Tuesday, May 2, 2023

MADURAI RIVER VAIGAI - வைகை மதுரை ஆறு

 

வைகை ஆறு

மதுரையின்  பிரபலமான ஆறு வைகை.  இது வருசநாடு  மலைப் பகுதியி லிருந்து  உற்பத்தியாகிறது. பழனிமலை மற்றும் வ ரு ச நா டு மலைச் சரி விற்கு  இடைப்பட்ட பகுதிதான்  இதன் சரியான உற்பத்தி கேந்திரம். 

வருசநாட்டு மலைப்பகுதி (VARUSHANADU HILLOCKS ORIGIN)

வருசநாட்டு மலைப்பகுதியில்  உற்பத்தியாகி மதுரை வழியாகபாயும்  வைகைஆறு 7031 ச.கி.மீ ஆற்றின் நீர்வடிப்பரப்பினைக் கொண்டு  258 கி.மீ. இராமனாதபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்  ஸ்ட்ரைட்  என்னுமிடத்தில் சங்கமமாகிறது. வட்டப் பாறை நீர்வீழ்ச்சி இந்த  ஆற்றில்தான் உள்ளது. 

வைகையின் துணை ஆறுகள் (TRIBUTORY OF VAIGAI)

சங்க  இலக்கியங்களில்  வைகை ஆறு பற்றிய  குறிப்புக்கள் பலவற்றைப் பார்க்கலாம். வைகைநதி எப்படித் தோன்றியது என்பது பற்றிய பாரம்பரியக்  
கதைகள் பல உள்ளன. சுருளியாறு,முல்லையாறு,  வராகநதி,  மஞ்சள் ஆறு, கிருதுமால்நதி  ஆகியவை ஐந்தும்  வைகை யாற்றின் துணையாறுகள். 

மதுரையில் சேரும் கிருதுமால்நதி (KIRUTHUMAL RIVER)

இவற்றில் கிருதுமால் நதியைத்தவிர தேனீ  மாவட்டத்திலுள்ள  வைகை
அணைக்கட்டுப்;
  பகுதியில்  இவை அனைத்தும் ஒன்றாக சேருகின்றன. கிருதுமால் மட்டும் மதுரையில்   இணைகிறது.

குமிளிமலையின் பெரியார் அணைக்கட்டு (PERIAR DAM IN KUMILI)

ஆயினும்  வைகை நதிக்கு  பெரும்பகுதி  நீர் கேரளாவின்  குமுளி என்னுமிடத்திலுள்ள பெரியார்அணைக்கட்டிலிருந்துதான்  கிடைக்கிறது. கேரளாவின் பெரியார்  ஆற்றிலுள்ள தண்ணீர்  மேற்கு மலைத்தொடரிலிருந்து  பெரும்  குழாய்களின் வழியாக  தண்ணீர்  வைகை ஆற்றை அடைகிறது. 

கோடைக்காலங்களில்  வைகை நதி  எப்போதும் வறண்டே இருக்கும்.  பெரும்பாலான   ஆண்டுகளில்  வைகையில் வரும்  தண்ணீர் மதுரையைத் தொடாமலே  அதன் தொண்டை காய்ந்து போகும். 

குடிநீர்த்  மற்றும்  பாசனத் தேவை (IRRIGATION AND DRINKING WATER NEEDS)

தேனி மாவட்டத்தில்   பெரியகுளம்  வட்டத்தில்  வைகை ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ளது  வைகை அணை. மதுரை மற்றும்  திண்டுக்கல்  மாவட்டங்களில்  குடிநீர்த்  தேவையையும்,  பாசனத் தேவையையும்  பூர்த்தி செய்யும் பணியைச்   செய்கிறது  வைகை ஆறு. 

ஜான்பென்னிகுயிக்” எனும் வெள்ளைக்காரர் (JOHN PENNY QUICK)

பெரியார் அணைக்கட்டு  1895 ஆம் ஆண்டு ஜான்பென்னிகுயிக்என்ற வெள்ளைக்காரரால்  உருவாக்கப்பட்டது.  திருவாங்கூர்  ராஜ்ஜியத்தின்  வேண்டுகோளின்படி  பிரிட்டிஷ்  ராணுவத்தைச்  சேர்ந்த  பொறியாளர்கள்  இதனை கட்டி முடித்தார்கள். அடுத்து வந்த வெள்ளம்  அந்த  அணைக்கட்டை  சுத்தமாகத் துடைத்தெறிந்தது. 

சொந்தக் காசில் அணைகட்டினார் (PENNY QUICK SOLD HIS PROPERTIES)

மீண்டும் இந்த அணையைக் கட்ட  அரசு மறுத்து விட்டது.  ஜான் பென்னி  குயிக் தனது சொந்த ஊர் இங்கிலாந்துக்குப் போய் தனது பூர்வீக சொத்துக்களை  விற்று பணம் சேகரித்துக் கொண்டு வந்து  இந்த அணையை இரண்டாவது முறையாகக் கட்டிமுடித்தார். 

கருப்புசாமி, மதுரைவீரன் பென்னிகுயிக் (VILLAGE DEITY PENNY QUICK)

அதனால் ஜான்பென்னி குயிக்  என்ற பெயர் இங்கு  மிகவும் பிரபலம்.  அதனால்தான் இன்றும் கூட ஒவ்வோர் ஆண்டும்  மதுரை மற்றும்  தேனி மாவட்டத்தை  சேர்ந்த விவசாயக் குடும்பங்கள்  அவருக்கு வருஷாவருஷம் பொங்கல் வைக்கிரார்கள். மதுரை, தேனி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜான்பென்னிகுயிக் என்று பெயர் வைப்பது சாதாரணம். கருப்புசாமி, மதுரைவீரன் மாதிரி ஜான்பென்னி குயிக் இங்கு காவல் தெய்வம் ஆகிவிட்டார். 

ஜான் பென்னிகுயிக் பற்றிய சுவாரசியமான செய்திகள் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா ?

 எனது தொலைபேசி எண்:8526195370, இமெயில்: gsbahavan@gmail.com)

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...