இதயத்திற்கு நட்பான பழம் மாதுளை |
(மாதுளை – (POMEGRANATE)
பல ஆயிரம் ஆண்டுகளாக பலவிதமான நோய்களை குணப்படுத்தும் விதத்தில் நமது
முன்னோர்கள் மாதுளையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஊட்டம் தரும் உணவாகவும், வாட்டம் போக்கும் மருந்தாகவும் உதவுகிறது மாதுளை.
மாதுளை ஒரு சிறுமரம். ஏராளமான சிம்புகளுடன் ஒரு குறுமரமாக தோற்றம் தரும். 3 முதல் 5 மீட்டர் உயரம்
வளரும். சிம்புகளில் பளிச் சென்ற சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். கனிகளையும்
தரும்.
பெயர்கள்;(DIFFERENT NAMES)
பொதுப்பெயர்கள் :
தாவரவியல் பெயர்: பியூனிகா கிரனேட்டம் (PUNICA GRANATUM)
தாவரவியல் குடும்பம் பெயர்: லித்ரேசி (LITHERACEAE)
பலமொழிப் பெயர்கள் : (VERNACULAR NAMES)
தமிழ்: மாதுளை (MATHULAI)
அசாமிஸ்: தலிம் (DALIM)
பெங்காலி: தலிம் (DALIM)
குஐராத்தி: டேடம் (DEDUM)
இந்தி: அனார், அனார்தனா (ANARDANA)
கன்னடா: தலிம்பே (DALIMBE)
மலையாளம்: மாதளம் (MADHALAM)
மராத்தி: அனார்தனா (ANARDANA)
நேப்பாளி: தாரிம் (DARIM)
ஓரியா: தலிம்பா (DARIMBA)
சமஸ்கிருதம்: தரிம்பா (DARIMBA)
ஆப்ரிகன்ஸ்: கிரானட் (GRANAT)
ஆல்பேனியன்: ஷெகி (SHEGI)
அரபிக்: ரோமன் (ROMAN)
ஆர்மீனியன்: நூர் (NOOR)
செக்: கிரேனடோவ்னிக் (GRANATOUNIK)
டேனிவு;: கிரேனடேப்பல் (GRANATAPPEL)
பிரென்ச்: கிரினேட்(GIRINATE)
nஐர்மன்: கிரேன்டாஃப்பெல் (GRANTAFFEL)
இந்தோனேசியன்: டெலிமா (TELIMA)
ஐப்பானிஸ்: செக்கிர்யு (SEKIRYU)
மலாய்: டெலிமா (TELIMA)
ஸ்பேனிவு;: கிரேனடா (GRANATA)
ஸ்வாகிலி: கோமாங்கா (KOMANGA)
தெலுங்கு: டடிமா பாண்டு (DADIMA PONDU)
தாய்: டேப் டிம் (TAP TIM)
வியட்நாமிஸ்: கெய்லு (KEYLU)
மூவாயிரம் ஆண்டு சரித்திரம் (THREE THOUSAND
YEARS)
மாதுளை ஏறத்தாழ 3000 ஆண்டுகளாக ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுத்தப்பட்டு
வருகிறது,
என்கிறது மாதுளையின்
சரித்திரம். மாதுளம் பழம், பழத்தின் தோல், மரத்தின் வேர், பட்டை போன்ற எல்லாவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இருவகை கொலஸ்ட்ரால் (GOOD & BAD
CHOLESTROL)
இதய நோய்கள், மாரடைப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஒட்டம், ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பு
ஆகியவற்றை மாதுளை சரிசெய்யும் சக்தி உடையது மாதுளை. கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு
போன்ற ஒரு பொருள். அது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றுதான்.
ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். அதிகபட்சமான கொலஸ்ட்ரால் ரத்தநாளங்களை (ARTERIES) பாதிக்கும். உடல்
ஆரோக்கியத்தைக் கெடுக்கும். கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உண்டு. ஒன்று எச் டி எல்
கொலஸ்ட்ரால் (HDL CHOLESTROL)இரண்டாவது எல் டி எல்
கொலஸ்ட்ரால் (LDL CHOLESTROL)
எச் டி எல் கொலஸ்ட்ரால் என்பதுதான் நல்ல கொலஸ்ட்ரால். இது ரத்த
நாளங்களில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கி கல்லீரல் மூலமாக வெளியேற்றுகிறது.
ஆதனால்தான் அது நல்ல கொலஸ்ட்ரால்.
எல் டி எல் கொலஸ்ட்ரால் என்பது கெட்ட கொலஸ்ட்ரால். காரணம், இதுதான்
ரத்தநாளங்களில் கொலஸ்ட்ராலைச் சேர்ப்பது. இதுபோன்ற கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும்
காரியத்தையும் இதய நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது மாதுளை.
கீல்வாதம் (OSTEOARTHRITIS)
பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடிய கீல்வாதம், சிறுநீரக நோய்கள், இருமல், தொண்டைப்புண், தோல் நோய்கள், வயிற்றுச் செரிமானப்
பிரச்சினைகள், மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, சக்கரை நோய், தோல் புற்றுநோய், , மஞ்சள் காமாலை, மேகப்புண் (SIPHILIS) போன்றவற்றை குறைக்க
அல்லது கட்டுப்படுத்த மாதுளை பயன்படுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கும், பல வகைகளில் உதவுவது மாதுளை; ரத்தச் சோகையினால்
அவதிப்படுவர்களுக்கு இரும்புச் சத்து
அளிக்கும்; உடல் சூட்டிளை தணிக்கும்; குடற்புண்ணை குணப்படுத்தும்.
வறட்சி தாங்கும் (WITHSTAND DROUGHT)
மாதுளை, மிக நீளமான வேர் அமைப்பை உடையது. மண் அரிப்பை சிறப்பாகக் கட்டுப்படுத்தும். ஒடைக்கரைகளில் நட ஏற்றது. வறட்சியைத் தாங்கும். வனமீட்பு முயற்சிகளில் (REFOSTATION) உபயோகம் ஆகும். வடமேற்கு இமாலயப் பகுதிகளில் இதனை வேலிமரமாக நடுவது வழக்கம்.
சிறு குச்சிகளின் துண்டுகள் 4 முதல் 5 செ.மீ நீளமாகவும், முற்றிய கிளைகளை 20 முதல் 25 செ.மீ நீளத்
துண்டுகளாகவும் நடலாம். ஆனால் பெரும்பாலும் பதியன் செடிகள் அதிகம் நடுகிறார்கள.; வேர்ச்செடிகளை
எடுத்து நேரடியாக நடலாம். விதைகளையும்
முளைக்க வைத்து புதிய செடிகளை உருவாக்கலாம்.
கடல் மட்டத்திற்கு மேல் 1800 மீட்டர் உயரம் வரை மாதுளை நன்கு வளரும்.
உயர்விளைச்சல் ரகங்கள் (HIGH YEILDING
VARITIES)
தற்போது தமிழ்நாட்டில், பல உயர்விளைச்சல் மாதுளை ரகங்களைப் பயிரிட, தோட்டக்கலைத்துறை
சிபாரிசு செய்கிறது. அவை, ஜோதி, கணேஷ்;, கோ.1, ஏற்காடு.1, அரக்தா, ருத்ரா, மற்றும் மிருதுளா (JOTHI,
GANESH, ERCAUD 1, ARAKTHA, RUDRA, MRIDULA )
பைபிளில் சொல்லப்படும் ‘ட்ரீ ஆஃப் நாலட்ஐ;’
(BIBLE’S TREE OF KNOWLEDGE)
மத்திய கிழக்கு முழுவதிலும் மிகவும் பிரபலமான பழம் மாதுளை. பைபிளில் சொல்லப்படும் ‘ட்ரீ ஆஃப் நாலட்ஐ;’ என்பது ‘ஆப்பிள்’ அல்ல அது
மாதுளையாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இதன் பழைய லத்தீன்
பெயர் மாலம் பியூனிகா (MALUM PUNICA). மாலம் என்றால், ‘ஆப்பிள்’ என்று பொருள். இன்னொன்று nஐர்மன் மொழியில் மாதுளையை ‘கிரானட் ஆப்பெல்’ (GRANAT
APPLE) என்கிறார்கள். இதில் ஆப்பெல் என்பது பழம் எனக்; குறிக்கும். ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழியும், மாதுளையைத்தான்
ஆப்பிள் என்கிறது என்று சொல்லுகிறார்கள்.
கவர்ச்சிகரமான பழம் (ATTRACTIVE FRUIT)
பழங்களிலேயே கவர்ச்சிகரமான பழம் எது என்றால், அது மாதுளைதான். ஓவ்வொரு முறையும் ஒரு மாதுளம் பழத்தைப்
பிளந்ததும் எனக்கு ஏதோ நகைப் பெட்டியைத் திறந்தது மாதிரி இருக்கும். உள்ளே இருக்கும் மணிகள் ரத்தச்சிவப்பு
நிறத்தில் இருக்கும். அவை முத்துக்கள்
மாதிரித் தோன்றும். பெரும்பாலான பழங்களில்
ரத்தினச் சிவப்பில் அந்த மணிகள் பளபளக்கும்.
பலவகை இனிப்புச் சுவை (DIFFERENT
SHADES OF SWEETNESS)
மாதுளையின் சுவை துவர்ப்பு இழையோடிய இனிப்புச் சுவை. மாவின் இனிப்பு ஒரு வகை. பலாவின் இனிப்பு
இன்னொரு வகை. கொய்யாவின் இனிப்பு தனிவகை.
அன்னாசியின் இனிப்பு மறுவகை. இயற்கையால் மட்டுமே வகைவகையான இனிப்புகளைத்
தரமுடியும். மனிதன் ரசிக்கலாம். ருசிக்கலாம். இருப்பதை இன்னொன்றாய் மாற்றலாம்.
படைப்பு என்பது இயலாது.
அகர்பத்தி ஸ்டேண்டாக பயன்படும் வாழைப்பழங்கள்
(MISUSE OF FRUITS)
பொதுவாக பழம் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே இல்லை. வாழைப்பழம் சாப்பிடுவதற்காக வாங்குவதைவிட அகர்பத்தி ஸ்டேண்டாக பயன்படுத்தவே அதிகம் வாங்குவார்கள் நம்ம ஆட்கள். அதனால் மாதுளை போன்ற ஆரோக்கியம் மிக்க பழங்களை சாப்பிட நமது குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
மருந்து மாத்திரை செலவுதான் அதிகம்
(MORE
EXPENCE FOR MEDICINES)
நாம் நமது பெரியவர்களிடம் அவர்கள் பெற்ற அனுபவங்களை பதிவிறக்கம் செய்யத்
தவறிவிட்டோம். அவர்களுடைய அனுபவ அறிவுக்
களஞ்சியங்களை உதாசினப்படுத்தி உதறித் தள்ளிவிட்டோம். இனியாவது நாம் விழிந்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பழங்களின் அருமையும் தெரிந்த காரணத்தால்தான் நமது பாரம்பரிய
மருத்துவத்தில் அவற்றை மருந்தாகவும் பயன்படுத்தி வந்தார்கள், நமது
முன்னோர்கள். ஆனால் நாம் இன்று உணவுக்காக
செய்யும் செலவைவிட மருந்து மாத்திரைக்காக மாதாமாதம் செய்யும் செலவே அதிகம்.
இதில் பாதியளவு செலவு செய்தாவது பழங்கள் சாப்பிட அடுத்த தலைமுறையை
பழக்கப்படுத்துங்கள்;. உணவே மருந்து என்பதை அடிக்கடி நினைவுபடுத்துங்கள். இதைச்செய்வது
நமது கடமையா இல்லையா ?
GNANASURIA BAHAVAN D,
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment