Sunday, May 21, 2023

KARUNGALI ALSO A FAMILY PLANNING TREE - இரண்டிற்குப்பிறகு எப்போதும் வேண்டாம் எனும் கருங்காலி


மூலிகையாகப் பயன்படும் கருங்காலி மரம்


கருங்காலி – RED KUTCH TREE

ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதியான மரம் இது. கருங்காலி என்றால் அது சாயம் ஏற்றவும் தோல் பதனிடவும் உரிய மரம் என்று பொருள். சைனா, பெர்சியா, மற்றும் அரேபியாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆனமரம். இந்தியாவில் பரவலாகக் காணப்படும் இந்த மரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் இமாலயன் மலைப் பகுதிகளில் அதிகம் பரவியுள்ளன.

பெயர்கள் : (DIFFERENT NAMES)

பொதுப்பெயர் () ஆங்கிலப்பெயர் : ரெட்கட்ச் (RED KUTCH)

தாவரவியல் பெயர் : அகேசியா சுந்தரா (ACACIA CHUNDRA)

தாவரக்குடும்பம் பெயர் :  மைமோசி (MIMOSEAE) 

பலமொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES) :

தமிழ்: கருங்காலி, கரங்காலி, கோடாலிமுருங்கை (KARUNGALI, KARANGALI, KODALI MURUNGAI, )

தெலுங்கு: சந்த்ரா, நல்ல சந்த்ரா, சுந்தரா (CHANDRA NALLA CHANDRA CHUNDRA)

கன்னடா: கச்சு, கக்லி, கெம்ப்பு ஜாலி, கெம்ப்பு கக்லி, கய்ரடா ஜாலி (KACHU, KAGGLI, KEMPU, KEMPU JOLLY, KEMPU KAGGLI, KAYRADA, JALI)

மராத்தி: லால் கய்ரா (LAL KHAIRA)

சமஸ்கிருதம்: கதிரா (KATHIRA)

அழிந்துவரும் மரவகை (ENDANGERED TREE)

நடுத்தர உயரம். 12 முதல் 15 மீட்டர் வளரும். அழிந்து வரும் மரவகை. இந்தியாவில் அதனை வெட்ட அனுமதி வேண்டும். 

உரல் உலக்கை (TRADITIONAL POUNDING DEVICE)

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம். இந்த மரம் தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மாராஷ்ட்ரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் பரவியுள்ளன.

விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.;   இதன் பட்டை தோல் பதனிட டேனின் தரும்.; இது தரும் பிசினில் கோந்து தயாரிக்கலாம். மரக்கட்டைகள்  கப்பல் கட்ட, வீட்டுத்தூண், உத்திரம்மரச்சாமான்கள்,   கருஞ்;சிவப்பு நிறத்தில்  உலக்கை, உரல், மேஜை நாற்காலி செய்ய ஏற்ற மரம். காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும். துணிகளுக்கு வண்ணம் கூட்ட சாயம் தரும். அடுப்பெரிக்க விறகாகும்.

குடும்பக்கட்டுப்பாடு மருந்து (FAMILY PLANNING)

குடும்பக் கட்டுப்பாட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கருவுற்ற மூன்று மாதத்தில் பயன்படுத்தினால் இது நல்ல பயன் அளிக்கும். அதற்குப் பிறகு பயன்படுத்தினால் 50 சதம்தான் பலன் தரும். 100 பேர் பயன்படுத்தினால் 50 பேருக்குத்தான் சித்தியாகும். இதுபோன்ற இயற்கை முறையில் கருக்கலைப்பு செய்து கொண்டால் மீண்டும் கருத்தரிப்பது சுலபம். காரணம் இதில் எவ்விதமான ரசாயனங்களும் கலப்பதில்லை. இதனால் எவ்வித பாதிப்பும் எற்படாது. ஆனால் மூன்று மாதம் கடந்த பின் இதனைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல. 

இது தவிர தோல் நோய்கள், புற்று நோய், ரத்தச் சோகை, பல்வலி, வெண்குஷ்டம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி கருங்காலி மரத்திற்கு உண்டு. 

மீண்டும் பாரம்பரிய மருத்துவம் (GOING BACK TP TRADITION)

ஆங்கில மருத்துவர்கள் பலர் ஆங்கில மருத்துவத்தை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதனால் உலகம் முழுவதும் மீண்டும் பாரம்பரிய மருத்துவத்தைத் தேட ஆரம்பித்துள்ளார்கள். மருத்துவர்கள் சொல்லும் சிகிச்சைகளை கண்ணைமூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கு பாரம்பரிய மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவற்றை அவற்றின் மருத்துவ உபயோகத்தை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த பதிவில் சொல்லப்படும் சிகிச்சை முறைகளை தகுதியுள்ள ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுகிறேன். 

குண்டு மனிதர்கள் இனி இல்லை (NO OBESITY NO OVER WEIGHT)

இன்று உலகம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் எல்லாம் சக்கரை நோய், இருதய சம்மந்தமான நோய்கள், புற்று நேய்கள், மூட்டுவலி மற்றும் எலும்பு தேய்மான நோய்கள் இவற்றிற்குத்தான்; மக்கள் அதிகம் செலவு செய்கிறார்கள்.

இவற்றை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருப்பது உடல் பருமன் நோய். உடலை இளைக்க வைக்க இன்றைய மருத்துவ உலகம் படாதபாடு படுகிறது. ஆனால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. ஆனால் இயற்கையாக மரங்களில் இதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது என்பது என்னுடைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால் அதற்கான பூர்வாங்க ஆய்வுகளை செய்ய வேண்டும். அவற்றை கண்டறிவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். கருங்காலி, குண்டு மனிதர்கள் இனி இல்லை என்று சொல்ல உதவும் மரம் என்கிறார்கள்.

இலை பட்டை வேர் (LEAF BARK & ROOTS)

வயிற்றுப் போக்கை சரி செய்தல் (ANTIDIARRHEAL), உடல் ஜுரத்தைக் குறைத்தல்(ANTIPYRETIC), ரத்தத்தை உறைய வைப்பதன் மூலம் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துதல் (HAEMAOSTATIC)>, வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கட்டுப்படுத்துதல் (ANTIHELMINTIC), உடல் வலியைக் கட்டுப்படுத்துதல்; (ANTIINFLAMATORY), உடலில் தசைப் பிடிப்பை சரி செய்தல்; (ANTISPASMODIC)>, மேலும் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்குதல்; (DEOXICANT) போன்ற பல காரியங்களைச் செய்கிறது. கருங்காலி மரத்தின் இலை, பட்டை, வேர் ஆகியவற்றை நமது உடல் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

எங்கு எப்படி வளர்க்கலாம் ? 

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கேரளாவில் இடுக்கி, பாலக்காடு பகுதிகளிலும்  தக்காண பீடபூமி, இலங்கை, பர்மா ஆகிய இடங்களிலும் கருங்காலி மரங்கள் வெகுவாகப் பரவியுள்ளன. வெப்ப மண்டலப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து  900 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் இந்த மரங்களை வளர்க்கலாம். நேரடியாக விதைகளை விதைக்கலாம். கிளைகளை வெட்டியும் நடவு செய்யலாம்.

மருந்து மாத்திரை செலவு குறையும் (MEDICAL EXPENCES)

தனைப் படிக்கும் இயற்கை ஆர்வலர்கள் தங்கள் ஊரில் உள்ள மரங்களை அவற்றின் பயன்களை, குறிப்பாக அவற்றின் மருத்துவப் பண்புகளைத் தெரிந்துகொள்ள முடியும்;. நீங்கள் மருந்து மாத்திரகளுக்காக செலவு செய்யும் தொகையை பாதியாகக் குறைத்தக்கொள்ள எனது ஆய்வுப்பதிவுகள் உங்களுக்கு உதவுமா இல்லையா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...