பாமணியார் அல்லது
பாமணி ஆறு
Pamaniyar River |
Muthupet Lagoon |
பாமணி ஆறு திருவாரூர் மாவட்டத்தில் ஓடும் ஒரு பருவ கால ஆறு. அது வெண்ணாறு ஆற்றின் ஒரு கிளையாறு. நீடாமங்கலத்தில் உள்ள வெண்ணாற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டு சங்கமிக்கும் இடத்தில் பிறக்கிறது.
நீடாமங்கலத்தில் ஓட துவங்கும் இந்த ஆறு மன்னார்குடி வழியாக ஓடுகிறது. பின்னர் இந்த ஆற்றின் முக்கியமான துணையாறான கண்ணனார் நதியுடன் சேர்ந்து திருத்துறைப்பூண்டி தாலுகாவில் நுழைகிறது, அங்கு முத்துப்பேட்டை உப்பு நீர் ஏரிக்குள் சங்கமம் ஆகிறது.
முத்துப்பேட்டை கழிமுகம் அல்லது முத்துப்பேட்டை உப்புநீர் ஏரி என்பது காவிரியின் தென்முனையில் வங்கக் வங்கக்கடலுடன் சேர்ந்திருக்கும் பகுதி அல்லது இணைந்திருக்கும் பகுதி.
முத்துப்பேட்டை உப்பு ஏரியின் பரப்பளவு 6803.01 எக்டர். இதன் நான்கு சதவீத பரப்பில் அலையாத்தி மரங்கள் அடர்ந்து உள்ளன. பாமணியார் ஆற்றைப் போலவே கோரையார், கிளை தங்கிளையார், மரக்கா கோரையார், மற்றும் பல காவிரியின் துணை ஆறுகள் இந்த பகுதியில் வங்கக் கடலில் சங்கமமாகின்றன.
பாமணியார் பற்றி அல்லது முத்துபேட்டை அலையாத்தி மரங்கள் பற்றிய வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். - GNANASURIA BAHAVAN, gsbahavan@gmail.com.
No comments:
Post a Comment