கருவாகை கூந்தல் மரம் |
(கருவாகை - BLACK SIRIS)
‘உங்கள் அழகான கூந்தலுக்கு அம்சமான
உத்தரவாதம் கருவாகை’ இப்படி ஒரு விளம்பரம் உங்கள் தொலைக்காட்சி
பெட்டியில் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
உசிலம்பட்டி பெண்குட்டி
சமீப காலமாக இந்த மரத்தை, அரப்பு மரம் என்றும் ‘ஷேம்பு மரம்’ என்றும் கூட
அழைக்கிறார்கள். சங்ககாலத்தில் இதன் பெயர் சிலைமரம். இதுதான் உசிலை மரம் என்பதும்
தெரிகிறது: உசிலம்பட்டிக்கு பெயர்க் காரணமாக இருந்ததும் இந்த சிலை மரம்தான். ‘உசிலம்பட்டி
பெண்குட்டி’ பாடலுக்கு கவிஞர் வைரமுத்துவுக்கு காலெடுத்துக்
கொடுத்ததும் இந்த மரம்தான் என இப்போது புரிகிறது: சிலையும் உசிலையும் ஒன்றுதான்:
கருவாகையும் ஒன்றுதான்.
மதுரைப் பகுதியில் பச்சைப்பொடி என்று கடைகளில் விற்பனை ஆவது, சிலைமர இலைப்பொடி
தான்.
பெயர்கள் :(DIFFERENT NAMES)
தாவரவியல் பெயர்:
அல்பீசியா ஒடரோடிசிமா (ALBIZIA ODOROTISSIMA)
தாவரக் குடும்பம் பெயர்: மைமோசியே (MIMOSACEAE)
தாயகம்: இந்தியா, சைனா, பங்ளாதேஷ், லாவோஸ், மியான்மர், நேப்பாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மற்றும் வியட்நாம்.
பொதுப் பெயர்கள்:
பிளாக் சீரிஸ், சிலோன் ரோஸ் வுட், பிராக் ரண்ட் அல்பீசியா, டீ ஷேட் ட்ரீ (BLACK
SIRIS, CEYLON ROSE WOOD, FRAGRANT ALBIZIA, TEA SHADE TREE)
பல மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)
தமிழ்: சிலை, கருவாகை (SILAI,
KARUVAGAI)
இந்தி: காலா சிரிஸ் (KALA
SIRIS)
அசாமிஸ்: கொராய் (KORAI)
பெங்காலி: காக்குர்
சிரிஸ் (KAKUR
SIRIS)
குஐராத்தி: கலோ
ஷிரிஷ் (KALO
SHRISH)
கன்னடா: காடு பாக்கி (KAADU
BAAGE)
காசி: டயங் கிரெய்ட் (DIENG
KRAIT)
கொங்கணி: காலி சிரஸ் (KALI
SIRAS)
மலையாளம்: கருவாகா, குன்னி வாகா, நெல்லி வாகா, புலிவாகா (KARUVAKA,
KUNNI VAKA, NELLI VAKA, PULI VAKA)
மணிப்புரி: உயில் (UIL)
மராத்தி: சின் சாவா (CHIN
CHAVA)
மிசோ: காங் தேக் (KANGTEKPA)
நேப்பாளி: கலோ சிரிஷ்
(KALO
SIRISH)
ஓரியா: டீனியா (TINIYA)
சமஸ்கிருதம்: சிரிஷா(SIRISHA)
தெலுங்கு: சிண்டுகா(CINDUGA)
சிலைமரத்துக்கு தமிழில் 54 பெயர்கள் உள்ளது ஆச்சரியம் தரும் செய்தி. அவற்றில்
முக்கிய பெயர்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம். அவை கருவாகை, சிற்றிலைவாகை, காசிமகாமரம், கல்துரிஞ்சி, துரிஞ்சி, கொண்டவாகை, வெள்வாகை மற்றும்
வன்னிவாகைமரம்.
ஐங்குறுநூறு பாடிய மரம்
இந்த மரம் சங்க இலக்கியத் காலத்தில் பிரபலமானது இந்த மரம்.; இன்று எனது தோட்டத்து
வேலியில் தானாய் முளைத்த மரம். அந்த மரத்தின்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே
வந்தது. இந்த கட்டுரையை எழுதி முடித்த பின்னால் அந்த மரங்களைப் போய்
பார்த்தபோது எனக்கு கண்ணீரே வந்தது.
வில் அம்பு செய்ய ஏற்ற மரம் (BOW & ARROW
TREE)
அதனால்தான் அந்த காலத்தில் நமது தமிழ் மக்கள் இதனை 54 வேறுவேறு பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். இன்று உறுதியான மரம் என்று தாவரவியல் இன்று சொல்லுகிறது. இதே கருத்தினை என் பாட்டன்மார்கள் 2000 வருஷத்துக்கு முன்னாடி உறுதிபடுத்தி இருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்கள் ‘வில் அம்பு’ செய்ய உறுதியான மரம் என்று சொல்லுகின்றன. வில்அம்பு செய்து போரிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள்
“சிலை விற் பகழிச்
செந் துவர் ஆடைக்
கொலைவில் எயினர் தங்கை!.....’) – ஒதலாந்தையார்
(ஐங்குறுநூறு – 363 வது பாடல்)
‘சிலை’ என்பது கருவாகை
மரத்தைக் குறிக்கும். பகழி என்றால் அம்பு. ‘துவராடை’ என்றால் செந்நிற ஆடை.
எயினர் என்றால் பாலை நிலத்தில் வசிப்பவர் என்று பொருள்.
“சிலை மரத்தால் செய்த வில்லையும்
அம்புகளையும், சிவந்த ஆடையை அணிந்து, கொலை புரிதலை தொழிலாகக் கொண்டவனின் தங்கையே..” என்று ஒரு பெண்ணை
அழைக்கிறது இந்தப் பாடல்.
ஆப்ரிக்கா அமெரிக்காவிலும் பிரபலம்
இந்தியாவை தாயமாகக் கொண்டது கருவாகை. ஆப்ரிக்காவின்
வெப்பமண்டலப் பகுதிகளில் எல்லாம் பரவியுள்ளது, கருவாகை;. இவை, பரவியிருக்கும் இதர நாடுகள் கென்யா, தான்சானியா, மலாவி, ஜிpம்பாவே, மொசாம்பிக், ஜோகன்ஸ்பர்க், மற்றும் தென்
ஆப்ரிக்கா, பங்ளாதேஷ், பூடான், நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், மற்றும் ஸ்ரீலங்கா.
பரவலான மண்வகைகளில் நன்கு வளரும்.
அமெரிக்காவில், மத்திய அமெரிக்கா மற்றும் புளோரிடா’ வில் அதிக அளவில்
பரவியுள்ளது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இது பரவலான
மண்வகைகளில் வளரும் என்பது. ஆனால் அதிக ஈரப்பசை உள்ள மண்கண்டம், வடிகால் வசதி உள்ள
மண், இருமண்பாடான மண், மற்றும் கடல்
மட்டத்திலிருந்து 1800 மீட்டர் வரை உள்ளப் பகுதிகளில் நன்கு வளரும்.
இலை உதிர்த்தபடி 15 முதல் 25 மீட்டர் வரை உயரமாக வளரும். முக்கியமாக இந்த மரம் மிகவும் வேகமாக வளரும்.
ஒர் ஆண்டில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இன்னொரு முக்கியமான அம்சம், இந்த மரம், அதிகமான தழைச்சத்தை, நிலைப்படுத்தும் (NITROGEN
FIXATION) சக்தி உடையது. காற்றில் வாயு வடிவில் இருக்கும் தழைச்சத்தை கிரகித்து
மண்ணில் நிலைப்படுத்தும்.
சிலோன் ரோஸ்வுட்
இந்த மரத்தின் கட்டைகள் (TIMBERS), அடர்த்தியான காவி
நிறத்தில் வலிமையாக இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும். இழைக்க இழைக்க பளபளப்பும்
மெருகும் கூடும். அனைத்து வகையான மரச்சாமான்களும், விவசாயக் கருவிகளும்
செய்யலாம். இதற்கு சிலோன் ரோஸ்வுட் என்ற பெருமையான பெயரும் உண்டு.
பங்ளாதேஷ்; நாட்டில் பெரும்பாலான தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில் இருக்கும்
நிழல் மரங்கள், சிலை மரம்தான். இதன் இலைதழைகள் ஆடுமாடுகளுக்கு அருமையான தீவனம் ஆகிறது.
இதன் பூக்கள் வெண்மையாக அல்லது வெளிர் மஞ்சளாக இருக்கும். பெரிய
நுனிக்கிளை பூங்கொத்துக்களாக (வுநுசுஆஐNயுடு ஊடுருளுவுநுசுளு) பூக்கும். பூக்கள்
வாசனை உடையவை.
மரங்கள் என்றால் பெரும்பாலும் அவை கட்டைக்கானவை (TIMBER) என்று எல்லோரும்
நினைப்பார்கள். நானும் அப்படி நினைத்திருத்த ஒரு காலம் உண்டு. மரங்கள் என்பவை
அப்படி அல்ல. பொதுவாக எல்லா மரங்களுமே பல பயன் தரும் மரங்களே. சில மரங்களில் சில
பயன்கள் தூக்கலாக இருக்கும்: மற்றபடி எல்லா மரங்களுமே சகலகலாவல்லமை உள்ளவை தான்.
நமது சிலைமரமும் அப்படித்தான்.
பெரியமனுஷி ஆகாத சோகம் (ATTAINING
PUBERTY)
80 வயதை தாண்டிய வயதில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் இந்த வயதில்
கூட ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர். அவரை நான்
சந்திக்கும்போதெல்லாம் ஒரு வித்தியாசமான சம்பவத்தை பற்றி என்னிடம் சொல்வார்.
குறைந்தது அரைமணி நேரமாவது விஸ்தாரமாக என்னிடம் பேசுவார்.
சமீபத்தில் அவர் என்னிடம் அதிசயமான
ஒரு செய்தியைச் சொன்னார். ‘நேத்திக்கி
முக்கியமான ஒரு சாவுக்கு போயிட்டு வந்தேன். செத்துப் போன அந்த அம்மாவுக்கும்
எனக்கும் ஒரே வயசு. எண்பத்தியாறு. நானும்; அந்தம்மாவும்
பள்ளிகூடத்துல ஒண்ணா படிச்சோம். அந்தம்மாவைத்தான் எனக்கு கட்றதா இருந்தாங்க. எனக்கு அவங்க எனக்கு
தூரத்து சொந்தமும் கூட. ஆனா அந்த கல்யாணம் நடக்கவே இல்ல’ காரணம் என்னென்னு
கேட்பதற்கு முன்னால் அவராகவே சொன்னார். ‘அந்த அம்மா இந்த வயசு
வரைக்கும் கூட பெரிய மனுஷியா ஆகலை’ என்றார். எனக்கு
ஆச்சரியமாக இருந்தது.
எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் சொன்னேன். அவர் எனக்கு அதுபற்றி
விளக்கமாகச் சொன்னார்.
பூப்படையாத பெண்கள் (KALMANN SYNDROME)
‘பூப்படையும் வயது வந்தும் பூப்படையாத
பெண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இப்படி 80 வயது வரை ஒரு பெண்
பூப்படையாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பெண் சாதாரணமாக 16 வயது வரை
பூப்படையவில்லை என்றால் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதனை
கல்மேன் சின்ட்ரோம் என்று சொல்லுகிறார்கள்.’
பெண்களின் பூப்படையும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த கருவாகையில்
இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். முக்கியமான அதற்;கான சக்தியையும்
தரும் வாகைமரம். இந்த மருத்துவ
பண்பினை எம்மன்கோக் (EMMEN
GOGUE)
என்று சொல்கிறார்கள்.
ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் இதனைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த
மரம் ஒரு மூலிகை மருந்தாக பயன்படுகிறது என்பது பலருக்கு தெரியாது.
இதனை குடல்புண்,; இருமல், மூச்சுக்குழல் அழற்சி, சர்க்கரை நோய், நெஞ்சு எரிச்சல்
போன்றவற்றை குணப்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல் கைகால் வீக்கம், வலி, வாதம், வலிப்பு ஜன்னி, ஜுரம், ஓமத் தீயினால்
ஏற்படும் நச்சுத்தன்மை, உதடு மற்றும் நாக்கு கருமையாதல் போன்றவற்றையும் குணப்படுத்த கருவாகையை
மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
பலவீனமான உடல் வாகு உடையோருக்கும் உடல் தேற்றியாகவும் இந்த வேர் கஷாயம்
பயன்படுகிறது. அதுமட்டுமல்ல கல்லீரல் மண்ணீரல் மூளை ஆகியவற்றில் ஏற்படும்
பிரச்சனைகளை மற்றும் நோய்களை சரி செய்யும் சக்தி இதற்கு உள்ளது. சிலருக்கு
சிறுநீர் பையின் அடிப்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். சிறுநீர் அவசரமாக கழிக்க
வேண்டும் என்ற உணர்வு தோன்றும். ஆனால் கழிக்க முடியாது. இதனை மருத்துவ ரீதியாக
ஸ்ட்ராங்குரி (STRONGURY) என்று
சொல்லுகிறார்கள் இதனைக் கூட சரி செய்யும் சக்தி இந்தக் கருவாகை மரத்திற்கு உண்டு.
ஆண்மைப்பெருக்கி (APHRODISIAC)
கருவாகை வேர்களில் இருந்து எடுக்கும் சாறு ஆண்மைப் பெருக்கியாகவும்
பயன்படும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கருவாகை குச்சிகளைத்; துண்டித்து பல்குச்சிகளைப்;போல மெல்லுவதன் மூலம்; அதன் சாறு பற்கள்
மற்றும் ஈறுகளில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் சரியாகும். கை கால்கள் மற்றும்
மூட்டுகளில் ஏற்படும் வலிகளைக்கூட குணமாக்கும் சக்தி இதன் சாற்றுக்கு உள்ளது.
தொழுநோய் - சக்கரைநோய்
சிலைமரம்
குறைந்தபட்சம் ஒரு அரைடஐன் நோய்களையாவது குணப்படுத்தும். உதாரணம், தொழு நோய், குடற்புண், சரும நோய்கள், இருமல், மூச்சுக் குழாய்
அழற்சி,
சக்கரை நோய், மற்றும் உடல்
எரிச்சல் (LEPROSY, COUGH, BRONCHITIS, DIABETES, BURNING
SENSATION)
ஷாம்பு வரும் முன்னே ! வழுக்கை வரும் பின்னே !
கிராமங்களில் ஷாம்பு வருவதற்கு முன் ‘கருவாகை’ தான் ஷாம்பு. இதன்
இலைகளைப் பொடியாக்கி டப்பாக்களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். இதனை தலைக்கு
போட்டுப் பாருங்கள். விளம்பரத் தலை முடியை தோற்கடித்து விடும். அரப்புக்கும்
ஷாம்புவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். தலைக்கு தொடர்ந்து அரப்பு போட்டால் வழுக்கை
வராது. தொடர்ந்து ஷாம்பு போட்டல் வழுக்கை வராமல்
விடாது.
ஷாம்பு வரும் முன்னே வழுக்கை வரும் பின்னே !
விதைகள் பிரச்சினை இல்லாமல் முளைக்கும்.
சிலைமரத்தின் முற்றிய நெற்றுக்கள் செங்காவி நிறமானவை: நெற்றுக்களைப் போல விதைகளும் செங்காவி நிறமாகவே இருக்கும். விதைகள் பிரச்சினை இல்லாமல் முளைக்கும். இதன் விதையுறை கொஞ்சம் கடினமானவை. அதை நேரிடையாக விதைத்தால் அதன் முளைப்புத் திறன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. விதைகளை 24 மணிநேரம் நீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்.
என்ன செய்யலாம் ?
இந்த மரங்களையெல்லாம் நமது இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு
அறிமுகப்படுத்தும் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, தொண்டு
நிறுவனங்களுக்கும், உள்ளது. இந்த மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமும் இருக்கும் மரங்களை
பயன்படுத்துவதன் மூலமும் கிராமங்களில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம், சரிதானே
?
GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment