Thursday, April 27, 2023

PERAMBALUR AND ARIYALUR RIVER MARUTHAIYAR - பெரம்பலூர் அரியலூர் மாவட்ட ஆறு மருதையாறு

 

TRAIN ACCIDENT IN MARUTHAIYAR RIVER


ஒரு சினிமாவில்
ஐயா என்னோட கிணற்ற காணோம் யாரோ திருடிட்டு போயிட்டாங்கய்யா.. நீங்கதான் கண்டுபிடிச்சு கொடுக்கணும்யா..” என்று காவல் நிலையத்தில் புகார் தருவார் வடிவேல்.

 

ஆறு போன இடம் தெரியலை.

அதுபோல பல ஊர்களில் இந்த ஆறு போன இடம் தெரியவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லுகிறார்கள். எனக்கு ஆச்சரியமாக இல்லை. இது காரணம் பல ஊர்களில் பல ஆறுகளில் இப்படிப்பட்ட நிலைதான் நிதர்சனமாக உள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோருக்கும் பச்சைக்கம்பளம் விரிப்பவை நீராதாரங்கள்தான், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள்தான். காரணம் யாரும் கேட்க மாட்டார்கள்.

 

பெரம்பலூரில் பாதி அரியலூரில் மீதி (PERAMBALUR AND ARIYALUR)

மருதையார் பெரம்பலூர் மாவட்ட ஆறு. இது ஓடும் தூரம் மொத்தம் 63 கிலோமீட்டர். இதில் 33 கிலோமீட்டர் பெரம்பலூர் மாவட்டத்திலும் 30 கிலோமீட்டர் அரியலூர் மாவட்டத்திலும் ஓடுகிறது.

 

குடிமராமத்தா அப்படின்னா ? (PEOPLE’S PARTICIPATION)

காலப்போக்கில் குடிமராமத்து,  மற்றும் அரசின் கடைக்கண் பார்வையும் இல்லாமல் போனதால் பல இடங்களில் மருதையாற்றில் செடி கொடிகளும் மரமட்டைகளும் வளர்ந்து மூடிவிட்டு போய் விட்டன.

இதுபோன்ற சிறுஆறுகள், மற்றும் ஆற்றின் வரத்துக் கால்வாய்கள், மற்றும் போக்குக் கால்வாய்களை தூர் எடுத்து சீர்படுத்தும் காரியங்களை வருஷா வருஷம் செய்ய வேண்டும். நமது தாத்தா பாட்டி காலங்களில் இதை அப்படித்தான் செய்தார்கள்.

 

இன்றும் கூட ஒன்றும் குடி முழுகி விடவில்லை. இந்த வேலைகளை எல்லாம் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களைக் கொண்டு இதனை செய்ய முடியும். இந்த முடிவுகளை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களே முடிவு எடுக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.


சீமைக்கருவை (PROSOPIS JULIFLORA)

இந்த ஆறு பல இடங்களில் அகலம் 10 மீட்டர் மட்டுமே இருந்தாலும் சில இடங்களில் 100 முதல் 100 மீட்டர் வரை பறந்து விரிந்து ஓடுகிறது

மருதையாற்றின் பிரச்சனைகள் பற்றி பட்டியலிடும்போது சீமை கருவை மரங்களையும் அதில் ஒன்றில் என பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

நம் சுய நலங்களுக்காக வரத்து கால்வாய்களையும் போக்கு கால்வாய் களையும் ஆக்கிரமிப்பதை விட சீமக்கருவையே மேல் என்கிறார்கள் பல இயற்கை நிபுணர்கள். சீமை கருவை தண்ணீரே குடித்து விடுகிறது அதனால் தான் வறட்சி ஏற்படுகிறது என்பதற்கு எவ்விதமான அறிவியல் ரீதியான ஆதாரமும் இல்லை என்று சொல்லுகிறார்கள்.

 

தீமை செய்யும் மரங்கள் (TREES ARE HARMLESS)

உண்மையாக உலகத்தில் தீமை செய்யும் மரங்கள் என்று எதுவும் இல்லை. சுய லாபங்களுக்காக இயற்கை வளங்களை சீரழித்து தீமை செய்யும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்.

  

பத்து லட்சம் பேருக்கு சோறு போடுகிறது (FEEDS TEN LAKH PEOPLE)

நெல்வயலில் ரோஜாவும் களைதான்” என்ற கவிஞர் கங்கை கொண்டான் கவிதை நினைவுக்கு வருகிறது.

மருதையாற்றில் வரும் தண்ணீர் சுமார் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது என்கிறார்கள். ஒருலட்சம் விவசாயிகளுக்கு உதவி என்றால் 10 லட்சம் பேருக்கு சோறு போடுகிறது என்று அர்த்தம்.

 

எறும்பூர கல் தேயும்.

மருதையாற்றின் வரத்து கால்வாய்களை போக்கு கால்வாய்களை மராமத்து செய்ய வேண்டி பல மனு தந்தும் எதுவும் நடக்கவில்லையாம்.

கவலை வேண்டாம் எறும்பூரா கல் தேயும், அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். என்பது நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இந்த ஆற்றில் வரும் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன. 50க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்க்கொடை பெறுகின்றன.

 

தடுப்பணைகள்  நமது பொக்கிஷம் (CHECKDAMS OUR TREASURE)

இந்தப் பகுதி விவசாயிகள் தடுப்பணைகள் கட்டித் தரச் சொல்லியும் கேட்டிருக்கிறார்கள். சிறிய ஓடைகளுக்கு தடுப்பணைகள் பொக்கிஷம் மாதிரி. கிராமங்களில் உள்ள தடுப்பணைகளை பராமரிப்பதில் உண்மையாக அரசாங்கத்தை விட, உள்ளூர் மக்களுக்கு தான் பொறுப்பு அதிகமாக உண்டு என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.


இளைஞர்களுக்கு வேண்டுகோள் (REQUEST TO YOUTH)

கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோளை நான் வைக்க விரும்புகிறேன். அன்பு கூர்ந்து உங்கள் கிராமங்களில் பாசன சங்கங்களை உருவாக்குங்கள். அதன் மூலம் உங்கள் ஓடைகளை கண்மாய்களை, ஏரிகளை, குளங்களை, மற்றும்  தடுப்பணைகளை பராமரிக்க நடவடிக்கை எடுங்கள்.


இது முடியும் (IT IS POSSIBLE)

உங்கள் கிராமங்களில் உள்ள 100 நாள் பணியாளர்களை இந்த வேலைகளை செய்ய எப்படி ஏற்பாடு செய்யலாம் என்பதை செய்யுங்கள். அதற்கு தீர்மானம் போடுங்கள் ஊராட்சியின் மூலமாக வட்டார அலுவலகங்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கோரிக்கை வையுங்கள். இதனை சுலபமாக செய்யலாம்.

அதுபோல கிராம அளவில் ஊராட்சி அளவில் ஆறுகளில் ஓடைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிரச்சனை இல்லாமல் நடவடிக்கை எடுங்கள்.

வெளியூரிலிருந்து வந்து உங்கள் பகுதியில் வேலை செய்யும் அதிகாரிகளை விட, இதைச் செய்வது உங்களுக்கு சுலபமானது.

இதற்கு வேறு வழிமுறைகள் எதேனும் உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...