Monday, May 22, 2023

MEDICINAL PROPERTIES OF PLUMARIA TEMPLE TREE 14. பல்வலியா ? இருக்கவே இருக்கு பெருமாள் அரளி

 

அழகுக்கு அழகு செய்யும்
பெருமாள் அரளி மரம்

(பெருமாள் அரளி - TEMPLE TREE)

PLUMARIA  RUBRA

மெக்ஸிகோ, பசிபிக் தீவுகள், கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களை சொந்த பூமியாகக் கொண்டது, இந்த பெருமாள் அரளி.

இந்த மரம், மிகவும் நறுமணமிக்க, வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கும்.  பூ இதழ்களின் உட்புறம்; லைனிங் கொடுத்தது பொல பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பெயர்கள் :

தாவரவியல் பெயர்: புளுமேரியா ரூப்ரா (PLUMARIA RUBRA)

தாவரக் குடும்பம்: அப்போசயனேசி (APOCYANACEAE)

தாயகம்: மெக்சிகோ (MEXICO)

பொதுப் பெயர்கள்: டெம்பிள் ட்ரி, பிராங்கிபாணி, புளுமேரியா (TEMPLE TREE, FRANGIPANI, PLUMARIA)

பலமொழிப் பெயர்கள்; :

தமிழ்: பெருமாள் அரளி (PERUMAL ARALI)

பெங்காலி: காத் சம்ப்பா (KATH CHAMPA)

இந்தி: சம்ப்பா (CHAMPA)

குஐராத்தி: சம்ப்போ (CHAMPO)

மராத்தி: சாஃபா (CHAFA)

தெலுங்கு: தேவகன்னேரு (DEVAGANNERU)

ஹவாய்: மீலியா (MELIA)

மலையாளம்: பாலா, சம்பகம் (PALA, CHAMPAKAM)

ஸ்ரீலங்கா: அரேலியா (ARELIA)

ஆங்கிலம்  பொதுப் பெயர்: டெம்பிள் ட்ரீ (TEMPLE TREE)

தாய்: லீலா வாடி (LILA WADI)

பாலினேசியா: டைபேனி (TIPANIE)

பிலிப்பைன்ஸ்: காலா சுச்சி (KALA CHUCHI)

பெருமாள் அரளி பிராங்கிப்பாணி ஆன கதை (STORY OF FRANGIPANI)

பிராங்கிப்பாணி என்பது ஒரு இத்தாலி நாட்டின் பிரபலமான வாசனைத் திரவியம் (PERFUME).  .  பாலினேசியன் கலாச்சார மக்கள் இதனை பூக்களின் ராணி (QUEEN OF FLOWERS) என்று கொண்டாடுகிறார்கள்.  அங்கு பெண்கள், இதை காதலை சொல்லும்; பூவாக பயன்படுத்தினார்கள்.  வலது காதின் ஒரத்தில் பூவை வைத்தால் காதல் வேகன்சி இருக்கிறது, முயற்சி செய்யலாம் என்று பொருள்.  வலது காதில் வைத்தால், எல்லாம் முடிந்தது, மூடிக் கொண்டு போ என்று அர்த்தம்.  ஆனால் காதுல பூ என்பதுதான் நம்மைப் பொருத்தவரை நெருடலான சமாச்சாரம். தமிழ்நாட்டில் காதில் பூ வச்சிட்;டான்னு சொன்னா அதுக்கு ஏமாத்திட்டான;னு அர்த்தம். அதையே இப்போ காதுல பூ சுத்திட்டான்னு சொல்றாங்க. மாத்தி யோசிக்கறாங்க !

கையுறை கம்பெனி முதலாளி (MARCUS FRANGIPANI)

இத்தாலியில் மார்கஸ் பிராங்கிபாணி என்பவர், கையுறை (GLOVES) கம்பெனியின் முதலாளி. கையுறைகளுக்கு நறுமணம்தர ஒருவகை சென்ட்ஐ (வாசனைத் திரவியம்) தனியாக அதற்கென்றே உருவாக்கினார்.  அதற்குப் பிறகுதான் தெரிந்தது நமது புளுமேரியா மரத்தின் பூக்களின் வாசைனயும் அது மாதிரியே இருந்ததால், இதற்கும் அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள்;.  அப்படித்தான் பெருமாள்அரளி பிராங்கிப்பாணி ஆனது.

பாலியல் சாமி மரம் (DEVINE TREE OF SEX)

மாயா நாகரீகக் காலத்திலும் (MAYA CIVILIZATION) மெக்சிகோவில் நிலவிய அஸ்டெக் (AZTEC – MESO AMERICAN CULTURE)  அரசாட்சிக் காலத்திலும், பெருமாள்அரளி மரங்களை, சிறுதெய்வ வழிபாட்டுக்குரியதாக வணங்கி வந்தார்கள்.  குறிப்பாக குழந்தைப்பேறு, பெண்களின் பாலியல் உறவு போன்றவற்றிற்கான சாமி மரமாகக் கருதினர். சில பழங்குடி மக்கள் இதனை துஷ்;ட ஆவிகளின் இஷ்டமரமாகவும் கருதி வந்தனர். வேப்ப மரத்தில் முனீஸ்வரன் இருக்கும் என்பது நம்ம ஊர் நம்பிக்கை.

வேப்பமரத்து முனீஸ்வரன்கள் (GHOSTS OF NEEM TREES)

நான், சிறுவயதில், வேப்ப மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்.  கால்கள் இல்லாமல் வெள்ளை வெளேரென்று பறந்துபோகும் மூனீஸ்வரன் இருக்கா என்று உற்றுப் பார்ப்பேன்.  குறிப்பாக உரிம நேரத்திலும் மாலை மயங்கும் நேரத்தில்தான் மூனிஸ்வரன் கண்ணுக்குத் தெரியும்.  உரிம நேரம் என்றால் பகல் 12 மணி. இப்போதுகூட வேப்ப மரங்களைப் பார்த்தால் எனக்கு மூனீஸ்வரன் ஞாபகம்தான்; வரும்.  ஆனால் இது நாள் வரை, ஒரு நாள் கூட நான் மூனீஸ்வரனைப் பார்க்கவே இல்லை.  ஆனால் அந்தப் பெயரில் எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் உள்ளார். அவரை அடிக்கடி பார்ப்பேன்.

முனிஸ்வரன்கள் எப்படி தயாராகின்றன ? தெரியுமா உங்களுக்கு ? தவம் செய்யும் தபசிகள் தவறு செய்தால்;, அவர்களை ஈஸ்வரன் தண்டிப்பார். அவர்கள்தான் தண்டனைக் காலம் முடியும்வரை மூனீஸ்வரன்களாக அலைவார்கள்.

பிரமுகர்களுக்கான பூமாலைகள் (GARLANDS FOR VIPS)

இந்து, nஐயின், மற்றும் புத்த மதத்துடன் நெருங்கியத் தொடர்புடையது இந்த பெருமாள்அரளி மரம்.

பசிபிக் தீவுகளான, தாகித்தி, பீஐp, சமோவா, ஹவாய், நீயூசீலண்ட், டோங்கா மற்றும் குக் தீவுகளில், விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்களை வரவேற்கவும், விடைதரவும் பெருமாள்அரளி பூமாலைகளை, பயன்படுத்தும், வழக்கம் இன்றும் உள்ளது.

நிகராகுவா தேசியமரம் (NIGARAGUVA NATIONAL TREE)

நிகராகுவா மற்றும் லாவோஸ் நாடுகளில் இதனை தேசிய மரமாக அங்கீகரித்துள்ளார்கள். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் இதன் பூக்களை இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மற்றும் மலேசியா நாடுகளிலும், இடுகாடுகள் மற்றும் சமாதிகளில் இந்த மரங்களை நட்டு வைக்கிறார்கள்.  ஆயினும் சாலை ஒரங்கள், பொது இடங்கள், மற்றும், வீட்டுத் தோட்டங்களில் கூட அழகுக்காக பெருமாள்அரளி மரங்களை நட்டு வளர்க்கிறார்கள்.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில், இந்த மரங்களின் பூவாசனையை போன்டியானக் என்ற பெண் பேயின் அடையாளமாக நம்புகிறார்கள்.  இது பற்றிய நாட்டுப்புறக் கதைகள் அங்கு நிறைய உள்ளன.

நாக்சம்ப்பா சோப்புகள் (NAG SAMPA SOAPS )

இந்தப் பூக்களின் வாசனை மற்றும் சந்தன மரங்களின் வாசனை இரண்டையும் சேர்ந்த கலவையான வாசனை வரும்படியான பொருட்கள் நாக்சம்ப்பா என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள்.  நாக்சம்ப்பா அகர்பத்திகள், நாக்சம்ப்பா சோப்புகள், நாக்சம்ப்பா மெழுகுவர்த்திகள், கழிவறைகளில் பயன்படுத்தும் இதர நாக்சம்ப்பா பொருட்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தின் மேற்குமலைத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில், மணமக்கள், திருமணத்தின் போது பெருமாள்அரளிப்பூ மாலைகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் இன்றளவும் உள்ளது.  வேறு பூமாலைகள் இதற்கு செல்லுபடி ஆகாது. தாய்லாந்து போன்ற நாடுகளில் பல்வேறு வண்ணங்களில் புதுப்புது வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கி உள்ளார்கள்.

ஊட்டச்சத்து நிறைந்த மண்ணில் நன்கு வளரும்.  ஆயினும் களி, மணல், இருமண்மாடான மண்கண்டத்;திலும் நன்கு வளரும்.  நல்ல சூரியவெளிச்சம் மற்றும் நிழலான இடங்களிலும் நன்கு வளரும்.  கிளைகளின் நுனிப் பகுதியை 30 முதல் 60 செ.மீ.  நீளத்திற்கு நறுக்கி பயன்படுத்தலாம்.

பல்வலியா பயப்பட வேண்டாம் (TOOTH ACHE)

பெருமாள் அரளியின் பூ, இலை, பட்டை போன்றவை பல நோய்களை குணப்படுத்த உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் வேரில் ஒரு சிறிய துண்டினை எடுத்து சுத்தப்படுத்தி, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்துப் பின்னர் வடிகட்டி தினமும் சாப்பட்டுவர சக்கரை நோய் குணமாகும்.

அடிபட்டதனால் ஏற்படும் வீக்கங்கள், உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் காயங்கள், புண்கள், மருக்கள், பற்குழிகள், பாதவெடிப்பு, தோல் நோய்கள், செரிமானப் பிரச்சினைகள், ஆகியவற்றை சரிசெய்ய, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்த, இதன் வேர்கள், இலைகள், மற்றும் பூக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பற்களில் குழி ஏற்படுவதால் தாங்க முடியாத வலி ஏற்படும்.  அதனை அனுபவித்தவர்களுக்கு அதன் வலியின் பரிமாணத்தை உணருவார்கள்.  அப்படிப்பட்ட வலிக்கு சுலபமான வழி சொல்லுகிறது பெருமாள் அரளி.  ஓன்று அல்லது இரண்டு இலைகளை எடுத்து, கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அதனை பஞ்சில் நனைத்து, பல்குழி வலி எடுக்கும் இடத்தில் அழுத்திப் பிடிக்க வலி சரியாகும்;;.

இந்த மருத்துவ முறைகளை கைக் கொள்ள ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கிளைகளை நடலாம் (STEM CUTTINGS)

இதன், மரம், கிளைகள் எல்லாமே மிகவும் மிருதுவானவை.  நகத்தால் கிள்ளினால் கூட நகம் புதைய பால்வடித்து அழும். இந்த மரங்கள் பெரிய செடி ஆனால்; சிறிய மரம்.

பெருமாள்அரளிப் பூக்களில் அழகு இருக்கும். ஆனால் தேன் இருக்காது.  வாசனையால் கவரப்படும் பூச்சிகள்  தேன்தேடி வந்து ஏமாந்து போனாலும், மகரந்தசேர்க்கைக்கு உதவ மட்டும் மறக்காது.  பூச்சிகளின் புத்தியைக் கிறங்கடிக்கும் வாசனைதான் இதன் துருப்புச்சீட்டு.

இதன் கிளைகளை வெட்டிவைத்தால் சுலபமாக வளரும்.  வெட்டிய கிளைகளை ஐந்து பத்து நாட்களுக்கு வெய்யிலில் வாட்டி பின்னர் நடலாம்.  ஈரம் தூக்கலான மண்கண்டத்தில் நட்டால் கிளைகள் அழுகிப்போகும்.  வெட்டிய புத்தம்புது கிளைகளை நடுவது புத்திசாலித்தனம் ஆகாது.  கிளைகளில் இருக்கும் இலைகளை நீக்கி விட்டு வெய்யிலில் வதக்கி நடலாம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் பெருமாள் அரளி உங்கள் ஊரில் எங்காவது இருக்கிறதா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com


 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...