Wednesday, April 26, 2023

SALEM PERAMBALUR CUDDALORE RIVER VELLAR - சேலம் பெரம்பலூர் கடலூர் ஆறு வெள்ளார்

 

கிள்ளை பரஙகிபேட்டை வெள்ளார் முகத்துவாரம்

சேலம் மாவட்டத்தில் கல்ராயன் மலைப்பகுதியில் புழுதிக்குட்டை அணையிலிருந்து ஒரு சிற்றாறு உருவாகிறது. அதுபோல பாப்பநாயக்கன் பட்டியிலிருந்து ஒரு சிற்றாறும் உருவாகிறது. இரண்டு ஆறுகளும் ஒன்றாக இணைந்து வசிஷ்டநதி என உருவாகிறது. சேலம், பெரம்பலூர், கடலூர், மாவட்டங்களில் ஓடி சுவேதா ஆற்றுடன் கலந்து     பரங்கிப்பேட்டைக்கு அருகில் வங்காள விரிகுடாக் கடலில் சங்கமம் ஆகிறது.

 

எட்டாயிரம் சதுர கிலோமீட்டர் நீர்வடிப்பகுதி (WATERSHED AREA) 

வெள்ளாறு 150 கி.மீ. தூரம் ஓடும் ஆறு. ஏறத்தாழ பாதி ஆண்டுக்காலம் வறண்டே காணப்படும். இதன் நீர்வடிப்பகுதி 8086 சதுர கிலோமீட்டர்.

ஸ்வேதாஆறு,  சின்னாறு,னைவாரிஓடை, மணிமுத்தாறு ஆகியவை, வெள்ளாறு ஆற்றின் இதர துணை ஆறுகள்.

வெள்ளாறு ஆற்றின் படுகை, பொன்னையாறு, பரவனார் மற்றும் காவிரி ஆகிய மூன்று ஆற்று படுகைகளுக்கு இடையே அமைந்துள்ளது.

  

வசிஷ்டாநதி + சுவேதாநதி = வெள்ளாறு (VASISHTA SUWETHA  VELLAR)

கல்ராயன் மலைப்பகுதியில்  வடியும் நீருடன் உருவாவது , வசிஷ்டாநதி. அத்துடன் சுவேதா நதியுடன்  சேர்ந்து வெள்ளாறு என்ற பெயரில் பாய்கிறது

இதன் நீர்வப்பகுதி, கடலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவியுள்ளது.

 

நாமகிரிப்பேட்டையில் உருவாகும் ஆறு (NAMAGIRIPETTAI ORIGIN) 

னைமடுவு மற்றும் கல்லார் ஆகிய இரு ஆறுகளும் இணைந்து சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தில் நாமகிரிப்பேட்டையில் உருவாகும் ஆறு இது

  

ஏழு துணை ஆறுகள் (SEVEN TRIBUTARIES)

மணிமுத்தாறு, பெரியாறு, மஞ்சினிஆறு, எல்லார்ஆறு, சுவேதாஆறு, சின்னாறு,னைவாரியாறு ஆகிய ஏழு ஆறுகள் துணை ஆறுகளாக வெள்ளார் ஆற்றுக்கு நீர் உபயம் செய்கின்றன. ஆக இவை அத்தனையும் வெள்ளாற்றின் துணை ஆறுகள்

வெலிங்டன்ஏரி,னைமடுவு நீர்த்தேக்கம், சூரியக்கோவில் நீர்த் தேக்கம், மணிமுத்தா அணை ஆகியவை வெள்ளாற்றின் நீர்க்கொடை பெறுகின்றன.

 

வெள்ளைக்காரன் காலத்துப் பரங்கிப்பேட்டை (EUROPEON PERIOD PORTONOVO)

கோரமண்டல் கோஸ்ட் எனும் சோழமண்டல கடலோரத்தில் வெள்ளைக்காரர்கள் காலத்தில் பரங்கிப்பேட்டையில் வெள்ளார் பகுதி முக்கியமான துறைமுகமாக இருந்தது. முக்கியமான வியாபாரத்மாகவும் விளங்கியது

அந்த காலத்தில், போர்ச்சுக்கீசியர்கள், ஸ்வீடன் நாட்டுக்காரர்கள் மற்றும் ஐரோப்பிய துரைமார்கள் தங்கள் வசிப்பிடங்களை பரங்கிப்பேட்டையில் உருவாக்கிக் கொண்டார்கள்.

 

ஆனைமடுவு நீர்த்தேக்கம் (ANAIMADUVU RESERVOIR)

வெள்ளாறு பிறக்கும் இராமநாதபுரம் தான் இன்றைய நாமகிரிப்பேட்டை.னைமடுவு, நீர் தேக்கத்தில் இருந்து உருவாகிறது. நரசிங்கபுரம் மற்றும் காட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் சிட்டார் மற்றும் மஞ்சினி ஆறு இரண்டும், வெள்ளாற்றுடன், சேர்கின்றன. பின்னர் ஆத்தூர் தாலுகாவில் நுழைந்து அரசலூர் என்ற ஊரில் வெள்ளாறு சேலம் மாவட்டத்தை விட்டு வெளியேறுகிறது.

 

கள்ளக்குறிச்சி பெரம்பலூர் கடலூர் (KALLAKURICHY PERAMBALUR CUDDALORE)

கள்ளக்குறிச்சி பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களின் வழியாக பாய்ந்து ஓடுகிறது வெள்ளார் ஆறு. பின்னர் எல்லார் ஆறு, வெள்ளுவாடி என்ற இடத்தில், துணை ஆறாக வெள்ளாற்றுடன் சேர்கிறது. எல்லார் ஆற்றை அடுத்து சுவேதாஆறும் சேர்கிறது.

 

மேல் கீழ் வெள்ளாறு (UPPER & LOWER VELLAR)

இந்த இரண்டு ஆறுகளும் சேரும் இடத்திற்கு மேற்புறமாக இருக்கும் ஆற்றினை மேல்வெள்ளாறு என்றும் வசிஷ்டாநதி என்றும் சொல்லப்பட்டது. இதற்கு கீழாக ஓடும் வெள்ளாற்றினை கீழ்வெள்ளார் ஆறு என்றும் சொல்லப்பட்டது.

அதன்பின்னர் லப்பைகுடிகாடு, ஓகலூர், திட்டக்குடி, பெண்ணாடம் என்று ஓடி அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே வெள்ளாற்றுடன் இரு ஆறுகளும் சேருகின்றன. அவை சின்னாறு மற்றும் ஆனைவாரி ஆறு அல்லது காட்டோடை ஆறு.

 

கிள்ளை பரங்கிப்பேட்டை வங்கக்கடல் (KILLAI PORTONOVO BAY OF BENGAL)

அதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணத்தின் வடகிழக்கு திசையில் வெள்ளாற்றுடன் மணிமுத்தாறு துணை ஆறாகச் சேருகின்றது

அங்கிருந்து கிழக்குப் புறமோடி கடலூர் மாவட்டத்தில் நுழைகிறது. சேத்தியாத்தோப்பு புவனகிரி என்று பயணப்பட்டு இறுதியாக கிள்ளை, பரங்கிப்பேட்டை என்று வங்க கடலுடன், தனது நீண்ட நீர்க் கரங்களை கோர்த்தபடி சங்கமம் ஆகிறது வெள்ளாறு.

 

வெள்ளாறு ஆற்றுப்படுகை  (VELLAR RIVER BASIN )

தமிழகத்தின் 17 ஆற்றுப்படுகைகளில் முக்கியமான ஒன்று வெள்ளாறு ஆற்றுப்படுகை. இதன் மொத்த பரப்பு 7,54.346 சதுர கிலோமீட்டர். இது தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் பரவியுள்ளது.

வெள்ளாற்றின் ஆற்றுப்படுகைக்கு, தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் காவிரிப்டுகையும், வடக்கு திசையில் தென்பெண்ணைப் படுகையும், கிழக்குத் திசையில் பரவனாற்றுப்படுகை மற்றும் வங்கக் கடலும் உள்ளன. 

வெள்ளாறுபற்றி வேறு பயன்தரும், சுவைதரும் செய்திகள் உங்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் தட்டிவிடுங்கள் ! 

AUTHOR: GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...