Monday, May 22, 2023

GANGES RIVER WITH ARSENIC CONTAMINATTION கங்கை ஆற்றில் ஆர்செனிக் நஞ்சு

 

கங்கையில் புனித நீராட்டு

ஆர்செனிக் பாதிக்கப்பட்ட கங்கை


கங்கை ஆற்றில் ஆர்சனிக் என்னும் நச்சுப்பொருள் கங்கை நதியின் ஆற்றுப் பிரதேசங்கள்
(RIVER BASINS) என்பது நான்கு நாடுகளில் பரவி உள்ளது அவை இந்தியா வங்காளதேசம் நேபாளம் மற்றும் திபெத்து.  

உணவு தானியங்களில் ஆர்சனிக் நச்சு (ARSEINIC IN FOOD GRAINS)

இந்தப் பகுதியை கங்கா நதியின் ஆற்றின் நீர் வடிப்பகுதி என்கிறார்கள். இந்த பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீரில் அதிகமான அளவில் இந்த ஆர்சனிக் நச்சு இருப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த பகுதிகளில் விளையும் உணவு தானியங்களிலும் இந்த நச்சின் அளவு உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த அளவைவிட அதிகமாக உள்ளது.

உலகிலேயே அதிகப்படியான மக்கள் தொகையை உடைய நீர்வடிப் பகுதி. இது மேலும் அதிகப்படியான மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக உள்ள பகுதியும் கூட.

நீர் கடவுளுக்கு நிகராகனது(RIVERS ARE WORSHIPPED)

குறிப்பாக குடிநீர் உணவு மற்றும் விவசாயத்திற்கும் அடிநாதமாக விளங்குவது கங்கை ஆற்றின் நீர் வடிப்பகுதி. இதற்கிடையே கங்கை நதி என்பதும் கங்கையின் நீரும் இந்திய மக்களால் கடவுளுக்கு நிகராக வணங்கப்படுகிறது. 

உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANIZATION)

ஆனாலும் கூட மிகவும் மோசமாக மாசடைந்த ஆறுகள் என்ற உலகின் பட்டியலில் கங்கை முதலிடத்தில் உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆர்சனிக் மட்டுமல்ல, கங்கை நீரில் காட்மியம் குரோமியம் காப்பர் லெட் மெர்குரி போன்ற நச்சுத்தன்மை கொண்ட கனரக உலோகங்களும் கரைந்துள்ளன. இந்த நச்சுத்தன்மை கொண்ட கனரக உலோகங்கள் மட்டுமல்ல நோய்களை உருவாக்கும் கிருமிகளும் உலக சுகாதார நிறுவனம்  சொல்லும் அளவைவிட மூவாயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள். பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்கள் கழிவு நீரை சுத்தம் செய்யாமல் அப்படியே கங்கை நீரில் கொட்டுகிறார்கள். இந்த கழிவுநீர் மற்றும் கழிவு பொருட்களை கங்கையில் சேர்க்கும் அளவு கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து இருக்கிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் இது நூறு மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடுகிறார்கள் கடந்த 75 ஆண்டுகால அளவில் கங்கை மிக மோசமான அளவில் மாசடைந்துள்ளது. இதன் நீரை கண்டிப்பாக குடிக்கும் அளவுக்கு யாருக்கும் தைரியம் வராது என்கிறார்கள்.

கங்கையில் குளியல் ( A  SACRED DIP IN RIVER GANGA)

உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரில் கங்கையில் குளிப்பது என்பது மிகவும் விசேஷமானது. ஆனால் அதுவே இப்போது பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார்கள். ஒரு காலத்தில் வாரணாசியின் சுற்று வட்டாரத்தில் ஒரு பழக்கம் இருந்தது. இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு உறவினர்கள் வரும் வரைக்கும் வாயில் ஒன்றிரண்டு சொட்டு கங்கை தீர்த்தம் விடுவது வழக்கமாக இருந்தது.

கங்கை நீர் மாசு அடையாது (GANGES WATER HAS SELF PURIFYING EFFECT)

கங்கை நீரின் சொட்டுக்களை விடுவதன் மூலம் நோய்வாய்ப்பட்டவர்களில் அவர்களுடைய உடலில் நுண்ணுயிர்கள் பெருக்கத்தை அது கட்டுப்படுத்தும் என்று நம்பினார்கள். அதற்கு காரணம் கங்கை நீர் எப்படியும் மாசு அடையாது என்று நம்பினார்கள் அதற்கு அறிவியல் ரீதியாகவும் ஒரு காரணம் சொன்னார்கள் இயற்கையாகவே கங்கை நீரில் கரைந்துள்ள தாது உப்புகள் இந்த மாசுகளை எல்லாம் நீக்கிவிடும் என்று நம்பினார்கள் 

கங்கை நதிபற்றி ரவீந்திரநாத் தாகூர் (RABINDRANATH TAGORE)

கங்கை நீரை கொண்டு வந்து ஒரு குடத்தில் நிரப்பி வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்போம் என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்

கங்கை நதியின் நீர்வடிப்பகுதி (RIVER BASIN AREA)

கங்கை நதியின் நீர்வடிப்பகுதி 79%  நீர்வடிப்பகுதி, இந்தியாவின் 11 மாநிலங்களில் பரவி உள்ளது. அந்த 11 மாநிலங்கள் என்பவை உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, மற்றும் மேற்கு வங்காளம். 

சண்டிகர்ல் ஆர்சனிக் பாதிப்பு (ARSENIC IN CHANDIGARH)

முதன்முதலாக சண்டிகர் மாநிலத்தில் தான் ஆர்சனிக் பாதிப்பு என்பதை கண்டுபிடித்தார்கள். ஏறத்தாழ ஐந்து முதல் 9 பேர் ஆர்சனிக்கால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பரிசோதிக்கப்பட்டார்கள். 

20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்சனிக்  நச்சு என்பது தோல் புற்றுநோயை மட்டுமே உருவாக்கும் என்ற நம்பினார்கள் ஆனால் இன்றைய நிலையில் உலக சுகாதார நிறுவனம் உட்பட பல முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் சுமார் அரை டன் புற்றுநோயை உருவாக்கும், என்கிறார்கள். தோல் புற்றுநோயில் தொடங்கி இன்று நுரையீரல், ஈரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, மேலும் பல விதமான புற்றுநோய் பாதிப்புகளை உருவாக்கும் எனத் தெரிகிறது. 

நீங்கள் கங்கையில் குளித்திருக்கிறீர்களா ? உங்கள் அனுபவம் எப்படி ? 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...