Tuesday, May 23, 2023

PAPAYA BEST FRUIT TO FIGHT CANCER . புற்றுநோய்க்கு ஓர் புதிய மருந்து பப்பாளி

புற்று நோய்க்கு புதிய மருந்து
பப்பாளி

(பப்பாளி – PAPAYA TREE)

போர்ச்சுக்கீசியர்கள் 1611ல் பப்பாளியை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். தற்போது பப்பாளி உலகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப்பயிர்;. முருங்கை போல வெப்ப மண்டலப்பகுதிகளின் வீட்டு தோட்டத்திற்கு உரிய மரமாக மாறிவிட்டது பப்பாளி. வட அமெரிக்க பழமரமாக இருந்தாலும் அகில உலக அளவில் அதிக ஊற்பத்தி இந்தியாவில்தான்.  நம் விவசாயிகள் பாராட்டுக்குரியவர்கள், நாம் அவர்களை கவனிக்கவில்லை என்றால்கூட நம்மை அவர்கள் கவனித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களும் இயற்கை மாதிரிதான்.

பெயர்கள் : (DIFFERENT NAMES)

பொதுப்பெயர்கள்: பப்பாயா, மெலன் ட்ரீ, பாவ்பாவ், ட்ரீ மெலன் (PAPAYA, MELON TREE, PAWPAW, TREE MELON)

தாவரவியல் பெயர:; கேரிகா பப்பாயா (CARICA PAPAYA)

தாவரக் குடும்பத்தின் பெயர்: கேரிகேசியே (CARICACEAE)

தாயகம்: அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதி (TROPICAL REGION)

பலமொழிப் பெயர்கள்: (VERNACULAR NAMES)

தமிழ்: பப்பாளி (PAPALI)

இந்தி: பப்பிதா: (PAPITHA)

மணிப்புரி: அவத்தாபி (AVATHABI)

மராத்தி: பப்பாயி, பப்பாய் (PAPAYI, PAPAY)

பெங்காலி: பப்பேயா (PAPAYO)

கொங்கணி: பொப்பாயி (POPAYI)

சமஸ்கிருதம்: எர்ரண்ட் கர்கட்டி (ERRAND KARKATI

கொலம்பஸ்தான் கண்டுபிடித்தார்

கொலம்பஸ் நாடுகளை மட்டுமல்ல பழங்களைக்கூட கண்டுபிடித்திருக்கிறார். ;தேவதைகளின் பழம் என்று முதன்முதலாக பப்பாளிப் பழத்திற்கு பட்டப் பெயர் தந்தவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ.;  ()பப்பாளிப் பழத்தின் பெருமையையும் கண்டுபிடித்திருக்கிறார். புரூட் ஆப் ஏஞ்சல்ஸ; என்னும் அழகு அடைமொழியும்  தந்துள்ளார். உலகின் ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்று; மருத்துவப் பயன்மிக்க பழமாக உலகம் முழுக்க அறியப்பட்ட பழமும் கூட் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதியை சொந்த மண்ணாகக் கொண்டது பப்பாளி.

பப்பாளி ஊட்டச் சத்துக்களை உபரியாகக் கொண்ட மரம். கரோட்டின்கள் பிளேவனாய்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் பிஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள,; மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை உள்ளடக்கியது.

பீரோ சைஸ் உடம்பும் ஜீரோ சைஸ் ஆகிவிடும் (BUREAU SIZE AND XERO SIZE)

தினம் காலை பதினோரு மணி வாக்கில் அல்லது பிற்பகலில் ஒரு சிறிய கிண்ணம் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டால் உடல் எடை தானாக குறையும். தேவையற்ற இடங்களில் தேவையற்ற குவியும் தசை அனைத்தும் கரைந்து போகும். பீரோ சைஸ் உடம்பு ஜீரோ சைஸ் ஆகிவிடும் என்கிறார்கள்.

முக்கியமாக இதயம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றையும் குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

பலவகை புற்றுநோய்களை குணப்படுத்தும் (TYPES OF CANCERS)

பப்பாளி மரத்தின் வேர் அல்லது அதன் பட்டைச் சாற்றை பற்களில், பல் ஈறுகளில் தேய்க்க பல்வலி, ஈறுவீக்கம் போன்றவற்றிலிருந்து சுகம் கிடைக்கும.; புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி பப்பாளி இலைச் சாற்றுக்கு  உள்ளது. இது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய,; கல்லீரல் புற்றுநோய் மற்றும் இதர வகை புற்று நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இந்த ஆராய்ச்சியின் விளைவாக பப்பாளி மரங்களை பல்வேறு விதமாக புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள.;

இளமைப்பொலிவு தரும் (PRESERVE YOUTHFULNESS)

சருமப் பாதுகாப்பில் பப்பாளி முக்கிய பங்காற்றுகிறது; பப்பாளி பழத்தின் தோலை முகத்தில் லேசாக மசாஜ் செய்வதன் மூலம் அதனை தோலின் மேற்பரப்பை சுத்தப்படுத்துகிறது; இறந்துபோன தேவையற்ற திசுக்களை அகற்றுகிறது; தோலின் முதுமைத் தன்மையை போக்கி இளமையின் புதுப் பொலிவைத் தருகிறது; இது தோலை பாதிக்கும் எக்சிமர் சோரியாசிஸ் போன்ற நோய்களையும் தடுக்கிறது.

எலும்பு தேய்மான நோயை சரிசெய்யும் (CURES OSTEOPOROSIS)

பப்பாளி விதைகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் விட்டமின்களான விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் விட்டமின் இ ஆகியவை இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது; பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது; பப்பாளி பழங்கள் அல்லது ஜூஸ் அருந்துவது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்; ஆண் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் மூட்டு பிடிப்பு மூட்டு வலி கீல் வாதம் எலும்பு தேய்மான நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும்; கீமோ பாப்பாய்ன் (CHEMO PAPPAIN)என்னும் என்சைம் பப்பாளியில் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

டெங்குநோய்க்கு மருந்து (MEDICINE FOR DENGU)

பப்பாளி இலைகள,; பூக்கள,; வேர்கள் ஆகியவற்றிலும் நோய்களை தடுத்து நிறுத்தும் சக்தி உள்ளது, என ஜப்பானில் செய்த ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. முக்கியமாக மஞ்சள் காமாலை, சுவாச மண்டல நோய்கள், சிறுநீரக பாதிப்புகள் ஆகியவற்றை குணப்படுத்த பப்பாளியை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் டெங்கு நோய் பரவியபோது தடுப்பு நடவடிக்கையாக பப்பாளி இலைச்சாறு மற்றும் நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்பட்டது. நிறைய பேர் இதன் மூலம் குணமடைந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. பப்பாளி இலைச்சாறு எப்படி தயாரிப்பது என்ற செயல் விளக்கம் எல்லாம் வாட்ஸ்அப் வீடியோவாக சுற்றி வந்தது.

கண்ணாடி போடாமல் படிக்கலாம் (READ WITHOUT GLASSES)

பப்பாளியைப் பழமாக சாப்பிடுவதோடு, ஜாம் ஜெல்லி ஐஸ்க்ரீம் போன்றவை தயாரிக்கவும் உபயோகமாகிறது. பப்பாளி பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்ற விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கண்ணாடி போட்டு படிக்க வேண்டிய அவசியமில்லை என அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

 இறைச்சியை மிருதுவாக்கும் (MAKE THE MEAT TENDER)

பழமாக முதிராத காய்களில் காய்கறியாக சமைக்கலாம்.; இறைச்சியை சமைக்கும் போது அதனை மிருதுவாக்க பப்பாளி காய்களை துண்டுகளாக்கி சமையலில் சேர்ப்பது உண்டு. பலர் இதுபற்றி பலமுறை இதுபற்றி சொல்லியிருக்கிறார்கள்.

கடினமான இறைச்சியை மிருதுவாக மாற்றுவதற்கு காரணம் அதில் இருக்கும் பப்பாய்ன்; என்னும் பால்.; இறைச்சி தயாரித்து ஏற்றுமதி செய்வோர் கசாப்பு செய்வதற்கு முன்னர் ஆடு அல்லது மாடுகளுக்கு பப்பாயின் பாலை ஊசி மூலம் உடலில் ஏற்றுவார்கள் என நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன.உலகளவில் பப்பாளி உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நாடுகள் பிரேசில்,; இந்தோனேசியா, நைஜீரியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் டொமினிக்கன் ரிபப்ளிக,; டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆப் காங்கோ, வெனிசுலா மற்றும் தாய்லாந்து; இந்தியாவின் மொத்த ஆண்டு உற்பத்தி 5.5 மில்லியன் டன்; இரண்டாவதாக இருக்கும் பிரேசிலின் உற்பத்தி 1.6 மில்லியன் டன்;.

முதல் ஆண்டிலேயே காய்க்கும் (BEARING DURING FIRST YEAR)

பப்பாளியை சாகுபடி செய்ய நடுங்கும் குளிரும், உதிரும் பனியும் இல்லாத பருவநிலை வேண்டும்.; நீர் தேங்காத நிலப்பரப்பு வேண்டும்;. வடிகால் வசதி வாகாக இருக்க வேண்டும்;. ஊட்டச்சத்து கொஞ்சம் தூக்கலான  நிலம் வேண்டும். கார அமிலநிலை நடுநிலையாக இருக்க வேண்டும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்; முதிர்ந்த பழங்களில் இருந்து விதைகளை சேகரிக்கலாம்;

விதைகளை மணலுடன் சேர்த்து கலக்கி அவற்றின் மீது ஒட்டி இருக்கும் மெல்லிய உறையை நீக்க வேண்டும்; பின்னர் விதைகளை உலர்த்தி காற்றுப் புகாத பெட்டிகளில் சேமிக்கலாம்; விதைகள் 45 நாட்கள் வரை முளைப்புத் திறன் குறையாமல் இருக்கும்.; மார்ச் முதல் செப்டம்பர் வரையான ஏழு மாதங்களில் விதைத்தால் நன்கு முளைக்கும்.

வீட்டிற்கு ஒரு பப்பாளி மரம் (ONE FAMILY ONE PAPAYA)

பப்பாளியின் வயது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்;. முதல் ஆண்டிலேயே காய்க்க தொடங்கும்.; இரண்டு நல்ல மகசூல் எடுக்கலாம்.; இந்தியாவில் நிறைய புதுப்புது ரகங்களை அறிமுகம் செய்துள்ளனர்.; பழைய ரகங்களில் ஆண் மரம் பெண்மரம் தனித்தனியாக இருக்கும். ;

மகரந்தத்திற்கு ஆண்மரங்கள்  தேவை.; ஆண் மரங்கள் அதிகம் இருந்தால் மகசூல் குறையும்;. பெண் மரங்கள் அதிகம் இருந்தாலும் மகசூல் குறையும்;. காரணம் மகரந்த சேர்க்கை சரிவர இருக்காது.;; தற்போது வரும் ரகங்கள் எல்லாம் இருபாலின வகைகள்;.   இதில் ஆண் பெண் பூக்கள் இரண்டும் ஒரே மரத்தில் இருக்கும்;. பப்பாளி பழங்கள் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் ஆந்திரா. அதற்கு அடுத்த நிலையில் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியவையும் அதற்கு அடுத்த நிலையில் உற்பத்தி செய்கின்றன. தமிழ்நாட்டின் உற்பத்தி மிகவும் குறைவு.

இதன்; பயன்களை வைத்துப்பார்க்கும்போது ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் கண்டிப்பாய் இருக்க வேண்டியது மரம் பப்பாளி என நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, என்ன சொல்லுகிறீர்கள் ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...