Sunday, May 21, 2023

INDIAN ELM PROTECTS FROM ALL TYPES OF ARTHRITIS 13. முடக்குவாதம் வந்தால் ஆயாவைத் தேடுங்கள்

முடக்குவாதங்களுக்கு குணம்
தரும் ஆயா மரம்



ஆயாமரம் - INDIAN ELM

வேலூர் மாவட்டத்தில், வாணியம்பாடி, தும்பேரி, சிக்கனாங்குப்பம், தெக்குப்பட்டு, மல்லகுண்டா, நாயன செரு, நாட்றம்பள்ளி பகுதிகளில் எல்லாம், இதனை தப்புசி மரம் என்று அழைக்கிறார்கள்.  இங்கு துரிஞ்சி மரம்போல இயற்கையாக பரவி உள்ளது.  இதனை தமிழ் நாட்டில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.  அவை, ஆயா, தப்புச்சி, தம்பச்சி, ஆவி மரம், அவில்தோல், அயில் பட்டை, மற்றும் வெள்ளையா.

பெயர்கள் : (DIFFERENT NAMES)

பொதுப் பெயர்கள்: இண்டியன் எல்ம், என்டயர் லீவ்டு எல்ம் ட்ரீ, ஐங்கிள் கார்க் ட்ரீ, சவுத் இண்டியன் எல்ம் ட்ரி (INDIAN ELM, ENTIRE LEAVED ELM TREE, JUNGLE CORK TREE, SOUTH INDIAN ELM TREE)

தாவரவியல் பெயர்: ஹாலோப்டீலியா இன்டெக்ரிஃபோலியா (HOLOPTELEA INTEGRIFOLIA)

தாவரக் குடும்பம் பெயர்: உல்மேசியே  (ULMACEAE)

பலமொழிப்பெயர்கள் : (VERNACULAR NAMES)

தமிழ் : ஆயா, ஆவி, தப்புச்சி, தம்புச்சி (AAYA, AAVI, THAPPUCHI, THAMBUCHI)

இந்தி : கஞ்சு (KANJU)

கன்னடம் : தப்புசி (THAPPUCHI)

தெலுங்கு : நாலி (NALI)

மலையாளம் : அவல்குருன்னு (AVALKURUNNU)

இருளா : ஆயி மரம் (AAYEE MARAM)

குஜராத்தி : சாரல் (CHARAL)

மராத்தி : வாவலா (VAVALA)

சமஸ்கிருதம் : சிரிவில்வா (CHIRIVILVA)

ஒரியா : தவுரஞ்சன் (DHAURANJAN)

கொங்கணி : வேம்வ்லோ (VAMVLO)

தாயகம்: இந்தியா (INDIA)

ஆயாவும் தப்புச்சியும் ஒன்றுதான் (LOCAL NAMES)

என்னுடைய தோட்டத்தில் நான்கைந்து மரங்கள், சுயம்புவாக வளர்ந்தவை.; யாரும் விதைபோட்டு, கன்று நட்டு வளர வில்லை.;  தானாக வளர்ந்தவை;.  உள்ளுர்க்காரர்கள் தப்புசி, தம்பச்சி என்ற பெயர்களில் சொல்லுகிறார்கள். இது கர்நாடகாவில் வழங்கும் பெயர்  என்று தெரிகிறது. 

அதன் மருத்துவப் பண்புகள் பற்றி எல்லாம் பெரிதாக அவர்களுக்குத் தெரியவில்லை.  நிலத்துக்கு தழை வெட்டிப் போடலாம் சார் என்கிறார்கள்.  அதாவது தழைஉரமாகப் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான்.

ஆயா மரங்கள் இலை உதிர்க்கும்அடிமரம் சாம்பல் வண்ணத்துடன் இருக்கும்இலைகள் கூம்பு, மற்றும் கோள வடிவத்தில் அடர்பச்சை நிறத்தில் இருக்கும்விதைகள் வித்தியாசனமாவைசிறிய உருண்டையான விதைகளைச்சுற்றி மெல்லிய சருகுபோன்ற இறகுகளுடன் இருக்கும்.

மலேரியா வந்தால் (MALERIA TREATMENT)

மலேரியா ஜூரத்திற்கு ஒரு வித்தியாசமான சிகிச்சை அளிக்கிறார்கள்.  தப்புசி மரப்பட்டையை, ஒரு ரூபாய் காசு அளவிற்கு வட்டமாக நறுக்கி எடுத்து அதனை, இடது கையில் தோள்பட்டைக்குக்  கீழே கட்டிக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான். உடனடியாக பலன் தெரியும். மெல்ல மெல்ல மலேரியா ஜுரம் குறைய ஆரம்பிக்கும்.

இதன் பட்டைகள், மற்றும் இலைகள் பலவிதமான மருந்துகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.  இவை சக்கரை நோய், நீர்கட்டி, வீக்கம், தொழுநோய், தோல்சம்மந்தமான நோய்கள், மூல நோய்கள், வயிறு சம்மந்தமான உபாதைகள், வெப்ப மண்டலப் பகுதிகளில் ஏற்படும் வாந்தி போன்றவற்றையும் குணப்படுத்துகின்றன. 

முடக்குவாதத்தை குணப்படுத்தும் (ALL TYPES OF ARTHRITIS)

தப்புச்சியின் பட்டைகள் முக்கியமாக முடக்குவாதத்தை குணப்படுத்தும். கொழகொழப்பான இதன் பட்டையை கொதிக்கவைத்து, அதன் சாற்றினைப் பிழிந்து மூட்டு வீக்கத்தின் மீது தடவ வீக்கமும் வலியும் குணமாகும்.

இலைகளிலிருந்து குடிநீர் தயாரித்து, அதனை தோல் நோய்களால் பாதிக்கப்;பட்ட இடங்களில் தடவிவர அவை விரைந்து குணமாகும்.

நகசுத்தி வந்தால், இந்த மரத்தின் பட்டையை நன்கு அரைத்து கூழாக்கி அதன் மீது தடவ, வலி குறைந்து குணமாகும்.

பாரம்பரிய மருத்துவ அறிவு (TRADITIONAL  KNOWLEDGE)

இதில் சொல்லப்படும்; சிகிச்சை முறைகள் நீங்கள் அவற்றை கடை பிடிப்பதற்காக அல்ல.  சிகிச்சை முறைகளை ஒரு மருத்துவரின் பரிந்துரைப்படி கைக்கொள்ள வேண்டும்.  ஆனால் இவை பாரம்பரியமாக இயற்கையோடு இயற்கையாக நமது மக்கள் வாழ்ந்த போது கடைபிடித்தவை. இன்னும்கூட கடைபிடித்து வருகிறார்கள்.  இந்த பாரம்பரிய அறிவு  மறைந்துவிடாமல் இருப்பதற்காக மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன். அதுபற்றிய விழிப்புணர்வு அளிப்பதும் அவற்றை பயன்படுத்துவதற்கான ஆயத்தவேலைகளைத் தொடங்க உதவுவதும்தான் இந்தPப் பதிவின் நோக்கம்.

ஆராய்ச்சிகள் அவசியம் (RESEARCH REQUIREMENTS)

ஆயா மரத்தின் பட்டை வெண்மையான சாம்பல் நிறமாகவும் மரம் லேசாக, மஞ்சளும் காவியும் கலந்த நிறமாகவும், புதியதாக வெட்டிய மரத்தில் ஒரு விதமான வாடையும் வீசும்.  காய்ந்ததும்  அது காணாமல் போய்விடும்.

ஆயா மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சொல்லும்போது, இது  சகலவல்லமை பொருந்திய மூலிகை மரம் என்று சொல்லுகிறார்கள்.  ஆனால் நவீன மருந்துகள் தயாரிக்க தேவையான ஆராய்ச்சிகளை செய்வது அவசியம.;

உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANIZATION)   

தாவரங்களைக் கொண்டு நோய்களை குணப்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.  உலகம் முழுக்க உள்ளவர்களில் 80மூ மக்கள் மூலிகை மருந்;துகளைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.  உலகம் முழுக்கவே அந்தந்த நாட்டில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளை பதிவு செய்யத் தொடங்கி உள்ளனர்.

அறிவியலுக்கு உதவும் அனுபவ அறிவு (TRADITIONAL KNOWLEDGE  SUPPORTS SCIENCE)

இந்த பூமியில் சுமார் 2.5 முதல் 5 லட்சம் தாவரவகைள் (PLANT SPECIES) உள்ளன.  இவற்றில் இந்தியாவில் மட்டும் இருப்பவை 47,000 தாவர வகைகள் மூலிகைகள் என அறியப்பட்டுள்ளன. இதில் சுமார் 800 (1.7 மூ)வகைகளை மட்டுமே நாம் பயன்படுததி வருகிறோம்.

அறிவியலுக்கு உதவுவது அனுபவ அறிவுதான்.  அது கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களிடையேதான் அபரிதமாய் உள்ளன.  அது வழிக்கொழிந்து பேகாமல் காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது.

 

 

 

சமவெளிகளில் அதிகம் வளரும்

ஆயாமரம் சமவெளிகளில் அதிகம் வளரும்.  மலையடி வாரங்களில் அதிகபட்சமாக 1100 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வேகமாக வளரும்.  இந்தியா, இமயமலை, ஸ்ரீலங்கா, பர்மா, இந்தோசைனா ஆகிய இடங்களில் ஆயாமரம் பரவாக வளர்ந்துள்ளன.

பேய்களுக்கு பிடித்தமான மரம் (GHOST TREE PEOPLE BELIEF)

தப்புசி மரங்கள் செப்டெம்பர் முதல் ஐனவரி வரை இலைகளை உதிர்க்கும்.  ஐனவரி-பிப்ரவரி மாதங்களில் பூக்கும்.  ஏப்ரல்-மே மாதங்களில் காய்கள் பழுக்கும்.

இந்த மரம் பற்றி கிராமங்களில் ஒருவகையான நம்பிக்கை இன்றும் உள்ளது.  பேய்கள் மற்றும் ஆவிகள் இந்த மரங்களில் தங்கி இருக்க ரொம்பவும் பிடிக்குமாம்.  அதனால் பேயோட்டுபவர்கள், பேய் பிடித்தவர்களின் தலை முடியைக் கொண்டுவந்து இந்த மரத்தில் வைத்து ஆணி அடிந்துவிட்டுச் செல்வார்கள்.  அதற்குப் பிறகு அந்தப் பேய் அந்த நபரை விட்டுவிட்டு அந்த மரத்திலேயே நிரந்தரமாகத் தங்கி விடுமாம்.

உங்கள் தோட்டத்தில் ஏதாச்சும் ஆயா மரங்கள் இருக்கா?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...