GANGES INDIA
|
(கங்கைஆறு, மிசிசிப்பிஆறு, தேம்ஸ், அமேசான், யாங்க்ட்சி, நைல், டன்யூப்,மீக்காங்,ஒல்கா, சாம்பெசி, ரைன்,சீனி, ஒரினோகோ, மிசவுரி, ஹட்சன்)
இப்போது
தமிழ்நாட்டின் ஆறுகளைப்பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது தகவல் யுகம். இன்று
உலகமே ஒரு குடைக்கீழ் சுருங்கிவிட்டது. உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கின்றன. இவற்றில்
11 நாடுகளில் உள்ள 15 அழகிய பிரபலமான ஆறுகளை இந்தப் பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன்.
இந்தியா என்றால் கங்கை, அமெரிக்கா என்றால் மிசிசிப்பி, ஐரோப்பா என்றால் தேம்ஸ், ஆஃப்ரிக்கா
என்றல் நைல், தென் அமெரிக்கா என்றால் அமேசான் இப்படி பிரபலமான ஆறுகள்பற்றி எல்லாம்
நாம் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
1. இந்தியாவின் கங்கை ஆறு (GANGES)
இமையமலையில்
கங்கோத்ரி பனிமலையில் உருவாகி இந்தியா வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளில்
2704 கி,மீ. ஓடி வங்காள விரிகுடாவில்
சங்கமமாகும் ஆறு.
இந்தியாவைப்
பொருத்த வரை கங்கை என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்த ஆறு. இதில் 90 வகை நீர்வாழ் உயிரினங்கள்
(AMPHIBIANS) உள்ளன. 140
வகை மீன் இனங்கள் உள்ளன. கங்கை ஆற்றின்
டால்பின்களும், கங்கை ஆற்றின் சுறா மீன்களும்
மிகவும் வித்தியாசமானவை என்று சொல்லுகிறார்கள்.
கங்கை
என்றால் மூன்று முக்கியமான அம்சங்களைச் சொல்லுகிறார்கள், ஒன்று கங்கை ஒரு புனிதமான ஆறு. இரண்டாவது, இந்துக்களின் மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆறு. மூன்றாவது உலகிலேயே மிகவும் மாசடைந்த ஆறு என்பது. இந்த
மூன்றுக்கும் பிரசித்தி பெற்ற ஆறு
2. அமெரிக்காவின் மிசிசிப்பிஆறு (AMERICAN RIVER MISSISIPPI)
மிசிசிப்பி
ஆறு அமெரிக்காவில் 10 மாநிலங்களில் 3776 கி.மீ. ஓடுகிறது. மினிசோட்டா என்னும் ஏரியிலிருந்து புறப்படும் இந்த ஆறு மெக்சிகோ வளைகுடாவில்
நுழைந்து மினிசோட்டவில் உள்ள இட்டாஸ்கா என்ற ஏரியில் நுழைந்து மிசவுரி ஆற்றுடன் சேர்கிறது.
வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு இது. உலக அளவில் இது நான்காவது
மிக நீண்ட ஆறு இது. மீன்பிடித்தல், விவசாயம்,
வியாபாரம் ஆகியவற்றில் வட அமெரிக்காவின் பழங்குடி மக்களுக்கு மிசிசிப்பி உதவியாக
உள்ளது. ஆனால் தற்போது பல மாவட்டங்களுக்கு நீர்மின்சக்தி வழங்க உதவியாக உள்ளது.
3. லண்டன் தேம்ஸ் ஆறு (LONDON
RIVER THAMES)
இங்கிலாந்து
நாட்டில்
346 கி.மீ. ஒடும் மிக நீளமான ஆறு. 1858 ம் ஆண்டு வாக்கில் வெறும் சாக்கடையாக ஓடிகொண்டிருந்த ஆறு இன்று இது.
உலகின் மிகவும் சுத்தமான ஆறு. அதுமட்டுமல்ல லண்டன்வாசிகளுக்கு
மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆறாக உள்ளது. 17 ம் ஆண்டு வரை தேம்ஸ் லண்டன் மாநகரின் முக்கிய நீர்வழி போக்குவரத்தாக இருந்தது
என்கிறார்கள். மிகவும் பிரபலமான லண்டன் பிரிட்ஜ் இதன் மீதுதான்
கட்டப்பட்டுள்ளது.
4. தென் அமெரிக்காவின் அமேசான்ஆறு (AMAZON)
தென் அமெரிக்காவில் பெரு என்னும் நாட்டி
ல் உற்பத்தி ஆகி எட்டு நாடுகளில்
.பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஃபிரென்ச்
கயானா, கயானா,
ஈக்வேடர், பெரு, சூரினாம்,
, வெனிசுலா ஆகிய ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் ஓடுகிறது அமேசான் ஆறு.
6500
கி.மீ. ஓடும் உலகின் இரண்டாவது
பெரிய நீளமான ஆறு.
மற்றும் உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காட்டின் வழியாக பயணம் செய்யும்
ஆறு என்னும் சிறப்புக்கு உரியது. இந்த மழைக்காடு உலகின்
10 சதவிகித தாவரங்களையும் 30 சதவிகித பிராணிகளையும்
உள்ளடக்கியது.
அமேசான்
ஆறு
2000 வகையான மீன்களையும் 400 வகையான நீர்வாழ் உயிரினங்களையும்
கொண்டது. இது
1100 துணை ஆறுகளை கொண்டது என்பது ஆச்சரியமான செய்தி. அதுமட்டுமல்ல உலகின் மிக அழகான நதியும்கூட. இன்னொரு ஆச்சர்யமான
செய்தி இந்த ஆற்றின் குறுக்கே எவ்விதமான பாலமும் இல்லை என்று சொல்லுகிறார்கள்.
5. சீனாவின் யாங்க்ட்சி ஆறு (CHINESE RIVER YANGTZE)
உலகில் 6300 கி.மீ. ஓடும் மூன்றாவது மிக நீளமான சீன ஆறு. சீனாவில் 9 மாநிலங்களில் ஓடும் ஆறு. அதுமட்டுமல்ல யாங்க்ட்சி டாங்குலாவின் மலைப் பகுதிகள் முதல் ஷாங்காயின் தென் சீனக்கடல் வரை ஓடும் ஆசியாவின் மிக நீளமான ஆறு. இந்த ஆற்றின் மூலம் கொண்டுவரும் வண்டல் மண்ணின் மிகுதியால் உலகிலேயே அதிக நெல் உற்பத்தி செய்யும் இடமாக விளங்குகிறது ஜியாங்சு என்ற மாநிலம். யாங்க்ட்சி ஆறும் உலகின் மிக அழகான ஆறுகளில் ஒன்று.
6. ஆஃப்ரிக்காவின் நைல்நதி (RIVER NILE)
உலகின்
6650
கி.மீ. ஓடும் மிக நீளமான
ஆறு எனும் சிறப்புடையது. நைல்நதி ஒன்பது ஆஃப்ரிக்க ஆப்ரிக்க நாடுகளின் வழியாக ஓடுகிறது. பாலைவனத்தின் ஊடாக அமைந்துள்ள எகிஃப்து
நாட்டின் வளத்திற்கும் நலத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ள ஆறு,
அதன் புராதன கலாச்சரத்துடன் தொடர்புடைய ஆறு.
விக்டோரியா
ஏரியில் உற்பத்தி ஆகி 6650 கி.மீ.
ஓடி சகாரா பாலைவனம் வழியாக ஓடி மத்தியதரைக்கடலில்
சங்கமமாகிறது. நைல் நதியில் வெள்ளம் வரும் மத்திய ஜூலையை அவர்கள்
தங்கள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளுகிறார்கள். நைல் நதியின் முதலைகளை அவர்கள் தெய்வமாக்கி
கொண்டாடுகிறார்கள்.
வெள்ளை நைல், நீல நைல் ஆகிய இரண்டும் நைல் ஆற்றின் முக்கிய துணை ஆறுகள். நீல நைல் கொடைப்பருவத்தில் 60 சதவிகித நீரைத் தருகிறது. வெளை நைல் ஆண்டு முழுவதும் தண்ணீர் தரக்கூடியது. மஞ்சள் நைல் என்ற நதி துணைநதியாக இருந்தது, தற்போது அந்த நதி வறண்டுபோய்விட்டது. நைல் நதியை எகிப்து நாட்டின் கொடை என்று போற்றுகிறார்கள், எகிப்து பருத்தி உலக அளவில் பிரபலமானது. சரித்திரத்துடன் முக்கிய தொடர்புடைய ஆறு. 95 சதவிகித எகிப்து நாட்டின் மக்கள் தொகை நைல் நதிக்கரையில் வசிக்கிறார்கள்.
7. ஐரோப்பாவின்
டன்யூப்ஆறு (EUROPE RIVER DANUBE)
கிழக்கு
மற்றும் மத்திய ஐரோப்பா உட்பட ஒன்பது நாடுகளின் ஊடாக ஓடும் ஆறு இது. பிளாக் ஃபாரெஸ்ட் என்ற இடத்தில் உள்ள மலைகளில் உருவாகும் இந்த ஆறு 2850
கி.மீ. ஓடி கருங்கடலில் கலக்கிறது.
அது மட்டுமல்ல இது ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு. டன்யூப் நதி 20 மில்லியன் மக்களுக்கு குடிநீர் தருகிறது.
இது மிக முக்கியமான சுற்றுலா ஆறாக விளங்குகிறது. பிரேக் நாட்டில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமும் கூட.
8. திபெத்துக்கு சொந்தமான மீக்காங் ஆறு (TTIBET RIVER MEKONG)
திபெத்துப்
பீடபூமியிலிருந்து உற்பத்தி ஆகி 4909 கி.மீ. ஓடும் ஆறு. ஆசியாவின் மிக அழகிய
ஆறுகளில் ஒன்று. திபெத்திலிருந்து தென் சீனக் கடல் வரை ஓடும்
ஆறு. சைனா, பர்மா, வியட்னாம், லாவோஸ், தாய்லாந்து,
மீக்காங் ஆற்றில் 800 மீன் இனங்களும்,
430 வகையான பாலூட்டிகளும் பெருகி உள்ளன. விவசாயம்,
உணவு உற்பத்தி, வியாபாரம், போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகியவற்றிற்கு உதவியாக உள்ளது.
9. ரஷ்யாவின் ஒல்கா ஆறு (RUSSIAN
RIVER VOLGA)
ஐரோப்பவின்
மிக நீண்ட ரஷ்ய ஆறு. 3531 கி.மீ. தூரம் ஓடும் ஆறு.
வால்டை எனும் மலைகளில் உருவாகும் இந்த ஆறு காஸ்பியன் கடலில் சங்கமமாகிறது.
குளிர்ப் பருவங்களில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்த ஆற்றின் தண்ணீர்
உறைந்து பனிக்கட்டி ஆகிவிடும். மீதமுள்ள ஒன்பது மாதங்களில் இந்த
ஆறு ரஷ்யாவின் மிக்ச்சிறந்த போக்குவரத்துத் தடமாக உள்ளது. மேலும்
சிறந்த நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் ஆறாகவும் விளங்குகிறது.
10. ஆஃப்ரிக்காவின் சாம்பெசி ஆறு
(AFRICAN RIVER ZAMBEZI)
உலகப்
பிரசித்தி பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி சாம்பெசி ஆற்றில்தான் உள்ளது. சாம்பெசி
மிகவும் சுத்தமான தண்ணீரை உடைய ஆறு. இந்தியப் பெருங்கடலில் சங்கமம்
ஆகும் இந்த ஆறு 2574 கி.மீ., ஆஃப்ரிக்க நாடுகளில் ஓடும் ஆறு. நபிபியா, போட்ஸ்வானா, சாம்பியா, அங்கோலா,
சிம்பாவே, மொசாம்பிக் ஆகியவை ஆறும் சாம்பெசி ஆற்றினால்
பயன்பெறும் ஆஃப்ரிக்க நாடுகள்
11. சுவிஸ் நாட்டின் ரைன் ஆறு (SWISS RIVER RHYNE)
சுவிஸ்
நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் புறப்படும் ஆறு. 1233 கி.மீ. ஐரோப்பவில்
ஓடும் ஆறு. இறுதியாக ரைன் நதி ‘நார்த்
சீ’ எனும் கடலில் சங்கமமாகிறது. ரோமானியர்கள்
ஆட்சி செய்த காலத்திலிருந்து வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவின் முக்கிய போக்குவரத்தாக
விளங்குகிறது. அத்துடன் ஜெர்மனிக்கும் ஃபிரான்சுக்கும் இடையே
எல்லையாகவும் விளங்குகிறது ரைன் நதி.
12. பாரீஸ் நகரின்
சீனிஆறு (PARRIS RIVER SEINE)
சுற்றுலாப்
பயணிகளை அதிக அளவில் கவரும் பாரிஸ் நகரின் முக்கியமான ஆறு சீனிஆறு. 777
கிலோ மீட்டர் ஓடும் ஆறு, ஃபிரான்சின் இரண்டாவது
நீளமான ஆறு. மிகவும் சுத்தமான தண்ணீரை உடையது இந்த ஆறு.
அதனால் இதனை குடி நீராக பயன்படுத்துகிறார்கள்.
13. தென் அமெரிக்காவின் ஒரினோகோ ஆறு (SOUTH AMERICAN RIVER ORINOCO)
ஒரினோகோ
ஆறு,
2250 கி.மீ. ஓடும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு சொந்தமான
ஆறு. இந்த ஆறு 75 சதம் வெனிசுலா நாட்டிலும்
25 சதம் கொலம்பியாவிலும் ஓடும் ஆறு. பியாரோவா எனும்
இன மக்களின் வாழ்வாதாரமாக, மீன்பிடி தொழில் மற்றும் விவசாயத்திற்கும்
உதவியாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனினங்களும்,
வித்தியாசமான பறவையினங்களும் இந்த ஆற்றிற்குச் சொந்தமானவை.
14. அமெரிக்கவின் மிசவுரி ஆறு (AMERICAN RIVER MISSOURI)
அமெரிக்காவின்
உற்பத்தியாகும் கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றின்
மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒருபங்கு, மிசவுரி ஆற்றங்கரையில்தான்
சாகுபடியாகிறது. 3767 கி.மீ. ஓடும் இந்த ஆறு உலகின் 15 வது நீளமான ஆறு. மொன்டானா, சவுத் டக்கோட்டா, நார்த்
டக்கோட்டா, கான்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, கன்சாஸ், அயோவா,
மிசவுரி ஆகிய மாநிலங்களின் வழியாக ஓடுகிறது, மிசவுரி
ஆறு.
15. அமெரிக்காவின் ஹட்சன் ஆறு (AMERICAN RIVER HUDSON)
நியூயார்க்
மற்றும் நியூஜெர்சிக்கும் இடையே எல்லையாக விளங்கி
507 கி.மீ. ஓடும் ஆறு இது. உலகத்தின் மிகவும்
கவர்ச்சிகரமான ஆறுகளில் ஒன்று. நியூயார்க் மாநிலத்தின் தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு
செல்லும் ஆறு.
நான்
நினைக்கிறேன், இனி எங்கு சென்றாலும் அங்கு உள்ள ஆற்றினை பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள
வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த
பதினைந்து ஆறுகளில் கங்கை மற்றும் தேம்ஸ் ஆகிய இரண்டு ஆறுகளைப் பார்த்திருக்கிறேன்,
நீங்கள் ?
GNANASURIA
BAHAVAN D
No comments:
Post a Comment