சேங்கொட்டை மூலிகைப்பொடி |
ஒரு காலத்தில் சலவைத் தொழிலாளர்களால் துணிகளில் சலவைக்குறி போட மட்டுமே பயன்பட்ட சேங்கொட்டை மரம் எப்படி பெண்கள் கருத்தரிக்கவும், ஆண்களின் விந்தணுக்களை மேம்படுத்தவும் உதவுகிறது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சேங்கொட்டைமரம் – (MARKING
NUT TREE)
இலை உதிர்க்கும் மரம் இது. அதன் இலைகளைப் பார்க்க முந்திரி இலைகள் போலத்
தோன்றும்: சேங்கொட்டை, முந்திரிக் கொட்டை, மாங்கொட்டை அத்தனையும் ‘அனாகார்டியேசி’ என்ற குடும்பத்தைச்
சேர்ந்தவைதான்.
பெயர்கள் - (DIFFERENT NAMES)
பொதுப் பெயர்கள்:
மார்கிங்;
நட் ட்ரீ, டோபி நட் ட்ரீ, இண்டியன் மார்கிங்
நட் ட்ரீ,
மலாக்கா பீன், மரானி நட், மார்ஷ் நட், ஒரியண்டல் கேஷ்யூ நட், வார்னிவு; ட்ரீ (MARKING
NUT TREE, DHOBI NUT TREE, INDIAN
MARKING NUT TREE, MALACCA
BEAN, MARANY NUT, MARSH NUT,
ORIENTAL CASHEW NUT, VARNISH TREE)
தாவரவியல் பெயர்: செமிகார்பஸ் அனகார்டியம் (SEMICARPUS
ANACARDIUM)
தாவரக் குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)
தாயகம்: இந்தியா (INDIA)
பலமொழிப் பெயர்கள் (VERNACULAR
NAMES)
தமிழ்: சேங்கொட்டை, கோம்பலம், காலகம், காவகா, கிட்டாக்கனிக் கொட்டை எரிமுகை (SENKOTTAI, KOMBALAM,
KALAKAM, KAVAKA, KITTA-K-KANI-K-KOTTAI, ERIMUGAI)
மலையாளம்: அலக்குசீh,; சீன்குரு, தீன்கொட்டா (ALAKKUSEER
, SEENKURU, DHEENKOTTA)
தெலுங்கு: பில்லடாமு, ஜீடிமாம்டி சேட்டு (BILLATAMU,
JIDIMAMDI SETTU)
கன்னடா: ஜெரு, ஜெரானியா மரா (GERU, GERANIA MARA)
பெங்காலி: பெல்லட்டா, பல்லட்டாக்கா (BELLATA, BHALLATAKA)
ஒரியா: பொல்லடாக்கி, போனிபல்சா (BOLLATAKI, BONIBHALSA)
கொங்கணி: அம்பேரி, பிப்பா (AMBERI, BIBBA)
உருது: பல்லடூர், பிலாவன், பில்லார் (BALLADUR, BHILAVAN, BILLAR)
அசாமிஸ்: பாலா (BHALA)
குஜராத்தி: பிலாமோ பிலாமு, (BILAMO, BILAMU)
சமஸ்கிருதம்: அஹ்வலா, அப்சாஷ்டா, ஆரூத்கா, பல்லடாக்கா, வஹ்னி, விகஸ்யா (AHVALA,
ABSHASTAH, ARUDHKA, BALLATAKAH, VAHNIH, VIHASYA)
நேபாளி: பலாயோ (BHALAYO)
இந்தி: பிலாவா, பிலாவா, பில்லார் (BILAVA, BILAVAH, BILLAR)
மராத்தி: பல்லடாக்கா, பில்லாவா, பிப்பா (BHALLATAKA, BHILLAVA, BIBBA)
கொட்டைகளின் பெயர் ‘கோடம்பி’ :
இதன் பழங்களில் முன்பகுதி ஆரஞ்சு நிறமாகவும் , பின்பகுதி கருப்பு
நிறமாகவும் இருக்கும். முன்பகுதி பழம் கனிந்தால் இனிப்பாக இருக்கும், சாப்பிடலாம்.
பழத்தின் பின் பகுதி நச்சுத்தன்மை உடையது.
சாப்பிட்டால் ஒவ்வாமை (ALLERGY)
ஏற்படும். கருப்பு
நிறப் பழப்பகுதியில் இருக்கும் கொட்டைகளை, பதப்படுத்தி சாப்பிடலாம். இந்தியில் இந்த
விதை அல்லது கொட்டைகளின் பெயர் ‘கோடம்பி (KODAMBI)’.
சலவைத் தொழிலாளிகள் பயன்படுத்தியது (WASHERMEN’S
MARKING INK)
1960 ம் ஆண்டு வாக்கில் கூட சலவைத் தொழிலாளிகள், இந்த ‘மார்க்கிங் நட்’ கொட்டையிலிருந்து ‘இங்க்’ மதிரி சாயம் எடுத்து துணிகளில் அடையாளக்குறி போடுவார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குறி;;. ஒரு குடும்பத்தின் துணி இன்னொரு குடும்பத்திற்கு மாறிப் போகக் கூடாது. இந்தக் குறிதான் அந்த காலத்து ஆதார்கார்ட் எண்;. ஒரு கிராமத்து துணிகள் அத்தனையும் வெளுத்து, துணிகள் மாறாமல் பிரித்து மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று தருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மூட்டை.
துணி கிழிந்தாலும் குறி மறையாது (MARKINGS
ARE PERMANENT)
அந்தக் குறிபோடும் மையினை சேங்கொட்டையிலிருந்து தான் தயார்
செய்திருக்கிறார்கள். சேங்கொட்டையின் விதையுறைகளிலிருந்து எடுக்கும் சாயத்தைத்தான்
குறியிடுவதற்காக பயன்படுத்தினார்கள். ஏறத்தாழ அந்த மை அடர்த்தியான ஊதா நிறத்தில்
இருக்கும். இந்த மையில் குறிபோட்டுவிட்டால் துணிகள் கிழிந்து போனால் கூட, அதனை அழிக்கவே முடியாது.
இப்படி அன்று சலவைத் தொழிலாளிகள் வைத்த குறி மாறவே மாறாது.
விந்தணு எண்ணிக்கை அதிகரித்தல் (SPERM
COUNT INCREASE)
பாரம்பரிய மருத்துவத்தில் இதனை பலவிதமாக இன்றும் கூட பயன்படுத்தி
வருகிறார்கள்.
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை, மற்றும் பாலியல் ரீதியான உயிர்ச்சக்தியினை
மேம்படுத்த இது உதவுகிறது.
கருத்தரிக்க இயலாமை (AZOOSPERMIA)
ஆண்களால் கருத்தரிக்க இயலாமல் போவதற்கு ஆசூஸ்பெர்மியா என்று பெயர்;. இதனை ஆங்கிலத்தில் மேல் இன்பெர்டிலிட்டி இஷ்யூ (MALE INFERILITY ISSUE)என்கிறார்கள். அதாவது, ஆண்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருக்கும். இப்படி விந்தில் குறைவாக உயிரணுக்கள் உடையவர்களை அசூஸ்பெர்மிக்’ என்கிறார்கள். இந்த உயிரணுக்களை அதிகரிக்கும் சக்தி சேங்கொட்டையில் அபரிதமாக உள்ளது.
ஐந்து நபர்கள் அசூஸ்பெர்மிக்’(FIVE PERCENT ARE
AZOOSPERMIC)
நூறுபேர்களில் ஐந்து நபர்கள் அசூஸ்பெர்மிக்’ காக இருக்கிறார்கள். அவர்களுடைய விந்தணுக்களால்
கருத்தரிக்க வைக்க இயலாது. விந்துப்பையிலிருந்து உற்பத்தி ஆகும் விந்து சரிவர
வெளியேற முடியாததது ஒருவகை. இது அப்ஸ்டரக்டிவ் அசூஸ்பெர்மியா (OBSTRUCTIVE
AZOOSPERMIA). இன்னொன்று விந்துப்பையில் போதுமான விந்து
உற்பத்தியே இருக்காது. அல்லது அந்த விந்து உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கும்.
இது நான் அப்ஸ்டரக்டிவ்
அசூஸ்பெர்மியா (NON-OBSTRUCTIVE AZOOSPERMIA).
கோடம்பி சாப்பிட்டால் கருத்தறிக்காது (BIRTH
CONTROL FOR WOMEN)
செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத்
தீர்க்கிறது. கபத்தினால் ஏற்படும்
பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது. இதற்கு இந்தப் பழத்தின் ஆரஞ்சு நிறப் பகுதியைப்
பிரித்தெடுத்து, நடுத்தரமாக உலர்த்திப் பிறகு பயன்படுத்தலாம்.
இந்த பழத்தின் விதைகளை கோடம்பி எனப் பார்த்தோம். வட இந்தியாவின் பல
பகுதிகளில் இந்த ‘கோடம்பி’ உலர் திராட்சை போல
உலர் பழமாக (DRY FRUIT) பயன்படுத்துகிறார்கள். குளிர் பருவத்தில் இந்த கோடம்பியை பெண்கள்
தங்கள் தேவைக்கேற்ப சாப்பிடுகிறார்கள். காரணம், கோடம்பி சாப்பிட்டால், கருத்தரிக்காது. நல்ல இயற்கையான
கருத்தடைச் சாதனம். ‘கோடம்பி’ யை பதப்படுத்திய
பின்னர்தான் சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்தப் பழங்களை கருத்தறித்தப் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், கருச்சிதைவு
நேரிடும். அளவாக இதனை சாப்பிட்டு வந்தால், பெண்களின் இனப்
பெருக்க மண்டலத்தை சீர் செய்யும்.
வேறு பல மருந்துகளையும் தயார் செய்யலாம்
பழங்கள், விதைகள் உட்பட இந்த மரத்தின் பல்வேறு பாகங்களையும் ஆயுர்வேத
மருத்துவத்தில், பலவிதமான மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக உணவுப்பாதை (ALIMENTARY
CANAL) மற்றும் சருமநோய்கள்
(DERMATOLOGICAL
DISEASES) குணப்படுத்தும்
மருந்துகளைச் செய்கிறார்கள். இதய நோய்கள், ரத்த அழுத்தம், சுவாசம்
தொடர்பான பிரச்சினைகள், புற்று நோய், மற்றும் நரம்பு
சம்மந்தமான நோய்களையும் சரி செய்யும் சக்தி கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மரங்கள் நடவு செய்த 10 வது ஆண்டில் தான் பூக்கத் தொடங்கும். ஜூPன் - ஐPலை மாதங்களில், பூக்க ஆரம்பிக்கும்.
நவம்பர் முதல் டிசம்பர் வரையான காலங்களில் காய்கள், முதிர்ந்து
கனியாகும். 25 முதல் 30 ஆண்டுகள் வரை பலன் தரும். வளர்ந்த ஒரு மரம் 25 முதல் 45 கிலோ பழங்கள் தரும்.
இன்னும் ஆய்வுகள் வேண்டும் (RESEARCH IS
NEEDED)
இந்திய நாட்டின் மூலிகைகள், அவற்றைப் பயன்படுத்தும் மருந்துவ சிகிச்சை
முறைகளுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் உள்ளது. வளர்ந்த மேலை நாடுகளில் இது போன்ற அனுபவ அறிவு
ரொம்பவும் குறைவு அல்லது இல்லை எனச் சொல்லலாம்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சேங்கொட்டைக்கென்று தனி
இடம் உள்ளது. அந்த அளவுக்கு
முக்கியத்துவம் கொண்ட மூலிகை மரம் சேங்கொட்டை.
சேங்கொட்டை இன்றும் நிறைய அளவில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது:
ஆனால் இதற்கு இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: இதனை சிறந்த மூலிகை
மரமாக வளர்ந்து சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தும்
வாய்ப்புகள் நிரம்ப உள்ளன.
நல்ல வடிகால் வசதி வேண்டும் (DRAINAGE
FACILITIES)
இமயமலையின் வெளியே உள்ள பகுதிகளில் (OUTER HIMALAYAS) சட்லெட்ஜ்; முதல் சிக்கிம்
வரையான வெப்ப மண்டலப் பகுதிகளில், மற்றும் அஸ்ஸாமின் கிழக்குப் பகுதிகளிலும் இம்மரம்
பரவலாகக் காணப்படுகின்றன. இந்த மரத்தை
யாரும் சாகுபடி செய்வதில்லை. ஆனால் சால்
மரக்காடுகளில் இயற்கையாகப் பரவியுள்ளன.
லேசான மற்றும் நடுத்தரமான சரளை மண்ணில், போதுமான வடிதால், வசதி இருப்பின், சேங்கொட்டை மரங்கள்
சிரமமின்றி வளரும்.
தேடிப்பிடித்து வளர்க்கலாம் (PUT EFFORTS TO
GROW)
விதைகள் மூலம் புதிய மரக்கன்றுகளை உருவாக்கலாம். அறுவடை செய்த பின்னர், 6 மாதங்கள் வரை முளைப்புத்தன்மை நன்றாக இருக்கும். நூற்றுக்கு 60 முதல் 66 விதைகள் முளைக்கும்.
ஆண்பெண் இனப்பெருக்க மூலிகை (HUMAN
FERTILITY HERB)
ஆண்மையின்மையை சரிசெய்வது, பெண்களுக்கு சிறந்த இயற்கையான கருத்தடைச்
சாதனமாக பயன்படுத்துவது போன்ற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இயற்கை மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு
பெருகி வரும் நிலையில், சேங்கொட்டை போன்ற மரங்களை நாம் தேடி வளர்க்க வேண்டியது அவசியமா இல்லையா
?
GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com
.
No comments:
Post a Comment