MARKANDEYA PURANAM |
TRIBUTORY RIVER
MARKANDA
மார்கண்டா ஆறு அல்லது மார்கண்டேயா ஆறு
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு ஆறு
தென்பெண்ணையின் துணைஆறு
கிழக்கு தொடர்ச்சி மலை ஆறு
ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
29.6 கிலோமீட்டர் ஓடும் ஆறு
மிருகண்டு முனிவரும் அவர் மனைவி மருத்துவவதியும் தவமாய் தவமிருந்து
அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். அதற்கு மார்கண்டேயர் என்று பெயர்
வைத்தார்கள். மார்கண்டேயர் 16 வயதிலேயே இறந்துவிடுவார் என் ஜோதிடர்கள்
சொன்னார்கள். அவன் வளர்ந்து 16 வயது அடைந்தான். சிறு வயது முதற்கொண்டே அவன் சிவ
பக்தனாக வளர்த்தார்கள். அவன் முழுமையான் சிவ பக்தனாக வளர்ந்தான். ஒரு நாள் அவன்
உயிரைப்பறிக்க எமதூதர்கள் வந்தார்கள், அப்போது மார்கண்டேயர் சிவபூஜையில் இருந்தார்.
எமதூதர்கள் பாசக்கயிற்றால் கட்டி இழுக்க, அவர் சிவலிங்கத்தை கட்டிபிடித்துக் கொள்ள,
அங்கு சிவபெருமான் காட்சி தந்து, எமதூதர்களை விரட்டி அடித்து, மார்கண்டேயர் என்றும்
பதினாறு வயதுடையவனாக வாழ அருள் பாலித்தார், இதுதான் மார்கண்டேய புராணம்.
மார்க்கண்டா ஆறு
என்பது தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறு. கர்நாடக எல்லை பகுதியில் முத்தியால் மடுகு என்ற இடத்தில்
மலைப்பகுதியில் உருவாகும் ஆறு. இது சிறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து
மார்க்கண்ட ஆறு உருவாகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு சொந்தமான ஒரு ஆறு. இது கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகிறது பின்னர் திம்மக்கா ஏரியிலிருந்து வெளியேறும் நீர் இத்துடன் சேருகிறது.
வேப்பனபள்ளி ஒன்றியம்
அதன் பிறகு வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் தீர்த்தம்பாலினப்பள்ளி, சித்தரிப்பள்ளி வழியாக மாதுரசந்திரன் மாறசந்திரன் என்னும் தடுப்பணையை வந்தடைகிறது. அந்த தடுப்பணையை தாண்டி செல்லும் ஆறு எண்ணைகொள்புதூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றுடன் கலக்கிறது.
குப்பச்சிப்பாறை தடுப்பணை
இந்த ஆற்றின் குறுக்காக வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சிப்பாறை என்ற இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி இருக்கிறது. அங்கிருந்து மாரசந்திரம், கள்ளக்குத்தி வழியாக கல்லுக்குறி வழியாக தண்ணீர் படையத்தலா ஏரியை வந்தடைகிறது.
ஆயிரம் ஏக்கர் நிலங்கள்
இந்த ஏரியிலிருந்து செல்லும் தண்ணீர் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் செல்லும் வகையில், இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் ஓரத்தில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதியைப் பெறுகின்றன.
இந்த மார்க்கண்டா ஆற்றின் குறுக்காக அணை ஒன்றை கட்ட தொடங்கியது கர்நாடக மாநிலம், இதனைத் தடுக்க தமிழக அரசு ஒரு வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 2010 நவம்பர் 14ஆம் தேதி தடை செய்து உத்தரவிட்டது
படையத்தலா ஒரு பெரிய ஏரி
படையத்தலா ஏரி என்பது ஒரு பெரிய ஏரி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டுநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏரி. இது 269 ஏக்கர் பரப்பில் இது அமைந்துள்ளது.
மார்கண்டா நதி பற்றிய அடிப்படை தகவல்கள்
1. பிறப்பிடம்: முத்தியால் மடுகு கர்நாடகா
2.சங்கமம் ஆகும் இடம்: தென்பண்ணியுடன் சேருமிடம் எண்ணிக் கொள் புதூர் வேப்பனப்பள்ளி ஒன்றியம்.
3. தடுப்பணைகள் இருக்கும் இடம்: மாறசந்திரம் மற்றும் குச்சிப்பாறை
4. நீர்க்கொடை பெறும் ஏரிகள்: படேதலாவ்ஏரி, மற்றும் பர்கூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகள்.
5. ஓடும் தூரம்: 29.6 கிலோமீட்டர் கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஓடும் ஆறு இது.
ஹரியானாவில் ஒரு மார்கண்டா ஆறு
மார்க்கண்ட ஆறு என்ற பெயரில் ஹரியானா மாநிலத்தில் ஒரு ஆறு ஓடுகிறது மார்க்கண்டேயர் இந்த ஆற்றின் கரையில் வசித்து பல ஆண்டுகள் கழித்து விமோச்சனம் பெற்றார் என்பது மார்க்கண்டேய புராணம். இந்தியாவின் புராதனமான 18 புராணங்களில் ஒன்று மார்க்கண்டேயா புராணம், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புராணம் இது.
ஆனால் தமிழ்னாட்டின் இந்த ஆறுக்கு ஏன் மார்கண்டா ஆறு என்று பெயர்
வைத்தார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள், பூமி
ஞானசூரியன் GSBAHAVAN@GMAIL.COM.
No comments:
Post a Comment