Sunday, May 21, 2023

INDIAN DATE FRUITS IN CHINESE FIRST NIGHTS 12. சீனாவின் முதலிரவில் கொண்டாடும் இந்திய இலந்தைகள்

இலந்தையின் மருத்துவப் பண்புகள்

 

தமிழ் நாட்டில் பள்ளிக்கூடத்தில்  அறிமுகமான இலந்தைப் பழங்கள், சீன நாட்டில் எப்படி முதலிரவு பழங்களாகப்  பயனாகிறது ? எந்த நாட்டில் இதில் இசைக்கருவிகள் செய்கிறார்கள் ? எங்கு இளைஞர்கள், பெண்களைகவர இதன் பூக்களை அணிகிறார்கள் ? இந்தியாவில் எந்தக் கோயிலுக்கு இந்த மரத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள் ? இந்த மரத்திற்கு குர்ஆனில் என்ன பெயர் ? இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பினால் இந்தப்பதிவினை நீங்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். 

இலந்தை - (INDIAN DATE)

இலந்தைக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு என்று சொல்லலாம். இல்லையென்றால் அதற்கு தமிழில் மட்டும்  119 பெயர்கள் இருக்குமா ? இதற்கு அடுத்ததாக சமஸ்கிருதத்தில் 39 பெயர்களும் கன்னடத்தில் 32 ம் உள்ளன.

பெயர்கள் : (DIFFERENT NAMES)

தாவரவியல் பெயர்: ஐpசிபஸ் ஐ__பா (ZIZIPHUS JUJUBA)

தாவரக் குடும்பம் பெயர்: ராம்னேசி (RHAMNACEAE)

பொதுப் பெயர்கள்: இண்டியன் டேட், கொரியன் டேட், சைனிஸ் டேட், ரெட் டேட், ஜூஜூப் (INDIAN DATE, KORIAN DATE, CHINESE DATE, RED DATE, JUJUBE)

பலமொழிப் பெயர்கள்: (VERNACULAR NAMES)

தமிழ் : இலந்தை (ILANTHAI)

இந்தி : பதாரா, பத்ரி (BADARA, BADRI)

கன்னடம் : எலஞ்சி (ILANJI)

மலையாளம் : எலந்தா (ILANTA)

மராத்தி : பெர் (BER)

சமஸ்கிருதம் : பதாரா (BADARA)

தெலுங்கு :  பதாரி (BADARI)

அரபிக் : அன்னாப் (ANNAB)

பெர்சியன் : கனார் (KANAR)

உருது : அன்னாப் (ANNAB) 

பள்ளிக்கூட பழம் (FRUIT FOR SCHOOL CHILDREN)

ஒரு காலத்தில் பள்ளிக்கூட பையன்களின் புத்கக மூட்டையை ஆராய்ந்தால், குறைந்தது மூன்றுவகையான பழங்களாவது இருக்கும்.    அவை, நாவல், நெல்லி, மற்றும் இலந்தை. அதேபோல ஒவ்வொரு பள்ளிக் கூடத்தின் முன்னாலும் நாலைந்து கூடைகளில் இந்தப் பழங்களுடன் நாலைந்து பாட்டிகளும் உட்கார்ந்திருப்பார்கள்.  அப்படி இல்லை  என்றால் அன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்று அர்த்தம்.

கிராமங்களில் பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள் பக்கத்தில் இருக்காது.  குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கிலோமிட்டராவது நடந்து செல்ல வேண்டி இருக்கும்.  எங்கோ ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கும்.  பள்ளிக்கூடம் போகும் வழியிலேயே இதை எல்லாம் கொள்முதல் செய்து கொண்டே போகலாம்.

நல்ல பழமா எதுவும் இல்லையாடா? என்று பலசமயம் வாத்தியார்களே பையன்களிடம் பழம் கேட்பதுண்டு.  பழம் தரும் பையன்களுக்கு அடியும் உதையும் அவ்வளவாய் கிடைக்காது. இலந்தம் பழங்களை சாப்பிடும்போது, கொஞ்சம் செங்காயாக சாப்பிடுவது பாதுகாப்பு.  ரொம்பப் பழுத்தப் பழத்தில் ஒரு புழுவாவது இருக்கும்.

நாவல் பழம் சாப்பிட்டால் சில சமயம் தொண்டை கட்டிக் கொண்டும்.  சளியும் தும்மலும் கூட வரும்.  எங்கள் வீட்டில் நாவல் பழம் சாப்பிட தடை உத்தரவே இருந்தது.  ஜுரமாத்திரை என்றுகூட அதற்கு பெயர் வைத்திருந்தார்கள்.  ஆனால் அதுபற்றி எல்லாம் நாங்கள் கவலைபபட மாட்டோம். நெல்லிக்காய் அதிகம் சாப்பிட மாட்டோம்.  எதுவும் இல்லாத சமயம் அதுவும் ஒடும்.  அது கொஞ்சம் புளிப்பு ஐhஸ்தி! அதை சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும். குடித்தால் கொஞ்சம் இனிப்பாய் இருக்கும்.

இலந்தைப் பழங்களைப் பறிக்கும்போது ஐhக்கிரதையாய் பறிக்க வேண்டும்.  இல்லையென்றால் முள்ளில் மாட்டிக் கொள்ளுவோம்.  நிறைய தடவை புதுசட்டைகளைக்கூட அதில் கிழித்துக் கொண்டிருக்கிறோம்.  இலந்தம் பழத்தில் நிறைய தசை இருக்காது.  பழத்தில் ஒற்றைக் கொட்டை பெரிசாக இருக்கும்.

இலந்தை, இந்தியாவிற்கு சொந்தமான மரம்.  பிரபலமானது என்று கூட சொல்ல முடியாது.  குறைவான முக்கியத்துவம் உள்ளது.  ஆனால் கூட உலகம் முழுவதும் பரவியுள்ளது.  தெற்கு ஆசியாவில் லெபானான் முதல் வட இந்தியா வரை, மத்திய மற்றும் தெற்கு சீனா, தென்கிழக்கு ஐரோப்பா என்று  பரவியுள்ளது.  பல்கேரியாவில் வீட்டுத் தோட்டங்களில் பழம் தரும் மரமாக வளர்க்கிறார்கள்.

பத்ரிநாத் பெயர் ரகசியம் (SECRET BEHIND BADHRINATH)

1995 ம் ஆண்டு நான் ஜார்கெண்ட் மாநிலத்தில் இருக்கும்; பத்ரிநாத் கோவிலுக்குப் போய் இருந்தேன். அங்கு நான் சேகரித்த தகவல்களில் ஒன்று இலந்தை மரத்துடன் தொடர்புடையது. 

ஒரு காலத்தில் இந்த பத்ரிநாத் கோவில் இருந்த இடத்தில் ஒரு பெரிய இலந்தைமரக்காடு இருந்தது என்பதுதான் அது. இந்து புராணத்தின்படி இன்று பத்ரிநாத் கோவில் இருக்கும் இடத்தில் விஷ்ணு நிஷ்டையில் அமர்நதிருந்;தார். அது கடுமையான குளிர்ப்பிரதேசம். வரை குளிரிலிருந்து பாதுகாக்க லட்சுமிதேவி ஓர் இலந்தை மரமாக மாறி பாதுகாப்;பு தந்தார்.

நிஷ்டை முடிந்ததும் விஷ்ணுபெருமான் இந்த இடத்திற்கு பத்ரிகா ஆசிரமம் என பெயர் சூட்டினார். இந்தி மொழியில் பத்ரிகா என்றால் இலந்தை மரம் என்று அர்த்தம். இதுதான் பத்ரிநாத் கோவிலின் பெயர் ரகசியம். 

குர்ஆனின் லோட்டிமரம் (LOTE TREE REFERRED IN QURON)

கரிபியன், டிரினிடாட், பஹாமாஸ், கலிபோர்னியா போன்ற இடங்களில் எல்லாம் இண்டியன் ஜூஜூப் என்கிறார்கள்.

அரபிக் மொழி பேசும் இடங்களில், சிசுபஸ் லோட்டஸ் (ZIZUPUS LOTTUS)என்னும்.  இலந்தை ரக மரங்களை வளர்க்கிறார்கள்.  அவை குர்ஆனில் சொல்லப்படும் லோட்டி என்னும் மரங்களுடன் (LOTE TREES) நெருங்கிய தொடர்புடையவை என்று சொல்லுகிறார்கள்.

இலந்தை மரம் பரவலான தட்ப வெப்ப சூழல்களில் வளரும.; 15 டிகிரி சென்டிகிரேட் கொண்ட குளிரையும் தாங்கும்.  மலைகள் மற்றும் பாலைவனங்களின் வெப்பத்தையும் தாங்கும்.  ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் வெப்பமான மற்றும் குளிர்ச்சியான பகுதிகளிலும் கூட வளர்கின்றன.

அறுவடை செய்த பழங்களை உலர்த்தி காப்பி மற்றும் தேநீருடன் தின்பண்டமாகச் சாப்பிடுகிறார்கள்.  பிளாக் ஜூஜூப் (BLACK JUJUBE)என்ற பெயரில் பழங்களுக்கு புகையிட்டு சாப்பிடும் பழக்கம் வியட்நாமில் உள்ளது. 

புத்துணர்ச்சி தரும் தேநீர் (REFRESHING TEA)

சீனா மற்றும் கொரியாவில், இலந்தைத் தேநீர் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.  புத்துணர்ச்சி தருவதில் இலந்தை தேநீர்தான் நம்பர் ஒன் என்கிறார்கள் சீனாக்காரர்கள். சீனாவில் இலந்தை ஐஸ் மற்றும் இலந்தைவினிகர் கூட தயார் செய்கிறார்கள்.

மேற்கு வங்காளம், மற்றும் பங்ளாதேஷ்ல் இலந்தை ஊறுகாய் தயார் செய்கிறார்கள்.  அங்கு இலந்தை ஊறுகாய் ரொம்ப பிரபலமாம். ஹாங் சாவ் ஜியூ (HONG ZAO JIU) என்னும் ஒருவதை இலந்தை ஒயின் தயார் செய்கிறார்கள், சீனாவில்.

சில சமயங்களில் பைஐpயூ (BIJIYU) என்னும் ஒருவகை சீனமதுவில் இலந்தை பழங்களைப் போட்டு ஊறவைத்து விடுகிறார்கள், அடுத்த பதப்படுத்திய இலந்தம் பழங்களை ஜிpயூ ஜாவோ (JIYU JAVO) என்று சொல்லுகிறார்கள். 

வியட்நாம் மற்றும் டைவானில் அறுவடை செய்யும் பழுத்த இலவம் பழங்களை உள்ளுர் மார்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.  தரமான, தெறிப்பான பழங்களைப் பொறுக்கி எடுத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இலந்தை வடை - இலந்தை ஒயின்

காலம் காலமாக இந்தியாவில் எப்படி இதைப் பயன்படுத்தினர்கள். பழங்களை உலர்த்துவார்கள்.  கொட்டைகளை நீக்குவார்கள்.  அத்துடன் தேவையான அளவு, புளி, மிளகாய், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து இடிப்பார்கள்.  பின்னர் மறுபடியும் சூரிய ஒளியில் காய வைத்து வடை செய்வார்கள்.  இதுதான் இலந்தை வடை.  இதை தெலுங்கில் ரெகி வடையாலு என்பார்கள்.

இந்தாலி, செனிகல் போன்ற நாடுகளில் இலந்தை ஒயின் தயார் செய்கிறார்கள்.  இதன் பழக் கூழிலிருந்து, ஜாம், ஜெல்லி போன்றவைகளும் செய்கிறார்கள்.

பெண்களை மயக்கும் பூ (FLOWERS ATTRACT WOMEN)

இமாலயா மற்றும் காரகோரம் பகுதி இளைஞர்கள் தங்கள் குல்லாய்களில், இலந்தை பூங்கொத்துக்களை அலங்காரமாக வைத்துக் கொள்ளுகிறார்கள்.  அதனால் பெண்கள் சுலபமாய் அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுகிறார்களாம்.  இந்த பூக்களின் வாசனைக்கு பெண்களை மயக்கும் சக்தி இருக்கிறதாம்.

முதல்இரவின் முக்கிய பழம் (FIRST NIGHT FRUIT)

சீனாவில் முதலிரவில் மணமக்கள் சாப்பிடுவதற்காக, முக்கியமாக இலந்தம் பழங்களை சேர்த்து வைப்பார்களாம்.  அப்படி வைப்பதால் சீக்கிரமாக அவர்கள் அம்மா அப்பா ஆவார்கள் என்பது அந்த நாட்டின் பூர்வ குடிகளின் நம்பிக்கை. இன்றும் கூட அவர்கள் இந்த வழக்கத்தை கடைபிடிப்பதாகச் சொல்லுகிறார்கள்.

பாரம்பரிய வைத்திய முறைகள்

பூசணக் கொல்லி, நுண்ணுயிர்க் கொல்லி, குடற்புண் நீக்கி, வீக்கமகற்றி, உடல் வெப்பமகற்றி, நடுக்கமகற்றி, சிறுநீரக நோயகற்றி இருதய உரமாக்கி, தடுப்பு சக்தி ஊக்கி, காயமாற்றி, கருத்தடை ஊக்கி, ஆகிய மருத்துவ சிகிச்சைப் பண்புகளைக் கொண்டது, இலந்தையின் பல்வேறு பாகங்கள்.  பாரம்பரிய வைத்திய முறையில் தொடங்கி தற்போது பல்வேறு நவீன வைத்திய முறைகளிலும் இதனை கையாண்டு வருகின்றனர்.

அவ்வப்போது இலந்தைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும்.

எலும்புகளை உறுதிபடுத்தும்

ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்

உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது 

பேருந்தில் பயணம் செய்யும்போது தலைச் சுற்றல், வாந்தி வராது.

பசி இல்லை என்ற செரிமானப் பிரச்சினை வராது.

மாதவிலக்கு காலங்களில் உதிரப்போக்கு அதிகம் ஏற்படாது.

எலும்பு தேய்மானம், மூட்டுவலி, மற்றும் மூட்டுப்பிடிப்பு வராது.

சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால் பற்களும், எலும்புகளும் பலவீனமாகாது.   

இசைக்கருவி செய்யலாம்

அத்தோடு, மணிமாலைகள் (BEADS) வயிலின் போன்ற இசைக்கருவிகளுக்கான உதிரி பாகங்களும் தயார் செய்ய இலந்தை கட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள். டீப்பயங்சோ (TAEPYEONGSO) என்னும் ஒரு வகையான ஒரு இசைக் கருவியை இல்ந்தை மரத்தில் செய்கிறார்கள்.  நம்ம ஊர் தெருக்கூத்துகளின் பயன்படுத்தும் முகவீணை (குறுங் குழல்) மாதிரி உள்ளது.  இது கொரிய நாட்டின் பாரம்பரியமான இசைக்கருவி.

சீனாவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து பழக்கத்திலிருக்கும் விளையாட்டு கோ (GO) என்பது.  அது பார்க்க ஒடு சிறிய பெட்டி போல உள்ளது.  அதன் மேல் கருப்பு வெள்ளை பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளது.  அதையும் இந்த இலவன் மரத்தில்தான் செய்கிறார்கள். 

நற்றிணையின் சங்ககாலப்பாடல்

சங்க இலக்கியத்தில் எல்லாம் கூட இலந்தை மரங்கள் பற்றிய பாடல்கள் வருகின்றன.  உதாரணமாக நற்றிணை யிலிருந்து ஒரு பாடல்.

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்

புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங்காய்

கல்சேர் சிறுநெறி பல்கத் தாவும்

பெருங்காடு இறந்தும்…….  (நற்றிணை. 113. பாலை)

இலந்தை மரங்கள் எல்லாம், மான்களால் மேய்ந்தது போக வழி எல்லாம் இலந்தை காய்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த மரங்கள் இன்னும்கூட பயன் தருவனவாய் உள்ளன.  அதுபோல தலைவி தலைவனின் பிரிவினால் துன்பப்பட்டு இருந்தாலும், ஒருவேளை வந்துவிட்டால் அவளால் அவனுக்கு இன்பம் தரமுடியும்.  என்ற பொருளில் புலவர் இளங்கீரனார் என்பவரால் எழுதியப் பாடல் இது.

எங்கும் வளரும் நிறைய முட்களுடன், படர்ந்து வளரும் சிறிய மரம்.  5 முதல் 12 மீட்டர் வரை கூட உயரமாய் வளரும்.  சின்னச் சின்ன இலைகள் பளபளப்பான பச்சை நிறத்தில் இருக்கும்.  காய்களும்  பழங்களும் ஏறத்தாழ சுண்டைக்காய் அளவில் இருக்கும்.  காய்கள் பச்சையாகவும் பழங்கள் காவி நிறத்திலும் இருக்கும். வறட்சியான நிலங்களில் வேறு பயிhகள் வளரமுடியாத இடங்களில் கூட இலந்தை மரங்களை நட்டு வளர்க்கலாம்.

கடைசியாக உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி, கொஞ்ச  நாளுக்கு முன்னால் இலந்தைப்பழம் பற்றி வந்த பிரபலமான சினிமாப்பாடல் எது என்று சொல்ல முடியுமா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...