Tuesday, May 23, 2023

INTERESTING STORIES BEHIND NAMING THE RIVERS. ஆறு ஆறுகளின் பெயர்க் காரணங்கள்.

 

தண்பொருனை எனும் தாமிரபரணி

கடவுள் பெயர், ஊரின் பெயர், ஆற்றின் பண்புகளுக்கு ஏற்ப இப்படி பல காரணங்களின் அடிப்படையில் ஆறுகளுக்கு பெயர் வைக்கிறார்கள். காலங்களுக்கு ஏற்ப மொழியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் ஆஊகளின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. அப்படி இங்கு எட்டு தமிழகத்தில் ஓடும் ஆறுகளின் பெயர்க்காரணங்கள னான் இங்கு தந்துள்ளேன். 

1. கிருஷ்ணா நதி (RIVER KRISHNA)

கிருஷ்ணா நதி பெரும்பாலும் கரிசல் நிலத்தின் ஊடாக பாய்கிறது அதனால் இந்த நீர் கருப்பு நிறமாக இருக்கும்.அதனால் கிருஷ்ணனின் நிறத்தோடு ஒப்பிட்டு இதற்கு கிருஷ்ணா நீர் என்ற பெயர் வைத்தார்கள்.இதற்கு கரும்பெண்ணை என்று கூட ஒரு பெயர் உண்டு.

2. தாமிரபரணி (RIVER THAMIRAPARANI)

தாமிரபரணியின் பழைய சங்க காலத்து தமிழ்ப் பெயர் தண்பொருனை. அப்படியென்றால் குளிர்ந்த என்று அர்த்தம். ஆக தன் பொருனை என்றால் குளிர்ந்த நீர் பாயும் ஆறு என்று பொருள். 

3. கொசத்தலை ஆறு (RIVER KOSATHTHALAI)

கொசத்தலை ஆறு என்பது இதன் வடமொழி பெயர்.கொற்றலை ஆறு என்பதுதான் இதன் தமிழ் பெயர். கொற்றலை ஆறு. அப்படி என்றால்  சிறு சிறு அலைகள் மோதி விளையாடும் ஆறு என்று பெயர். 

4. பவானி ஆறு (RIVER BHAVANI) 

பவானி என்பதும் வடமொழி தான். இதன் தமிழ்ப் பெயர் வானிஆறு என்பது. இன்றைக்கும் மேல்வானி, கீழ்வானி, பூவானி என்ற பெயரில் ஊர்கள் பவானி ஆற்றங்கரையில் உள்ளன. .பவானியை பெருவானி என்று குறிப்பிடுகிறார்கள். சிறுவாணி என்பதுதான் கோவையில் ஓடும் சிறுவாணி ஆறு என்று சொல்லுகிறார்கள்.சிறுவாணியை சிறுவானி என்றுதான் சொல்ல வேண்டும்.

5. அமராவதி (RIVER AMARAAVATHI)

அமராவதி ஆறு என்பதன் தமிழ் பெயர் ஆன்பொருனை.ன் பொருனை என்றால், ஆவினங்கள் மேய்ந்து திரியவும் தாகம் தீர்க்கவும்  உதவும் ஆறு என்று பொருள்.   

6. பெரியார் ஆறு (RIVER PERIAR)

உண்மையான பெயர் பேரியாறு. மேற்கு தொடர்ச்சி மலையில் பாயும் பெரியார் ஆற்றின் உண்மையான பெயர் பேரியாறு என்பது.ன்பேரி என்றால் முரசு என்று பொருள். வெற்றி முரசு கொட்டுவது போல் ஆர்ப்பரித்து பாயும் ஆறு என்ற பொருள். ஒருவிதத்தில் ஈரோட்டு பெரியார் கூட ஆர்ப்பரித்துப் பாயும் ஆறுதான். அதனால் இனியும் பெரியாறு என்றே சொல்லுவோம்.

7. அடையாறு (RIVER ADAYAR)

அடையாறு என்ற பெயர் வருவதற்கு முன்னால் இந்த ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் தேனடைகள் அதிகமாக மிதந்து வந்ததாக சொல்லுகிறார்கள். ஆகையினால் இதற்கு தேனடை ஆறு என்பதை குறிப்பதற்காக அடையாறு என்று பெயர் வைத்தார்களாம். ஒரு காலத்தில் தேனடை ஆறாக இருந்த அடையாறு சாக்கடை ஆறாக நாம் மாற்றிவிட்டோம்.. 

8. கூவம் ஆறு (RIVER COOUM)

கூவம் என்றால் தமிழில் கிணறு என்று அர்த்தம் நீர் வளத்தை பெருக்கியதால் அதற்கு கூவம் ஆறு என்று பெயர். ஆனால் இன்று கூவம் என்று சொன்னாலே அதற்கு அர்த்தம் வேறு.

“அவன் வாயைத் தொறந்தாலே கூவம்தான்” இப்படி சொல்லுவதைக் கேட்டிருக்கிறீர்களா ? 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...