Sunday, April 16, 2023

KAMARAJAR DAMS ON RIVER THENPENNAI - தென்பெண்ணையில் காமராஜர் அணைக்கட்டுகள்



படிக்காத மேதையான காமராஜர் ஆட்சியிலிருந்த போது ஆறுகளின் குறுக்காக பல அணைகளைக் கட்டி விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கப் பேருதவி புரிந்தார். அறுபது ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்த அணைகள் எல்லாம் கம்பீரமாக காட்சி தருகின்றன. 


அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடூர், மலம்புழா, ஆகிய அணைகள் எல்லாம் 1954 ம் ஆண்டு முதம் 1963 ம் ஆண்டு வரை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட அணைகள்.


தென்பெண்ணை அணைக்கட்டுகள் (DAMS IN THEN PENNAI RIVER)

தென்பெண்ணை கிருஷ்ணகிரி அணைக்கட்டு,து கிருஷ்ணகிரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுவும் 1958 ல் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 166 மில்லியன் கன அடிகள். இதன் மூலம் பாசன பெரும் நிலங்களின் பரப்பு 3652 எக்டர்.

சென்னகேசவ மலைகளுக்கு ஊடாக தென்பண்ணைக்கு குறுக்காக கட்டப்பட்ட அணை இது. திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது.

 

நெடுங்கல் அணைக்கட்டு (NEDUNGAL DAM)

நெடுங்கல் அணைக்கட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் தென்பண்ணையில் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1787  முதல் 1889 வரையான சமயத்தில் கட்டப்பட்டது. 

இதன் நீளம் 912 அடி. இந்த ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்கள் காலத்தில் 20 அடியாக இருந்த கால்வாய்கள் தற்போது ஐந்து அடியாக சுருங்கி விட்டது. ஏதோ நம்மல் முடிந்த சாதனை !


சாத்தனூர் அணைக்கட்டு (SATHANUR DAM)

சாத்தனூர் அணைக்கட்டு திருவண்ணாமலையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு காமராஜர் அவர்களால் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதன்  கொள்ளளவு 7321 மில்லியன் கன அடி, இதன் உயரம் 119 அடி.


திருக்கோவிலூர் அணைக்கட்டு (THIRUKOILUR DAM)

திருக்கோவிலூர் அணைக்கட்டு திருக்கோவிலூரில் உள்ளது. இங்கிருந்து திருப்பப்படும் தண்ணீர் பம்பை, மலட்டாறு, ராகவன் வாய்க்கால், மருதூர் வாய்க்கால், மற்றும் சித்தலிங்கம் டம் வாய்க்கால்களில் திருப்பி விட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால்கள் மொத்தம் 115 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.


எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டு (ELLISCHATHTIRAM DAM)

எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டு 1950 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பின்னர் 1967-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் நீர் பிடிப்பு பகுதி 1,24,481 சதுர கிலோமீட்டர். தென்பண்ணையில் தமிழ்நாட்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் ஆறாவது அணை இது. வினாடிக்கு 2,28,000 கன அடி நீர் வெளியேற்றும் வசதி கொண்டது  இது.

எல்லிஸ்சத்திரத்து அணைக்கட்டின் எரளூர்  வாய்க்கால் மூலம் பேரங்கியூர்,வியனூர், பைத்தாம்பாடி, அழகுப் பெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும்.. 

ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம்,ருவேல்பட்டு, காரப்பட்டு, மனம் தவழ்ந்த புத்தூர், ஓரையூர், சேமகோட்டை ஆகிய ஏரிகளுக்கும்.. 

ங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலிமலை, சாலிமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம், சித்தேரி, ரெட்டேரிப்பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும் தண்ணீர் போகிறது.

கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி கண்டம்பாக்கம் வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.ல்லிஸ்சத்திரம் அணையில் இருந்துதான் விழுப்புரம் நகருக்கு குடிநீர் வினியோகம் ஆகிறது.



சொர்ணாவூர் அணைக்கட்டு (SORNAVOOR DAM)

சொர்ணாவூர் அணைக்கட்டு, எல்லிஸ்சத்திரம் அணையின் கீழே 36 ஆவது கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமானடி தாலுக்காவில் உள்ளது. மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், வளவனூர், பண்ருட்டி, கடலூர், பாண்டிச்சேரி ஆகியவை இதன் அருகமைந்த நகரங்கள்.  

காமராஜருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் “அணைகள்  கட்டலன்னா கூட பரவயில்ல ..அதுகள பராமரிக்கவாவது நடவடிக்கை எடுக்கலாம்ல.. “ என்கிறார்கள், பலர். 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? சொல்லுங்கள், எனது மின்னஞ்சல் GNANASURIA BAHAVAN, AUTHOR, gsbahavan@gmail.com.

 

1 comment:

முரளிதரன் ராமராவ் said...

ஆஹா இத்தனை அணைக்கட்டுகளா ? தெரியாத தகவல்கள், பராமரிப்பு மிக மிக அவசியம்

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...