Sunday, May 7, 2023

RAJARAJAN MADE RIVER UYYAKONDAN ராஜராஜன் வெட்டிய செயற்கை ஆறு உய்யக்கொண்டான்

 

ராஜராஜனின் உய்யகொண்டான் ஆறு


ராஜராஜ சோழ
னின் செயற்கை ஆறுகள் (MAN-MADE RIVER)

உய்யக்கொண்டான் என்பது ராஜராஜ சோழனுடைய ஒரு பட்ட பெயர். உய்யக்கொண்டான் என்றால் வாழ வைத்தவன் என்று அர்த்தம் சொல்லுகிறது தமிழ் அகரமுதலி. ராஜராஜ சோழன் இது போன்ற செயற்கை ஆறுகளை உருவாக்குவதில் வல்லவன்.  

உய்யகொண்டான் திருமலை (UYYAKONDAN TEMPLE)

உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஒரு சிவன் கோயில் உள்ளது. உய்யகொண்டான் திருமலை என்பது அந்த கோயிலின் பெயர். அந்தக் கோயிலின் மூலவர் ஆன சிவபெருமானின் பெயரும் உய்யக்கொண்டான் என்பதுதான். 

காவிரியின் தென்கரை (SOUTH BANK OF CAUVERY)

ராஜராஜ சோழன் காவிரியின் தென்கரையிலிருந்து செயற்கையாக ஒரு கால்வாயை வெட்டி தென்கரைப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு எல்லாம் பாசன வசதிசெய்து கொடுத்தான். ராஜராஜனின் மிகப்பெரிய சாதனைகள் சாதனைகளில் இதுவும் ஒன்று. 

தென்கரைப்பகுதி ஊர்கள் (VILLAGES OF SOUTH BANK)

மாயனூர் என்ற இடத்திலிருந்து இந்த கால்வாயை வெட்டி தென்கரைப் பகுதிகளுக்கு பாசன வசதி செய்து கொடுத்தான். பழையூர்,லை, புலிவலம், சோமரசம்பேட்டை, ஆகிய ஊர்கள் இதில் அடங்கும்.

ஏரியூர் மங்கலநாடு (EARIYUR MANGALA NADU)

அந்த கால்வாயை அங்கிருந்து ஏரியூர் பகுதிக்கும் கொண்டு சென்றான்.காவிரியின் தண்ணீர் வந்த பிறகு ஏரியூர், ஏரியூர் நாடானது. இன்று ஏரியூர் மங்கலநாடு என்று அழைக்கப்படுகிறது. 

ராயமுண்டான்பட்டி, வெந்தயம்பட்டி, வையாபுரிப்பட்டி சரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, வெண்ணனூர்பட்டி, வேலிப்பட்டி புதுப்பட்டி போன்ற ஊர்கள் அனைத்தும் ஏரியூர் பகுதியில் உய்ய கொண்டான் வாய்க்கால் பாசனத்தால் பயன் பெறுகின்றன. 

ஆட்சியாளர்கள் ஆறுகளை வணங்கினர் (KINGS WORSHIPPED RIVERS)

அந்த காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள் இரண்டு காரியங்களை சிறப்பாக செய்தார்கள் ஒன்று மக்கள் வழிபடுவதற்குரிய கோவில்களை கட்டினர். இரண்டாவது முக்கியமான பணி ஆற்று நீரை அந்தந்த பகுதிகளின் விவசாயத்திற்கு எடுத்துச் சென்று தந்தது மற்றும் குடிநீர் பஞ்சத்தை போக்கியது. மன்னர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக வணங்கியது ஆறுகளைத்தான். 

வளர்ச்சிக்கு ஆதாரம் நீர் (WATER LIFE LINE OF DEVELOPMENT)

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம் நீர் என்பதை உணர்ந்து தனது ஆட்சிக்காலத்தில் நீர் ஆதரங்களை ஏற்படுத்தி அவற்றைப் பராமரிக்கவும் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தினான் ராஜராஜ சோழன்.

 

நீர்சேமிப்பு, நீர்அறுவடை, நீர்ப்பங்கீடு (CONSERVATION, HARVESTING & DISTRIBUTION)

நீர்சேமிப்பு, நீர்அறுவடை, நீர்ப்பங்கீடு என இந்த மூன்றையும் முறையாகச் செய்தான் ராஜராஜ சோழன்.

அதனால்தான் இன்றளவும் இந்தக் கால்வாய் அவன் பெயரால் உய்யகொண்டான் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. 

உய்யகொண்டான் கால்வாயைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததா ? 

GNANASURIA BAHAVAN D

Gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...