Wednesday, May 10, 2023

Employment Opportunities in Plastic Pollution control பிளாஸ்டிக் குப்பையிலே கோடிதனம்

 

முதல்எக்கோ AD 36 ரேடியோ
பிளாஸ்டிக்கில்


பிளாஸ்டிக்கின் சரித்திரம்
 (HISTORY OF PLASTICS)

உலகம்  நாடுகள் அனைத்தும்  பிளாஸ்டிக்குகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் மும்முரமாக இருக்கின்றன. பிளாஸ்டிக்குகளைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பெரிய தொழில் வாய்ப்பு ஒளிந்து கொண்டுள்ளது. பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு 500 முதல் 5000 ஆண்டுகள் கூட ஆகும் என்கிறார்கள். கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு தம்பிக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்று சொல்லுவார்கள். அதுமாதிரிதான் பிளாஸ்டிக் மறுசுழற்சியும். அதுபோல புதிய பிளாஸ்டிக்குகள் உற்பத்தியையும் குறைக்கும், தினம் தினம் சேறும் பிளாஸ்டிக் குப்பைகளையும் (PLASTIC LANDFILLS) குறைக்கும்.

மறு சுழற்சி மூலம் வருமானம் (INCOME THROUGH RECYCLING)

இந்தப் பதிவில் பிளாஸ்டிக் எப்படி இந்த உலகுக்கு அறிமுகம் ஆனது ? அது எப்படிப் பரவியது ? இன்றைய நிலையில் பிளாஸ்டிக் குப்பைகள் எந்த அளவுக்கு நமது சுற்றுச் சூழலுக்கும், மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் கேடு செய்வதாக உள்ளது. அதனை எப்படி மறு சுழற்சி செய்வதன் மூலம் எப்படி வருமானம் பெறலாம் என்பது பற்றியும் இந்த கட்டுரைத் தொடரில் தெரிந்து கொள்ளலாம். 

இது பிளாஸ்டிக் எப்படி முதம் முதலாக மனித சமூகத்திற்கு அறிமுகம் ஆனது என்பது பற்றிச் சொல்லும் இந்தப் பதிவு.     நாம் இப்போது 1907 ம் ஆண்டுக்குப் போக வேண்டும்..

லியோ பாக் லேண்ட் கண்டுபிடித்தது (LEO BAEKLAND)

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ரசாயன நிபுணர் லியோ பாக்லேண்ட் (LEO BAEKLAND) என்பவர் இவர்தான் முதன் முதலாக 1907ஆம் ஆண்டு முழுக்க முழுக்க செயற்கைப் பொருளாக பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார்.

ஃபார்மால்டிஹைட் மற்றும் பீனால் என்னும் இரண்டு ரசாயனங்களை வெப்பம் மற்றும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் பிளாஸ்டிக்கை உருவாக்கினார்

கேமரா டெலிபோன் மற்றும் ரேடியோ (CAMERA RADIO & RADIO) 

பர்மா கேமரா(BURMA CAMERA), ஜி பி ஓ டெலிபோன்(GPO TELEPHONE), எக்கோ ஏ டி 36 ரேடியோ(ECHO AD 36 RADIO), ஆகியவை 20 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள். இவற்றை பிளாஸ்டிக்கின் ஆரம்பகட்ட அடையாளங்கள் என்று கூட சொல்லலாம்.

இயற்கை எரிவாயு நிலக்கரி குரூட் ஆயில் (NATURAL GAS, COAL, CRUDE OIL)

பேக்லைட் டைப் 232 டெலிபோன், 1930 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இயற்கையான பொருட்களான செல்லுலோஸ், நிலக்கரி, இயற்கை எரிவாயு, உப்பு, குருடுஆயில், இவற்றை மூலப்பொருளாக வைத்துத்தான் பிளாஸ்டிக்கை உருவாக்கினார்கள் குரூட் ஆயிலை நீர்த்துப் போகும்படி செய்துகூட பிளாஸ்டிக்கினை உருவாக்கியதாகவும் சொல்லுகிறார்கள்.

பிளாஸ்டிக்கின் பழைய பெயர் பார்க்கிசீனி (PARKESINE ALIAS PLASTIC)

லண்டன் நகரில் 1862 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச கண்காட்சியில் தான் உலகம் முதன்முதலாக மெடலியன்ஸ்சீப்புகள், கத்தி கைப்பிடிகள், போன்றவற்றை அறிமுகம் செய்தார் அலெக்சாண்டர் பாக்கெஸ் (ALEXANDER PARKES) என்பவர். அதனை பார்க்கிசீனி என்று அழைத்தார்கள் அப்போது பிளாஸ்டிக் என்ற பெயர் இல்லை.  

மலிவுவிலை உலோகம் (NEED FOR A CHEAP METAL)

தந்தம் மற்றும் கொம்புகளினால் (IVORY & HORN MADE) செய்யும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருந்தது. வெங்காயம் வெட்டும் கத்திக்கும் இரும்படிக்கும் சுத்திக்கும்  தந்தத்தில் கைப்பிடி போட முடியுமா ? அதற்கு சகாயமான விலையில் ஒரு உலோகம் அல்லது அலோகம் கிடைக்குமா என்று பார்த்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

மலிவான ஒரு பொருள் வேண்டும் என்று செய்த ஆராய்ச்சியின் விளைவு தான் பிளாஸ்டிக். ஆனால் ஆரம்ப காலத்தில் இதற்கு வைத்த பெயர் பார்க்கிசீனி இதுதான் பிளாஸ்டிக்கின் முதல் உற்பத்தி பொருள்.

ஜான் வெஸ்லே ஹயாத் உருவாக்கிய செல்லுலாய்ட் (CELLULOID INVENTED BY JOHN WESLEY HYATT)

அதன் பிறகு ஜான் வெஸ்லே ஹயாத் (JOHN WESLEY HYATT) என்பவர் அல்பானி நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு முக்கியமான மாற்றத்தை இதில் செய்தார். அதன் பின்னர்தான் பிளாஸ்டிக் உற்பத்தி வேகம் எடுத்தது. இவர் செய்த மாற்றத்தில் இவர் உருவாக்கிய பொருட்களின் பெயர் செல்லுலாய்ட் என்பது. ஜான் வெஸ்லே ஹயாத் நியூயார்க்கில் அல்பானி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 

பிளாஸ்டிக்கின் ஆரம்பகட்டப் பொருள் இயற்கையான செல்லுலோஸிலிருந்து உருவாக்கப்பட்டது அதன் பின்னர் டாக்டர் லியோ பாக்லேன்ட் என்பவர்தான் மாடர்ன் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார் இதுதான் பிளாஸ்டிக் உற்பத்தியில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியது இவரை பிளாஸ்டிக்கின் தந்தை என்று கூட சொல்லலாம் 

பாலிமர் வந்தது

பாலிமர் என்று நமக்கு அறிமுகம் ஆகி இருக்கும் பொருள் 1970 ஆம் ஆண்டு வாக்கில் ஹெர்மன் ஸ்டாடிங்கர் (HERMAN STAUDINGER) என்பவர் உருவாக்கியது என்று சொல்லுகிறார்கள் பாலிமர் என்பதன் ஒரு சிறிய பிரிவுதான் பிளாஸ்டிக் என்பது நமது திசுக்களில் இருக்கும் டி என் ஏ கூட ஒரு பாலிமர் தான் என்பது ஆச்சரியமான செய்தி

போர் விமானங்களில் பிளாஸ்டிக்

இரண்டாம் உலகப் போரின் தேவைக்கென ஏகப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தார்கள் 1933 ஆம் ஆண்டு வாக்கில் மிகவும் எடை குறைந்த பாலியத்திலீன் என்ற பிளாஸ்டிக் பொருள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது பிரிட்டிஷுக்கு சொந்தமான போர் விமானங்களில் இது பயன்படுத்தப்பட்டது தனால் பிரிட்டிஷ் விமானங்கள் ஜெர்மானிய விமானங்களை விட சக்தி மிகுந்ததாக இருந்தன அதனால் இதனை ரகசியமாக வைத்துக் கொண்டார்கள் அன்று 

போர் முனைகளில் மட்டும் இருந்த பிளாஸ்டிக் பாலிப் புரோப்பைலின் என்ற மறு வடிவத்துடன் தெருமுனைகளுக்கும் வீடு வாசல்களுக்கும்  வந்த கதை  இதுதான்.  

இன்று, சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை, வாரி எடுத்து சேகரித்து அவற்றை உடைத்துத் தூளாக்கி, மீண்டும் பலவிதமான பொருட்களைச் செய்து விற்பனை செய்து பெரும் பொருள் ஈட்ட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா ?

 GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com



 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...