அர்க்காவதி ஆறு அழகு தோற்றம் |
அர்க்காவதி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கர்நாடகாவில் நந்தி மலையில் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உற்பத்தி ஆகி, சுமார் கோலார் மற்றும் பெங்களூர் ஆகியவற்றின் வழியாக 190 கி.மீ. ஓடி, பெங்களூர் நகரில் 20 சதவிகித தண்ணீர் தேவையை நிறைவு செய்து, கனகபுரம் அருகில் சங்கமம் என்னும் இடத்தில் காவிரியுடன் சங்கமம் ஆகிறது அர்க்காவதி ஆறு.
ஐந்து துணை ஆறுகள் (TRIBUTORIES OF ARKAVATHI)
இந்த ஆறு
செக்கராயனஹள்ளி என்ற ஏரியில் போய்ச் சேருகிறது. விருசாபவதி, ஸ்வர்ணமுகி, அந்தரமுகி, தேவமுகி, குமுதாவதி, ஆகிய ஐந்து ஆறுகளும் அக்காவதி
ஆற்றின் முக்கியமான துணை ஆறுகள்
இந்த ஆறு ஹரோசிவனஹல்லி என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக விழுந்து, பின்னர் மேகதாது என்ற இடத்தில், காவிரியுடன் சங்கமம் ஆகிறது.
அர்க்காவதியின் ஆரம்பகால சரித்திரம் (EARLY HISTORY OF ARKKAVATHI)
1891 ல் பெங்களூரின் மக்கள் தொகை 180000 இருந்த சமயம், குடிநீர் வசதி செய்துதர இந்த ஆற்றின் குறுக்கே ஹசர்காத்தா என்ற இடத்தில் ஒரு அணைகட்ட ஏற்பாடு ஆனது. 1918 ல் பெங்களூரின் மக்கள்தொகை இரண்டரை லட்சமாக ஆனது. 1933 ல் திப்பகொண்டனஹள்ளி என்ற இடத்தில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க ஏற்பாடு ஆனது. 1956 ல் பெங்களுரின் மக்கள் தொகையின் நீர்த்தேவையை ஆர்க்காவதியால் நிறைவு செய்ய முடியாமல் போக அவர்கள் கவனம் காவிரியின் பக்கம் திரும்பியது.
நகரங்களின் மறுபெயர் சாக்கடையா
? (CITIES ALIAS SEWAGE & GARBAGE)
1980 களில் கடுமையான நகர் மயமாகும் சூழலால் ஆர்க்காவதி அசுத்த நதியாக மாற்றினோம். தண்ணீரை தனமாக்க் கொடுத்த நதிக்கு நாம் சாக்கடையை தானமாகக் கொடுத்தோம். நமது சுய நலத்தின் மறுவடிவம்தான் ஆறுகளில் வடிக்கப்படும் சாக்கடை, ஆற்றங்கரைகளில் கழிக்கும் மனித மலம், கொட்டப்படும் குப்பைகள், எல்லாம்.
சீரமைக்கும் சிறு சங்கங்கள் (RIVER RESTORATION
GROUPS)
2005 ஆம் ஆண்டு ஆர்க்காவதி குமடாவதி ஆறுகள் புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒரு சங்கம் அமைத்தார்கள். அதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இது போன்ற ஆறுகளை பாதுகாத்து பராமரித்து மேம்படுத்துவதற்கு என சிறு சங்கங்களை அமைத்து தொடர்ந்து விழிப்புணர்வுப் பணியைச் செய்ய வேண்டும்..
விழிப்புணர்வு வேண்டும் (MUCH NEEDED AWARENESS)
பெங்களூர்
மாநகரத்தின் கழிவுகளால் பெருமளவு ஆர்க்காவதி ஆறு மாசுபடுகிறது. ஆர்க்காவதி ஆறு மட்டுமல்ல, நகரங்களின் வழியாக ஓடும் அனைத்து ஆறுகளுக்கும் இந்த பிரச்சனை
உண்டு.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால் அந்தந்தப்
பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வு பெறும்வரை இது நீடிக்கும். அதற்காக ஆட்சியாளர்களுக்கு
விழிப்புணர்வு வேண்டாம் என்று அர்த்தம் இல்லை.
எல்லோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு. மூக்கைப்பிடித்துக் கொண்டு அசுத்தங்களைத் தாண்டிச்செல்லும் நாகரீகம் நமக்கு வேண்டுமா?
இதுவரை உங்கள் ஊரில் இது போல உங்கள் உள்ளூர் ஆறுகளை புனரமைக்கும் அல்லது சீரமைக்கும் குடிமராமத்து சங்கங்கள் ஏதாவது அமைத்திருக்கிறீர்களா ?
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
2 comments:
அருமை
மாத்தூர் ரஹ்மான் அவர்களுக்கு நன்றி - பூமி ஞானசூரியன்
Post a Comment