காவின் ஜுலு இன (JULU) மக்களின் இருமலைப் போக்குகிறது. வேர்கள் சிப்பி இன (SIPPI) மக்களின் தொழு நேயைப் குணப்படுத்துகிறது. பட்டை மற்றும் வேர்க் குடிநீhதான்; கிழக்கு ஆப்ரிக்க மசாய் (MASAI) இன மக்களின் மஜாவான சாராயம். இவை தவிர பிரபலமான ஆண்மை பெறுக்கி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, தொழு நோய், உடல் இளைக்க, கேன்சர், ஈரல் மற்றும் மண்ணீரல், பித்தப்பை, சின்னம்மை, பிரச்சினைகள், ஆகியவற்றை குணப்படுத்துகிறது. இந்த மரங்கள் மேற்கு ஆப்ரிக்கா, செனிகல், எத்தியோப்பியா, டோங்கா, இத்தாலியன் ஆப்ரிக்கா, ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது.
மிட்டாய் செய்யலாம் (USES IN CONFECTIONARIES)
கரிசலுக்கும் கண்மாய்க்கும் என்றே இயற்கையால் உருவாக்கப்பட்ட கடினமான கருவைமரம். வேர் மண்டலம் தழைச் சத்தை நிலைப் படுத்தும். தேனீக்களுக்கு தேனும், மகரந்தமும் தரும்.
இலை மற்றும் நெற்றுக்களில் டேனின் நிறைந்துள்ளது. உட்புற பட்டையில் 23 சதம் டேனின் சத்து உள்ளது. இதன் மூலம் தோல் பதனிடலாம்.
அத்துடன் பிசின், மிட்டாய் செய்ய, துணிகளுக்கு சாயம் ஏற்ற, மெருகேற்ற, கோந்து தயாரிக்க உதவும். கனி நெற்றுக்களிலிருந்து உறிக்கப்பட்ட தோல் இரப்பர் பாலை கெட்டியாக்க பயன்படும்.; தழை, காய்கள் ஆடுகளுக்கு தீவனமாகும். நிலத்திற்கு உரமாகும். அடுப்பெரிக்க விறகாகும்.
விதைகளைச் சேகரித்து விதைக்கலாம் (SEEDS CAN BE SOWN)
ஆந்திரப்பிரதேசம், பீஹார், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம.; ஆகிய மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த மரங்கள் எல்லாம் சமூகக் காடுகள் திட்டத்தின் கீழ் நடப்பட்டவை. விதைகளைச் சேகரித்து நேரடியாக விதைக்கலாம். குஜராத்தில் ஓரிடம் பாக்கியில்லாமல் தென்படும் கருவை கிராமத் தோப்புகளிலும் விவசாயிகளின் வரப்புகளிலும் விருப்ப மரம்;. அதன் உபயோகம் தெரிந்து விரும்பி நடுகிறார்கள்.
கரிசல்காட்டு மகராசி (ANGEL OF BLACK COTTON SOIL)
ஹரியானாவில் இது கரிசல்காட்டு
தேவதை என்கிறார்கள். விவசாய நிலங்களிலேயே தண்ணீர் பாய்ச்சியும் பாய்ச்சாமலும்
வளர்கிறது. நீர் தேங்கும் நிலங்கள், களர் உவர் நிலங்கள் அனைத்திற்றும் ஒரே நிவாரணம் அங்கு
கருவேல மரம்தான்.
நம்ம ஊரில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தார், கோவில்பட்டியிலும்கூட இதனை கரிசல்காட்டு மகராசி என சொல்லுகிறார்கள்.;.
இமாச்சலப்பிரதேசத்தில் விவசாய நிலங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் திரும்பிய பக்கம் எல்லாம் வேல மரத்தின் அரசாட்சிதான்.
ஜம்மு காஷ்மீர் மற்றும்
பஞ்சாப்பின் சமவெளிப்பகுதிகளில் கூட விவசாயிகளின் விருப்பம் கருவைதான்.
சீர்கேடடைந்த வனங்களை சீர்
செய்கிறது (RESTORATION OF DEGRADED FORESTS)
கர்நாடகாவில் சாலை ஓரங்கள்
மற்றும் நீர் ஆதாரங்களின் கரையோர மரமாக அணிவகுத்து நிற்பவை நம் கருவைதான்.
மத்தியப்பிரதேசத்தில் வீடுகளைச்
சுற்றி, சாலை ஓரங்களில், ஓடைக்கரைகளில், வயல் வரப்புகளில், கிராம சமூகக் காடுகள் எங்கும்
ஆக்கிரமித்திருப்பது கருவைதான்.
மகாராஷ்ட்ராவில் கடலோரப்
பகுதிகள் தவிர்த்து விவசாய நிலங்களிலும் ஓடைக்கரைகளிலும் பரவலாக உள்ளவை கருவைதான்.
ஓரிசா மாநிலத்தில் வனப்பகுதிகளில் பெருமளவு காணப்படும் கருவை மரம் சீர்கேடடைந்த வனங்கள் மற்றும் சாலை ஒர நிழல் தரும் தருக்களாகவும் நிற்பவை இந்த நாட்டுக் கருவைதான்.
களிமண், மற்றும் கரிசல் காடுகளில் நன்றாக வளரும். விதை, நாற்றுஇ
வேர்க்குச்சி ஆகியவற்றை நடவுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
GNANASURIA BAHAVAN, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment