அமராவதி ஆறு |
ஆன்பொருனை என்பது அமராவதி ஆற்றின் சங்க இலக்கிய காலத்து பெயர். காவிரியின் துணை ஆறுகள் மொத்தம் 29. அவற்றில் பிரபலமான துணை ஆறுகள், அமராவதி பவானி மற்றும் நொய்யல் ஆறுகள்.
காவிரியின் துணைஆறு (TRIBUTORY OF
CAUVERY)
காவிரியின் துணை ஆறுகளில் மிக நீளமானது அமராவதி தான் இதனால் பயன்படும் முக்கியமான மூன்று பகுதிகள் உடுமலைப்பேட்டை, தாராபுரம், மற்றும் கரூர்.
அமராவதி ஆறு பற்றிய அடிப்படைத் தகவல்கள் (BASIC FACTS OF RIVER AMARAVATHY)
1. பிறப்பிடம் (ORIGIN): திருப்பூர் மாவட்டம், ஆனைமலை மற்றும் பழனி மலை இடைப்பட்ட பகுதி.
2. காவிடரியுடன் சேரும் இடம் (ESTUARY): திருமுக்கூடலூர்.
3. துணை ஆறுகள் (TRIBUTARIES): சின்னார், பாம்பார், தேனார், குடுமியார், மற்றும் சண்முகா நதி.
4. ஓடும் மொத்த தூரம்;(RUNNING DISTANCE) 282 கி.மீ.
5. பயன்பெறும் பகுதிகள் (BENEFITTING DISTRICTS): கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள்.
6. சங்க காலத்துப் பெயர் (ANCIENT NAME): ஆன் பொருனை ஆறு.
7.ஆற்றுப்படுகையின் பரப்பு (ACACUT AREA): 8,380 சதுர கி.மீ.
8. நீர்த்தேக்கம் (RESERVOIRS & DAMS): அமராவதி அணைக்கட்டு, இந்திராகாந்தி வன விலங்கு சரணாலயம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது.
கழிவுகளைக் குவிக்கும் இடமாக (MOUTH OF SEWAGE & GARBAGE)
பல ஆண்டுகளாக நெசவுத்தொழிற்கூடங்கள், மற்றும் சாயப்பட்டறைகளின் கழிவுகளைக் குவிக்கும் இடமாக மாறிவிட்டது அமராவதி ஆறு என்கிறார்கள்.
இதன் தண்ணீரில் டிடிஎஸ் (Total Dissolvable Solids) அளவு 2000 ஐ தாண்டி விட்டது என்கிறார்கள். டிடிஎஸ் 500 ஐ தாண்டினாலே அதிகம் என்றும் சொல்லுகிறார்கள்.
இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்கிறார்கள்.
விவசாய
நிலங்களுக்கு நீர்.(IRRIGATION SUPPORT)
கரூர் அருகில் காவிரியுடன் சேரும் அமராவதி 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு கரூர் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் பாசன நீர் உபயம் செய்கிறது.
கழிவின் நீர்
கொட்டும் இடம் (PLACE OF SEWAGE
& GARBAGE)
அமராவதி ஆறு கரூர் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நெசவு தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகளின் கழிவின் நீர் கொட்டும் இடமாக இருக்கிறது இந்த ஆண் பொருளை நதி
இந்திராகாந்தி
வனவிலங்குகள் சரணாலயம் (INDRAGANDHI WILDLIFE SANTUARY)
இந்த ஆற்றில் 1957ஆம் ஆண்டு ஒர் அணை கட்டப்பட்டது உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது திருப்பூர் மாவட்டத்தின் இந்திராகாந்தி வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது இந்த அணைக்கட்டு.
பாசன வசதி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு (IRRIGATION AND FLOOD CONTROL)
அமராவதி
நீர்த்தேக்கத்தின் பரப்பு 9.31 சதுர கிலோமீட்டர், பாசன வசதி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகிய
இரு காரணங்களுக்காக இந்த அணை கட்டப்பட்டது.
இன்னொரு முக்கியமான செய்தி இதன் நீர் தேக்கத்திலும் இதன் நீர் வடிப்பகுதி பகுதியிலும் மக்கர்வகை முதலைகள் (Magger Crocodiles) கணிசமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள். நடுத்தரமான அளவுள்ள அகன்ற மூக்கு உள்ள இந்த மக்கள் முதலை சேற்று முதலை என்று சொல்லுகிறார்கள் இதன் சொந்த ஊர் ஈரான் தேசம்.
மக்கர் முதலைகள் (MAGGER
CROCODILES)
சேற்று முதலைகள் அல்லது
பாரசீகநாட்டு
முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் பிடிபடாத நிலையில் இயற்கையாக
விடப்பட்டு வளர்க்கிறார்கள்.அணையிலிருந்து ஒரு கி,மீ. முன்னதாகவே அமராவதி சாகர் முதலைப்பண்ணை
1976 ஆண்டு தொடங்கப்பட்டது.
நீர்த்தேக்கத்தின் ஓரமாக
காட்டு முதலைகளின் முட்டைகளைக்கொண்டு வந்து குஞ்சு பொறித்து இங்கு வளர்க்கிறார்கள்.
அணைக்கட்டில் ஒரு பூங்கா
ஒன்றினை அமைத்துள்ளார்கள். இதனை மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்தி
வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தின் இந்திராகாந்தி
வனவிலங்குகள் சரணாலயம் போயிருக்கிறீர்களா ? அங்கு மக்கர் முதலை பார்த்தீர்களா ?
GNANASURIA BAHAVAN D
88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
No comments:
Post a Comment