Wednesday, May 31, 2023

DHARMAPURI DISTRICT RIVER THOPPAIYAARU தர்மபுரி மாவட்ட தொப்பையாறு

 

தொப்பையாறு

தொப்பை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு தான் தொப்பையாறு டேம் என்கிறார்கள். இந்த அணைக்கட்டு சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி என்ற இடத்தில் உள்ளது. 

தொப்பையாறு அணைக்கட்டு (THOPPAIYAARU DAM)

தொப்பையாறு அணைக்கட்டு தொப்பூரை அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த அணையின் கொள்ள்ளவு 298.34 மி... மண் அணையின் நீளம் 435 மீட்டர், 

பாசன வசதி தருகின்றது (PROVIDES IRRIGATION)

செக்காரப்பட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தேத்திகிரிபட்டி, மல்லிகுந்தம், ஆகிய கிராமங்கள் இந்த தொப்பையாறு அணை கட்டினால் பாசன வசதி பெறுகின்றன. மொத்தப் பாசனம் அளிக்கும் பரப்பு 5330 எக்டர்.

தண்ணீர் வரத்து (SUPPLY STREAMS)

தர்மபுரி மாவட்டத்தின் பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை ஆறுகள் மூலம் தொப்பையாற்றிற்கு தண்ணீர் வரத்து வருகிறது. தொப்பை ஆற்றின் நீர்வழி பரப்பு 269.9 சதுர கிலோமீட்டர்.

தொப்பூர் கணவாய் (THOPPUR GHAT)

தொப்பூர் கணவாய் என்பது ஒரு மலைக் கிராமம் இது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது இது. சேலம் மற்றும் தர்மபுரி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது இந்தக் கணவாய். இது சேலத்தில் இருந்து வடக்குப் புறம் 35 கிலோமீட்டர் தொலைவிலும் தர்மபுரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

தொப்பூர் தர்கா (THOPPUR DARGA)

இஸ்லாமிய மக்களுக்கு தொப்பூர்தர்கா என்பது மிகவும் முக்கியமானது அஸ்ரத் சையத் ஷா வலியுல்லாஅவர்களின் புனிதத்ம் இது. தேசிய நெடுஞ்சாலை 44 அமைந்துள்ளது. தொப்பூர்ல் உள்ள இந்த நெடுஞ்சாலைப் பகுதி விபத்துக்களுக்கு பேர் போனது. 

சேலம் மற்றும் தர்மபுரியை இணைக்கும் இந்த தொப்பூர் கணவாய் என் நீளம் 3 1/2 கிலோ மீட்டர் மட்டுமே இந்த கணவாய் மலைகள் மற்றும் காடுகளும் அடர்ந்த பகுதி.

இரவு நேரங்களில் பேய்கள் இங்கு நடமாடுவதாகவும் அதனால் தான் இந்த பகுதியில் விபத்துக்கள் அதிகம் நடப்பதாகவும் சொல்லுகிறார்கள் லாரி ஓட்டுனர்களை கேட்டால் இது மரணச்சாலை என்று சொல்லுகிறார்கள்.

மரணச்சாலை (ROAD OF DEATH)

மரணச்சாலை என்று வருணிக்கப்படும் இந்த தொப்பூர் சாலை மூலமாக இதுவரை நான் 20 அல்லது 30 தடவை வந்து பயணம் செய்து உள்ளேன். இதுவரை ஒரு பேயும் என் கண்ணில் சிக்கவில்லை. ஆயுசு எனக்கு கெட்டி என்று நிணைக்கிறேன்.

பேய்பிசாசு, பார்த்து இருக்கிறீர்களா ? (GHOST ROAD)

நீங்கள் இதில் பயணம் செய்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த கணவாய்ப் பகுதியில் ஏதாவது பேய்பிசாசு, காத்து கருப்பு பார்த்து இருக்கிறீர்களா

 Note: Please Make  a Comment, just  below this  Space given below as "POST A COMMENT " 

Gnsnasuria Bahavan D

gsbahavan@gmail.c

Tuesday, May 30, 2023

BEAUTIFUL 15 RIVERS OF THE WORLD உலகின் அழகான 15 ஆறுகள்



GANGES INDIA

MISSISSIPI - AMERICA

Thames - London

(
கங்கைஆறு, மிசிசிப்பிஆறு, தேம்ஸ், அமேசான், யாங்க்ட்சி, நைல், டன்யூப்,மீக்காங்,ஒல்கா, சாம்பெசி, ரைன்,சீனி, ஒரினோகோ, மிசவுரி, ஹட்சன்)           


இப்போது தமிழ்நாட்டின் ஆறுகளைப்பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது தகவல் யுகம். இன்று உலகமே ஒரு குடைக்கீழ் சுருங்கிவிட்டது. உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கின்றன. இவற்றில் 11 நாடுகளில் உள்ள 15 அழகிய பிரபலமான ஆறுகளை இந்தப் பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன். இந்தியா என்றால் கங்கை, அமெரிக்கா என்றால் மிசிசிப்பி, ஐரோப்பா என்றால் தேம்ஸ், ஆஃப்ரிக்கா என்றல் நைல், தென் அமெரிக்கா என்றால் அமேசான் இப்படி பிரபலமான ஆறுகள்பற்றி எல்லாம் நாம் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

1. இந்தியாவின் கங்கை ஆறு (GANGES)


இமையமலையில் கங்கோத்ரி பனிமலையில் உருவாகி இந்தியா வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளில் 2704 கி,மீ. ஓடி வங்காள விரிகுடாவில் சங்கமமாகும் ஆறு.

இந்தியாவைப் பொருத்த வரை கங்கை என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்த ஆறு. இதில் 90 வகை நீர்வாழ் உயிரினங்கள் (AMPHIBIANS) உள்ளன. 140  வகை மீன் இனங்கள் உள்ளன. கங்கை ஆற்றின் டால்பின்களும், கங்கை ஆற்றின் சுறா மீன்களும் மிகவும் வித்தியாசமானவை என்று சொல்லுகிறார்கள்.

கங்கை என்றால் மூன்று முக்கியமான அம்சங்களைச் சொல்லுகிறார்கள், ஒன்று கங்கை ஒரு புனிதமான ஆறு. இரண்டாவது, இந்துக்களின் மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆறு. மூன்றாவது உலகிலேயே மிகவும் மாசடைந்த ஆறு என்பது. இந்த மூன்றுக்கும் பிரசித்தி பெற்ற ஆறு

 

2. அமெரிக்காவின் மிசிசிப்பிஆறு (AMERICAN RIVER MISSISIPPI)

மிசிசிப்பி ஆறு அமெரிக்காவில் 10 மாநிலங்களில் 3776 கி.மீ. ஓடுகிறது. மினிசோட்டா என்னும் ஏரியிலிருந்து புறப்படும் இந்த ஆறு மெக்சிகோ வளைகுடாவில் நுழைந்து மினிசோட்டவில் உள்ள இட்டாஸ்கா என்ற ஏரியில் நுழைந்து மிசவுரி ஆற்றுடன் சேர்கிறது.

வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு இது. உலக அளவில் இது நான்காவது மிக நீண்ட ஆறு இது. மீன்பிடித்தல், விவசாயம், வியாபாரம் ஆகியவற்றில் வட அமெரிக்காவின்  பழங்குடி மக்களுக்கு மிசிசிப்பி உதவியாக உள்ளது. ஆனால் தற்போது பல மாவட்டங்களுக்கு   நீர்மின்சக்தி வழங்க உதவியாக உள்ளது.

3. லண்டன் தேம்ஸ் ஆறு  (LONDON RIVER THAMES)


இங்கிலாந்து நாட்டில் 346  கி.மீ.  ஒடும் மிக   நீளமான ஆறு. 1858 ம் ஆண்டு வாக்கில் வெறும் சாக்கடையாக ஓடிகொண்டிருந்த ஆறு இன்று இது. உலகின் மிகவும் சுத்தமான ஆறு. அதுமட்டுமல்ல லண்டன்வாசிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆறாக உள்ளது. 17 ம் ஆண்டு வரை தேம்ஸ் லண்டன் மாநகரின் முக்கிய நீர்வழி போக்குவரத்தாக இருந்தது என்கிறார்கள். மிகவும் பிரபலமான லண்டன் பிரிட்ஜ் இதன் மீதுதான் கட்டப்பட்டுள்ளது.

4. தென் அமெரிக்காவின் அமேசான்ஆறு (AMAZON)

தென் அமெரிக்காவில் பெரு என்னும் நாட்டி

ல் உற்பத்தி ஆகி எட்டு நாடுகளில்


6992 கி.மீ. ஓடி அட்லாண்டிக் சமுத்திரத்தில் சங்கமாகும், உலகின் இரண்டாவது நீளமான நதி சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள ஆறு.

.பிரேசில், பொலிவியா,  கொலம்பியா, ஃபிரென்ச் கயானா, கயானாஈக்வேடர், பெரு, சூரினாம், , வெனிசுலா ஆகிய ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் ஓடுகிறது அமேசான் ஆறு.

6500 கி.மீ. ஓடும் உலகின் இரண்டாவது பெரிய   நீளமான ஆறு. மற்றும் உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காட்டின் வழியாக பயணம் செய்யும் ஆறு என்னும் சிறப்புக்கு உரியது. இந்த மழைக்காடு உலகின் 10 சதவிகித தாவரங்களையும் 30 சதவிகித பிராணிகளையும் உள்ளடக்கியது.

அமேசான் ஆறு 2000 வகையான மீன்களையும் 400 வகையான நீர்வாழ் உயிரினங்களையும் கொண்டது. இது  1100 துணை ஆறுகளை கொண்டது என்பது ஆச்சரியமான செய்தி. அதுமட்டுமல்ல உலகின் மிக அழகான நதியும்கூட. இன்னொரு ஆச்சர்யமான செய்தி இந்த ஆற்றின் குறுக்கே எவ்விதமான பாலமும் இல்லை என்று சொல்லுகிறார்கள்.

5. சீனாவின் யாங்க்ட்சி ஆறு (CHINESE RIVER YANGTZE)

உலகில் 6300 கி.மீ. ஓடும்  மூன்றாவது மிக நீளமான சீன ஆறு. சீனாவில் 9 மாநிலங்களில் ஓடும் ஆறு. அதுமட்டுமல்ல யாங்க்ட்சி டாங்குலாவின் மலைப் பகுதிகள்  முதல் ஷாங்காயின் தென் சீனக்கடல் வரை ஓடும் ஆசியாவின் மிக நீளமான ஆறு. இந்த ஆற்றின் மூலம் கொண்டுவரும் வண்டல் மண்ணின் மிகுதியால் உலகிலேயே அதிக நெல் உற்பத்தி செய்யும் இடமாக விளங்குகிறது ஜியாங்சு என்ற மாநிலம். யாங்க்ட்சி ஆறும் உலகின் மிக அழகான ஆறுகளில் ஒன்று. 

6. ஆஃப்ரிக்காவின் நைல்நதி (RIVER NILE)

உலகின் 6650 கி.மீ. ஓடும் மிக நீளமான ஆறு எனும் சிறப்புடையது. நைல்நதி ஒன்பது ஆஃப்ரிக்க  ஆப்ரிக்க நாடுகளின் வழியாக ஓடுகிறது.  பாலைவனத்தின் ஊடாக அமைந்துள்ள எகிஃப்து நாட்டின் வளத்திற்கும் நலத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ள ஆறு, அதன் புராதன கலாச்சரத்துடன் தொடர்புடைய ஆறு.

விக்டோரியா ஏரியில் உற்பத்தி ஆகி 6650 கி.மீ. ஓடி சகாரா பாலைவனம் வழியாக ஓடி த்தியதரைக்கடலில் சங்கமமாகிறது. நைல் நதியில் வெள்ளம் வரும் மத்திய ஜூலையை அவர்கள் தங்கள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளுகிறார்கள். நைல்  நதியின் முதலைகளை அவர்கள் தெய்வமாக்கி கொண்டாடுகிறார்கள்.

வெள்ளை நைல், நீல நைல் ஆகிய இரண்டும் நைல் ஆற்றின் முக்கிய துணை ஆறுகள்நீல நைல் கொடைப்பருவத்தில் 60 சதவிகித நீரைத் தருகிறது. வெளை நைல் ஆண்டு முழுவதும் தண்ணீர் தரக்கூடியது. மஞ்சள்  நைல் என்ற  நதி துணைநதியாக இருந்தது, தற்போது அந்த நதி வறண்டுபோய்விட்டது. நைல் நதியை எகிப்து நாட்டின் கொடை என்று போற்றுகிறார்கள்,  எகிப்து பருத்தி உலக அளவில் பிரபலமானது. சரித்திரத்துடன் முக்கிய தொடர்புடைய ஆறு. 95 சதவிகித எகிப்து நாட்டின் மக்கள் தொகை நைல் நதிக்கரையில் வசிக்கிறார்கள். 

7. ஐரோப்பாவின் டன்யூப்ஆறு (EUROPE RIVER DANUBE)

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா உட்பட ஒன்பது நாடுகளின் ஊடாக ஓடும் ஆறு இது. பிளாக் ஃபாரெஸ்ட் என்ற இடத்தில் உள்ள மலைகளில் உருவாகும் இந்த ஆறு 2850 கி.மீ. ஓடி கருங்கடலில் கலக்கிறது. அது மட்டுமல்ல இது ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு. டன்யூப் நதி 20 மில்லியன் மக்களுக்கு குடிநீர் தருகிறது. இது மிக முக்கியமான சுற்றுலா ஆறாக விளங்குகிறது. பிரேக் நாட்டில் மிக  முக்கியமான சுற்றுலாத் தலமும் கூட.

8. திபெத்துக்கு சொந்தமான மீக்காங் ஆறு  (TTIBET RIVER MEKONG)

திபெத்துப் பீடபூமியிலிருந்து உற்பத்தி ஆகி 4909 கி.மீ. ஓடும் ஆறு. ஆசியாவின் மிக அழகிய ஆறுகளில் ஒன்று. திபெத்திலிருந்து தென் சீனக் கடல் வரை ஓடும் ஆறு. சைனா, பர்மா, வியட்னாம், லாவோஸ், தாய்லாந்து, மீக்காங் ஆற்றில் 800 மீன் இனங்களும், 430 வகையான பாலூட்டிகளும் பெருகி உள்ளன. விவசாயம், உணவு உற்பத்தி, வியாபாரம், போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகியவற்றிற்கு உதவியாக உள்ளது.   

9. ரஷ்யாவின் ஒல்கா ஆறு  (RUSSIAN RIVER VOLGA)

ஐரோப்பவின் மிக  நீண்ட ரஷ்ய ஆறு. 3531 கி.மீ. தூரம் ஓடும் ஆறு. வால்டை எனும் மலைகளில் உருவாகும் இந்த ஆறு காஸ்பியன் கடலில் சங்கமமாகிறது. குளிர்ப் பருவங்களில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்த ஆற்றின் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவிடும். மீதமுள்ள ஒன்பது மாதங்களில் இந்த ஆறு ரஷ்யாவின் மிக்ச்சிறந்த போக்குவரத்துத் தடமாக உள்ளது. மேலும் சிறந்த  நீர்மின்சக்தி  உற்பத்தி செய்யும் ஆறாகவும் விளங்குகிறது

10.  ஆஃப்ரிக்காவின் சாம்பெசி ஆறு (AFRICAN RIVER ZAMBEZI)

உலகப் பிரசித்தி பெற்ற விக்டோரியா  நீர்வீழ்ச்சி சாம்பெசி ஆற்றில்தான் உள்ளது. சாம்பெசி மிகவும் சுத்தமான தண்ணீரை உடைய ஆறு. இந்தியப் பெருங்கடலில் சங்கமம் ஆகும் இந்த ஆறு 2574 கி.மீ., ஆஃப்ரிக்க நாடுகளில் ஓடும் ஆறு. நபிபியா, போட்ஸ்வானா, சாம்பியா, அங்கோலா, சிம்பாவே, மொசாம்பிக் ஆகியவை ஆறும் சாம்பெசி ஆற்றினால் பயன்பெறும் ஆஃப்ரிக்க நாடுகள்

11. சுவிஸ் நாட்டின் ரைன் ஆறு (SWISS RIVER RHYNE)

சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் புறப்படும் ஆறு. 1233 கி.மீ.  ஐரோப்பவில் ஓடும் ஆறு. இறுதியாக ரைன்  நதிநார்த் சீஎனும் கடலில் சங்கமமாகிறது. ரோமானியர்கள் ஆட்சி செய்த காலத்திலிருந்து வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவின் முக்கிய போக்குவரத்தாக விளங்குகிறது. அத்துடன் ஜெர்மனிக்கும் ஃபிரான்சுக்கும் இடையே எல்லையாகவும் விளங்குகிறது ரைன் நதி.

12. பாரீஸ்  நகரின் சீனிஆறு (PARRIS RIVER SEINE)

சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவரும் பாரிஸ் நகரின் முக்கியமான ஆறு சீனிஆறு. 777 கிலோ மீட்டர் ஓடும் ஆறு, ஃபிரான்சின் இரண்டாவது நீளமான ஆறு. மிகவும் சுத்தமான தண்ணீரை உடையது இந்த ஆறு. அதனால் இதனை குடி நீராக பயன்படுத்துகிறார்கள்.  

13. தென் அமெரிக்காவின் ஒரினோகோ ஆறு  (SOUTH AMERICAN RIVER ORINOCO)

ஒரினோகோ ஆறு, 2250 கி.மீ. ஓடும்  தென் அமெரிக்கக் கண்டத்திற்கு சொந்தமான ஆறு. இந்த ஆறு 75 சதம் வெனிசுலா நாட்டிலும் 25 சதம் கொலம்பியாவிலும் ஓடும் ஆறு. பியாரோவா எனும் இன மக்களின் வாழ்வாதாரமாக, மீன்பிடி தொழில் மற்றும் விவசாயத்திற்கும் உதவியாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனினங்களும், வித்தியாசமான பறவையினங்களும்  இந்த ஆற்றிற்குச் சொந்தமானவை.

14. அமெரிக்கவின் மிசவுரி ஆறு  (AMERICAN RIVER MISSOURI)

அமெரிக்காவின் உற்பத்தியாகும் கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒருபங்கு, மிசவுரி ஆற்றங்கரையில்தான் சாகுபடியாகிறது. 3767 கி.மீ. ஓடும் இந்த ஆறு உலகின் 15 வது நீளமான ஆறு. மொன்டானா, சவுத் டக்கோட்டா, நார்த் டக்கோட்டா, கான்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, கன்சாஸ், அயோவா, மிசவுரி ஆகிய மாநிலங்களின் வழியாக ஓடுகிறது, மிசவுரி ஆறு.

15. அமெரிக்காவின் ஹட்சன் ஆறு  (AMERICAN RIVER HUDSON)

நியூயார்க் மற்றும் நியூஜெர்சிக்கும் இடையே எல்லையாக விளங்கி 507 கி.மீ. ஓடும்  ஆறு இது. உலகத்தின் மிகவும் கவர்ச்சிகரமான ஆறுகளில் ஒன்று. நியூயார்க் மாநிலத்தின்  தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு செல்லும் ஆறு.

நான் நினைக்கிறேன், இனி எங்கு சென்றாலும் அங்கு உள்ள ஆற்றினை பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த பதினைந்து ஆறுகளில் கங்கை மற்றும் தேம்ஸ் ஆகிய இரண்டு ஆறுகளைப் பார்த்திருக்கிறேன், நீங்கள் ?

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

Wednesday, May 24, 2023

BLACK SIRIS TREE A GUARANTEE FOR LONG HAIR அழகான கூந்தலுக்கு அம்சமான உத்ரவாதம் கருவாகை!

 

கருவாகை கூந்தல் மரம்

  (கருவாகை - BLACK SIRIS)

உங்கள் அழகான கூந்தலுக்கு அம்சமான உத்தரவாதம் கருவாகை இப்படி ஒரு விளம்பரம் உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

உசிலம்பட்டி பெண்குட்டி

சமீப காலமாக இந்த மரத்தை, அரப்பு மரம் என்றும் ஷேம்பு மரம் என்றும் கூட அழைக்கிறார்கள். சங்ககாலத்தில் இதன் பெயர் சிலைமரம். இதுதான் உசிலை மரம் என்பதும் தெரிகிறது: உசிலம்பட்டிக்கு பெயர்க் காரணமாக இருந்ததும் இந்த சிலை மரம்தான். உசிலம்பட்டி பெண்குட்டி பாடலுக்கு கவிஞர் வைரமுத்துவுக்கு காலெடுத்துக் கொடுத்ததும் இந்த மரம்தான் என இப்போது புரிகிறது: சிலையும் உசிலையும் ஒன்றுதான்: கருவாகையும் ஒன்றுதான்.

மதுரைப் பகுதியில் பச்சைப்பொடி என்று கடைகளில் விற்பனை ஆவது, சிலைமர இலைப்பொடி தான்.

பெயர்கள் :(DIFFERENT NAMES)

தாவரவியல் பெயர்: அல்பீசியா ஒடரோடிசிமா (ALBIZIA ODOROTISSIMA)

தாவரக் குடும்பம் பெயர்: மைமோசியே (MIMOSACEAE)

தாயகம்: இந்தியா, சைனா, பங்ளாதேஷ், லாவோஸ், மியான்மர், நேப்பாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மற்றும் வியட்நாம்.

பொதுப் பெயர்கள்: பிளாக் சீரிஸ், சிலோன் ரோஸ் வுட், பிராக் ரண்ட் அல்பீசியா, டீ ஷேட் ட்ரீ  (BLACK SIRIS, CEYLON ROSE WOOD, FRAGRANT ALBIZIA, TEA SHADE TREE)

பல மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: சிலை, கருவாகை (SILAI, KARUVAGAI)

இந்தி: காலா சிரிஸ் (KALA SIRIS)

அசாமிஸ்: கொராய் (KORAI)

பெங்காலி: காக்குர் சிரிஸ் (KAKUR SIRIS)

குஐராத்தி: கலோ ஷிரிஷ் (KALO SHRISH)

கன்னடா: காடு பாக்கி (KAADU BAAGE)

காசி: டயங் கிரெய்ட் (DIENG KRAIT)

கொங்கணி: காலி சிரஸ் (KALI SIRAS)

மலையாளம்: கருவாகா, குன்னி வாகா, நெல்லி வாகா, புலிவாகா (KARUVAKA, KUNNI VAKA, NELLI VAKA, PULI VAKA)

மணிப்புரி: உயில் (UIL)

மராத்தி: சின் சாவா (CHIN CHAVA)

மிசோ: காங் தேக் (KANGTEKPA)

நேப்பாளி: கலோ சிரிஷ் (KALO SIRISH)

ஓரியா: டீனியா (TINIYA)

சமஸ்கிருதம்: சிரிஷா(SIRISHA)

தெலுங்கு: சிண்டுகா(CINDUGA)

சிலைமரத்துக்கு தமிழில் 54 பெயர்கள் உள்ளது ஆச்சரியம் தரும் செய்தி. அவற்றில் முக்கிய பெயர்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம். அவை கருவாகை, சிற்றிலைவாகை, காசிமகாமரம், கல்துரிஞ்சி, துரிஞ்சி, கொண்டவாகை, வெள்வாகை மற்றும் வன்னிவாகைமரம்.

ஐங்குறுநூறு பாடிய மரம்

இந்த மரம் சங்க இலக்கியத் காலத்தில் பிரபலமானது இந்த மரம்.; இன்று எனது தோட்டத்து வேலியில் தானாய் முளைத்த மரம். அந்த மரத்தின்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே வந்தது. இந்த கட்டுரையை எழுதி முடித்த பின்னால் அந்த மரங்களைப் போய் பார்த்தபோது  எனக்கு கண்ணீரே வந்தது.

வில் அம்பு செய்ய ஏற்ற மரம் (BOW & ARROW TREE)

அதனால்தான் அந்த காலத்தில் நமது தமிழ் மக்கள் இதனை 54 வேறுவேறு பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். இன்று உறுதியான மரம் என்று தாவரவியல் இன்று சொல்லுகிறது. இதே கருத்தினை என் பாட்டன்மார்கள் 2000 வருஷத்துக்கு முன்னாடி உறுதிபடுத்தி இருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்கள் வில் அம்பு செய்ய உறுதியான மரம் என்று சொல்லுகின்றன. வில்அம்பு செய்து போரிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள்  

சிலை விற் பகழிச் செந் துவர் ஆடைக்

கொலைவில் எயினர் தங்கை!.....) ஒதலாந்தையார்

(ஐங்குறுநூறு 363 வது பாடல்)

சிலை என்பது கருவாகை மரத்தைக் குறிக்கும். பகழி என்றால் அம்பு. துவராடை என்றால் செந்நிற ஆடை. எயினர் என்றால் பாலை நிலத்தில் வசிப்பவர் என்று பொருள்.

சிலை மரத்தால் செய்த வில்லையும் அம்புகளையும், சிவந்த ஆடையை அணிந்து, கொலை புரிதலை தொழிலாகக் கொண்டவனின் தங்கையே.. என்று ஒரு பெண்ணை அழைக்கிறது இந்தப் பாடல்.

ஆப்ரிக்கா அமெரிக்காவிலும் பிரபலம்

இந்தியாவை தாயமாகக் கொண்டது கருவாகை. ஆப்ரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில் எல்லாம் பரவியுள்ளது, கருவாகை;. இவை, பரவியிருக்கும் இதர நாடுகள் கென்யா, தான்சானியா, மலாவி, ஜிpம்பாவே, மொசாம்பிக், ஜோகன்ஸ்பர்க், மற்றும் தென் ஆப்ரிக்கா, பங்ளாதேஷ், பூடான், நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், மற்றும் ஸ்ரீலங்கா.

பரவலான மண்வகைகளில் நன்கு வளரும்.

அமெரிக்காவில், மத்திய அமெரிக்கா மற்றும் புளோரிடா வில் அதிக அளவில் பரவியுள்ளது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இது பரவலான மண்வகைகளில் வளரும் என்பது. ஆனால் அதிக ஈரப்பசை உள்ள மண்கண்டம், வடிகால் வசதி உள்ள மண், இருமண்பாடான மண், மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் வரை உள்ளப் பகுதிகளில் நன்கு வளரும்.

இலை உதிர்த்தபடி 15 முதல் 25 மீட்டர் வரை உயரமாக வளரும். முக்கியமாக இந்த மரம் மிகவும் வேகமாக வளரும். ஒர் ஆண்டில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இன்னொரு முக்கியமான அம்சம், இந்த மரம், அதிகமான தழைச்சத்தை, நிலைப்படுத்தும் (NITROGEN FIXATION) சக்தி உடையது. காற்றில் வாயு வடிவில் இருக்கும் தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலைப்படுத்தும்.

சிலோன் ரோஸ்வுட்

இந்த மரத்தின் கட்டைகள் (TIMBERS), அடர்த்தியான காவி நிறத்தில் வலிமையாக இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும். இழைக்க இழைக்க பளபளப்பும் மெருகும் கூடும். அனைத்து வகையான மரச்சாமான்களும், விவசாயக் கருவிகளும் செய்யலாம். இதற்கு சிலோன் ரோஸ்வுட் என்ற பெருமையான பெயரும் உண்டு.

பங்ளாதேஷ்; நாட்டில் பெரும்பாலான தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில் இருக்கும் நிழல் மரங்கள், சிலை மரம்தான். இதன் இலைதழைகள் ஆடுமாடுகளுக்கு அருமையான தீவனம் ஆகிறது.

இதன் பூக்கள் வெண்மையாக அல்லது வெளிர் மஞ்சளாக இருக்கும். பெரிய நுனிக்கிளை பூங்கொத்துக்களாக (வுநுசுஆஐNயுடு ஊடுருளுவுநுசுளு) பூக்கும். பூக்கள் வாசனை உடையவை.

மரங்கள் என்றால் பெரும்பாலும் அவை கட்டைக்கானவை (TIMBER) என்று எல்லோரும் நினைப்பார்கள். நானும் அப்படி நினைத்திருத்த ஒரு காலம் உண்டு. மரங்கள் என்பவை அப்படி அல்ல. பொதுவாக எல்லா மரங்களுமே பல பயன் தரும் மரங்களே. சில மரங்களில் சில பயன்கள் தூக்கலாக இருக்கும்: மற்றபடி எல்லா மரங்களுமே சகலகலாவல்லமை உள்ளவை தான். நமது சிலைமரமும் அப்படித்தான்.

பெரியமனுஷி ஆகாத சோகம் (ATTAINING PUBERTY)

80 வயதை தாண்டிய வயதில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் இந்த வயதில் கூட ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர். அவரை நான் சந்திக்கும்போதெல்லாம் ஒரு வித்தியாசமான சம்பவத்தை பற்றி என்னிடம் சொல்வார். குறைந்தது அரைமணி நேரமாவது விஸ்தாரமாக என்னிடம் பேசுவார்.

சமீபத்தில் அவர் என்னிடம் அதிசயமான  ஒரு செய்தியைச் சொன்னார். நேத்திக்கி முக்கியமான ஒரு சாவுக்கு போயிட்டு வந்தேன். செத்துப் போன அந்த அம்மாவுக்கும் எனக்கும் ஒரே வயசு. எண்பத்தியாறு. நானும்அந்தம்மாவும் பள்ளிகூடத்துல ஒண்ணா படிச்சோம். அந்தம்மாவைத்தான் எனக்கு   கட்றதா இருந்தாங்க. எனக்கு அவங்க எனக்கு தூரத்து சொந்தமும் கூட. ஆனா அந்த கல்யாணம் நடக்கவே இல்ல காரணம் என்னென்னு கேட்பதற்கு முன்னால் அவராகவே சொன்னார். அந்த அம்மா இந்த வயசு வரைக்கும் கூட பெரிய மனுஷியா ஆகலை என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் சொன்னேன். அவர் எனக்கு அதுபற்றி விளக்கமாகச் சொன்னார்.

பூப்படையாத பெண்கள் (KALMANN SYNDROME)

பூப்படையும் வயது வந்தும் பூப்படையாத பெண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இப்படி 80 வயது வரை ஒரு பெண் பூப்படையாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பெண் சாதாரணமாக 16 வயது வரை பூப்படையவில்லை என்றால் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதனை கல்மேன் சின்ட்ரோம் என்று சொல்லுகிறார்கள்.

பெண்களின் பூப்படையும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த கருவாகையில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். முக்கியமான அதற்;கான சக்தியையும் தரும் வாகைமரம்.  இந்த மருத்துவ பண்பினை  எம்மன்கோக் (EMMEN GOGUE) என்று சொல்கிறார்கள்.

ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் இதனைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மரம் ஒரு மூலிகை மருந்தாக பயன்படுகிறது என்பது பலருக்கு தெரியாது.

இதனை குடல்புண்,; இருமல், மூச்சுக்குழல் அழற்சி, சர்க்கரை நோய், நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் கைகால் வீக்கம், வலி, வாதம், வலிப்பு ஜன்னி, ஜுரம், ஓமத் தீயினால் ஏற்படும் நச்சுத்தன்மை, உதடு மற்றும் நாக்கு கருமையாதல் போன்றவற்றையும் குணப்படுத்த கருவாகையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

பலவீனமான உடல் வாகு உடையோருக்கும் உடல் தேற்றியாகவும் இந்த வேர் கஷாயம் பயன்படுகிறது. அதுமட்டுமல்ல கல்லீரல் மண்ணீரல் மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் நோய்களை சரி செய்யும் சக்தி இதற்கு உள்ளது. சிலருக்கு சிறுநீர் பையின் அடிப்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். சிறுநீர் அவசரமாக கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். ஆனால் கழிக்க முடியாது. இதனை மருத்துவ ரீதியாக ஸ்ட்ராங்குரி (STRONGURY) என்று சொல்லுகிறார்கள் இதனைக் கூட சரி செய்யும் சக்தி இந்தக் கருவாகை மரத்திற்கு உண்டு.

ஆண்மைப்பெருக்கி (APHRODISIAC)

கருவாகை வேர்களில் இருந்து எடுக்கும் சாறு ஆண்மைப் பெருக்கியாகவும் பயன்படும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கருவாகை குச்சிகளைத்; துண்டித்து  பல்குச்சிகளைப்;போல மெல்லுவதன் மூலம்; அதன் சாறு பற்கள் மற்றும் ஈறுகளில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் சரியாகும். கை கால்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளைக்கூட குணமாக்கும் சக்தி இதன் சாற்றுக்கு உள்ளது.

தொழுநோய் - சக்கரைநோய்

சிலைமரம் குறைந்தபட்சம் ஒரு அரைடஐன் நோய்களையாவது குணப்படுத்தும். உதாரணம், தொழு நோய், குடற்புண், சரும நோய்கள், இருமல், மூச்சுக் குழாய் அழற்சி, சக்கரை நோய், மற்றும் உடல் எரிச்சல் (LEPROSY, COUGH, BRONCHITIS, DIABETES, BURNING SENSATION)

ஷாம்பு வரும் முன்னே ! வழுக்கை வரும் பின்னே ! 

கிராமங்களில் ஷாம்பு வருவதற்கு முன் கருவாகை தான் ஷாம்பு. இதன் இலைகளைப் பொடியாக்கி டப்பாக்களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். இதனை தலைக்கு போட்டுப் பாருங்கள். விளம்பரத் தலை முடியை தோற்கடித்து விடும். அரப்புக்கும் ஷாம்புவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். தலைக்கு தொடர்ந்து அரப்பு போட்டால் வழுக்கை வராது. தொடர்ந்து ஷாம்பு போட்டல் வழுக்கை வராமல் விடாது. ஷாம்பு வரும் முன்னே வழுக்கை வரும் பின்னே !

விதைகள் பிரச்சினை இல்லாமல் முளைக்கும்.

சிலைமரத்தின் முற்றிய நெற்றுக்கள் செங்காவி நிறமானவை: நெற்றுக்களைப் போல விதைகளும் செங்காவி நிறமாகவே இருக்கும். விதைகள் பிரச்சினை இல்லாமல் முளைக்கும். இதன் விதையுறை கொஞ்சம் கடினமானவை. அதை நேரிடையாக விதைத்தால் அதன் முளைப்புத் திறன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. விதைகளை 24 மணிநேரம் நீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்.

என்ன செய்யலாம் ?

இந்த மரங்களையெல்லாம் நமது இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, தொண்டு நிறுவனங்களுக்கும், உள்ளது. இந்த மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமும் இருக்கும் மரங்களை பயன்படுத்துவதன் மூலமும் கிராமங்களில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம், சரிதானே ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...