Friday, April 21, 2023

K O M U G I R I V E R OF KALLAKURICHY DISTRICT - கல்ராயன் மலைத் தயாரிப்பு கோமுகி ஆறு

 

கோமுகி அணைக்கட்டு

கோமுகி ஆறு தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆறு கோமுகி ஆற்றைவிட அணை ரொம்பவும் பிரபலம். துணை ஆறு இது. கோமுகி ஆற்றில்  அணை (KOMUGI DAM)கட்ட காமராஜர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது அந்த வேலைமுடிந்து  பயன்பாட்டுக்கு வந்தது.ந்த  அணைக்கட்டு கச்சராபாளையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 

மலைப்பகுதியில் ஓடும் சிற்றாறுகள் (TRIBUTARIES).

கல்படை, பொட்டியம், மல்லிகைப்பொடி, பரங்கிநத்தம், இவையெல்லாம் கல்ராயன் மலைப்பகுதியில் (KALRAYAN HILLLOCKS) ஓடும் சிற்றாறுகள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்துதான் கோமுகி ஆற்றை உருவாக்குகின்றன. இந்த ஆறுகள் தான் கோமுகி அணைக்கு நீர் சேர்க்கின்றன. கல்ராயன் மலைப்பகுதி கிழக்குத் தொடச்சி மலையின் (EASTERN GHATS HILLOCKS)ஒரு பகுதி.

 

யிர் சாகுபடிக்கு பாசன நீர் (IRRIGATION SUPPORT)

கல்வராயன் மலை என்பது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தது. இங்கு கல்வராயன் மலை என்பது ஒரு தாலுகா, அதாவது வட்டம்.

கோமதி அணையின் நீர்வடி பரப்பு (WATERSHED AREA) 360 எக்டர். இது 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உதவுகிறது. 2024.29 எக்டர் யிர் சாகுபடிக்கு பாசன நீர் தருகின்றது

 

கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை

ந்த ஆற்றுடன் அணையுடன் தொடர்புடைய ஊர் வடக்கனேந்தல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. இங்குதான் கோமுகி அணையும், கல்வராயன் மலைகளும், கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை (COOPERATIVE SUGAR MILLS) மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனமும் (TAMILNADU NEWSPRINT & PAPER LTD.) உள்ளன. கள்ளக்குறிச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வடக்க நேந்தல் கிராமம்.

  

அழகான அருவிகள் (WATER FALLS)

பெரியார்அருவி, மேகமருவி, வெள்ளியருவி, பண்ணியப்பாடி அருவி ஆகியவை இப்பகுதியின் அழகிய அருவிகள். இந்த அருவிகளும் கோமுகிஅணையும் கல்ராயன் மலைப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றி உள்ளது.

கோமுகி அணையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர், போனால் வெள்ளிமலை கிராமம் வரும். அங்கு தான் உள்ளது இந்த அழகிய அருவி அது பெரியார் நீர்வீழ்ச்சி, சாலை ஓரமாகவே அமைந்துள்ளது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலத்தில் அருவியை அழகாய் பார்க்கலாம். காரணம் மழை நீர் இங்கிருந்து 5 கிலோமீட்டர் போனால் மேகம் நீர்வீழ்ச்சி.

 

மலையாளி பழங்குடி மக்கள் (TRIBAL PEOPLE OF KALRAYAN HILLS)

கோமதி ஆறு, கல்ராயன் மலையில் பிறந்து காவிரிக்கு இணையாக பாய்ந்து வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது. இங்கு வசிக்கும் பழங்குடி மக்களை மலையாளிகள் என்கிறார்கள். கல்வராயன் மலைக்கு எல்லைகளாக வடக்கு பக்கம் சாத்தனூர் அணை, தெற்கில் ஆத்தூர் கணவாய், கிழக்கில் மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி அணையும் அமைந்துள்ளன.

 

படகு சவாரி போகலாம்

இங்கு ஓடும் ஓர் அருவியின் ஊடாக தடுப்பணை ஒன்றை கட்டியிருக்கிறார்கள். அங்கு படகு குழாம் ஒன்றும் உள்ளது. சுற்றுலா போனால் இங்கு படகில் போகலாம். வனத்துறை விடுதிகளில் தங்கலாம். படையில் செல்லும்போது அதிர்ஷ்டம் இருந்தால் காட்டு பன்றி, செந்நாய்க்கரடி, போன்ற வன விலங்குகளையும் தரிசிக்கலாம்.

 

ரயிலில் பஸ்ஸில் போகலாம்.

கல்வராயன் மலைக்கு போக விழுப்புரம் மற்றும் சின்ன சேலம் வரை ரயிலில் போகலாம். கள்ளக்குறிச்சியிலிருந்து ஏகப்பட்ட பஸ்கள் இருக்கின்றன.

 

இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இல்லாத சமயம் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வராயன் மலைக்கு நான் போயிருந்தேன். அந்த பழங்குடி மக்கள் குறித்த வானொலி நிகழ்ச்சி தயாரிப்பதற்காக போயிருந்தேன்.. கூட்டாஞ்சோறு என்ற பெயரில் ஒரு அற்புதமான 30 நிமிட நிகழ்ச்சியை சென்னை வானொலியின் வாயிலாக ஒலிபரப்பு செய்தேன் அன்று.

நீங்கள் யாராவது கல்ராயன் மலைக்கு போய் இருக்கிறீர்கள் இருக்கிறீர்களா அங்கு இருக்கும் பழங்குடி மக்களோடு நீங்கள் பேசி இருக்கிறீர்களா?

பூமி ஞானசூரியன், மின்னஞ்சல்; gsbahavan@gmail.com

 

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

3 comments:

Muralidharan Ramarao said...

ஒலி அலைகள் எங்கெல்லாம் போகுமோ அங்கெல்லாம் போய் நிகழ்ச்சியை பதிவு செய்திருக்கிறீர்கள் மக்கள் சேவைக்காகவே உங்களைப்பிறக்க வைத்திருக்கிறான் இறைவன் என்று நான் நினைக்கிறேன் இதை விட வேறு என்ன வேண்டும். பாக்கியவான் நீங்கள்!

Gnanasuriabahavan Devaraj said...

உங்களைப் போன்ற நண்பர்களின் இதயப் பூர்வமான பாராட்டுக்களைப் பெறும் நான் பாக்கியவான்தான், இந்தப் பாராட்டுக்கள் உண்மையாக போய்ச் சேரவேண்டியது இரு நிறுவனங்களுக்கு, ஒன்று அகில இந்திய வானொலி, இன்னொன்று தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக்கழகம். அவற்றின் தயாரிப்புதான் நான். மிக்க நன்றி முரளிதரன். தொடர்ந்து எனது படப்புகளை படித்து எழுதுங்கள். வேறு எது பற்றி எல்லாம் எழுதலாம் என்று சொல்லுங்கள்.

Anonymous said...

இது படைப்பு இல்லை.அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டி

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...