Saturday, May 20, 2023

REDSANDER A TREE VIAGRA வயாக்ராவை ஓரம்கட்டும் செஞ்சந்தனம்

செஞ்சந்தனமா வயாக்ராவா ?

செஞ்சந்தனம் - (REDSANDER)

தமிழ் நாட்டில் நிறைய பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக காரணமாக இருந்தது; சமீப காலத்தில் பத்திரிகைகள் மூலம் மிகவும் பிரபலமானது; நிறையபேரை சிறைக்குள் தள்ளி கம்பி எண்ண வைத்திருப்பது; உலகிலேயே  அணுக் கதிர்களைக்  கூட தடுத்து நிறுத்தக்கூடியது என்னும் பெருமைக்கு உரியது செஞ்சந்தன மரம்.;  இதற்கு சந்தனவேங்கை  என்ற ஒரு பெயரும் உண்டு.

பெயர்கள் : (DIFFERENT NAMES);

பொதுப்பெயர்: ரெட் சேண்டர்ஸ்இ ரெட் சேண்டல் வுட்இ சாண்டர்ஸ் வுட்


(RED SANDERS, RED SANDAL WOOD, SAUNDERS WOOD)

தாவரவியல் பெயர்;;: டெரோகார்ப்பஸ் சாண்டாலினஸ் (PTEROCARPUS  SANTALINUS)

தாவரக் குடும்பம்: பாபேசி (FABECEAE)

பல மொழிப்பெயர்கள்

தமிழ்: செஞ்சந்தனம் (SENJCHANDHANAM);

இந்தி: லால் சந்தன் (LAL CHANDAN);

கன்னடம்: அக்ஸ்லியு (AGSLIU);

மலையாளம்: பத்ரங்கம் (BATHRANGAM);

தெலுங்கு: எர்ர சந்தனம் (ERRA CHANTHANAM);

செம்மரம் வேறு செஞ்சந்தனம் வேறு (REDWOOD & REDSANDER)

கடத்தப்படுவது  செம்மரமா ..செஞ்சந்தனமா ..? என்று நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளதுஇதற்கு காரணம் பத்திரிகைகள்; செம்மரம் என்றே எழுதுகிறார்கள்; ஆனால் செம்மரம் என்ற பெயரில் நாட்டுக்கொரு மரம் உள்ளது; ஆக கடத்தப்படுவது செம்மரம் அல்லஇ செஞ்சந்;தனம்.

தமிழ்நாட்டின் செம்மரத்தின் தாவரவியல் பெயர் அபனாமிக்ஸிஸ்  பாலிஸ்டேகியா.  (APHANAMIXIS POLYSTACHYA)  வட அமெரிக்காவில் செம்மரத்தின் பெயர் ராட்சச செம்மரம். (GIANT REDWOOD) இதன் தாவரவியல் பெயர் செக்கோயா டென்ட்ரான் ஜெய்ஜாண்டியம் (SEQUOIADENDRON GAIGANTEUM)  பிரேசில் நாட்டிலும் செம்மரம் உள்ளது. அந்த நாட்டு செம்மரத்தின் தாவரவியல் பெயர் (CAESALPINEA ECHINATA). ஆனால் மரத்தின் நிறம்; கருதி செம்மரம் என்கிறார்கள்.

அணுக் கதிர்களைத் தடுக்கும் மரம் (WILL STOP ATOMIC RAYS)

செஞ்சந்தன மரத்தை கரையான் அரிக்காது; இதன் வைரப்பகுதி கவர்ச்சியான கருஞ்சிவப்பு நிறம்;   கடினமான மரம்; காய்ந்தால் மேலும் கடினமாகும்; கடைசல் மற்றும் இழைப்பு வேலைகளுக்கு  என்றே பிறந்த மரம். 

அணு உலைக் கூடங்களில்இ அணுக்கதிர்களை கசியவிடாமல்இ தடுக்கிறது இந்த செஞ்சந்தனம். ஜப்பான்;காரர்கள் 'ஷமிசேன்" (SHAMISAN)  என்னும் இசைக் கருவியை இந்த மரத்தில்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். 

பல நோய்களை குணப்படுத்தும் (CONTROL SEVERAL DISEASES)

கால்நடைகளுக்கு தீவனம் தருவது; கடினமான தரமான மரம் அளிப்பது,; ஒலி அலைகள் மற்றும் வெப்பத்தை குறைவாகக் கடத்துவதுஉணவுப்  பொருட்களுக்கு நிறம் தருவது இயற்கை சாயம் அளிப்பது; சீதபேதிஇ மேகநோய்கள்இ சொரிசிரங்குகள்இ  கண் நோய்இ கட்டிகள்இ தலைவலி ஆகியவற்றை குணப்படுத்துவது போன்ற அனைத்து  பெருமைகளை உள்ளடக்கியது செஞ்சந்தனம். 

வறண்ட பகுதிகளுக்கு ஏற்ற மரம் (TREE SUITABLE FOR DRY AREAS)

செஞ்சரளைஇ செம்புறைஇ படுகை நிலங்கள்இ வடிகால் வசதி உள்ள  பல்வகை மண் வகைகளில்; வளரும்.  இந்தியாவில்  கோதாவரி நதிக்கும் பாலாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகள்தான்இ செஞ்சந்தன மரங்களுக்கு ஏற்றப் பகுதி.

உலகிலேயே இந்தப்பகுதியில்தான் செஞ்சந்தன மரங்கள் அதிகமாக வளர்கின்றன. அதிக வெப்பமான வறண்ட பகுதிகள்தான் செஞ்சந்தன மரத்திற்கு பிடித்தமானப் பிரதேசங்கள்; ஆனால் தமிழ்நாட்டின் வறட்சியான எல்லா மாவட்டங்களிலும் இது வளர வாய்ப்ப உள்ளது.

ஏற்றுமதி ஆகும் மரம் (SUITABLE FOR EXPORT)

சீனாஇ ஹாங்காங்இ அமெரிக்காஇ குவைத்இ ஜப்பான்இ மற்றும் கிழக்கு ஆசியாவில் சில நாடுகள் நம்மிடமிருந்து  செஞ்சந்தன மரங்களை இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாடு ஆந்திரா மாநிலங்களில் மட்டுமே வளரும் இந்த மரங்கள் இந்தியாவில் சென்னைஇ தூத்;துக்குடிஇ கொல்கத்தாஇ கிருஷ்ணப்பட்டினம்இ நவசேவா  கடற்பகுதிகளிலிருந்து வெளிநாடு போக  கப்பலேறுகின்றன.

உள்ளுரிலும் குறைந்த அளவு விற்பனை ஆகி;றது. பாபா  ராம்தேவ் மட்டும் 707 டன் செஞ்சந்தன மரங்களை 207 கோடி ரூபாய்க்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அகர்பத்தி தயாரிக்க வாங்கியுள்ளார் என்கிறது  டைம்ஸ் ஆப் இந்தியாவின்  செய்தி ஒன்று.

கோடிக் கணக்கில் விலைபோகும் மரம் (VALUE IN CRORES)

2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி செஞ்சந்தனம் 1 டன் மரத்தின் விலை 27 லட்சத்து  41  ஆயிரம் ரூபாய.; ஆயினும்  முதல் தர மரம் சர்வதேச அளவில் 1 டன்  ஒண்ணரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆகி  உள்ளது அதே ஆண்டில்.

ஆண்டுதோறும்  3000 டன்  செஞ்சந்தன மரங்கள் வெளிநாடுகளில் தேவை என்று மதிப்; பிட்டுள்ளது                    இந்திய அரசுஉள்ளுர் தேவை என்பது அதிகம் இல்லை. அழிந்து வரும் மரங்களின்  பட்டியலில்  செஞ்சந்தனம் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அழகுசாதனப் பொருட்கள்இ மேஜை நாற்காலிஇ கதவுஇ ஜன்னல் போன்ற மரச்சாமான்கள்இ இசைக்கருவிகள்இ மருந்துப் பொருட்கள்இ செய்ய  இந்த மரத்தைப்  பயன்படுத்துகிறார்கள். 

எங்கள் தோட்டத்தின் செஞ்சந்தன மரங்கள் (OUR OWN TREES)

தமிழ்நாட்டின் ஜவ்வாது மலையிலும்இ ஆந்திராவின் கடப்பா சித்தூர்இ ராயலசீமாஇ நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில்இ  செஞ்சந்தனம் பெருகி வருகின்றது. இப்பகுதிகளில் இருக்கும் n;சஞ்சந்தன மரங்களின் எண்ணிக்கை  4.5 லட்சம் என்கிறது ஒரு அரசின் புள்ளிவிவரம்.

ஆந்திராவின்  வனத்துறைக்குஇ செஞ்சந்தன மரங்களை ஏற்றுமதி செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது இந்திய அரசு.

வேலூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் செஞ்சந்தனம் நன்கு வளர்கிறது. தெக்குப்பட்டில் உள்ள எங்கள் அபிராஜ் தோட்டத்தில்கூட 20 முதல் 30 மரங்கள்இ செடிகளாக உள்ளன. இவை எல்லாமே மெல்ல வளர்கின்றன. 40 முதல் 45  ஆண்டுகளில் மரங்களை அறுவடை செய்யலாம்.

நடவு செய்த 18 ஆண்டுகள் கழித்துத்;தான் மரத்தின் மையப்பகுதியில் வயிரம் பாய  ஆரம்பிக்கும்; இது 40 முதல் 45  ஆண்டுகளில் முழுமையடையும்  என்கிறார்கள். 

அழிந்துவரும் மரவகை (ENDANGERED TREE SPECIES)

அழிந்துவரும் மர இனம் (நுனெயபெநசநன  வுசநந  ளுpநஉநைள) என்று அரசு ஆணை அறிவித்துள்ளது. ஆயினும் அவ்வப்போது ஏற்றுமதிக்கு நோ பிராப்ளம்  என்று சைட்ஸ; (ஊவைநள) என்னும் சர்வதேச அமைப்பு அனுமதியும் தருகிறது. அழிந்த வரும் மர இனங்களை ஏற்றுமதி செய்ய இந்த  சைட்ஸ்ன் அனுமதி தேவை.

அடிக்கடி கடத்தலுக்கு ஆளாகும் மரம் (ACCESIBLE FOR SMUGGLING)

கடத்தலில் ஒரு முறை கண்டுபிடித்த செஞ்சந்தன மரங்களை விற்பனை செய்வதில்இ மட்டும் இந்திய அரசுக்கு கிடைத்தது எவ்வளவு என்று சொன்னால் மயக்கமே வரும்; ஒரு ரூபாய் இல்லை இரண்டு ரூபாய் இல்லைஓராயிரம் கோடி ரூபாய்.      

வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் செஞ்சந்தனம் இயல்பாக வளர்கிறது.  இதன் உள்நாட்டுத் தேவை மிகவும் குறைவு. அதனால் வெளிநாடுகளின் தேவை அறிந்து நமது உற்பத்தியை அதிகரிக்கலாம்.

காரணம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் செஞ்சந்தனம் இல்லை என்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில்இ அநேகமாய் குளிர்ச்சியான பகுதிகளைத்  தவிர வறண்ட பிரதேசங்களில் எல்லாம் இதனை இதனை சாகுபடி செய்யலாம்.

ரகசிய சாகுபடியாகஇ இது இல்லாமல் இருந்தால்இ மரங்களை  கடத்தல்காரர்களிடம் பறி கொடுப்பதை நிச்சயமாக தடுக்க முடியும். அதற்கு செஞ்சந்தனம்இ  சந்தனம் போன்ற விலை மதிப்புடைய மரங்களை சாகுபடி செய்வதற்குரிய  நடைமுறைகளை சட்டப்படி தீர்மானிக்க முடியும்.

உள்ளுர் தேவை அதிகம் இல்லை (NO OR LEAST  LOCAL NEEDS)

இது போன்ற மதிபு;பு மிக்க மரசாகுபடியை ஊக்குவிப்பது நமது சுற்று சூழலுக்கு உகந்தது. மேலும் பருவகால மாற்றத்தினால்இ ஏற்படும் பாதிப்புக்களை தள்ளிப்போடும் முயற்சியாகவும் இது இருக்;கும்.

உள்ளுர்த் தேவை என்று பெரிதாக எதுவும் இல்லை. அதனால் ஏன் விவசாயிகளை பயிர் செய்ய ஊக்குவிக்கக் கூடாது ..மேலும் அழிந்துவரும் மரவகை  என்னும் பட்டியலிருந்து  இதனை  எடுத்துவிட்டு இதன் ஏற்றுமதியை ஏன் அதிகரிக்கக்  கூடாது..இதன் உற்பத்தியை ஏன் அதிகரிக்கக்  கூடாது..?   என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

கடத்தப்படும் செஞ்சந்தனத்தில்  பிடிபடுவது என்பது 10 மூ கூட கிடையாது என்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி இதனை மர சாகுபடியாக விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வதுதான் என்கிறார் சர்வதேச வியாபார நிபுணர் ஒருவர்.  விஷயம் தெரிந்த விவசாயிகள் பலரும் இதற்கு ஆமென் கிறார்கள் 

குளிர் தாங்காத மரம் (CANNOT TOLERATE COLD CLIMATE) 

செஞ்சரளையுடன் கூடிய இருமண்பாடு (RED LATERITIC LOAMY SOILS)இ  மற்றும் சுண்ணாம்புக் கற்களையுடைய மண்கண்டத்திலும் (ஊயுடுஊயுசுநுழுருளு ளுழுஐடு) வளரும். ஆனால் வடிகால்வசதி அவசியம். கற்கள் மற்றும் பாறைகளையுடைய மண்கண்டத்திலும் (சுழுஊமுலு ளுழுஐடு) வளரும்.

செஞ்சந்தனம் 8 மீட்டர் உயரமும் 150 செ.மீ. வரை விட்டமும் கொண்ட மரங்களாக  வளரும்.  மோசமான மண்   அமைப்பு உடைய நிலங்களில் கூட 3 ஆண்டுகளில் 5 மீட்டர் உயரம் வளரும். ஆனால் ஒரு டிகிரி  செண்டிகிரேட் குளிரைக்கூட தாங்காது.

வயக்ராவை ஓரங்கட்டிவிடும் (A TREE VIAGRA)

சீனாக்காரர்கள் செஞ்சந்தன மரங்களை வாங்கி  லேகியம் கிண்டுகிறார்கள்இ சூரணம்  இடிக்கிறார்கள; என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். அதெல்லாம் சும்மா என்கிறார்கள். அவர்களின் நியூக்ளியார் ரியாக்டர்களில்  கூலண்ட் (COOLANT IN NUCLEAR REACTORS) டாக உபயோகப் படுத்துகிறார்களாம். அதுமட்டுமல்ல.

இன்னொரு செய்தியும் உள்ளது. என்ன என்கிறீர்களா? காதைக் காட்டுங்கள். செஞ்சந்தன மரங்களில் தயாரிக்கும் மாத்திரைகள் வயக்ராவை ஓரங்கட்டும் நயாக்ராவாம். ஏன் இந்த மரத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று  நிறைய பேர் மண்டையைப் பிய்த்துக் கொண்டனர். சும்மா ஆடுமா  சீனாக்காரன்(ர்)  குடுமி ..?.

அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கும்  மருந்துகளில் 35 சதம் பாரம்பரிய மருந்துகள்தானாம். அதேபோல இந்தியா இலங்கை சீனா தைவான் போன்ற வளரும் நாடுகளில் 80 சதவிகிதம் பாரம்பரிய மருந்துகள்தான.  இதை நான் சொல்லவில்லை உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள அதிகாரப்பூர்வமான தகவல்.

பஞ்சாய் பறக்கும்  நீரிழிவு நோய் (SHIELD AGAINST DIABETES)

இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோய் மஞ்சள் காமாலைஇ தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துதல்இ தலைவலி போன்றவற்றை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிப்பதில் செஞ்சந்தன மரத்தை பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் ஒருநாள் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு போய் இருந்தேன் அவர் என்னிடம் மரத்தினால் செய்த டம்ளரை கொண்டு வந்து காட்டினார.; ரொம்ப வித்தியாசமாக இருந்தது. எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களைப் பார்த்து சலித்துப் போன எனக்கு அது வித்தியாசமாகப்பட்டது. இது என்ன தெரியுதா ? என்றார். டம்ளர் என்ன டம்ளர்? மர டம்ளர் அது தெரியுது. என்ன மரம் ? அதான் தெரியல. சொல்லுங்கஎன்றேன். அதன் பிறகுதான் அதிசயமான ஒரு செய்தியைச் சொன்னார். அது செஞ்சந்தன மரத்தில் செய்தது.  அதன் விலை தோராயமாக ஒரு பெரிய நோட்டு அதாவது புதிய இரண்டாயிரம் ரூபாய். அந்த டம்ளரில் முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு அடுத்த நாள் காலை எடுத்து குடிக்க வேண்டும் இப்படி 108 நாள் தொடர்ந்து செய்தால் எப்படிப்பட்ட நீரழிவு நோயும்; பஞ்சாய் பறந்து விடும் என்று சொன்னார்.

தாவர ரசாயனங்கள் (PHYTO CHEMICALS)

செஞ்சந்தன மரத்தின் கட்டை மற்றும் பட்டையில் உள்ள தாவர இரசாயனங்கள் இன்சுலின் உற்பத்திக்கு இது உதவுகிறது என்கிறார்கள் இது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதில் உள்ள தாவர இரசாயனங்கள் எல்லாம் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி உடையதாக உள்ளன.

ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது செம்மரம் கடத்தல் என்ற தலைப்பில் பத்திரிகையில் ஒரு செய்தி வரும.; அது சமயம் செஞ்சந்தனம் பற்றிய ஒரு கட்டுரை ஒன்றை எழுதி வாட்ஸ் அப்பில் வெளியிட்டேன்.  அடுத்த நாள் எனக்கு ஒரு போன் வந்தது. நீங்க எழுதின கட்டுரை நல்லா இருந்திச்சி. நீங்க எழுதினது கரெக்ட் சார் ;. நான் என்ன எழுதினேன் என்ன கரெக்ட் ? ஆண்மைப்பெருக்கின்னு எழுதினிங்களே அது கரெக்ட்தான் சார்.. வயாக்ரா பிச்சை வாங்கணும் சார்.. நானே டெஸ்ட் பண்ணி பாத்துட்டேன் சார் என்று அரைமணி நேரம் அதை விளக்கமாகச் சொன்னார். அதை எல்லாம் நான் இங்கு அப்படியே எழுத முடியாது.

கடைசியாக நான் அவருக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். ஒரு நல்ல டாக்டரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுங்கள் என்று. அவர் என் ஆலோசனையை கேட்டதாக தெரியவில்லை. ஆனால் அவர்; உங்கள் தோட்டத்திலும் இந்த மரங்களை அஞ்சிப்பத்து போடுங்க சார; என்று எனக்கு ஒர் ஆலோசனை சொன்னார். ஏற்கனவே என் தோட்டத்தில் அஞ்சிப்பத்து மரங்கள் இருக்கும் என்ற சமாச்சாரத்தை நானும் சொல்லவில்லை. அவரும் அதுபற்றி கேட்கவில்லை.

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...