Tuesday, May 23, 2023

EZHILAIPPALAI TREE CURES CANCER TUMOURS புற்றுநோய்க் கட்டிகளை குணப்படுத்தும் ஏழிலைப்பாலை

 

கேன்சர் கட்டிகளை குணப்படுத்தும்

(ஏழிலைப்பாலை மரம் – (SCHOLAR TREE)

ஏழிலைப்பாலை மரம், தமிழ் மண்ணின் ஐவகை நிலப்பகுதியில் கடைசி நிலப்பகுதியான பாலைப்பகுதிக்கு சொந்தமானது, சமீபகாலமாக அழகு மரமாக, பெரு நகரங்களில் உலாவருவது, தற்போது புற்றுநோய்க் கட்டிகளை குணப்படுத்தும் மருந்துமரமாக இந்தப் பதிவில் அறிமுகமாகிறது.

பொதுவாக எல்லா மரங்களுமே ஏதாவது ஒரு மருத்துவப்பயன் உடையதாக இருக்கும். ஆனால் சில மரங்கள் மற்றும் பல நோய்களை கட்டுபடுத்தும் குணங்களைக் கொண்டதாகும்.; அப்படி பலவித மருத்துவ குணங்களை கொண்டது இந்த ஏழிலைப்பாலை மரம்.

பெயர்கள் : (DIFFERENT NAMES)

பொதுப் பெயர்கள்: ஸ்காலர் ட்ரீ, டிட்டா பார்க், டெவில் ட்ரீ, பிளாக்போர்ட் ட்ரீ (SCHOLAR TREE, DITTA TREE, DEVIL TREE, BLACK BOARD TREE)

தாவரவியல் பெயர்: அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ் (ALSTONIA SCHOLARIS)

தாவரக்குடும்பம் பெயர்: அப்போசயனேசி (APOCYANACEAE) 

பலமொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: ஏழிலைப்பாலை, முகும்பலை (EZHILAIPPALAI, MUGUMBALAI)

இந்தி: சப்தபரணி, சைத்தான் கா ஜார், சிட்வான் (SABTHAPARANI, SAITHAN KA JAR, SITVAN)

பெங்காலி: சாட்டிம் (CHATTIM)

கன்னடா: ஏலிலி ஹாலி (ALILI HAALI)

மலையாளம்: தெய்வபலா (DEIVA PALA)

மராத்தி: சட்வின் (SATVIN)

சமஸ்கிருதம்: சப்தபரணா (SAPTHAPARANA)

தெலுங்கு: தேவசுரிப்பி (DEVASURIPPI)

தாயகம்: சென்ட்ரல் அமெரிக்கா, டிராப்பிகல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பசுபிக் பகுதி, மலேசியா, கான்டிநென்டல் ஆசியா (CENTRAL AMERICA, TROPICAL AMERICA, AUSTRALIA, PASUPIC REGION, MALAYSIA, CONTINENTAL ASIA)

ஏழிலைப்பாலை இந்தியா உட்பட பல நாடுகளைச் சொந்த மண்ணாகக் கொண்டது.; அவை சைனா, நேபாளம்; ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம்,; இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து. 

பல நோய்களை குணப்படுத்தும் (CURES SEVERAL DISEASES)

இதனை நுண்ணுயிர்கள் மற்றும் அமீபாக்கள் தாக்குதலை தடுக்கவும் வயிற்றுப்போக்கு, ஜுரம், மலேரியா, வயிற்றுக்கடுப்பு, குடற்புண், மூட்டுவலி, புற்றுநோய், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இதன் கனிந்த பழங்களிலும் நோய்களை குணப்படுத்தும் சக்திகள் உள்ளன. சிபிலிஸ் எனும் கிரந்திநோய,; வலிப்பு நோய் ஆகியவற்றைக்கூட கட்டுப்படுத்தலாம்.

ஏழிலைப்பாலை பட்டையை பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகள் பலவற்றை தயாரிக்கிறார்கள். குறிப்பாக நாள்பட்ட காய்ச்சல,; மலேரியா, ஜீரணக் கோளாறுகள,; புற்றுநோய் கட்டிகள், குடற்புண்கள,; ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்துகிறது   

பூக்கள் அக்டோபர் மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும் அவை மிகுந்த வாசனை உடையவை; கொத்துக்கொத்தாகப் பூக்கும்; பூப்பு காலத்தில் இந்த மரங்கள் தனி அழகாகத் தென்படும்.

புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் (CURES CANCER TUMOURS)

ஏழிலைப்பாலையின் பால் மற்றும் பட்டைச் சாற்றினை கண் நோய்களுக்கு சிகிச்சை தர பிஜி மற்றும் சாலமன் தீவுகளில் பயன்படுத்துகிறார்கள்.; இலைகள் மற்றும் வேர்களில் தயார் செய்யும் கஷாயத்தை நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்துகிறார்கள்.; இரத்தத்தை சுத்திகரிக்கவும், சிபிலிஸ் என்னும் பாலியல் தொடர்பான நோய்காக்காய்வலிப்பு ஆகியவற்றை குணப்படுத்த இந்தியாவில் இதன் பழங்கள் பயனாகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஏழிலைப்பாலை பட்டையைPப் பயன்படுத்தி புற்றுநோய் கட்டிகள்,; குடற்புண்,; ஆஸ்துமா, மலேரியா காய்ச்சல்,; அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.; இதன் பட்டை மற்றும் வேர்த்துண்டுகளை அரிசியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாயில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.; உடலில் ஏற்படும் காயங்களை ஏழிலைப்பாலை பாலின் மூலம் சுத்தம் செய்தால் அவை விரைவில் குணமாகும்.; இதன் இலைகள் தோலில் ஏற்படும் சொறி சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது.

மாதவிடாய்ப் பிரச்சினைகள் (MENSTRUATION ISSUES)

மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படுவது என்பது சாதாரண  பிரச்சனை ஆகிவிட்டது. இதனை கட்டுப்படுத்த ஏழிலைப்பாலையின் பட்டைகள் மற்றும் வேர்களை அரிசியுடன் போட்டு சமைத்து அதை சாப்பிட நாளடைவில் இந்த உதிரப்போக்கு கட்டுப்படுகிறது என்கிறாரகள்.; இந்த மரத்தின் பாலினால் நம் உடலில் ஏற்படும் புண்களை துடைத்து சுத்தப்படுத்தலாம். இதனால் அந்த புண்கள் சீக்கிரமாக குணமாகும். அது மட்டும் இன்றி இது சிறுநீரகங்களை பாதுகாக்கும் பண்புகளையும் கொண்டது. சிறுநீரகங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கும்.

ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் (ANTIOCCIDANTS)

இப்போது பரவலாக எந்த ஒரு உணவுப் பொருள் பேசும் போதும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்ப இருக்கு என்று சொல்கிறாரகள். ஆன்ட்டி-ஆக்சிடென்ட் என்றால் என்ன ? அவை எப்படி நமக்கு உபயோகமாக உள்ளன ?

ஃப்ரீரேடிகல்ஸ் (FREE RADICALS) என்னும் கழிவுப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தாமதப் படுத்துகின்றன. இவற்றை ஆன்ட்டி ஆக்சிடெண்ட் நீக்கிகள் (ANTI-OXIDANT SCAVENGERS)என்றும் அழைக்கிறார்கள.; ஆன்டி ஆக்சிடென்ட்கள் இயற்கை மற்றும் செயற்கை பொருட்களிலும் கிடைக்கும். தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஒரு வகையான தாவர ஊட்டச்சத்துகள். சிலவகை ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நமது உடலே உற்பத்தி செய்கிறது. அதற்கு எண்டோஜினஸ் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் (ENDOGENOUS ANTI-OXIDANTS)  என்று பெயர.; உடலுக்கு வெளியில் இருந்து கிடைக்கும் ஆண்டி-ஆக்சிடன்ட்களுக்கு எக்சோஜினஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (EXOGENOUS ANTI-OXIDANTS)  என்று பெயர்.

திசுக்களினால் உற்பத்தி செய்யப்படும் கழிவு பொருட்களில் பெயர்தான் ஃப்ரீ ரேடிகல்ஸ.; இந்த கழிவு பொருட்களில் தீமைதரும் பண்புகளை சரி செய்பவை தான் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்.; இதனால் நமது உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

 ஃப்ளேவனாயிட்ஸ்,   பினாய்ட்ஸ், ஸ்டீரால்ஸ்இப்படிப்பட்ட தாவர வகை ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் தான். பொதுவாக இவை பழங்கள் மற்றும் காய்கறிகளில் அபரிதமாக உள்ளன. அதே சமயம் இவற்றை அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஆரோக்கியமானது அல்ல என சொல்கிறது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் (NATIONAL INSTITUTE OF HEALTH )என்னும் சுகாதார அமைப்பு. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்.

பால் மற்றும் பட்டை விற்பனை(TREE BARK & MILK)

இந்த மரங்கள் மிகுதியாக இருக்கும் இடங்களில் உள்ளூர் மருந்துக் கடைகளில், இதனுடைய பால் மற்றும் பட்டைகளை விற்பனை செய்கிறார்கள்; சுமார் 25 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் 19 கிலோ வரை பட்டைகளைத் தரும்; இவற்றை எடுத்து உலர வைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.; மருந்துகள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள்.; மரங்களில் சதுரம் சதுரமாக பட்டைகளை வெட்டி எடுக்கிறார்கள்.; மரத்தில் காயம் செய்து பாலை வடிக்கிறார்கள்.; ஏழிலைப்பாலையில் ; முக்கியமான அறுவடை பாலும் பட்டையும்தான்.

பள்ளிக்கூட கரும்பலகைகள் (SCHOOL BLACK BOARDS)

ஏழிலைப்பாலை மரங்கள் மிகவும் மிருதுவானவை; எந்த ஒரு மரச் சாமான்கள் செய்யவும் தோதாக இருக்கும்; குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கான கரும்பலகைகள்  செய்வதற்கென அவதாரம் எடுத்த மரம் என்று சொல்லலாம். அதனால் இந்த மரத்திற்கு பிளாக் போர்ட் ட்ரீ (BLACK BOARD TREE) என்ற பட்டப் பெயர் உண்டு.

பொருட்களை பேக்கிங் செய்வதற்கு ஏற்ற மரப்பெட்டிகள் மற்றும் சவப்பெட்டிகள் செய்யக்கூட பயன்படுத்துகிறார்கள். இதுதவிர தீக்குச்சிகள் மற்றும் காகிதம் செய்ய மரக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மரச்சாமான்கள் அத்தனையும் செய்யலாம் (ALL WOODEN ITEMS)

ஏழிலைப்பாலை வணிக ரீதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மரமும்கூட. உதாரணமாக பென்சில்,; தீக்குச்சி, தேயிலை பெட்டிகள், ஒட்டு பலகை மற்றும் மரக்கூழ் தயாரிக்கலாம்; கடினமான மரங்களைத் தரும் சில மரவகைகளும் ஏழிலைப்பாலையில் உள்ளன.

ஈரச்செழிப்பான மண்ணில் வளரும் (MOIST SOIL TYPES)

ஏழிலைப்பாலைக்கு கொஞ்சம் இலை மக்குக் கூடுதலான ஈரச் செழிப்பான மண் வேண்டும்;. மணல் சாரி மற்றும் சுக்கான் பாறையை உள்ளடக்கிய மண்ணிலும் நன்கு வளரும்.; மழைக்காலங்களில் மட்டும் சதுப்பு நிலமாகும் மண்கண்டம்மற்றும்; வறண்ட பகுதிகள் அனைத்திலும் வளரும்.; கடற்கரையிலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள பகுதிகளிலும் ஏழிலைப் பாலை நன்கு வளரும்.;

ஏழிலைப்பாலை விதைகளை சேகரிப்பது கொஞ்சம் கடினம்; பழங்கள் மரத்தில் இருக்கும் போது வெடித்து சிதறிவிடும்.; 1.5 முதல் 2 கிராம்  எடையில் ஆயிரம் விதைகள் இருக்கும்;. புதிய விதைகள் 100 சதம் முளைக்கும்.; விதைகளைக் காற்றுப் புகாத குப்பிகளில் இரண்டு மாதங்கள் வரை  சேமிக்கலாம்.; விதைத்தால் 90 சதம் வரை முளைக்கும்;.

பேய் பிசாசுகள் தங்கும் மரம் (HOME FOR GHOSTS)

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இந்த மரத்தை பார்த்தாலே பீதி;. இந்த மரத்தின் அடியில் உட்காரவோ மற்றும் படுக்கப் பயப்படுவார்கள்.;  காரணம் இந்த மரத்தில் பேய் பிசாசுகள் தங்கி இருக்கும் என்று அவர்கள் நம்புவதுதான் தான் காரணம்.;

இயற்கை வைத்திய முறைகள் (TRADITIONAL  MEDICINE SYSTEMS)

இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ,; ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் ஏழிலைப்பாலை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். பாம்பு கடி நாய் கடி போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை கூட இது சரி செய்கிறது.

சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் யுனானி மருத்துவம் போன்ற அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருந்து வகைகளை ஏழிலைப்பாலை மரத்திலிருந்து தயார் செய்கிறாரகள்.;

தாய்லாந்து நாட்டினர்.  அந்த நாட்டின் சித்த மருத்துவத்தை தாய் எத்தனோ பார்மசி (THAI ETHNO PHARMACY) என்கிறார்கள்.; இவர்கள் குறிப்பாக நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்கள் தொடர்பான நோய்களுக்கு ஏழிலைப்பாலையை பயன்படுத்துகிறார்கள்.

நீங்கள் யாராவது, ஏழிலைப்பாலையை மூலிகையாகப் பயன்படுத்திய அனுபவம் உண்டா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...