தலைக்குமேல் ஓடும் பறலியாறு |
மேற்குத் தொ ட ர் ச் சி மலைச்சரிவின் மஹேந்திரகிரி மலைகளில்உற்பத்தியாகும் க ன் னி யா கு ம ரி மாவட்டத்திற்கான ஆறு.பறலியாறு அல்லது மத்தூர் அக்யூடக்ட் என்கிறார்கள். பறலி ஆற்றின்மீது மத்தூர் என்னும் ஊரில் கட்டப்பட்டிருப்பதால் அதற்கு அந்தப் பெயர். இதனை மத்தூர் தொங்கும் பாலம் என்றும் சொல்லலாம்.
மஹேந்திரகிரி மலை (MAHENDRAGIRI HILLS)
மஹேந்திரகிரி மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ளது, இதன் உயரம் 1645.2 மீட்டர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தாலுக்காவில் அமைந்துள்ளது.
அக்யூடக்ட் பாலம் (AQUEDUCT)
அக்யூடக்ட் என்றால் பாலம் என்று அர்த்தம். அதுவும் நீர்ப்பாலம் என்று அர்த்தம். மலை இடுக்குகளில் அல்லது பள்ளத்தாக்குகளில் இரண்டு மலைகளைத் தாண்டி தண்ணீர் எடுத்துச்செல்ல என்ன செய்யலாம் ? யோசித்தார்கள். அந்த இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கும் பா ல த் தை அமைத்தார்கள். தரைக்குமேல் ஓடும் ஆறுகளைத்தான் இதுவரை நாம் பார்த்தோம். இது தலைக்குமேல் ஓடும் ஆறு.
ஆசியாவின் உயரமான நீளமான நீர்ப்பாலம் (ASIA’S
LONGEST HIGHEST AQUEDUCT)
இந்த பாலத்தின் நீளம் 3 கி.மீ; தெற்கு ஆசியாவிலேயே அமைந்துள்ள மி க நீளமான மற்றும் உயரமான பாலம். பெருஞ்சாணி என்னும் அணைக்கட்டும் இ வ் வா ற் றி ன் மீது கட்டப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் காமராஜர் கட்டிய பாலம் (EX CHIEF MINISTER KAMARAJAR)
காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது வறட்சி நிவாரணப்பணியாக இது கட்டப்பட்டது. இதன் மூலம் எடுத்து செல்லப்படும் நீர் வி ள வ ங் கோ டு கல்குளம் ஆகிய வட்டங்களில் விவசாயத்திற்கு உதவுகிறது.
கன்னியாகுமரியின் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் (ATTRACTIVE
TOURIST SPOT)
கோடை மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் இந்த பாலம் தண்ணீரை
தொடர்ந்து சுமந்து செல்கிறது. இது கன்னியாகுமரி மாவட்டத்தின் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம். தமிழக சுற்றுலாத்துறையும், உள்ளுர் ஊராட்சியும் சுற்றுலாப் பயணிகளும் சிரமமின்றி வந்து செல்ல அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர்.
மேலே ஓடும் நதிநீர் (RIVER ABOVE OUR HEAD)
சுற்றலாப் பயணிகள் மேலே ஏறிச்சென்று, மேலே ஓடும் நதிநீரையும் சுற்றிலுமுள்ள இயற்கை காட்சிகளையும் கண்டால், ஒட்டு மொத்த மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலையும் பார்த்த திருப்தி அடையலாம் . எத்தனைமுறை போய் இருக்கிறோம்.கன்னியாகுமரிக்கு பறலி ஆற்றைப் பார்க்க வில்லையே என மனம் ஏங்குகிறது.
தாமிரபரணியின் துணையாறு (THAMIRAPARANI TRIBUTARY)
இதனை பறதியாறு என்றும் பரலியாறு என்றும் அழைக்கிறார்கள். இது தாமிரபரணி ஆற்றின் துணையாறு என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல பரலி ஆற்றின் உபநதி கொடையாறு. இது மூலாட்டு முகம் என்ற ஊரில்
அதனுடன் கலக்கிறது.
ஆசியாவின் மிக நீளமான உயரமான பறலியாறு நீர்ப்பாலத்தைப் பார்க்க எப்போது போகப்போகிறீர்கள் ?
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment