Friday, May 12, 2023

COIMBATORE AND THIRUPPUR DISTRICT RIVER NOYYAL கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆறு நொய்யல்

 

 நொய்யல் ஆறு படம்


நொய்யல் ஆறு பேரூர் குனியமுத்தூர் வெள்ளலூர் இருகூர் சூலூர் மங்கலம் திருப்பூர் ஒரத்துப்பாளையம் என
180 கிலோமீட்டர் பயணம் செய்து கரூர் அருகில் முயல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது இதன் சங்க கால பெயர் காஞ்சியாறு.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (WESTERN GHATS)

அமைந்திருக்கும் இடம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் தமிழ்நாடு மகத்துவாரம் காவிரி ஆறு ஆற்றின் நீளம் 180 கிலோமீட்டர் வடிநில பரப்பு 3500 சதுர கிலோமீட்டர்.

கோவை குற்றாலம் அருவி (KOVAI KURTALLAM FALLS)

பெரியார் ஆறு கோயம்புத்தூருக்கு மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து ஓடிவரும் சிறு ஆறு தான் பெரியார் ஆறு இது சிறுவாணி மலைப் பகுதியில் அடிப்பகுதியில் ஓடும் இந்த ஆற்றில் தான் கோவை குற்றாலம் அருவி உள்ளது

மந்திமரக்கன்று ஓடை (TRIBUTARIES)

வெள்ளியங்கிரியிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் உற்பத்தியாகும் ஐந்து ஓடைகள் ஒன்று சேர்ந்து ஓடுவது மந்தி மரக்கண்டி ஓடை. இந்த ஓடை செம்மேடு அருகே பெரியாற்றுடன் சேருகிறது.

சின்னாறு இந்த பகுதியில் உள்ள காட்டுலைடை கொடுவாய்ப்புடி ஓடை பெரியாற்றுஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என்ற துணை ஆறாக உருவாகிறது. 

தொம்பிலிப்பாளையம் பெரியாறு, சின்னாறு (STREAMS)

தொம்பிலிப்பாளையத்தில் உருவாகும் பெரியாறு, சின்னாறு அத்துடன் ஏகப்பட்ட ஓடைகள் ஒன்று சேர்ந்து உருவாகும் ஆறுதான் நொய்யல் ஆறு என்பது. 

ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் (CHECKDAMS)

நொய்யல் ஆற்றின் நீளம் 180 கிலோமீட்டர் இதன் அகலம் சராசரியாக 30 அடி இதன் ஆற்றின் குறுக்கே 32 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 

தண்ணீர் பஞ்சம் வாய்ப்பு (DOMESTIC WATER ISSUES)

கோயம்புத்தூரில் தண்ணீர் பஞ்சம் வராது நொய்யல் ஆற்றில் ஏறத்தாழ பத்து மாதங்கள் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது மழைக்காலத்தில் பெரும் மழையுடன் சேர்த்து பயன்படுத்தினால் கோயம்புத்தூரில் தண்ணீர் பஞ்சம் அல்லது பிரச்சினை வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

தண்ணீரை குளங்களில் நிரப்பும் முறை (RAIN WATER HARVESTING)

ஆறுகளில் வரும் தண்ணீரை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் காலம் தொட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. 

மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வசிக்க அவர்களுடைய நாகரீகம் வளர காரணமாக இருப்பவை ஆறுகள்.இது உலகம் முழுக்க உள்ள அனைத்து நாடுகளுக்கும் அனைத்து ஆறுகளுக்கும் பொருந்தும். 

நொய்யல் அல்லது கோயம்புத்தூர் நாகரிகம் (NOYYAL CIVILIZATION)

நொய்யல் நாகரிகம் அந்த வகையில் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக இதன் வளர்ச்சிக்கு அடி நாதமாக இருந்து வருவது நொய்யல் ஆறு தான் கோயம்புத்தூர் மக்களின் நாகரீகம் என்பதை நொய்யல் நாகரிகம் என்று சொல்லலாம். 

கொடுமணல் பழமை வாய்ந்த ஊர் (KODUMANAL A HISTORICAL VILLAGE)

கொடுமணல் பழமை வாய்ந்த ஊர் நொய்யல் ஆறு தெரியாதவர்கள் கூட கொடுமணலை தெரிந்து வைத்திருப்பார்கள்.கொடுமணல் கிராமம் கூட நொய்யல் ஆற்றினை தொட்டபடி இருக்கும் ஊர் தான் கொடுமணல் நொய்யல் ஆற்றின் கரையில் தான் அமைந்துள்ளது.

கொடுமணலில் வணிகவழி தொடர்பு (EXPORT THROUGH NOYYAL)

கேரள மாநிலத்தின் முசிறி துறைமுகத்திற்கும் கொடுமணலுக்கும் வணிகவழி தொடர்பு இருந்தது.  கொடுமணலில் உற்பத்தி செய்த உருக்கு, எஃகு, மற்றும் பலவகை பாசி மணிகள் முசிறிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

சோழர்கள் காலத்தில் சிவன் கோயில்கள் (CHOLA PERIOD SHIVA TEMPLES)

சோழர்களுடைய ஆட்சிக்காலத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் இருந்த 36 சிவாலயங்கள் பெருமைப்படுத்தப்பட்டன.இந்த ஆலயங்கள் அனைத்திற்கும் புனித தீர்த்தமாக விளங்கியது நொய்யல் ஆற்று தண்ணீர்தான். 

சோழர்கள் கட்டிய அணைக்கட்டுகள் (DAMS ACROSS RIVERS)

சோழர்கள் கட்டிய அணைக்கட்டுகள் சோழர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் கட்டிய அணைகளும் வெட்டிய குளங்களும் கணக்கில் அடங்காது என்கிறார்கள் நொய்யல் ஆற்றில் 32 அணை கட்டுகளையும் 40க்கும் மேற்பட்ட குளங்களையும் வெட்டியதாக சொல்லுகிறார்கள் மீண்டும் வருமா சோழர்கள் ஆட்சி ? 

சோழர்களின் நீர் மேலாண்மை (CHOLA KINGS POPULARISED WATER MANAGEMENT)

சோழர்களும் நீர் மேலாண்மையும் சோழர்கள் அரசாண்ட காலத்தில் மக்கள் அனைவரும் நீர் மேலாண்மை என்பதை விரல் நுனியில் வைத்திருந்தார்கள் மழைக்காலத்தில் பெய்யும் நீர் அணைக்கட்டுகளில் இசைக்கு புலன்களின் நிரப்பி வைத்தார்கள்.

ஏரிகளை சங்கிலிபோல இணைத்தார்கள். (CHAIN OF LAKES)

இதன் மூலம் குடிநீர் பாசன நீர் ஆகிவை தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.நிலத்தடி நீரையும் சீராக வைத்திருந்தார்கள் அணைக்கட்டுகளோடு குளங்கள் மற்றும் ஏரிகளை சங்கிலி தொடர்பான இணைத்து வைத்திருந்தார்கள்.

சோழர்கள் கட்டமைத்து வைத்திருந்த இந்த நீர் மேலாண்மை திட்டத்தை மறு சீரமைத்து பராமரித்தனர் ஆனால் சுதந்திரத்திற்கு பின்னால் அதை படிப்படியாக சீரழித்து வருகிறோம் என்பதை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

உங்களுக்கு வருத்தமாக இல்லையா? 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...