Thursday, May 18, 2023

HOW NUX VOMICA IS A GOOD POISON எட்டி பழுத்தால் ஏகப்பட்ட நோய்கள் எட்டி நிற்கும்

எட்டி பழுத்தால்  எட்ட  நிற்கும்  நோய்கள்

எட்டிப் பழுத்தென்ன ஈயாதவன் வாழ்ந்தென்ன? என்பதும் மிகவும் பிரபலமான தமிழ்ப் பழமொழி.  யாருக்கும் உதவாத மனிதர்களைப்பற்றி குறிப்பிடும்போது இந்தப் பழமொழி தானாக வந்து விழும். ஆனால் எட்டி அவ்வளவு மோசமா ன மரம் அல்ல. விஷம்தான் ஆனாலும் நோய்களை குணப்படுத்தும். மருந்துகள் செய்யப் பயன்படும். அதற்குப் பேச வாயிருந்தால், நான் விஷமாக இருந்தாலும் நல்ல விஷம்” என்று சொல்லும்,

என் தோட்டத்து எட்டி (MY GARDEN TREE)

எனது தோட்டத்து வேலியில்  ஒரு குட்டையான எட்டி மரம் உள்ளது.  எப்போதும் பச்சைப்பசேல் என தோற்றம் தரும்.  மரம்நிறைய ஆரஞ்சு நிறப் பழங்கள் வைத்து அலங்காரம் செய்தது போல இருக்கும்.  

பறித்து சாப்பிடலாம் போலத் தோன்றும்.  பழங்கள் பார்க்க அவ்வளவு அழகு.  அத்தனைப் பழங்களும் உதிர்ந்து அந்த விதைகள் எல்லாம் என்ன ஆகிறது என்று தெரியவில்லை. 

எட்டி மரத்தை நாடி எந்தப் பறவைகளும் வராது என்கிறார்கள். இதுநாள் வரை நானும் அந்த மரத்தில் ஒரு பறவையையும் பார்க்கவில்லை. ஒரு வேளை ரகசியமாய் வந்து போகிறதா தெரியவில்லை.

பெயர்கள் (DIFFERENT NAMES)

பொதுப் பெயர்கள்: நக்ஸ்வாமிகா பாய்சன்நட், ஸ்ட்ரிக்னைன்ட்ரீ, செமன்ஸ்ட்ரிக்னாஸ், குவாக்கர் பட்டன்ஸ் (NUX VOMICA, POISON NUT, STRYCHNINE TREE, SEMEN STRYCHNOS, QUAKER BUTTONS)

தாவரவியல் பெயர்: ஸ்டிக்னாஸ் நக்ஸ்வாமிகா (STYCHNOS NUX VOMICA)

தாவரக்குடும்பம் பெயர்: லோகனியேசி (LOGANIACEAE)

தாயகம்: இந்தியா (INDIA) 

பல மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: எட்டிமரம், கசோடி, காலம், காஞ்சிரை, (ETTY MARAM, KASODI, KALAM, KANCIRAI)  

பெங்காலி: குச்சிலா (KUCHILA)

இந்தி: பெய்லிவா, சிப்பிஞ்சி;, ஜகார், கஐ;ரா, குச்லா, பெயிலிவா (BAILIVA, CHIBBINGE, JAHAR, KAJRA, KUCCHLA, BAILEWA)

கன்னடா: ஹெம்முஷ்டி, இட்டாங்கி (HEMMUSTI, ITTANGI)

மலையாளம்: சாம்ரான், கஞ்சிராம், கன்னி-ராக்-காரு (SAMRAN, KANJIRAM, KANNI- RAK-KARU)

மராத்தி: கஐ;ரா, குச்சாலா, ஜார்கட்சுரா (KAJRA, KUCHALA, JHARKHATCHURA)

ஒரியா: குச்லா (KUCHLA)

சமஸ்கிருதம்: கபிலு, சிப்பிதா, சுட்டகா, திர்கபத்ரா, கரட்ரூமா> விஷ்முஷ்டி (KAPILU, CHIPITA, CHUTAKA, DIRGHAPATRA, GARADRUMA,VISHMUSTI)

தெலுங்கு: முசிடி, முஷிடி, முஷ்டி (MUCIDI, MUSHIDI, MUSHTI)

உருது: குச்லா முட்டாபிர் ( KUCHLA MUDDABIR).

திருமூலரின் எட்டி மரம் (THIRUMOOLAR TAMIL SAINT)

திருமூலர் தனது திருமந்திரம்; நூலில் எட்டி மரத்தின் பழுத்து பயன்படாது விழுந்து கிடப்பது போல நல்லறம் செய்யாதவர் செல்வம்  எதற்கும் பயன்படாது என்று எட்டி மரத்தை உதாரணம் காட்டி ஒரு பாடலை எழுதியுள்ளார்.

எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,

ஓட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன்அறி யாரே

திருமந்திரம் -260

எட்டி மர சாகுபடி (CULTIVATION OF NUX VOMICA)

எட்டி மரம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கு சொந்தமானது. ஆனால் ஆப்ரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில், இயற்கையாகப் பரவியுள்ளது.; கானா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் எட்டி மரங்களை சாகுபடி செய்கிறார்கள்.

இந்தியாவில், மஹாராஷ்ட்ராவில் பசுமைமாறா காடுகள், கொங்கணி, மேற்குமலைத் தொடர்ச்சியின் சாயாத்தி மலைச்சரிவுகள், ஆகிய பகுதிகளில் எட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

எட்டிமரம் நடுத்தர உயரமானது.  கிளைகள் வளைந்தும் நெளிந்தும் இருக்கும்.  

பட்டை வழுவழுப்பாக சாம்பல் நிறமாக இருக்கும்.  இலைகள் கூம்பு வடிவமாக, பளபளப்பான பசுமை நிறத்தில் இருக்கும்.  புனல் வடிவ பூக்கள்வெளிர் பச்சை நிறத்தில் சிறிய கொத்துக்களாய் கொப்பு நுனியில் பூக்கும்.  

பழங்கள் எலுமிச்சம் பழங்களைப்போல, ஆரஞ்சுமஞ்சள் நிறத்தில் இருக்கும்.  ஒவ்வொரு பழத்திற்குள்ளும் ஐந்து, சில்லரைக் காசுகளைப் போல விதைகள் இருக்கும்.  பழத்தின் தசை கொழகொழப்பாக இருக்கும். 

எட்டிப் பழங்களை யாரும் சாப்பிட முடியாது.  நச்சுத்தன்மை உடையது, என எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிலிருந்து தயார் செய்யும் மருந்துகள் மூலம், ஏறத்தாழ ஒரு டஐன் நோய்களைக் குணப்படுத்த முடியும். 

இதயம் தொடர்பான  பிரச்சினைகளுக்கு எட்டி (HEART DISEASES)

வயிற்றுவலி, மலச்சிக்கல், வாந்தி, குடல் எரிச்சல், இதய எரிச்சல், இதர இதய நோய்கள் (HEART DISEASES) ரத்த ஒட்ம் தொடர்பான பிரச்சினைகள் கண்நோய்கள், மன அழுத்தம் (DEPRESSION), ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, சுவாசமண்டலம் தொடர்பான மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் (MENORRHAGIA)போன்றவற்றை சரி செய்ய எட்டி பயன்படுகிறது.

மிகவும் ஆபத்தான காட்டு நாய்கள், நரிகள் மற்றும் எலிகள் போன்றவற்றைக் கொல்ல எட்டியின் விஷத்தை பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.

ஆலகால விஷத்தின் அடையாளம் (DEADLY POISON)

எட்டி மரத்திற்கு காஞ்சிரை என்ற பெயரும் உண்டு.  தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமுதத்திற்காக பாற்கடலை கடைந்தார்கள்.  அப்போது அமுதமும் வந்தது.  ஆலகால விஷமும் வந்தது.  உலகம் அதனால் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைப் பருகினார்.  அந்த ஆலகால விஷத்தின் அடையாளம்தான் எட்டிமரம் என்று நமது புராணங்கள் சொல்லுகின்றன.

ஏற்றுமதி செய்யலாம் (SCOPE FOR EXPORT)

இந்தியாதான் எட்டி மரத்தின் தாயகம்.  பல நாடுகள் பல லட்சம் டன் எட்டி விதைதளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.  அப்படி இறக்குமதி செய்யும் எட்டி விதைகளப் பயன்படுத்தி நிறைய மருந்துப் பொருட்களை தயார்செய்து, அவற்றை நமது நாட்டிற்கே அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அப்படி நம்மிடமிருந்து இறக்குமதி செய்யும் பட்டியலில் வரும் நாடுகள், அமெரிக்கா, ஹாலந்து, இஸ்ரேல் மற்றும் மேற்கு ஐர்மனி.

கடினமான மரம் (STRONG TIMBER)

எட்டிமரம்கூட கடினமான மரம்.  நன்றாக உழைக்கக் கூடியது.  அந்த மரத்தில் நிறைய மரச்சாமான்களையும் செய்யலாம். 

எட்டி மரங்கள், இருமண்பாடான மண், மணற்சாரியான இருமண்பாடான மண். களிமண், மற்றும் சரளைமண்ணில் நன்கு வளரும். 

விதைகள் - கன்றுகள் – வேர்ச்செடிகள் (SEEDS – SEEDLINGS – ROOT SUCKERS)

ஒரு எக்டர் நிலப்பரப்பில் 400 மரங்களை நடலாம். ஒரு வளர்ந்த ஒரு மரத்தில், 50 முதல் 75 கிலோ விதைகள் சேகரிக்கலாம்.  விதைகளை 6 முதல் 12 மணிநேரம் கொதிநீரில் விதைகளை ஊரவைத்து விதைப்பதால் முளைப்புத்திறன் மேம்படும்.  ஒரு ஏக்டரில் விதைக்க ஒரு கிலோ விதை தேவை.  புதிய விதைகள் நன்கு முளைக்கும்.  நாள்பட்ட விதைகள் நன்கு முளைக்காது.

ஒரு கிலோ எடையுள்ள கனிகளில், 600 முதல் 900 விதைகள் இருக்கும்.  விதைகள் மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம். விதைகள் முளைக்க 70 முதல் 120 நாட்கள் ஆகும். 

வேர்ச்செடிகள் மூலமாகவும் புதிய கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.  மரத்தின் அடிப்பகுதியில் லேசாக வெட்டி, காயப்படுத்துவதால், வேர்ச் செடிகள் மளமளவென அதிக எண்ணிக்கையில் உருவாகும்.  இந்த வேர்;ச்செடிகளை சுலபமாகப் பிரித்து புதிய கன்றுகளாக நடலாம். மரங்கள் காய்க்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.

மருந்துகளை நாமே தயாரிக்கலாம் (HOME MADE MEDICINES)

எட்டி மரங்களை வளர்க்க நல்ல மண் தேவையில்லை.  அதிக தண்ணீர் தேவையில்லை.  உரம் தேவையில்லை.  பூச்சி மருந்து தேவையில்லை.  சாகுபடி செய்ய அதிக பணம் தேவை இல்லை. வளர்க்க வேண்டும் என்ற மனம்தான் தேவை.  

அதிக  மரங்களை  நட்டு வளர்த்தால் அதிகமான எட்டி விதைகளை ஏற்றுமதி செய்யலாம்.  அந்நியச் செலாவணியும் அதிகம் கிடைக்கும்.  எட்டி கொட்டைகளுக்குப் பதிலாக மருந்துகளை நாமே தயாரித்து  ஏற்றுமதி செய்யலாம்.

கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து விட்டு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் பாருங்கள்.

இவை எல்லவற்றிற்கும் தேவை நமக்கு விழிப்புணர்வு, அதற்குத்தான் இம்மாதிரி கட்டுரைகள். உங்கள் பகுதியில் மரம் நட வேண்டியிருந்தால் அதில் எட்டி மரக்கன்றுகளை இனியாவது சேர்ப்பீர்களா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

 

 


No comments:

THE FIRST BOOK ON 100 TAMIL RIVERS - நூறு தமிழ் ஆறுகள் பற்றிய புதிய நூல்

நூறு தமிழ் ஆறுகள்  புதிய நூல்  எழுதியவர்  பூமி ஞானசூரியன் STORY OF 100 RIVERS நூலின் 15  சிறப்புகள் 1. தமிழகத்தின் 100 ஆறுகளை பதிவு செ...