Saturday, May 20, 2023

MYROBALAN CAN PRESERVE YOUR YOUTHFULNESS அறுபதை இருபதாக்கும் கடுக்காய்

 

கடுக்காய் அமேசானில் கூட வாங்கலாம்

இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மூலிகை மரம் கடுக்காய். இந்திய மருத்துவ முறைகளில் இது எவ்வளவு முக்கியமானது என்று நமக்கு தெரியும். அதே அளவு அல்லது இன்னும் கூடுதலான அளவு திபேத் மற்றும் சீன நாடுகளில் மருத்துவ முறைகளில் பயனாகிறது. இதனை அங்கு ஹரிடாக்கி கனி (HARITAKKI KANI)என்றும்; ஹி சி ஹெர்ப் (HI SI HERB) என்றும் அழைக்கிறார்கள். 

அறுபதை இருபதாக்கும் (SIXTY MAY BECOME TWENTY)

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலன

கடுக்காய்பற்றி சித்தர்கள் கடலளவு எழுதி இருக்கிறார்கள். அதில் மாதிரிக்கு ஒரு பாடல்தான் இது.

காலையில் எழுந்;ததும்; வெறும் வயிற்றில் இஞ்சியும், மத்தியானத்தில் சுக்கும், இரவு நேரத்தில் கடுக்காய் என்று தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் கிழவனும் குமரனாகலாம்; இதுதான் மேலே இருக்கும் பாடலின் பொருள்.

பெயர்கள் :

பொதுப்பெயர் () ஆங்கிலப்பெயர் :  மிரோபாலன் (MYROBALAN)

தாவரவியல் பெயர் :  டெர்மினேலியா செபுலா  (TERMINALIA CHEBULA)

தாவரக்குடும்பம்பெயர் :  காம்;பிரெட்டேசி  (COMBRETACEAE)

பலமொழிப் பெயர்கள்: (VERNACULAR  NAMES)

தமிழ்: கடுக்காய்  (KADUKKAAI)

இந்தி: ஹர்ரா  (HARRA)

மலையாளம்: கட்டுக்கா  (KATTUKKA)

கன்னடம்: ஹல்லி  (HALLI)

சமஸ்கிருதம்: ஜீவப்பிரியா  (JEEVAPRIYA)

மராத்தி:   ஹிராத்  (HIRATH)

பெங்காலி: ஹரிடாக்கி  (HARIDAKKI)

ஒரியா: ஹரிதா  (HARITHA)

தெலுங்கு: நல்ல ஹரிக்கா  (NALLA HARIKKA)

அசாமிஸ்: ஹிலிக்கா  (HILIKKA)

கொங்கணி: ஆர்டோ  (ARDO) 

ஆச்சரியம் - ஐந்துவித சுவை (A BLEND OF FIVE TASTES)

எந்த ஒரு பழத்திற்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு. ஆறு விதமான சுவைகள் உண்டு.

சில கனிகள் இனிக்கும், சில புளிக்கும், சில இனித்துக் கொண்டே புளிக்கும். ஆனால் கடுக்காயில் உப்புச்சுவை தவிர்த்து மற்ற எல்லா சுவையும் உடையது கடுக்காய் மட்டுமே. இதில் மட்டும்தான் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு ஆகிய ஐந்து சுவைகளும் அடக்கம். 

திரிபலா சூரணம் (TRIPHALA A HERBAL REMEDY)

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உட்பட அனைத்து வைத்திய முறைகளிலும் கடுக்காய்க்கென்று ஒரு சிறப்பான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக திரிபலா சூரணம் மகவும் பிரபலமானது. கடுக்காயுடன் தான்றிக்காயும் நெல்லிக்காயும் சேர்ந்ததுதான் திரிபலா. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே திரி என்றால் மூன்று. தமிழில் அதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. ஆனால் இந்த திரி எப்படி அங்கு போனது  

சீனாவிற்கு போனது

சீனாவை டேங் வமிச அரசு ஆட்சி (TANG DYNASTY) செய்த காலகட்டத்தில் கடுக்காய் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு குவாங்டாங், யுன்னான், குவாங்ச்சி (GUANTANG, YUNNAN, GUANGXI) ஆகிய இடங்களில் அதிகம் இந்த மரங்களை வைத்திருக்கிறார்கள்.

வடிவம், நிறம், பெறப்படும் இடம், இவற்றை வைத்து கடுக்காயை பல தரமாகப் பிரிக்கிறார்கள். இந்த தர வரிசைப்படிதான் மார்கெட்டில் விலை கிடைக்கும். ஏறத்தாழ உருண்டை வடிவிலான கடுக்காயை விஜயா (VIJAYA)என்கிறார்கள். அதுதான் முதல் தரம்.  

விஜயா, ரோகினி, படானா, அம்ரித்தா, அபயா, ஜிவந்தி, செட்டக்கி போன்றவைதான் இந்த ஏழு வகைக் கடுக்காய்கள். இனி நாட்டு மருந்துக் கடைக்குப்போய் இந்தப் பெயர்களைச் சொல்லி கலாய்க்கலாம்.

திபெத்தின்; சஞ்சீவி மூலிகை (PRIMARY HERB OF TIBETH)

திபெத்திய மருத்துவத்தின் ஆணிவேரே கடுக்காய்தான். தேநீர், பழச்சாறு, எண்ணெய், கூந்தல் தைலம், சருமப்பராமரிப்பு, புற்றுநோய், கர்ப்பப்பையில் ஏற்படும் நார்க்கட்டிகள், சக்கரைநோய் உடல் எடை குறைப்பு சிகிச்சை, சரும வெண் தேமல் நோய் போன்ற பலவற்றிற்கும் திபெத்தின் சஞ்சீவி மூலிகை கடுக்காய்தான். 

மாட்டு வண்டிகள் (BULLOCK CARTS)

தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.; கால்நடைகளுக்கு தீவனமாகும். பூக்கள், பச்சைகலந்த வெண்ணிறத்தில், பளிச்சென்று மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் மூலிகை மரம்.

மாட்டு வண்டிகள், உத்திரங்கள், கம்பங்கள், முட்டுக்கட்டைகள், பந்தல் கால்கள், தூண்கள், கட்டிடச் சாமான்கள் செய்யவும்,; காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் மரம்.

இந்தியா, தெற்கு ஆசியா, நேபாளம், தென்மேற்கு சைனா, ஸ்ரீலங்கா, மலேசியா, வியட்நாம், ஆகிய பகுதிகளுக்கு சொந்தமானது கடுக்காய்.

இமயமலையின் கீழ்ப்பகுதியில் ராவி முதல் கீழ்த்திசையில் மேற்கு வங்காளம் முதல் அசாம் வரையிலும் வட இந்தியாவின் வனப்பகுதிகள், தமிழ்நாடு, மைசூர், மற்றும் மும்பைப் பகுதிகளிலும் பரவலாக உள்ளன கடுக்காய் மரங்கள்.

மூலிகை மரங்களின் முடிசூடா மன்னன் (KING OF TREE HERBS)

மிகவும் பழமையான காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பிரபலமான மூலிகை மருந்தாக பயன்பட்டு வந்துள்ளது கடுக்காய். மிக அதிக அளவில், ஆயுர்வேதம் யுனானி சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது கடுக்காய்;.

இந்தியா மட்டுமின்றி ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடுக்காய் மிகவும் பிரசித்தம். புற்றுநோய், பாரிசவாதம், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள், குடல்புண், தொழுநோய,; ஆர்த்தரைட்டீஸ் என்னும் மூட்டுவலி, மூட்டுவாதம், சிறுநீர்ப்பையில் உருவாகும் கற்கள்;, வலிப்பு நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

இளமையை பாதுகாக்கும் (PRESERVES YOUTH)

கடுக்காயின் தோல் மற்றும் இலைகளும் பாரம்பரிய மருந்துகள் தயார் செய்யப் பயன்படுத்துகிறார்கள். பாரம்பரிய மூலிகை மரங்களின் முடிசூடா மன்னன் என்று கடுக்காயை வருணிக்கிறார்கள்.;

முதுமையே போ ! போ ! என முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையைப் பாதுகாக்கும் அபூர்வ குணம் உடையது இது. அதுமட்டுமல்ல நீண்ட நாள் வாழ்வதற்கு வகை செய்யும் அற்புதமான அரிதான மூலிகை மரமும்கூட. கடுக்காய் முக்கியமாக பல்வேறு நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான அசாதாரண சக்திகளை கொண்ட மரம்.

மாட்டுக்கு வரும் மடிவீக்க நோய் போக்கும் (MASTITIS DISEASE OF CATTLE)

கிராமங்களின்; நாட்டு வைத்தியர்கள் இன்றும் கூட மாடுகளைத் தாக்கும் மெஸ்ட்டைட்டீஸ் என்னும் மடிவீக்கநோயை குணப்படுத்த கடுக்காயைப் பயன்படுத்துகிறார்கள்.; ஆனால் இதனை அளவாக பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் அது மாடுகளில் பால்கறக்கும் அளவை பாதிக்கும்.

தென்னிந்தியாவில் வேநாட்டின் பழசிராஜா கல்லூரி, கோயம்புத்தூர் சிஎம்எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியும் இணைந்து கடுக்காய் பற்றிய ஆய்வினை செய்து அற்புதமான கட்டுரை ஒன்றை பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! கடுக்காய் போன்ற மரங்கள் எண்ணற்ற ஆராய்ச்சிகள் செய்வதற்கு உங்களுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளை வழங்கும் ! பயன்படுத்டிக் கொள்ளுங்கள் !

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com


No comments:

FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல்   இந்த ஆண...