Tuesday, April 11, 2023

INTERESTING HISTORY BEHIND BUCKINGAM CANAL - பக்கிங்காம் கால்வாய் சரித்திரம்

 

     
BUCKINGAM  CANAL  NEAR  CENTRAL  STATION


முதல் கட்டமாக சென்னை முதல் எண்ணூர் வரை அமைந்த இந்த கால்வாய்க்கு கோச்சிரின்கேனால் என்று பெயரிட்டார்கள்.  கோச்சிரின் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். இதனைக் வெட்டுவதற்கு இவர்தான் பணம் தந்தார். அதாவது இதனைக் கட்டியவருக்கு நிதி உதவி அளித்தார். அதனால் அவர் பெயரை வைத்தார்கள். 


கோச்சிரின் கெனால் 

அதன் பின்னர் சென்னை முதல் எண்ணூர் வரை வெட்டப்பட்ட இந்த கால்வாய் பழவேற்காடு வரை விரிவாக்கம் ஆனது.

 

இதுவரை தனியாருக்கு சொந்தமான கால்வாயாக இருந்த கோச்சிரின் கால்வாயை, 1737 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு எடுத்துக் கொண்டது.


மூன்றுவகைப்  போக்குவரத்து 

மேலே உள்ள புகைப்படத்தை பாருங்கள் சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடம் தெரிகிறது. அதற்கு கீழே கார் பஸ் போகும் சாலை தெரிகிறது. சாலையின் கீழே தெரிவது பக்கிங்காம் கால்வாய்.

பங்கிங்காம் கால்வாயில் படகில் ஏறி இந்த சாலையோரப் பாலத்திடம் இறங்கி பஸ் பிடித்து  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயிலில் டில்லிவரை கூடப் போகலாம். இன்னொரு தடவை பாருங்கள் அந்த படத்தை.


அந்த காலத்தில் படகு போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டது. இப்படி ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மூன்றையும் ஒரே புகைப்படத்தில்,டத்தில், பார்க்கலாம்.

 

இப்படி ஒரே இடத்தில் மூன்று வகையான போக்குவரத்துக்களையும் உடைய இடம் உலகில் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள்.

 

பேரலை சீரலை ஆனது

2004 ஆம் ஆண்டில் சுனாமி என்னும் ஆழிப்பேரலை பல நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தியது. சுனாமியின் பேரலையை சீரலையாகக் குறைக்கக் காரணமாக இருந்தது பக்கிங்காம் கால்வாய் தான் என்று சொல்லுகிறார்கள்.


ஆழிப்பேரலை எனும் சுனாமியின் போது, தென்னை மர உயரத்திற்கு அலைகள் எழும்பி ஏகமான நீரை  நமது  வசிப்பிடத்திற்கு அனுப்பியது. அதையெல்லாம்  வடிக்க உதவியாக இருந்தது பக்கிங்காம் ஆறும், அடையார் ஆறும் கூவம் ஆறும்தான். அதனால்தான் ஆரவாரமாய் வந்த ஆழிப்பேரலையின் அலைகள் அதிகம் அலையாமல் அடங்கிப்போயின.


ஒரு நல்ல காரியம் 

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது தங்கள் கொள்ளைப் பொருட்களைக் கொண்டு செல்ல  இந்த கால்வாய் வெட்டப்பட்டாலும் ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, அஞ்சலக பயன்பாடு, இப்படி எல்லாவற்றையும் நிறைவு செய்வதாக இருந்தது இந்த செயற்கை ஆறு.

 

இன்னொரு செய்தியையும் சொல்லுகிறார்கள். வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலம் வரை இந்த பக்கிங்காம் கால்வாயை அவர்கள் சரியாக பராமரித்தார்கள். அவர்கள் போன பின்னால் பக்கிங்காம் கால்வாய் கேட்பாரற்றுப் போனது.


உப்பங்கழிகளின் உபயோகம்  

கடற்கரையின் ஓரமாக ஏற்கனவே அமைந்திருந்த பேக் வாட்டர் என்று சொல்லும் படியான ப்பங்ழிகளை இணைக்கும் படியாக இந்த கால்வாய் வெட்டப்பட்டது என்று பார்த்தோம்.


இந்த உப்பங்கழிகள் இணைக்கப்பட்ட கால்வாயாக இருந்ததால் எப்போதுமே இந்த கால்வாயில் உப்பு நீரோட்டம் நிறைந்திருக்கும் என தெரிகிறது


ஹைடைட்  லோடைட் என்பதை மீனவமக்கள் வெள்ளம் வத்தம் என்பார்கள். அதனால் வெள்ளம் சமயத்தில் கடலிலிருந்து தண்ணீர் ஏறிவரும், வத்தம் சமயம் வடிந்துவிடும். அதனால் முகத்துவாரத்தில் எப்போதும்   நீரோட்டம் தொடரச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.

 

படகுகளில் போகும் மீன், கருவாடு

அரிசி போன்ற தானியங்கள், பருத்தி உட்பட, பல விவசாய பொருட்கள் மீன், கருவாடு, விறகு போன்ற பொருட்களும்,க்கீங்காம் கால்வாய் வழியாக மக்கள் எடுத்துக் கொண்டு போனார்கள்.

 

மூலக்கொத்தளம் கருவாடு

சென்னை மூலக்கொத்தளம் பகுதி கருவாட்டு மண்டிகளுக்கு பிரபலமானது. ஆந்திராவிலிருந்து வரும் கருவாடுகள் மூலக்கொத்தளம் பகுதி படகுத்துறையில் வந்து இறங்குமாம். 1960 முதல் 70 வரை கூட இந்த படகு துறைகள் நன்கு இருந்தது என்று சொல்லுகிறார்கள்.

அன்று நீர்வழி சாலையாக இருந்த பக்கிங்காம் ஆற்றினை நாம்  இன்று சாக்கடை ஆறாக மாற்றிவிட்டோம். இன்று  இறந்த ஆறு என அரசு அறிவித்துள்ளது. உடனடியாக இது போன்ற ஆறுகளை சுத்தம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அன்பின் இனிய நண்பர்களே இந்த கட்டுரைபற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எனக்கு இமெயில் அனுப்புங்கள். 

Gnanasuria Bahavan Devaraj

(gsbahavan@gmail.com)


 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...