Wednesday, May 31, 2023

DHARMAPURI DISTRICT RIVER THOPPAIYAARU தர்மபுரி மாவட்ட தொப்பையாறு

 

தொப்பையாறு

தொப்பை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு தான் தொப்பையாறு டேம் என்கிறார்கள். இந்த அணைக்கட்டு சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி என்ற இடத்தில் உள்ளது. 

தொப்பையாறு அணைக்கட்டு (THOPPAIYAARU DAM)

தொப்பையாறு அணைக்கட்டு தொப்பூரை அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த அணையின் கொள்ள்ளவு 298.34 மி... மண் அணையின் நீளம் 435 மீட்டர், 

பாசன வசதி தருகின்றது (PROVIDES IRRIGATION)

செக்காரப்பட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தேத்திகிரிபட்டி, மல்லிகுந்தம், ஆகிய கிராமங்கள் இந்த தொப்பையாறு அணை கட்டினால் பாசன வசதி பெறுகின்றன. மொத்தப் பாசனம் அளிக்கும் பரப்பு 5330 எக்டர்.

தண்ணீர் வரத்து (SUPPLY STREAMS)

தர்மபுரி மாவட்டத்தின் பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை ஆறுகள் மூலம் தொப்பையாற்றிற்கு தண்ணீர் வரத்து வருகிறது. தொப்பை ஆற்றின் நீர்வழி பரப்பு 269.9 சதுர கிலோமீட்டர்.

தொப்பூர் கணவாய் (THOPPUR GHAT)

தொப்பூர் கணவாய் என்பது ஒரு மலைக் கிராமம் இது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது இது. சேலம் மற்றும் தர்மபுரி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது இந்தக் கணவாய். இது சேலத்தில் இருந்து வடக்குப் புறம் 35 கிலோமீட்டர் தொலைவிலும் தர்மபுரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

தொப்பூர் தர்கா (THOPPUR DARGA)

இஸ்லாமிய மக்களுக்கு தொப்பூர்தர்கா என்பது மிகவும் முக்கியமானது அஸ்ரத் சையத் ஷா வலியுல்லாஅவர்களின் புனிதத்ம் இது. தேசிய நெடுஞ்சாலை 44 அமைந்துள்ளது. தொப்பூர்ல் உள்ள இந்த நெடுஞ்சாலைப் பகுதி விபத்துக்களுக்கு பேர் போனது. 

சேலம் மற்றும் தர்மபுரியை இணைக்கும் இந்த தொப்பூர் கணவாய் என் நீளம் 3 1/2 கிலோ மீட்டர் மட்டுமே இந்த கணவாய் மலைகள் மற்றும் காடுகளும் அடர்ந்த பகுதி.

இரவு நேரங்களில் பேய்கள் இங்கு நடமாடுவதாகவும் அதனால் தான் இந்த பகுதியில் விபத்துக்கள் அதிகம் நடப்பதாகவும் சொல்லுகிறார்கள் லாரி ஓட்டுனர்களை கேட்டால் இது மரணச்சாலை என்று சொல்லுகிறார்கள்.

மரணச்சாலை (ROAD OF DEATH)

மரணச்சாலை என்று வருணிக்கப்படும் இந்த தொப்பூர் சாலை மூலமாக இதுவரை நான் 20 அல்லது 30 தடவை வந்து பயணம் செய்து உள்ளேன். இதுவரை ஒரு பேயும் என் கண்ணில் சிக்கவில்லை. ஆயுசு எனக்கு கெட்டி என்று நிணைக்கிறேன்.

பேய்பிசாசு, பார்த்து இருக்கிறீர்களா ? (GHOST ROAD)

நீங்கள் இதில் பயணம் செய்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த கணவாய்ப் பகுதியில் ஏதாவது பேய்பிசாசு, காத்து கருப்பு பார்த்து இருக்கிறீர்களா

 Note: Please Make  a Comment, just  below this  Space given below as "POST A COMMENT " 

Gnsnasuria Bahavan D

gsbahavan@gmail.c

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...