Sunday, April 23, 2023

VILLUPURAM DISTRICT RIVER MALATTAR - விழுப்புரம் மாவட்ட ஆறு மலட்டாரு

 

மலட்டாரு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் ஆறு, தென்பண்ணையின் துணை ஆறு, இது தென்பெண்ணை ஆற்றுடன் சேர அது வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது. ஆனாங்கூர் பில்லூர், குச்சிபாளையம், அரசமங்கலம், உட்பட பல கிராமங்களில் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது மலட்டாரு

 

வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகள்

இதன் ஆற்றில் வரத்து கால்வாய்கள் தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் அடைந்து கிடக்கிறது. நீர் வரத்து இல்லாமல் பாலைவனமாக மாறி வருகிறது என்று சொல்லுகிறார்கள் இங்கு சுற்று வட்டாரத்தில்  வசிக்கும் மக்கள்

 

குடுவையார் மற்றும் பம்பையார்

குடுவையார் ஆறு மற்றும் பம்பையார் ஆறு சங்கமம் ஆகும் இடத்திற்கும் தென்பண்ணை சங்கமம் ஆகும் இடத்திற்கும் ஊடாக வங்க கடலில் மலட்டாரு சங்கமம் ஆகிறது.

இந்த ஆற்றில் எஸ் மேட்டுப்பாளையம் மற்றும் பாசுரெட்டிப்பாளையம் இடையே ஒரு தரைப்பாலம் உள்ளது. மலட்டாற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி விடும். இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொன்னால் முதலில் மலட்டாற்றில் தண்ணீர் வரட்டும், அதற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார்களாம்.

அவர்கள் சொல்வது போல மலட்டாற்றில் தண்ணீர் வருவது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது மாதிரி என்கிறார்கள்.

ஆறுகளின் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்துக் கொள்வது என்பது நமது சொந்த கொள்ளிகட்டையை எடுத்து  நமது சொந்தத் தலையை சொரிந்து கொள்வது போல என்பதை நாம் உணர வேண்டும்.

மலட்டாற்றைப் போல உங்கள் ஊரிலும் ஆற்று ஆக்கிரமிப்பாளர்கள் கண்டிப்பாய் இருப்பார்கள், இவர்களைத் தடுக்க வழி ஏதாவது சொல்வீர்களா ? 

AUTHOR: GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...