Monday, April 24, 2023

PERIYAKULAM RIVER VARAHA NATHI வராக நதி பெரியகுளம் ஆறு



தமிழ்நாட்டில் வராகநதி என்று சொன்னதும்“  நல்ல பாட்டு சார்..வராக நதிக்கரை ஓரம்..சங்கமம் படத்துப் பாட்டு.. “ என்று சொல்லுவார்கள். வராக நதியைவிட கவியரசு வயிரமுத்து அவர்களின் இந்த பாட்டு பிரபலம் என்பார்கள். அந்த வராக நதி எந்த ஊர் ஆறு எங்கு ஓடுகிறது எங்கு சங்கமம் ஆகிறது என்று பார்க்கலாம்.

இன்னொன்று இதனை பெரியகுளம் ஆறு (PERIYAKULAM RIVER) என்றும் சொல்லலாம், பெரியகுளத்தின் குறுக்காக ஓடி வடகரை தென்கரை என்று அதனை இரண்டாகப் பிரிக்கிறது. இந்த ஆற்றின் வலப்புறம் மற்றும் இடப்புறம் என இரண்டு மருத மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் குளித்தால் தீராத நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பத்துக்கும் மேர்பட்ட இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, 10000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கும் பாசன வசதி அளிக்கிறது.   

வராக நதி தேனி மாவட்ட நதி, மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறு. பெரியகுளம் வழியாக ஓடும் ஆறு.. வைகை ஆற்றில் மாறுகால் பட்டியில் சங்கமம் ஆகிறது. ஆக வராக நதி, வைகை நதியின் துணை ஆறு (TRIBUTORY) என்று சொல்லலாம்

வராக நதியின் மீது கட்டியிருக்கும் சோத்துப்பாறை அணைக்கட்டு (SOTHUPPARAI DAM)  பெரியகுளத்தின் முதுகுப்புறத்தில் அமைந்துள்ள அணைக்கட்டு. இது தேனியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெரியகுளம், தேனி, அல்லிநகரம், கொடைக்கானல், மதுரை ஆகியவை இதற்கு அருகில் உள்ள நகரங்கள்

சோத்துப்பாறை அணையின் உயரம் 57 மீட்டர். தமிழ் நாட்டில் உள்ள உயரமான அணைக்கட்டுகளில் ஒன்று இது.  தன் நீளம் 345 மீட்டர். நீர்வடிபரப்பு 357 ஏக்கர். அதன் கொள்ளளவு 282.93 கன மீட்டர். தென்கரையில் 817 ஏக்கரும், தமரைக்குளம் கிராமத்தில் 223 ஏக்கர் நிலமும் இதன் மூலம் பாசனம் பெருகின்றன.

இந்த அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 1920 ஆண்டு எழுந்தது. இதற்கான நிதியும் ஒதுக்கி வேலையை 1982 ம் ஆண்டு தொடங்கியது, பின்னர் அது நின்றுபோனது, அதன் பின்னர் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் முயற்சியினால் 1987 ம் ஆண்டு மீண்டும் அந்த வேலை தொடங்கியது. நாங்கு ஆண்டுகள் கழித்து 2001 ம் ஆண்டு அந்த வேலை நிறைவுபெற்றது.   

வராக நதி தேனி மாவட்டத்தில் உள்ள மாறுகால்பட்டி (MARUGALPATTY)என்ற இடத்தில் வைகை ஆற்றுடன் சேருகிறது எனப் பார்த்தோம். மாறுகால் பட்டி பெரியகுளத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஆண்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இன்றைய நிலையில் வராக நதியில், பெரியகுளம் நகரகுப்பைகள், ஆட்டு இறைச்சி கழிவு, கோழிக்கழிவுகள், மீன் மார்கெட் கழிவுகள், காய்கறி மார்கெட் கழிவுகள்(MUNICIPAL GARBAGE, SLAUGHTER HOUSE WASTES, FISH MARKET WASTES, VEGETABLE MARKET WASTES AND SEWAGE WATER) அத்தனையும் கொட்டுவதால் புனித நதியாக இருந்த வராக நதி இன்று மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரி செயயும் கோரிக்கைதான் இப்பகுதி மக்களின் முதல் தேவையாக ஊள்ளது.

வடுகபட்டியில் இருந்து இன்னும் இரண்டு ஆறுகள் புறப்பட்டு ஓடுகின் உங்களுக்கு தெரியுமா ? வை நீர் ஆறுகள் அல்ல, பாட்டு ஆறுகள், ஒன்று வைரமுத்து ஆறு,  இன்னொரு ஆறு மேத்தா ஆறு. வயிரமுத்து வடுகப்பட்டி கவிஞர், மேத்தா பெரியகுளத்துக் கவிஞர்.

இந்த இரண்டு ஆறுகளிலும் நான் குளித்து இருக்கிறேன்  நீங்கள்

பூமி ஞானசூரியன், gsbahavan@gmail.com.


  


2 comments:

Muralidharan Ramarao said...

மக்கள் தொகை அதிகமாகி விட்டதால் ( சீனாவை முந்தி விட்டது)ஆறுகள் எல்லாம் சாக்கடைகளாக மாறி வரும் அவலம்.இதை எப்படி சரி செய்வது என்பதற்கு மாபெரும் திட்டம் தீட்ட வேண்டும்

Gnanasuriabahavan Devaraj said...

உண்மையாக அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமும் கூட தங்களின் ஆக்கபூர்வமான கருத்திற்கு ஆலோசனைக்கு மிக்க நன்றி - பூமி ஞானசூரியன்

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...