Saturday, April 22, 2023

SARABANGA THE RIVER OF SALEM - சரபங்கா ஆறு

 

 

சரபங்கா றும் காவிரியின் துணை ஆறு தான். சேலம் ஓமலூரில் இரு ஓடைகள் சேர்ந்து சபங்காஆறு உருவாகிறது. அவற்றின் பெயர்கள் கீழ் ஆறு மற்றும் மேல் ஆறு.

கீழ்ஆறு +மேல்ஆறு = சரபங்கா

கீழ்ஆற்றிற்கு பெரியார்ஆறு என்ற பெயரும் உண்டு. இது சேர்வராயன் மலைப்பகுதியில் ஏற்காட்டில் உள்ள ஓர் ஏரியில் பிறக்கிறது. பின்னர் கிளியூர் நீர்வீழ்ச்சியில் குதித்து மேற்கு பக்கம் திரும்பி, ஓமலூர் நோக்கி ஓடுகிறது.

 

மேல்ஆறு எனும் காட்டாறு

மேல்ஆறு சேர்வராயன் மலையில் தென்சரிவில் பிறக்கிறது. அங்குதான் காடையாம்பட்டி மலைப்படுகை வழியாக ஓடி வருகிறது. இதனைப் பல பெயர்களால் இங்கு அழைக்கிறார்கள். அவை பட்டிப்பாடி ஆறு, றியன்குழிஆறு, கூட்டாறு, மற்றும் காட்டாறு. இந்த ஆறும் தெற்கு நோக்கி ஓடி பெரியாற்றுடன் கலக்கின்ன.

 

காவிரியுடன் சங்கமம்

இப்படி இரண்டு சிற்றார்களின் சேர்க்கையில் உருவாகும் சரபங்கா ஆறு இடைப்பாடி, திருச்செங்கோடு, ஆகிய ஊர்களுக்கு அருகில் இருக்கும் ஏரிகளை நிரப்புகிறது. பின்னர் காவேரிபட்டுக்கு அருகில் காவிரியுடன் சங்கமம் ஆகிறது.

  

சரபங்கர் முனிவர்

சரபங்கர் என்னும் பெயருடைய முனிவர் ஒருவர் தான் செய்த தீவினைக்கு பரிகாரம் தேட இதன் ஆற்றங்கரையில் தவம் செய்தார். ந்த முனிவரின் பெயரால் இந்த ஆறு சரபங்கா என்று அழைக்கப்படுகிறது.

டேனிஷ் பேட்டை ஓமலூர் தாதாபுரம் எடப்பாடி புதுப்பாளையம் ஆகிய நகரங்கள் வழியாக பயணம் செய்கிறது சரங்காநதி

 

கிளியூர் அருவி

சரபங்கா ஆற்றின் துணை ஆறு பெரியாறு ஏற்காடு ஏரியிலிருந்து புறப்படுகிறது என்று பார்த்தோம். ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது 300 அடி உயரத்திலிருந்து கிளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது. இந்த பெரியார் ஆறுதான், கிளியூர் அருவியாக குதிக்கிறது.  இந்த அருவியைப் பார்க்க இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிற்குச்  செல்ல வேண்டும்.

ஏரியில் நீர் வரத்து அதிகம் இருக்கும் போது தான் கிளியூர் அருவி பார்க்க கிளி போல இருக்கும்.

 

நீங்கள் ஏற்காடு போய் இருக்கிறீர்களா ? கிளி அருவி பார்த்து இருக்கிறீர்களா உங்களுடைய அனுபவம் என்ன?

பூமி ஞானசூரியன்,gsbahavan@gmail.com 

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...