Saturday, May 13, 2023

REJUVENATED RIVER OF RAJASTHAN ARWARI ஜீவநதியாக மாற்றப்பட்ட ராஜஸ்தான் ஆறு ஆர்வாரி

ஆர்வாரி ஆறு


ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில், கிராம மக்கள் ராஜேந்திர சிங் அவர்களின் வழிகாட்டுதலில் ஐந்து ஆறுகளை ஜீவநதிகளாக மாற்றி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ஆர்வாரி ஆறு. இதன் நீர்பிடிப்பு பகுதியில் அமைத்திருக்கும் மழை அறுவடை கட்டுமானங்கள் ஜோகாத்'கள்.  எனும் ஏரிகளும் குளங்களும் தான் ஆவாரி ஆற்றினை ஜீவநதியாக மாற்றி உள்ளன என்பது ஆச்சரியயமான செய்தி ! 

அதிசய ஆறு ஆர்வார் 

ஆர்வார் ஆறு அறுபது ஆண்டுகள் ஓடாமல் இருந்து, ஒரு சொட்டு தண்ணீர்கூட ஓட வில்லை. வறண்டு போய்தான் கிடந்தது.  அது மீண்டும் ஓடும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் ஒருத்தருக்கு மட்டும் முடியும் என்று நினைத்தார். அவர்தான் டாக்டர் ராஜேந்திரசிங்.

அவர் வெளியூர்காரர் என்பதால் அவர் சொன்னதை ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. மெல்ல மெல்ல அவரை நம்ப ஆரம்பித்தார்கள். நாற்பது ஆண்டுகளில் வறண்டுபோய் ஓடாமல் இருந்த ஐந்து ஆறுகளை ஜீவ நதிகளாக மாற்றிக் காட்டினார். அந்த ஐந்தில் ஒரு ஆறுதான்  இந்த ஆர்வாரி ஆறு. வாங்க ஆர்வாரி ஆறுபற்றிப் பார்க்கலாம்.

ஆல்வார் மாவட்ட ஆறு (ALWAR DISTRICT RIVER)

இந்த ஆறு ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்ற மாவட்டத்தை சேர்ந்தது.492 சதுர கிலோமீட்டர் நீர்வடிப் பகுதியைக் கொண்ட இந்த ஆர்வாரி ஆறு 45 கிலோமீட்டர் பாய்து ஓடும் சிறிய ஆறு. 

சார்சா சான்வான் மற்றும் கம்பீர் (TRIBUTARIES)

இந்த ஆர்வாரி ஆறு சார்சா (SARSA)என்ற ஆற்றுடன் சேர்ந்து சான்வான் (SANWAN) என்ற ஆறாக உருவாகிறது. அதன் பிறகு சான்வான் ஆறு டில்டா (TILDAH), பங்கங்கா (Banganga) மற்றும் கம்பீர் (Gambhir) ஆகிய ஆறுகளுடன் இணைந்து ஓடுகிறது. 

யமுனை மற்றும் கங்கைநதி (JAMUNA AND GANGES)

அதன் பின்னர் கம்பீரால் உத்திரபிரதேசத்தில் மணிப்புரி (MANIPURI)என்ற இடத்தில் யமுனை (RIVER JAMUNA)நதியுடன் சேருகிறது. பின்னர் யமுனை நதி பிரயாகையில் (PRAYAG) திரிவேணி சங்கமத்தில் (TRIVENI SANGAM) கங்கை நதியுடன் சேருகிறது. நீரோட்டமே இல்லாத ஆறாக 60 ஆண்டுகள் நீடித்த இந்த ஆறு மீண்டும் எப்படி ஓட ஆரம்பித்தது என்று பார்க்கலாம்.

நாற்பது  ஆண்டுகள் பணி (FORTY YEARS OF HARD LABOUR)

இதற்கான வேலையை 40 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தொடங்கி செய்தார் டாக்டர் ராஜேந்திர சிங்.  அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். அவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். பணக்கார குடும்பத்தை சேர்ந்த அவர் தன் படிப்பு முடித்த பிறகு மருத்துவ சேவை செய்வதற்காக ராஜஸ்தான் வந்தார். 

அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக வந்தார் ராஜேந்திர குமார் அவர்கள்.  ஆனால் அந்த மக்களின் பிரச்சனையாக இருப்பது தண்ணீர் தான் என்பதை உணர்ந்து அதனை தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்து களத்தில் இறங்கினார். அந்தப் பகுதியில் வசிக்கும் கிராமப்புற மக்களோடு இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தார். 

தண்ணீரை சேமித்து பூமிக்குள் அனுப்பியது(JOHATHS HARVESTED THE RAINS)

இந்த நீர்வடிப் பகுதியில் அவர் அமைத்தது மொத்தம் 497 ஜோகாத்(Johath) என்னும் குளங்களை. இவற்றை அவர்கள் மண்ணாலான தடுப்பணைகள் (Earthen Checkdams) என்று சொல்லுகிறார்கள். இந்த நீர்வடிப் பகுதிகளில் அமைத்த குளங்கள் எல்லாம் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து பூமிக்குள் அனுப்பியது. இந்தப்பணி 30 முதல் 35 ஆண்டுகள் தொடர்ந்தது.

ஆர்வார் ஆறு ஓட ஆரம்பித்தது (ARWAR BECOMES A PERENNIAL RIVER)

ஆண்டுக்கு ஆண்டு பூமிக்கு அடியில் சேமிக்கப்பட்டு சேர்ந்த  நிலத்தடி நீர்பொங்கி பூமிக்கு வெளியே ஓடும் புதையலாக ஆர்வார் ஆறு தானாக ஓட ஆரம்பித்தது. இன்றுவரை அது ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

ஆறுகள் பராமரிப்பு சங்கம் (ARWAR RIVER PARLIAMENT)

1998 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திர சிங் அந்த கிராமத்தில் ஒரு ஆறுகள் பராமரிப்பு சங்கத்தை உருவாக்கினார் அந்த சங்கத்தின் முக்கியமான வேலை ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆற்றினை பாதுகாப்பது பராமரிப்பது மற்றும் மேம்படுத்துவது என்ற பணிகள் தான். 

நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு (PEOPLE’S PARTICIPATION TO PROTECT WATER BODIES)

இது மாதிரியான சங்கங்கள் சோழர்கள் காலத்திலும் பாண்டியர்கள் அரசாண்ட காலத்திலும் தமிழ்நாட்டில் இருந்தன. இது மாதிரி கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க பராமரிக்க மேம்படுத்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றும் வேலையை குடிமராமத்து என்று அந்த காலத்தில் குறிப்பிட்டார்கள். 

இன்றைய தமிழகத்தில் குடி மட்டும்தான் இருக்கிறது மராமத்து போய்விட்டது.என்கிறார்   கிராமத்துப் பெரியவர் ஒரித்தர்.

இந்த பகுதியில் உருவாக்கப்பட்ட நீர் பராமரிப்பு கிராம சபையில் 72 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஆர்வார் ஆறு குழந்தைகள் பார்லிமென்ட் (ARWARI  RIVER CHILD PARLIMENT)

இந்த கிராம சபைக்கு ஆர்வாரி ரிவர் பார்லிமென்ட் (Arwari River Parliment) என்று பெயரிட்டுள்ளார்கள். இதற்கு துணையாக குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு ஆறு பராமரிப்பு சங்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இதன் பெயர் ஆர்வாரி ரிவர் சைல்ட் பார்லிமென்ட் (Arwari Child Parliment). 

உங்கள் ஊரில் இதுமாதிரி குழ்ந்தைகள் சங்கம் ஏதாவது இருக்கிறதா  ?

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com


 

 

3 comments:

Anonymous said...

Sambasivam

Anonymous said...

Marvellous movement of reuniting dried river . Public should come forward and involve in such movement. We have to enlighten the public through village meeting and convincing them the benefits to be derived.This will succeed only through public and not by any other agencies.

Gnanasuriabahavan Devaraj said...

Dear Sambasivam IFS sir, you are right sir, the initiation should come from the people. But the people need awareness. I believe my small tiny initiation may be a tiny contribution to the universe. I know it is like a sparrow tried to to empty a sea to save her young one. I am very happy to get a constructive comment from an IFS officer like you. Thank you sir.

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...